.

Wednesday, July 18, 2007

தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு

உமா புகார் மீது நேற்று வரை, அடையாறு மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் இருந்தனர். இந்தநிலையில், நேற்று திடீரென்று தினமலர் நிர்வாகி ரமேஷ் மீது தமிழ்நாடு பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 507 (மிரட்டுதல்), 509 (ஆபாசமாக பேசுதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், சைபர் கிரைம் போலீசில் தினமலர் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் மீது, நிருபர் உமா மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 507, 508 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டு சிறை:

தினமலர் நிர்வாகி ரமேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இ.பி.கோ. 507 என்ற பிரிவில், 3 மாத சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், 509 என்ற பிரிவில், 100 ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.

மேலும் செய்திக்கு "தினகரன்.."

நடிகர் விக்ரம் வீடு இடிந்து ஒருவர் பலி - படம்


திருவான்மியூரில் விக்ரம் கட்டி வரும் வீடு.



திருவான்மியூர், ஜூலை 18-
நடிகர் விக்ரம் கட்டி வரும் புதிய வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி இறந்தார். ஒருவர் படுகாயமடைந்தார்.
திருவான்மியூர் கலா«க்ஷத்ரா காலனி அருண்டேல் பீச் ரோட்டில் நடிகர் விக்ரம் பிரம்மாண்டமாக புதிய வீடு கட்டி வருகிறார். 3 மாடிகள் கொண்ட கட்டிட பணி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கட்டிடப் பணிக்காக வெளியூரில் இருந்து கூலித் தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்து வருகின்றனர். விழுப்புரம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த நாகப்பன் (42) என்பவர் குடும்பத்துடன் அருகில் குடிசை போட்டுக் கொண்டு வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை கட்டிடத்தில் 4 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது புதிதாக கட்டப்பட்டிருந்த சுவர் ஒன்று திடீரென்று இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் நாகப்பன் புதைந்தார். இதை பார்த்த அவரின் மனைவி செல்வி மற்றும் மகன்கள் ஓடிவந்து கதறி அழுதனர்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் நாகப்பன் இறந்தார். நாகப்பனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஐயனார் என்பவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்த் துள்ளனர்.
திருவான்மியூர் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி & படம் :

நன்றி: "தமிழ் முரசு"

ஹெலிகா'ப்டர் விபத்து: நால்வர் பலி

ஆறு நாட்களுக்கு முன் காணாமல் போன சட்டீஸ்கர் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர், ம.பி., மாநிலத்தில் விபத்திற்குள்ளானது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சட்டீஸ்கர் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர், கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் ம.பி.,யில் உள்ள போபால் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அரை மணி நேரத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஹெலிகாப்டரை அதிகாரிகள் தேடி வந்தனர்.
ம.பி.,யில் உள்ள தேவராபலி என்ற மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி விழுந்து கிடப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பயணம் செய்த நான்கு பேர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.


தினமலர்

ஷில்பா ஷெட்டிக்கு டாக்டர் பட்டம்

இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. ஜூன் மாதத்தில் அமிதாப் பச்சன், யாஷ் சோப்ரா, ஷபான ஆஷ்மி போன்ற சினிமா பிரப்பலங்களுக்கு லீட்ஸ் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

Shilpa Shetty to be awarded doctorate by Leeds varsity today Hindustan Times
After Big B, Dr Shilpa Shetty's here to treat you CNN-IBN

Degree awarded to Bollywood star BBC News

அமர்நாத் யாத்ரிகர்கள் மீது தீவிரவாத தாக்குதல்

அமர்நாத் புனித யாத்திரை செல்பவர்கள் தங்கியிருந்த இடங்கள்மீது தீவிரவாதிகள் தாக்கியதில் 16பேர் காயமடைந்தனர். மூவர் கவலைக்குரிய நிலையில் உள்ளனர். அமர்நாத் யாத்ரிகர்கள்மீது இந்த வருடம் நடக்கும் முதல் தீவிரவாத தாக்குதல் இது.

இதுவரை எந்த தீவிர்ரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.



Militants attack Amarnath pilgrims, 15 injured Zee News
Amarnath pilgrims among 16 wounded in Kashmir attack Reuters India
One dead, 19 hurt in attack on Amarnath Yatra base camp Hindustan Times

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மூவருக்கு தூக்கு

1993ல் நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பந்தமான வழக்கில் குண்டுகளை வைத்த மூன்றுபேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. உலகிலேயே நீளமான விசாரணைகளில் ஒன்றாக இந்த வழக்கு கருதப்படுகிறது. தீர்ப்பளித்த நீதிபதி, பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழி வாங்கினோம் எனும் வாதம் சரியானதாயில்லை என்றும் இந்த செயல்கள் இஸ்லாமிய மதத்திற்கு இழிவு சேர்ப்பதாயுள்ளதாகவும் தெரிவித்தார்.

Three sentenced to death for Mumbai bombingsHindustan Times
Death sentences for three men in Mumbai blast case Reuters India
Death sentences for three men in Mumbai blast case Canada.com

காவிரி வழக்கு: தண்ணீராகப் பாய்ந்த பணம்

கடந்த 17 ஆண்டுகளாக தமிழகத்துக்கும், கர்நாடகத்திற்கும் இடையே நடுவர் மன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் நடந்து வருகிற காவிரி நதிநீர்ப் பிரச்சனை வழக்கு செலவு விபரம் பற்றி இப்பதிவு.

இதுவரை காவிரி வழக்கு விசாரணைக்காக தமிழக அரசு செலவிட்ட தொகை குறித்த விவரத்தை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்டு டி.டி. நாயுடு என்பவர் வெளியிட்டுள்ளார்.

1990ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை காவிரி நதிநீர் வழக்குக்காக,
விடுதிகளில் தங்கி ஆலோசனை நடத்த செலவிடப்பட்ட தொகை ரூ. 2.39 கோடியாகவும் வழக்கறிஞர்களுக்கு இதுவரை ரூ. 22.69 கோடியும், ஆக 25.08 கோடி செலவிடப்பட்டுள்ளது. .

இதுவரை காவிரி வழக்கு தொடர்பாக செலவிடப்பட்ட தொகை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ள
நாயுடு மேலும் கூறுகையில்,

வக்கீல்களுக்காக தமிழக அரசு செலவிட்டுள்ள தொகையும், அவர்களின் விடுதி செலவுகளையும் பார்த்தால் பொதுப்பணித்துறையின் பட்ஜெட்டுக்கு இணையாக உள்ளது.


மொத்தமாக கூட்டிப் பார்த்தால் ரூ. 25 கோடிக்கும் மேல் தமிழக அரசு இதுவரை செலவிட்டுள்ளது. இது மிகவும் அநியாயமானதாகும். ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும்போதும் பொதுப்பணித்துறையிலிருந்து 10 பேர் டெல்லி செல்கிறார்கள்.

இவர்களுக்கான செலவுத் தொகை இந்த கணக்கில் வரவில்லை. உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றங்களிலும் தமிழக அரசுக்காக வாதாடும் வக்கீல்களுக்கு தினசரி ரூ. 1,000 மட்டுமே வழங்கப்படும்போது காவிரி வழக்குக்கான வக்கீல்களுக்கு மட்டும் இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டது ஏன் என்பதை அரசு விளக்க வேண்டும்.

காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் வறட்சியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசு வக்கீல்களுக்காக மட்டும் இவ்வளவு பெரிய தொகைய செலவிட்டிருப்பது வருத்தமாக உள்ளது.

காவிரி வழக்கில் வாதாடிய வக்கீல்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் சி.எஸ்.வைத்தியநாதன்தான். இவருக்கு மட்டும் ரூ. 6.07 கோடி தரப்பட்டுள்ளது.

ஏ.கே.கங்குலிக்கு ரூ. 4.08 கோடி, சி.பரமசிவத்திற்கு ரூ. 2.64 கோடி, ஜி.உமாபதிக்கு ரூ. 2.54 கோடி, கிருஷ்ணமூர்த்திக்கு ரூ. 1.39 கோடி, முத்துக்குமாரசாமிக்கு ரூ. 1.03 கோடி, பராசரனுக்கு ரூ. 91.69 லட்சம் சம்பளமாக தரப்பட்டுள்ளது

இவ்வளவு பணத்தை தண்ணீராக செலவழித்தும் காவிரிப் பிரச்சினை இன்னும் தீரவில்லை. கர்நாடகத்திலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரைப் பெற முடியாமல் தமிழகம் தவிக்கும் அவல நிலை தொடருகிறது.

இந்த அநியாய நிலை குறித்து விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்

சற்றுமுன்: பிரேசில் விமான விபத்தில் 176 பேர் பலி?

பிரேசிலில் சம்பவித்த விமான விபத்தில், விமானப்பயணிகள் 176 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

குறுகிய ஓடுபாதை கொண்ட Congonhas விமான நிலையத்தில் இத்துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு.... யாஹு

மேலும்: தினமலர் செய்தி

ஹஜ் விவகாரம் இந்திய தேசிய லீக் கோறிக்கை.

விண்ணப்பித்த அனைவருக்கும் ஹஜ் பயணத்துக்கான அனுமதியை அளிக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் எம். பஷீர் அஹமது கோரியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் புனித ஹஜ் பயணத்துக்கு தமிழகத்தில் இருந்து 6,816 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 3,384 பேர் மட்டும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹஜ் பயணம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள ஹஜ் கமிட்டிக்கு மட்டும் 13,000 பேர் ஹஜ் செல்ல மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அகமது அனுமதி அளித்துள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்த அனைவருக்கும் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அனுமதி பெற்றுத் தந்தார். அதைப் போல, மத்திய அரசுடன் முதல்வர் கருணாநிதி பேசி, விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்களின் ஹஜ் பயண ஒதுக்கீட்டை காலத்துக்கு ஏற்ப அதிகப்படுத்தும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றார் அவர்.

சென்னை வருகிறார் கலாம்.

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அடுத்த நாள் சென்னைக்கு வருகிறார் அப்துல் கலாம். அவருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவியர்கள் திரண்டு வந்து தடபுடலான உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஜனாதிபதி என்ற பெயருடனும், பெருமையுடனும், குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து வருகிற 24ம் தேதி ஓய்வு பெறுகிறார் அப்துல் கலாம். ஓய்வுக்குப் பின்னர் அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராக பணியாற்ற இருக்கிறார்

இதுதொடர்பான தனது விருப்பத்தை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதனிடம் நேற்று இரவு தொலைபேசி மூலம் தெரிவித்த அவர்
நானோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி மற்றும் விண்வெளி அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவ, மாணவியருக்கு கலாம் பாடம் எடுக்க விருப்பம் தெரிவித்ததாக விஸ்வநாதன் கூறினார்அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் கலாம் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேறு விசேஷ ஏற்பாடுகள் எதுவும் தேவையில்லை, தற்போதுள்ள விருந்தினர் மாளிகையே போதும் என கலாம் கூறி விட்டாராம்.
கலாம் 25ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும்போது அவரை பல்கலைக்கழக மாணவ, மாணவியர் 20 ஆயிரம் பேரும் திரண்டிருந்து வரவேற்பார்கள் என்று துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...