2008- ஆம் வருடத்திற்கான பிக் பிரதர் (Celebrity Big Brother) நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. சென்ற வருடம் இனவெறியை ஆதரிக்கும் விதமாக ஷில்பா ஷெட்டியை சக போட்டியாளர்கள் விமர்சித்ததாக சொல்லப்பட்டதால் சர்ச்சைக்குள்ளானது. மீண்டும் 2009-ல் ஒளிபரப்பைத் தொடரலாமா என்பதற்கான முடிவை அடுத்த வருடம் எடுக்கப் போவதாக சேனல் 4 தெரிவித்துள்ளது.
BBC NEWS | Entertainment | Celebrity Big Brother 2008 axed
Friday, August 24, 2007
பிக் பிரதர் 2008 ஒளிபரப்பாகாது
Posted by Boston Bala at 9:44 PM 0 comments
பூவுலகில் பூதவுடலை விட்டுப் பிரியும் அனுபவம்
மாய யதார்த்தம் (virtual reality) கொண்டு பூதவுடலுக்கு அப்பால் உணர்வதை, உணர வைப்பதில் அறிவியல் வெற்றி கண்டுள்ளது. மரிக்கும் தறுவாயில் நிகழ்வதாக சொல்லப்பட்ட தரிசனங்களுக்கு விஞ்ஞானம் இதன் மூலம் விடை அளித்து, அனைவரையும் மாய பிம்பங்கள் மூலம் அனுபவிக்கவும் (PSYCHOLOGY: Out-of-Body Experiences Enter the Laboratory -- Science journal :: Print Magazine) வழிவகுத்துள்ளது.
தொலை தூரத்தில் இருந்து அறுவை சிகிச்சை செய்யவும், வீடியோ விளையாட்டுகளில் புது உத்திகளைக் கொணரவும் இந்த நுட்பம் பயன்படும்.
BBC NEWS | Health | Out-of-body experience recreated
The Science of Out-of-Body Experiences - TIME
Scientists induce out-of-body sensation using virtual reality - International Herald Tribune
Posted by Boston Bala at 9:27 PM 3 comments
இயேசு கிறிஸ்து குறித்து வெளியிட்ட படத்துக்காக மன்னிப்பு கோரியது 'மக்கள் ஓசை'
இயேசு கிறிஸ்து அவர்கள் புகைபிடிப்பது போன்ற ஒரு படத்தை தனது முதல் பக்கத்தில் பிரசுரித்த மலேசிய தினசரி அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.
மலேசியாவிலிருந்து வெளியாகும் தமிழ் தினசரியான மக்கள் ஓசையில் இந்தப் படம் வெளியானது. புனித வேதாகமத்திலிருந்து சில போதனை வரிகளுடன் இயேசு கிறிஸ்துவின் படத்தை இணையதளத்திலிருந்து இறக்கியதாக கூறும் அந்த தினசரி, அதில் இயேசு கிறிஸ்து புகைபிடிப்பது போல் அந்தப் படம் திருத்தப்பட்டிருந்ததை தமது பணியாளர்கள் கவனிக்கவில்லை எனக் கூறியுள்ளது.
இது தொடர்பில் கோலாலம்பூரிலுள்ள ரோமன் கத்தோலிக்க ஆயர் அவர்களிடம் இந்த தினசரி எழுத்து மூலமான ஒரு மன்னிப்பு கடிதத்தை அளித்துள்ளது. இவ்வாறான படத்தை வெளியிட்டது மதத்தை இழிவுபடுத்தும் ஒரு செயல் என்று ஆயர் அவர்கள் கூறியிருந்தார்.
தமிழ் பிபிசி
BBC NEWS | Asia-Pacific | Anger at Malaysia 'Jesus cartoon'
Malaysian Paper Sorry for Smoking Jesus - washingtonpost.com
Posted by Boston Bala at 9:20 PM 3 comments
அ.தி.மு.க. கூட்டணியில் ராமதாஸ் - நாஞ்சில் சம்பத்
நாசரேத், ஆக. 24-
வெற்றி பெறும் கூட்டணியில் இருப்பது பா.ம.க. வின் வழக்கம். அதனால், டாக்டர் ராமதாஸ் விரைவில் எங்கள் அணிக்கு வந்து விடுவார் என்று ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் ம.தி.மு.க.வின் 14-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
ம.தி.மு.க. கடந்த 14 ஆண்டுகளாக உழைத்ததற்கு தமிழக மக்கள் இன்னும் கூலி கொடுக்கவில்லை. காலமும், கடவுளும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தால் எங்களுக்கும் சந்தர்ப்பம் வரும். அந்த சந்தர்ப்பம் விரைவில் கனியும் என்று உறுதியாக கூறுகிறேன்.
சனிப்பெயர்ச்சிக்கு பிறகு மத்திய, மாநில அரசுகள் ஆடி வருகின்றன. பா.ம.க.வின் அரசியல் வரலாற்றை கவனிக்கும்போது அக்கட்சி வெற்றி பெறும் கூட்டணியில்தான் இருக்கும். இப்போது தி.மு.க. அரசை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்ட ராமதாஸ், விரைவில் எங்கள் கூட்டணிக்கு வந்து விடுவார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூட Ôவண்டியை கிளப்புங்கள்; ஓடி வந்து ஏறிக்கொள்கிறோம்Õ என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.
Posted by சிவபாலன் at 6:38 PM 2 comments
சல்மான் சிறை தண்டனை உறுதி்: மேல்முறையீடு தள்ளுபடி
சிங்காரா மானை வேட்டையாடிய வழக்கில் ஐந்து வருட சிறை தண்டனையை எதிர்த்து ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்திநடிகர் சல்மான் தொடுத்திருந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. அதற்கான கைது வாரண்ட் வெள்ளியன்று வழங்கப்படும்இந்த தண்டனைக்காலத்தை குறைக்க சல்மான்கானின் வக்கீல் உயர்நீதிமன்றத்தில் செவ்வாயன்று மனு தாக்கல் செய்வார். ஹைதராபாத்தில் விமானத்தை தவறவிட்டதால் சல்மான் தீர்ப்பு வழங்கும்போது நீதிமன்றத்தில் இல்லை.
No respite for Salman, Court sends him to jail
Posted by மணியன் at 4:56 PM 0 comments
ஜெ. வீட்டை முற்றுகையிட முயற்சி
ஜெ. வீட்டை முற்றுகையிட முயற்சி
காங்-அதிமுக தொண்டர்கள் அடிதடி
கொடுப்பாவி எரிப்பு-2 எம்எல்ஏக்கள் கைது
ஆகஸ்ட் 24, 2007
சென்னை: அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அவதூறாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு முன் போராட்டம் நடத்தச் ெசன்ற காங்கிரஸாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
இந்த போராட்டம் தொடர்பாக 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக சமீபத்தில் ஜெயலலிதா ஒரு அறிக்கை விடுத்திருந்தார். அதில் பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக சாடியிருந்தார். தனது மகள் மற்றும் மருமகன் ஆகியோர் வசிக்கும் அமெரிக்காவுக்கே மூட்டை முடிச்சுகளோடு கிளம்பபிப் போகட்டும் மன்மோகன் சிங் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
பிரதமர் குறித்த ஜெயலலிதாவின் விமர்சனத்தால் காங்கிரஸ் கட்சியினர் கோபமடைந்தனர். பிரதமர் குறித்துப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் ஜெயலலிதா, இல்லாவிட்டால் அவரது வீட்டு முன் போராட்டம் நடத்துவோம் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், முன்பு சோனியா காந்தி குறித்துத் தரக்குறைவாக பேசியிருந்தார் ஜெயலலிதா. இது பெரும் பூகம்பமாக வெடித்தது. அதை ஜெயலலிதா மறந்திருக்க மாட்டார்.
இந்த நிலையில் பிரதமர் குறித்தும் அவதூறாகப் பேசியுள்ளார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் அவரது வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும், எம்.எல்.ஏவுமான விஷ்ணு பிரசாத், எம்.எல்.ஏ அருள் அன்பரசு தலைமையில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் போயஸ் தோட்டத்தை நோக்கி சென்றனர்.
இதை அறிந்ததும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சேகர்பாபு, பதர் சையத், கலைராஜன் உள்ளிட்டோர் தலைமையில் அதிமுகவினரும் தயாராக திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து ஜெயலலிதா வீடு உள்ள தெரு வளையும் இடத்தில் அதிமுகவினர் பெருமளவில் கூடி நின்றனர்.
அப்போது அங்கு காங்கிரஸார் வந்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது.
காங்கிரஸ் தொண்டர்களை நோக்கிப் பாய்ந்த கலைராஜனும், சேகர்பாபுவும் அவர்களைப் பிடித்து தள்ளி விட்னர். இதையடுத்து அதிமுக தொண்டர்களுக்கும், காங்கிரஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது.
அப்படியே அது அடிதடியாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்தும் மிதித்தும் கொண்டனர்.
போலீஸார் பெரும் சிரமப்பட்டு இரு தரப்பினரையும் கலைத்து விட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டம் செய்யச் சென்ற காங்கிரஸார் கைது செய்யப்பட்னர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெ. கொடும்பாவி எரிப்பு:
முன்னதாக வட சென்னை பகுதியில் ஜெயலலிதாவின் கொடும்பாவியை காங்கிரஸ் தொண்டர்கள் கொளுத்தினர். இதையடுத்து 10க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
www.thatstamil.com
Posted by முதுவை ஹிதாயத் at 1:12 PM 0 comments
ரஷியாவில் 10 நாகை இளைஞர்கள் கைது;
ரஷியாவில் 10 நாகை இளைஞர்கள் கைது;
17 பேர் கதி என்ன? - குடும்பத்தினர் பரிதவிப்பு!
ஆகஸ்ட் 24, 2007
திருச்சி: ரஷியா வழியாக ஜெர்மனிக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை ரஷிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனால் 10 பேரும் கடந்த 17ம் தேதி முதல் ரஷியாவில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சியில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தின் நாகப்பட்டணம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர் உள்ளூர் வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுகியுள்ளனர். வெளிநாட்டில் வேலை கோரி அவர்களை இவர்கள் அணுகியுள்ளனர்.
அந்த ஏஜென்சி, 27 பேரிடமும் பெரும் பணத்தை வாங்கிக் கொண்டு முகம்மது ஷியாம் என்கிற இலங்கை நபர் மூலம் ரஷியாவுக்கு அனுப்பியுள்ளது. முகம்மது ஷியாம் ரஷிய பாஸ்போர்ட் வைத்துள்ளார்.
டூரிஸ்ட் விசா மூலம் 27 பேரும் ரஷியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு போன பின்னர் அவர்களை இரு பிரிவாக பிரித்துள்ளனர். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது.
ரஷியா வரை கூடவே வந்த ஷியாம், அங்கு போன பின்னர் தலைமறைவாகி விட்டார். காரணம், இவர்களை ரஷிய காவல்துறையினர் கண்காணிக்க ஆரம்பித்தது தெரிய வந்ததால். தான் கூட்டி வந்த அனைவரையும் ரஷியாவில் பரிதவிக்க விட்டு விட்டு அவர் தப்பி விட்டார்.
இந்த நிலையில் இரு பிரிவாக பிரித்து அனுப்பப்பட்டவர்களில் 17 பேரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. மற்ற 10 பேரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகினர். அங்கு துணைத் தூதர் ஜோர்டானா பாவேலை சந்தித்து தங்களது நிலையைக் கூறியுள்ளனர்.
அவர் உடனடியாக 10 பேரையும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்தார். பின்னர் திருச்சி பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.பாலச்சந்திரனை தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார்.
இதையடுத்து பாலச்சந்திரன், சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த சிக்கல் குறித்து பாலச்சந்திரன் கூறுகையில், விதிமுறைப்படி, இதுபோல பிடிபடுவோர், ஊர் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுக்கான கட்டணத்தை வைத்திருக்க வேண்டும். ஆனால் சில சமயங்களில் விசேஷ சந்தர்ப்பங்களில் இந்திய அரசே அந்த செலவுகளை ஏற்றுக் கொள்ளும்.
தற்போது ரஷியாவில் பரிதவிக்கும் நாகை இளைஞர்கள் விஷயத்தைப் பொருத்தவரை, டெல்லி திரும்புதவற்குத் தேவையான ரூ. 30,000 பணத்தை தயார் செய்யுமாறு இந்தியத் துணைத் தூதர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்களின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்துள்ளோம்.
இதையடுத்து நேற்று அவர்களின் பெற்றோர்கள் ரூ. 3 லட்சம் பணத்தை இங்கு வந்து செலுத்தியுள்ளனர். நாங்கள் இதை உடனடியாக ரஷியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்குத் தெரிவித்து விட்டோம்.
இதையடுத்து 10 பேரும் ஊர் திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அனைவரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தாஷ்கண்ட் வழியாக அவர்கள் இன்று டெல்லி வருவதாக இருந்தது.
ஆனால் அவர்களை நாடு திரும்ப ரஷிய போலீஸார் அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட காலத்தைத் தாண்டி அவர்கள் ரஷியாவில் தங்கியுள்ளதாக கூறி கைது செய்து விட்டனர். விடுதலையான பின்னர்தான் 10 பேரும் நாடு திரும்ப முடியும் என்றும் ரஷிய போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திய தூதரகம் தொடர்ந்து விடுத்த கோரிக்கைகளை ரஷிய காவல்துறை ஏற்கவில்லை. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் ஹோட்டல்களில் போலீஸ் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் பாலச்சந்திரன்.
இந்த விவகாரத்தில் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு, மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் கைது செய்யப்பட்டுள்ள நாகை இளைஞர்ள் ஊர் திரும்ப வழி செய்ய வேண்டும் என்று அவர்களின் உறவினர்ளும், குடும்பத்தினரும் கோரியுள்ளனர்.
இதற்கிடையே, ரஷியாவில் சிக்கித் தவிக்கும் இளைஞர் ஒருவரின் உறவினர்கள் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணி சங்கர் அய்யரிடம் உதவி கோரி அணுகியுள்ளனர்.
ரஷியாவில் சிக்கியுள்ள அனைவரும் நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
www.thatstamil.com
Posted by முதுவை ஹிதாயத் at 1:08 PM 0 comments
ஜெயலலிதாவை கண்டித்து போயஸ் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.
பிரதமர் மன்மோகன்சிங்கைஅவதூறாக பேசிய ஜெயலலிதாவை கண்டித்து போயஸ் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் இருவர்உட்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.
அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அறிக்கைவெளியிட்டஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்று கூறியிருந்தார். இதை கண்டித்து காங்கிரஸ்கட்சிசட்டமன்றத் தலைவர் சுதர்சன் தலைமையில் இன்று காலை ஏராளமானவர்கள் ஜெயலலிதா வீடுள்ள போயஸ் கார்டன் முன்பு திரண்டுஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அருள்அன்பரசு, விஷ்ணுபிரசாத் இருவர் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அப்போது நடைபெற்ற கல்வீச்சில் அ.தி.மு.க-வைச்சேர்ந்த குப்பன் என்பவர் காயமடைந்தார். மேலும்.... சற்றுமுன் அதிமுக சார்பில் மாவட்ட ஆட்ச்சியர் அலுவலகம் எதிரில் நிலவரிஉயர்வைகண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது இதில் முதல்வர்கருணாநீதிக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் கோஷம் போட்டனர்.
Posted by Adirai Media at 12:19 PM 0 comments
இந்தோனேஷியாவில் சவுதி அரேபிய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்
இந்தோனேஷியாவில் சவுதி அரேபிய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்
இந்த்னோஷிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இரண்டு பணிப்பெண்கள் இறந்தைக் கண்டித்தும் மற்றும் இரண்டு பணிப்பெண்கள் கடுமையாக தாக்கப்பட்டதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் இறந்த பணிப்பெண்களது உடலை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்பி வைக்கக் கோரினர்.
எனினும் சவுதி அரேபியாவில் உள்ள இந்தோனேஷிய தூதரக அதிகாரிகள் இறந்தவர்களது உடல்களையும், காயமடைந்தவர்களையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
http://www.arabnews.com/?page=1§ion=0&article=100381&d=24&m=8&y=2007
Indonesians Protest Outside Saudi Embassy in Jakarta
Posted by முதுவை ஹிதாயத் at 12:10 PM 0 comments
அமீரகத்திலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பப்பட்டனர்
அமீரகத்திலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பப்பட்டனர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகத்திற்கு ஜாக்கியாக இருந்து வந்த அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பி வைக்கப்பட்டனர். அமீரகம் மற்றும் யுனிசெப் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இவர்கள் தாய்நாடு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் ஒட்டகத்திற்கு ஜாக்கியாக செயல்பட பணத்திற்காக அரபகங்களுக்கு கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது.
இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க என்னதான் சட்டங்கள் போட்டாலும் சிறுவர்களைக் கடத்தும் போக்கு தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=data/theuae/2007/August/theuae_August685.xml§ion=theuae&col=
Over 600 child camel jockeys repatriated to Pakistan
Posted by முதுவை ஹிதாயத் at 11:50 AM 0 comments
கபில்தேவை போல கவாஸ்கரும் தனி கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு போட்டியாக கபிலதேவ் இந்திய கிரிக்கெட் லீக் என்ற அமைப்பை ஏற்படுத்தி தனி அணிகளை உருவாக்குகிறார். இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற உள்ளனர்.
கபில்தேவுக்கு போட்டியாக முன்னாள் கேப்டன் கவாஸ்கரும் இதே போல தனி அமைப்பை ஏற்படுத்தி அணிகளை உருவாக்க உள்ளார். கவாஸ்கர் ஏற்படுத்தும் அணிக்கு இந்திய கிரிக்கெட் சங்கமே உதவியாக இருக்க முன் வந்துள்ளது. இந்த அமைப்புக்கு ப்ரொஃபஷனல் கிரிக்கெட் லீக் என்று பெயர் சூட்டி உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் உள்ளூரில் நடக்கும் போட்டிகளில் இவர்கள் ஆடினால் குறைவான சம்பளமே கிடைத்து வந்தது.
கபில்தேவ் தொடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் லீக் அணியில் சேரும் வீரர்களுக்கு ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.90 லட்சம் வரை சம்பளம் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் கபில் தேவ் அணியில் சேர்ந்து விட்டனர். அவர்களிடம் 3 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதை தடுக்க உள்ளூர் வீரர் களுக்கு இந்திய கிரிக்கெட் சங்கமும் சம்பளத்தை உயர்த்தி உள்ளது. உள்ளூர் போட்டிகளில் வெற்றி பெறும் மற்றும் 2-வது இடம் பெறும் அணிகளுக்கான பரிசு பணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு போட்டியில் ஆட வீரருக்கு ரூ.36 ஆயிரம் வழங்கப்படும். இதற்கு முன்பு ரூ.26 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதன்படி வருடத்துக்கு 45 ஆட்டங்களுக்கு மேல் விளையாடும் வீரர்களுக்கு வருடத்துக்கு ரூ.16 லட்சத்து 20 ஆயிரம் கிடைக்கும். வெற்றி பெறும் அணி வீரர்களுக்கு பரிசு பணமும் தனியாக கிடைக்கும்.
இந்த வகையில் மட்டும் இந்திய கிரிக்கெட் சங்கம் ரூ.26 கோடி வரை உள்ளூர் போட்டி வீரர்களுக்கு வழங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.650 கோடி வருமானம் கிடைத்து உள்ளது. முந்தைய ஆண்டு வருமானம் ரூ.430 கோடியாக இருந்தது.
வருமானத்தில் 26 சத வீதத்தை வீரர்களுக்கு வழங்கு வது. அதில் பாதியை உள்ளூர் வீரர்களுக்கு வழங்குவது என்று கிரிக்கெட் சங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாலைமலர் : கபில்தேவ் அணியில் சேராமல் தடுக்க உள்ளூர் வீரர்களுக்கு ரூ.26 கோடி பரிசு மழை: கிரிக்கெட் சங்கம் முடிவு
Cricinfo - Newspaper reports BCCI to start its own league
IndianExpress.com :: BCCI kitty swells, pay hike likely for domestic players
Posted by Boston Bala at 2:10 AM 0 comments
b r e a k i n g n e w s...