.

Thursday, July 12, 2007

எருதைக் காப்பாற்ற நீதிமன்றம் சென்ற இந்து மதகுருமார்

இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் எருது ஒன்றின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியாக இங்கு பிரிட்டனில் இருக்கும் இந்து மதகுருமாரின் குழு ஒன்று இன்று நீதிமன்றம் செல்கிறது. எருதுகளுக்கு தொற்றும் ஒரு வகையான் கச நோய்க்கான பரிசோதனையில், தோல்வியடைந்த எருது ஒன்று கொல்லப்படும் நிலையை எதிர்கொள்கிறது.

எருதைக் கொல்வது தமது மத நம்பிக்கைக்கு எதிரானது என்பதால், இந்த எருதைக் கொல்வதை தாம் அனுமதிக்க மாட்டோம் என்று இங்கு வேல்ஸ் பகுதியில் உள்ள இந்து மதகுருமார் கூறியுள்ளனர். இந்த எருதைக் கொல்வது இந்த மதகுருமாரின் மனித உரிமையை மீறும் என்று அவர்களது சட்டத்தரணிகள் வாதிடுவார்கள்.

- BBC Tamil

BBC NEWS | UK | Wales | Timeline: Shambo
Fate of Shambo the sacred bull is in the hands of Welsh justice - International Herald Tribune
Shambo: TB or not TB from Guardian Unlimited: News blog

அரசியல் ரீதியான வெற்றியாகத்தான் தொப்பிகலவை கைப்பற்றியது பார்க்கப்படுகிறது என்கிறார் இக்பால் அத்தாஸ்

இலங்கையின் கிழக்கேயுள்ள தொப்பிகலப் பகுதியை இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளது இராணுவ ரீதியாக முக்கியமானது என பத்திரிகையாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் கருத்து வெளியிட்டுள்ளார். சம்பூர் வாகரை போன்ற பகுதிகளிலிருந்து இலங்கை இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் தொப்பிகலப் பகுதிக்கு வந்த பின்னர் அவர்களை அங்கிருந்தும் இராணுவம் வெளியேற்றியது இலங்கை அரசைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றிதான் எனவும் அவர் கூறுகிறார்.

ஆனாலும், கைப்பற்றிய பிரதேசங்களை அரசாங்கம் எவ்வளவு காலம் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பது இனி வரும் வாரங்கள் அல்லது மாதங்களில்தான் தெரியவரும் எனவும் இக்பால் அத்தாஸ் தெரிவிக்கிறார். 13 வருடங்களுக்கு முன்னரும் இதே போன்ற நிலைமை ஏற்பட்டது எனவும் அப்போது கிழக்குப் பகுதி முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தது என அரசு தெரிவித்த போதிலும், சிறு சிறு தாக்குதல்களை நடத்திய விடுதலைப் புலிகள் தற்போதிருந்த நிலைக்கு கொண்டுவந்தனர் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அரசியல் ரீதியான வெற்றியாக இதைக் காண்பிப்பதற்காகத்தான் இந்தத் இராணுவத் தாக்குதல்கள் இவ்வளவு வேகமாக நடத்தப்பட்டன எனவும் இக்பால் அத்தாஸ் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனாலும் எதிர்பார்த்த அரசியல் பலனை இது தருமா என்பதற்கு அடுத்த சில வாரங்களில் தெரியவரும் எனவும், விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலமிழக்கும் வரை இது போன்ற இராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் எனக் காட்டுவதாகத்தான் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்

கிழக்கைப் போன்றே இலங்கையின் வடக்கிலும் இராணுவம் இது போன்ற தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தாம் கருதுவதாக இக்பால் அத்தாஸ் தெரிவிக்கிறார். இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகமாகும்போது விடுதலைப் புலிகள் பின்வாங்குவதும், பின்னர் தாக்குதல்களை நடத்துவதும் கடந்த 25 வருடமாக நடைபெற்று வரும் யுத்தத்திலிருந்து தெரிய வருகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் அதே போன்ற நிலையை விடுதலைப் புலிகள் எடுப்பார்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

சந்திரிகா குமாரதுங்க எவ்வாறு யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்ட போது எவ்வாறு ஒரு சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவைத் தேடிக் கொண்டாரோ, அதே போலவே தற்போது கிழக்கில் தொப்பிகலவை பிடித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ தேடிக் கொள்கிறார் என இலங்கை பகுப்பாய்வாளர் டி பி எஸ். ஜெயராஜ் கூறுகிறார்.

கிழக்கில் நடைபெற்ற போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டி அந்த மக்களின் இதயங்களை வென்றெடுக்காமல் இவ்வாறான வெற்றிக் கொண்டாட்டங்கள் பொருத்தமானதாக இருக்காது எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

- BBC Tamil

BBC NEWS | South Asia | 'War victory party' in Sri Lanka: "'You can win a battle with 2,000 troops, but to hold it you need 10,000 minimum'"
NDTV.com: LTTE warns of retaliation

'தமிழ்நாட்டில் மின்சாரத்தட்டுப்பாடில்லை' - கருணாநிதி

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்தட்டுப்பாடு நிலவுவதாக குற்றஞ்சாட்டிய ஜெயலலிதாவுக்கு பதிலளிக்கும் விதமாக, தடையற்ற, தரமான மின்சாரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அவர், தற்போது புதிதாக 10,000 டிரான்ஸ்பார்மர்கள் வாங்கி மாற்றியமைக்கப்பட்டு மின்தடை குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

அதிமுக ஆட்சியின்போது 14,000 டிரான்ஸ்பார்மர்கள் வாங்காத காரணத்தால், புதிய டிரான்ஸ் பார்மர்களுக்கு பற்றாக்குறை நிலவியதாகக் குறிப்பிட்டு, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் அறிவிப்பையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மக்கள் தொ.கா

கிரிக்கெட்: இந்தியப்பயிற்சியாளர் பாத்திரமேற்க வெசல்ஸ் விருப்பம்.

தென் ஆப்ரிக்க முன்னாள் கேப்டன் கெப்ளர் வெசல்ஸ் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணி புரிவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர் விவகாரத்தில் ஆதரவு கேட்டு மூத்த இந்திய வீரர்கள் சிலரின் உதவியை நாடியுள்ள அவர் இதுதொடர்பாக தனது ஏஜெண்ட் லிகர்வுட் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் (பிசிசிஐ.) தொடர்புகொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் போட்டியில், ஜான் டைசன் (ஆஸ்திரேலியா), டெர்ரி ஆலிவர் மற்றும் நாஸ்வொர்த்தி ஆகியோர் ஏற்கனவே களமிறங்கியுள்ளனர்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு, தற்காலிக அணி மேலாளராக சந்து போர்டே நியமிக்கப்பட்டது 'சற்றுமுன்' வாசகர்கள் அறிந்ததே.

CBI இயக்குனரின் மைத்துனர் கொலை?

மத்திய புலனாய்வுத்துறை இயக்குனர் விஜய்சங்கரின் மைத்துனரான கே.டி.திரிபாதி, நேற்று தனது வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.

ஓய்வு பெற்ற பொறியாளரான திரிபாதி(67), தெற்கு தில்லி, "சைனிக் பார்ம்ஸ்' சாலையில் உள்ள தனது வீட்டில் தனியே வசித்து வந்தார். அவருடைய மனைவி, அமெரிக்காவில் உள்ள ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில், நேற்று திரிபாதி தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். அவருடைய கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. இதனால், அவர் சாவதற்கு முன் கொலையாளியுடன் கடுமையாக போராடியுள்ளார் என தெரிகிறது. அவருடைய வீட்டில் இருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர்

'துணைகுடியரசுத்தலைவர் பதவி வேண்டாம்' - சரத்பவார்

மத்திய விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் துணை குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்கப் பட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று கூறினார். இனி மேல் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அது குறித்து நிருபர்கள் கேட்ட போது, "கடந்த 41 ஆண்டுகளாக மகாராஷ்டிர சட்டசபையிலோ அல்லது பார்லிமென்ட்டிலோ நான் உறுப்பினராக இருந்து வருகிறேன். எனவே, அந்த இடத்திற்கு வேறொருவர் வர வேண்டும் என்று விரும்புகிறேன்,'' என்று அவர் பதிலளித்தார்.

நன்றி: தினமலர்

ஈயடித்தால் வருமானம்.

எந்த வணிகமும் போணியாகாத போது 'ஈயடிக்கிறது' என்று சொல்வதுண்டு. ஆனால் இப்போது 'ஈயடித்தாலே' வருமானம் என்று நிலமை ஆகியுள்ளது. இது எந்த நாட்டில் தெரியுமா: 'சீனா'வில் தான்.

இதுபற்றி இந்தச்செய்தியில்,

சீன நாட்டில் லுயாங் மாகாணத்தில் உள்ளது சிகாங் நகரம். இங்கு ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதையடுத்து ஈக்களை ஒழிக்க சிகாங் நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் சுற்றுப்புற துõய்மையை ஊக்கப்படுத்தும் வகையில் ஈக்களை கொல்வதற்கு பரிசு வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.""நகரை துõய்மைப்படுத்தும் நடவடிக்கையில் மக்களை ஈடுபடுத்த இது தான் சிறந்த வழி என்று நானும் எனது சக அதிகாரிகளும் நம்புகிறோம்,'' என்று லுயாங் நகர தலைமை அதிகாரி ஹூ குய்செங்க் கூறினார்.மொத்தம் 10 லட்சத்து 55 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட லுயாங் நகர், மாகாண அளவில் மிகத்தூய்மையான நகர் என்ற பெயரை எடுப்பதற்காக கடுமையாக முயற்சித்து வருகிறது. அதற்காக, ஒரு ஈயை கொன்றால் 30 பைசா பரிசும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதுவரை இரண்டாயிரம் ஈக்கள் கொல்லப்பட்டு இதற்காக நகர நிர்வாகம் ஐந்தாயிரத்து 250 ரூபாய் செலவழித்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையப்பயனாளி ஒருவர் கூறுகையில்,"நகரை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற நகர நிர்வாகத்தின் நோக்கம் சரியானது தான். ஆனால், இது மக்களை கேலிக்குரியதாக்கும் செயல். கொல்லப்பட்ட ஈக்களுக்கு பைசா கொடுப்பதை விட நகர மக்கள் தங்கள் சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடவேண்டும்; அதன் மூலம் ஈக்கள் தொல்லையை கட்டுப்படுத்தலாம்'' என்றார்.

எலி,கொசு, பூச்சிகள் ஆகியவற்றை கொல்வதில் வித்தியாசமான வழிகளை சீன நாடு பின்பற்றிய சரித்திரம் உண்டு.

கடந்த 1950ம் ஆண்டு மா சேதுங் ஆட்சியின் போது ஈ, கொசு, எலிகள் மற்றும் சிட்டுக் குருவிகள் ஆகியவற்றை கொல்ல பொதுமக்களுக்கு அவர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாயம் தரும் இரட்டைப்பதவி: பாஜக எம்.பி பதவி பறிப்பு

ஆதாயம் தரும் இரட்டைப்பதவி சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., எம்.பியான கிருஷ்ணமிராரியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ம.பி.யைச் சேர்ந்த பா.ஜ.க, எம்.பி., கிருஷ்ணமிராரி. இவர் அம்மாநில நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும் உள்ளார். அதனால் கிருஷ்ணமிராரி ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதாக இவர் மீது, அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ, ஜமுனாதேவி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தார். இம்மனு மீது விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், கிருஷ்ணமிராரியின் பதவியைப் பறிக்க குடியரசுத்தலைவருக்குப் பரிந்துரை செய்தது. இப்பரிந்துரையை ஏற்று கிருஷ்ணமிராரின் பதவி பறிப்புக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்

தினமலர்

'இட்லி'க்கு எதிரான வழக்கு தள்ளுபடி.

மதுரை முருகன் இட்லி கடையில் இட்லிக்கு வழங்கப் பட்ட சட்னி, சாம்பார் சரியில்லை என வழக்கு தொடர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபற்றிய தினமலர் செய்தி:

பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நல்லபெருமாள். இவர், முருகன் இட்லி கடை உரிமையாளர் மனோகரனுக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில்,"29.9.2006ல் முருகன் இட்லி கடைக்கு சாப்பிட சென்றேன்; 6 இட்லி சாப்பிட்டேன்; ஒரு இட்லி ரூ.4 என தெரிவிக்கப்பட்டது; இதற்காக வழங்கப்பட்ட சட்னி, சாம்பார், பொடி ருசியாக இல்லை. இதுகுறித்து கடை மேலாளரிடம் தெரிவித்த போது சரியான பதில் சொல்ல மறுத்து விட்டார். ஆனால், 6 இட்லிக்கு ரூ.37.40 வாங்கிக் கொண்டனர். இதற்காக பில் கேட்ட போது தர மறுத்து விட்டனர். எனவே, இந்த சேவைக்குறைவுக்காக ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்' என குற்றம் சாட்டினார்.

முருகன் இட்லி கடை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், " சட்னி, சாம்பார் ருசி இல்லை என்ற குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை. உரிமையாளரை மிரட்டும் நோக்கத்தில் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது. கடை சார்பில் வக்கீல் பிறவிபெருமாள் ஆஜரானார்.குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை நீதிபதி பரமேஸ்வரன் தள்ளுபடி செய்தார். வழக்கை தொடர்ந்தவர் 2 மாதங்களுக்குள் ரூ.2 ஆயிரம் அபராதம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

கேபிள் டிவி: தமிழக அரசுக்கு இராமதாஸ் கடிதம்.

தமிழகத்தில் கேபிள்டிவி'யை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக பா.ம.க.,இராமதாஸ் கூறினார்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்ததை வரவேற்கிறேன். தோழமைக் கட்சிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து திறந்த மனதுடன் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். துணை நகரம்,விமான நிலைய விரிவாக்கம் போன்ற பிரச்னைகளில் எங்கள் கொள்கையை ஏற்று, மாற்று கருத்துக்கு முதல்வர் மதிப்பு தரும் வகையில் அரசின் நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ம.க., தி.மு.க., கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தவைகளை நிறைவேற்ற நாங்கள் தமிழக அரசை வற்புறுத்துவோம். தமிழகத்தில் கேபிள் "டிவி'யை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும். மக்களுக்கு சலுகை வழங்கினாலும் ரூ.500 கோடி அரசுக்கு வருமானம் வரும். கேபிள் "டிவி'யை தமிழக அரசு எடுத்து நடத்த, மத்திய அரசு தடையாக இருக்காது. இதை தனியார் நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டுள்ளனர். இது போதாது என்று தற்போது, வேறு சிலரும் கேபிள் "டிவி'யை நடத்த போட்டி போடுகின்றனர். சென்னையில் விளம்பர பலகை வைக்கும் நிறுவனம் நடத்துபவரும், சேலம் மாநகரைச் சேர்ந்த ஒருவரும் உட்பட மூன்று பேர் இணைந்து இந்தத் தொழிலை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடத்த உள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

கேபிள் "டிவி'யை ஏற்று நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதை நான் சுட்டிக் காட்டி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றேன். காவிரியில் கர்நாடகம் பல தடுப்பணைகள் கட்டி வருகின்றது. இதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நடுவர் மன்றம் ஏற்கவில்லை. எனவே, தமிழக அரசு இதை அவசர வழக்காக ஏற்கும் படி உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். இவ்வாறு இராமதாஸ் கூறினார்.

நன்றி

ஒரு ஆரிய சக்தி - திராவிட சக்தி - கருணாநிதி

அண்ணா அறிவாலய வளாகத்தில் மதிமுக உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர் பேராசிரியர் சபாபதி மோகன் தலைமையில் மதிமுகவைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும், தொண்டர்களுமாக 250க்கும் மேற்பட்டவர்கள் இன்று கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்று கருணாநிதி பேசியதாவது

திமுகவை ஒழிக்க வேண்டுமென்று நினைத்தால் அது நிச்சயம் நடக்காது

வருங்காலத்தில் திமுக இந்தியா வில், குறிப்பாக தென்னிந்தியாவில் அரசியல் நிலைப்பாட்டை நிர்ண யிக்கும் மாபெரும் சக்தியாக உருவாக வேண்டும் என்பது தான் என் வாழ்நாள் ஆசை.

தமிழகத்திலுள்ள திராவிட கட்சிகள் பொது பிரச்சனைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளை போல ஒன்றிணைந்து செயல்பட நான் விரும்பினேன். ஆனால் ஒரு ஆரிய சக்தி, திராவிட சக்தி என்ற பெயரிலே அதற்கு தடையாக இருந்தது உங்களுக்கு தெரியும்.

இது போன்ற ஆரிய மாயைகளை விரட்ட வேண்டும் என்று தான் பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் பாடுபட்டார்கள். அந்த ஆரிய மாயையை வீழ்த்துவதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.

மேலும் செய்திக்கு "மாலைச் சுடர்"

சூரிய மண்டலத்துக்கு வெளியே நீருள்ள கோள்.

பால்வெளி (Milky Way) என்றழைக்கப்படும் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே, மற்றொரு சூரிய மண்டலத்தில் துணைக்கோள் ஒன்றை அமெரிக்கா நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். அக் கோளை `ஸ்பிச்சர் ஸ்பேஸ் டெலஸ்கோப்' என்ற அதிக சக்தி கொண்ட தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்தனர்.

அந்த கோளின் வான் பகுதியில் நீர் ஆவியாக நின்றது தெரியவந்தது. எனவே அந்த கோளில் நீர் இருக்க வேண்டும் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த கோளுக்கு பெயர் வைக்கவில்லை. `எச்.டி.189733 பி' என்ற குறியீட்டு எண் கொடுக்கப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 64 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. ஒளி ஆண்டு என்பது ஒளியானது ஒரு வருடம் முழுவதும் பயணம் செய்வதை குறிப்பிடுவது ஆகும்.

வாசித்த இடம்

இலங்கை தமிழர் பகுதியில் குண்டு வீச்சு.

2 பேர் பலி- 11 பேர் படுகாயம்.
இலங்கை அரசு- விடுதலைப்புலி இடையே மீண்டும் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக நார்வே நாட்டு தூதர் முல்லை தீவு சென்று விடுதலைப்புலிகளுடன் பேசி விட்டு வந்தார். அவர் கொழும்பு திரும்பிய சில மணி நேரத்தில் தமிழர் பகுதியில் சிங்கள ராணுவம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. முல்லைத்தீவு அருகே உள்ள அனம்பில் பகுதியில் சிங்கள ராணுவத்தின் கிபீர் ரக விமா னங்கள் பறந்து வந்து குண்டுகளை வீசின. அங்கிருந்த கிறிஸ்தவ ஆலயம், மீன் சந்தை தாக்கப்பட்டன. இதில் பள்ளி மாணவர் செல்வா (வயது 15), பாலசுப்பிரமணியம் (51) ஆகியோர் உயிர் இழந்தனர். கலையரசு (4), அருள்சன் (1) ஆகிய குழந்தைகள் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பகுதி சுனாமியின் போது கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டிருந்தன. குண்டு வீச்சால் இந்த வீடுகளும் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே விடுதலைப்புலிகளிடம் 17 ஆண்டு களுக்கு மேலாக இருந்த தோப்பிகலா முகாமை ராணுவம் கைப்பற்றி விட்டதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது.

பள்ளிவாசல் ஊழியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க அரசுக்கு கோரிக்கை.

பள்ளிவாசல் ஊழியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என மாநில நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் சங்க (ஏ.ஐ.டி.யூ.சி.) மாநில நிர்வாகக் குழு கூட்டம் அய்யம்பேட்டை மில்லத் நகர் பள்ளிவாசல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில பொருளாளர் அப்துல்ஹமீது தலைமை வகித்தார். பிலால் லியாகத் அலி வரவேற்றார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை தலைவர் சந்திரகுமார் சிறப்புரையாற்றினார். மாநில பொது செயலாளர் அப்துல்காதர் சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிவாசல்களினல் பணிபுரியும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு பணியாளர்களும் பயனடையும் விதத்தில் தனி நலவாரியம் அமைத்து தொழிலாளர் நலத்துறையின் மூலம் செயல்படுத்திட வேண்டும். வக்ப் போர்டு மூலம் குறைந்த எண்ணிக்கையிலான உலமாக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 60 வயதை கடந்த அனைத்து பள்ளிவாசல் பணியாளர்களுக்கும் வக்ப் போர்டு மூலம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரயிலடி பள்ளி பிலால் சாகுல்அமீது நன்றி கூறினார்.

கலாமுக்கு இங்கிலாந்தின் உயர் விருது

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இங்கிலாந்தின் மிக உயர்ந்த "இரண்டாவது சார்லஸ் அரசர் விருதுக்கு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவில், ஆக்கப்பூர்வமான விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்டதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோவுக்கு அடுத்த படியாக இந்த விருதைப் பெறும் ஒரு நாட்டின் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார் கலாம். இங்கிலாந்து அரச பரம்பரைத் தலைவர் மார்ட்டின் ரீஸ் கூறுகையில், வளரும் நாடான இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு தொலைநோக்குத் திட்டம் தீட்டியவர் கலாம் என்று புகழாரம் சூட்டினார்.

வரும் வெள்ளிக்கிழமை தில்லி மற்றும் லண்டனில் நடைபெறுவதாக இருந்த விருது விழா, முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவையடுத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 19 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பின், விருது வழங்குவதற்கான புதிய தேதி அறிவிக்கப்பட உள்ளது.

தினமணி

The Hindu News :: Kalam chosen for King Charles II Medal

-o❢o-

b r e a k i n g   n e w s...