.

Saturday, February 24, 2007

தில்லி மாநகராட்சி தேர்தல்கள் - ஏப்.5

இந்திய தலைநகர் டில்லியின் மாநகராட்சி (Municipal Corporation of Delhi - MCD) தேர்தல்கள் ஏப்ரல் 5 அன்று தில்லி மாநில தேர்தல் ஆணையர் S.P.மார்வா அறிவித்துள்ளார். 134 இடங்கள் கொண்ட தற்போதைய நிலையிலிருந்து புது மாநகரசபை 272 இடங்களைக் கொண்டு உலகின் பெருநகர உள்ளாட்சி அமைப்புகளிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும்.

மேலும் விவரங்களுக்கு...

மைனர் பெண் காதலனுடன் செல்வது குற்றமல்ல!!

டெல்லியைச் சேர்ந்த 17 வயது பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார். அந்த பெண்ணை பெற்றோர் மிரட்டி வீட்டில் அடைத்து வைத்தனர். வீட்டில் இருப்பது தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி எஸ்.என்.திங்ரா தீர்ப்பில் கூறியதாவது:


18 வயதுக்கும் குறைந்த மைனர் பெண், எந்த ஆண் மீதும் காதல் வயப்படக் கூடாது, அவரையே கல்யாணம் செய்ய விரும்பக் கூடாது என்று இந்திய தண்டனைச் சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ கூறப்படவில்லை. அது ஒரு குற்றமும் இல்லை.


பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலிக்கும் பெண்ணுக்கு பெற்றோர் வீட்டில் எந்த பாதுகாப்பும் கிடையாது. அவள் அங்கு பாதுகாப்பாக இருப்பாள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.



New Kerela, தமிழ் முரசு

சிபிஐ குழு அர்ஜென்டீனா செல்கிறது

சி.பி.ஐ கடைசியில் தன் குழுவொன்றை அர்ஜென்டீனாவிற்கு அனுப்பி கூட்ரோக்கியின் 'நாடு கடத்தலைகொணர்தலை' (extradition) {நன்றி:பாலா} விரைவுபடுத்த அனுப்ப இருக்கிறது. பி.ஜே.பி, இடதுசாரிகள் என எல்லோரும் குறை சொன்னபிறகு, உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு போட்டபின்பு இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. சிபிஐயின் இயக்குநர் விஜயசங்கர் பேசும்போது 17 நாட்கள் கழித்து அறிவிப்பு வெளியானதில் தாமதம் ஏதும் இல்லை, ஆவணங்களை மொழிபெயர்த்து ஆள் அடையாளங்களை சரிபார்த்த பின்பே அறிவிக்கப் பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.்


DNA - India - Daily News & Analysis

சைஃப்க்குப் பிறகு ஹ்ரித்திக் உடல்நலம் பாதிப்பு

நீண்ட வேலைநேரங்களும் பயணங்களும் பாலிவுட் நடிகர்கள் உடல்நிலையை பாதித்து வருகின்றன. சிறிது நாள் முன் சைப் அலிகான் லேசான நெஞ்சடைப்பினால் மருத்துவமனயில் அனுமதிக்கப் பட்டார்.இன்று ஹ்ரித்திக் ரோஷன் வைரஸ் சுரத்தில் கட்டாய ஓய்வு எடுக்கத் தள்ளப்பட்டிருக்கிறார். மும்பை புறநகரில் ஜோதா அக்பர் படப்பிடிப்பு, சிஙகையில் விளம்பரப் படப்பிடிப்பு, மும்பையில் திரும்ப ஃபிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சிக்கு்ச்சிக்கு ஒத்திகை என்று வேலைப்பளுவில் உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ளது.மேலும் ...

உ.பி அரசியலில் பரபரப்பு

மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏக்கள் 66பேர் ராஜினாமாவை அடுத்து உ.பி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமலர்

லண்டனில் ரயில் விபத்து

லண்டனில் நடந்த ரயில் விபத்தில் ஒருவர் பலி. பலர் படுகாயம்.

Google news

India News

ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை - துணை அதிபர்

அணு ஆயுத தயாரிப்பை தொடருமானால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க துணை அதிபர் டிக் செனி கூறினார்.

இது குறித்த செய்திகள்

ஏழைகளை பாதிக்காமல் விலைவாசி கட்டுப்படுத்தப்படும் : அப்துல் கலாம் வாக்குறுதி

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறிய முக்கிய துளிகள்:

பணவீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட் கள் தாராளமாக கிடைக்கும் முயற்சி எடுக் கப்பட்டு வருகிறது

கடந்த மூன்று ஆண்டுகளாக எட்டு சதவீதமாக இருந்த நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி வீதம், நடப்பு ஆண்டில் ஒன்பது சதவீதமாக உயரவுள்ளது. 11வது ஐந் தாண்டு திட்டத்தின்படி, ஒன்பது சதவீத வளர்ச்சி வீதத்தை எட்டு வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது.

வளர்ச்சி மற்றும் முதலீடு வேகமாக அதிகரிப்பதும், நாட்டின் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் விவசாயத் துறையை மீட்டெடுப்பது, வேலை வாய்ப்பு முறையை புதிய வடிவத்திற்கு மாற்றி அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், ஏழைகளுக்கு தேவையான முக்கிய சேவைகளை அளித்தல், உற்பத்தி துறையில் போட்டியை உருவாக்குதல், மனித வளத்தை அதிகரித்தல், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், நிர்வாக மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ஐந்து ஆண்டுகளுக்குள் தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தை நாட்டின் அனைத்து பகுதிகளுக்குமே விரிவுபடுத்துவது என்றும், இந்த திட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டில் கூடுதல் மாவட் டங்களில் விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அறிவியல் மையம், இந்திய தொழில் நுட்பக் கழகம், இந்திய தகவல் தொழில் நுட்ப மையம் ஆகிவற்றை கூடுதல் எண்ணிக்கையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப் படும். வடகிழக்கு பகுதிகளில் புதிய மத்திய பல்கலைக் கழகங்களும் ஏற்படுத்தப்படும். விவசாயத்துறையில் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதோடு மட்டுமல்லாது, சாகுபடியை மேம்படுத்த புதிய தொழில் நுட் பங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

.சிறுபான்மை சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் அவர்களுக்கென புதிய திட்டங்களை கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படும். கோல்கட்டா, மும்பை மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவற்றிலுள்ள மையங்களை ஒருங்கிணைக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில் சென்னையில் கடல்சார் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும். கோதாவரி மற்றும் மகா நதி ஆகியவற்றை உள்நாட்டு நதிநீர் வழிகளாக அறிவிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. தகவல் தொழில் நுட்பத்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக இந்த 2007ம் ஆண்டை "அகன்ற அலைவரிசை' ஆண்டாகக் கருதப்படும். தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மின்னணு நிர்வாகம் மூலமாக மேலும் விரைவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய மறுசீரமைப்பு மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்படும்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் நிலை குறித்து ஆய்வு நடத்திய சச்சார் கமிட்டி அறிக்கை மீது பார்லிமென்ட்டில் விவாதம் நடத்தப்படும். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒருங்கிணைந்த உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்படும். மக்களுடன் நட்புறவுடன் பழகும் வகையில் உள்ளூர் கோர்ட்டுகள் அமைக்க, "கிராமீன் நியாயாலயா மசோதா' அறிமுகப்படுத்தப் படும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக ஒரு பல்கலைக்கழகம் துவக்கப்படும்.

திருப்பதி கல்யாண மகோத்ஸ்தவம்

நேற்று ஆந்திரா முழுவதும் 294 சட்டமன்ற நகரங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் 5000 தம்பதிகளுக்கு திருமணம் நிகழ்த்தியிருக்கிறது. ஒவ்வொருமணப்பெண்ணிற்கும்்கும்1.28கி தங்கத்தில் தாலி, மெட்டிமற்றும் புதுமண தம்பதியருக்கு புத்தாடைகள் என வழங்கி யுள்ளது.நல்ல முகூர்த்த நாளான நேற்று காலை 11.52இலிருந்து 12.30 க்குள் தாலி கட்டினர். அதிக பணவரவுள்ள இக்கோவிலிருந்து சமூகத்திற்கு பயனுள்ளதாகவும் இந்து திருமணமுறையை ஊக்குவிக்குமாறும் இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டதாக TTD தலைவர் கருணாகர ரெட்டி கூறினார்.

மேலும்...

அய்யோ......பூஊஊஊஊஊஊஊஊஊஊமி





நான் ............ என்பது உண்மையானால், இந்த பூமி பிளந்து என்னை விழுங்கட்டும்!

டமால்........... பூமி பிளந்தது. விழுங்கியது. கேட்ட & படிச்ச நினைவு வருதுங்க.

இப்படியெல்லாம் நடக்குமா?

ஏன் நடக்காது?

இங்கே பாருங்க. பாவம் மூணு உயிரு(-:

மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம்: பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கும் ஆணையை திரும்பப்பெற்றது ஆந்திர அரசு

ஆந்திரத்தில் ஈநாடு பத்திரிகையும், தொலைகாட்சியும் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் அந்த பத்திரிகையை நடத்தி வரும் ராமோஜி ராவ்வுக்கு சொந்தமான மார்கதர்சி நிதி நிறுவனத்தின் அலுவலங்களில் சோதனை நடத்தினர்.

மார்கதர்சி நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

The Hindu : National : Notice to A.P. on Margadarsi's petition | Chennai Online - Jaya condemns raids on Margadarsi | IBNLive.com : CNN-IBN - Andhra Pradesh Assembly, adjournment, Eenadu, Margadarsi Financiers

ஜப்பான் வர்த்தகம் - தினவட்டி விகிதம் 0.25% உயர்வு

ஜப்பானின் வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதமாக அந்த நாட்டின் தேசிய வங்கி அதிகரித்தது.

கடன் கொடுப்பதற்கான வட்டி அதிகரிப்பது; வைப்புநிதிகளுக்கான வட்டி மேலும் வருவது - போன்றவை, அதைத் தொடர்ந்து உயர்கிறது. இதன் பிரதிபலிப்பாக, பங்குச்சந்தை குறியீடான நிக்கெய், கடந்த ஏழு வருடங்களில் முதல் தடவையாக 18,000 ஆக உயர்ந்திருக்கிறது.

சாதாரணமாக வட்டி விகிதம் ஏறினால், கடன் பத்திரங்களின் விலை உயர்ந்து, பங்குச்சந்தை சரியும். ஆனால், ஜப்பானில் தலைகீழ். பணவீக்கத்திற்கு பயந்து எக்கச்சக்க சேமிப்பை வங்கிகளில் வைத்திருக்கும் நடுத்தர வர்க்கம், இவ்வித நடவடிக்கைகளினால் நம்பிக்கை அடைந்து, நுகர்வோராக செலவழிக்கவும், முதலீட்டாளராக சந்தையில் ஈடுபடவும் வழிவகுக்கும்.

Bloomberg.com: Japan | FT.com / World / Asia-Pacific - Nikkei hits seven-year high on rate hopes

-o❢o-

b r e a k i n g   n e w s...