.

Saturday, March 17, 2007

இந்தியா 191க்கு சுருண்டது

சேவாக் துவங்கிவைத்த சரிவிலிருந்து இந்தியா மீழமுடியாமல் டெய்ல் என்டர்கள் 30க்கு மேல் ரன் குவிக்க 49.3 ஓவர்களில் 191க்கு அனைத்து விக்கட்களையும் இழந்தது இந்தியா.

கங்குலி யுவராஜ்சிங்கின் கூட்டு ஆட்டம் சிறப்பானதாக அமைந்திருந்தபோதும் தொடர்ந்து சொற்ப ரன்களுக்கு வீழந்த விக்கட்கள் நம்பிக்கையை குறைத்தன. இருப்பினும் கடைசி விக்கட்டுக்கு 32 ரன்கள் எடுத்து ஸ்கோர் 191க்கு வந்தது.

டீமின் நம்பிக்கை நாயகன்(?) தோனி ரன் எடுக்காமல் அவிட் ஆனார்

பிச்சில் ஏதேனும் இருக்கிறதா? இல்லை இந்திய அணியில் ஏதேனும் இல்லையா? முதலில் பேட் செய்வதாக எடுத்த முடிவு சரிதானா? கலக்கப்போவது ஹர்பஜனா ஜகிரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

முதல் பாதியில் சற்றுமுன்னின் பதிவில் பின்னூட்டங்களை தொடர்ந்து இட்டு புது முயற்சியில் பங்கெடுத்தவர்களுக்கு நன்றி. இனிமேல் இங்கே தொடருங்கள்.

All the best India, if you want to win, that is.

மற்றுமொரு போட்டியில் பாக்கிஸ்தான் அயர்லாந்துக்கு எதிரான மேட்சில் பாக்கிஸ்தான் 124/8 38.1 ஓவர்களில்.

என்னங்க நடக்குது?

உலக்கோப்பை: இந்தியா X வங்கதேசம்

டிரினிடாட்: உலக கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்கிறது.

கங்குலியும் சேவக்கும் களமிறங்கியுள்ளனர்.

பயஸ்,தாம் ஜோடி வெற்றி

ஐந்தாம் எண்பெற்ற லியான்டர் பயஸ், மார்டின் தாம் ஜோடி, முதல் எண் பெற்ற யோனாஸ் யொர்க்மான், மாக்ஸ் மிரின்யி ஜோடிக்கு அடுதடுத்த ்செட்களில் செட்களில் அதிர்ச்சி தோல்வி கொடுத்து பசிபிக் லைஃப் ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மேலும் ...The Hindu News Update Service

ஊதிய உயர்வு கேட்ட இந்திய தொழிலாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேற்றம்

ஊதிய உயர்வு கேட்டு போராடிய இந்திய தொழிலாளர்கள் உள்பட 60 பேரை ஐக்கிய அரபு அமீரகம் வியாழக்கிழமை அந்நாட்டிலிருந்து வெளியேற்றியது

மேலும்....

முதல்வர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்

முதல்வர் கருணாநிதி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது பற்றி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும்...

ஏப்ரல் 1 முதல் கோடை கால சிறப்பு ரயில்கள் -நாளை முதல் முன்பதிவு

சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கோடை கால சிறப்ப்ய் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த ரயில்களில் செல்ல பயண முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 18) முதல் தொடங்குகிறது. இந்த சிறப்பு ரயில் சேவைகளின் விபரம்........

அப்பல்லோவில் பரிசோதனைகளுக்கு மகளிருக்கு சிறப்பு சலுகை

சர்வதேச மகளிர் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு பெண்களுக்கு மருத்துவ பரிசோதனைக் கட்டணங்களில் சலுகை அளிக்க அப்பல்லோ மருத்துவமனை முடிவு செய்துள்ளது.

மார்பகப் புற்றுநோய் வராமல் தடுத்துக் கொள்ள உதவும் மெமோகிராம் பரிசோதனை உள்ளிட்ட "வெல் வுமன்" பரிசோதனைக்கு ரூ.550/- செலுத்தினால் போதும், இதய பரிசோதனைக்கு சிறப்பு சலுகையாக ரூ.2550/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதய ரத்தக் குழாய்களை ஆய்வு செய்ய உதவும் 64 ஸ்லைஸ் சி.டி.ஸ்கேன் பரிசோதனை ரூ.8000/- த்தில் செய்யப்படும். இதற்கு பொதுவான கட்டணம் ரூ.9945/- ஆகும்.

இச்சலுகை வரும் 24-ம் தேதி வரை அளிக்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளுதல் மற்றும் விவரங்களுக்கு "28296900" மற்றும் "60601066" ஆகிய தொலைபெசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது

நன்றி :- தினமணி

ஐசிசி உலகக் கோப்பை 2007

வெள்ளி, 16 மார்ச் 2007
ஐசிசி உலகக் கோப்பை
இங்கிலாந்து: 209-7 ( 50.0 ஓவரில்)
நியுசிலாந்து: 210-4 ( 41.0 ஓவரில்)
இங்கிலாந்தை நியுசிலாந்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
ஸ்கோர் விவரம்்ட் ஆட்ட விவரம்

நெதர்லாந்து: 132-9 ( 40.0 ஓவரில்)
தென்னாப்பிரிக்கா: 353-3 ( 40.0 ஓவரில்)
தென்னாப்பிரிக்கா நெதர்லாந்தை 221 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஸ்கோர் விவரம் ஆட்ட விவரம்

எதிலும் தமிழ் - ராமதாஸ்

அனைத்து இடத்திலும் அனைத்து நிலைகளிலும் தமிழ் இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ் ஓசை நாளிதழின் இரண்டாம் ஆண்டு விழாவில் பேசினார்.

THE HINDU

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கான ஆதரவை விலக்கியுள்ளது மதிமுக

இந்திய நடுவணரசில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக்கொள்வதாக வைகோ தலைமையிலான மதிமுக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குறைந்தபட்ச பொது வேலைதிட்டத்தில் கூறப்பட்டுள்ள பல விடயங்களை, கடந்த மூன்று ஆண்டுகளாக, ஐக்கிய முற்போகு கூட்டணி அரசு நிறைவேற்றவில்லை என்பதால் அதற்கான ஆதரவை திரும்பப்பெறுவதாக, கோவையில் நடந்த மதிமுகவின் மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதிமுக சார்பில் 17 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக இந்த தீர்மானம் பட்டியலிட்டுள்ளது. மாநில சுயாட்சிக்கு ஆதரவாக இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவது, இந்திய நதிகளை இணைப்பதன் மூலம் தமிழக விவசாயிகளின் நீர்பற்றாக்குறையை போக்குவது, அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இருக்கும் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அறிவிப்பது போன்ற மதிமுகவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று இந்த தீர்மானம் குற்றம் சாட்டுகிறது.

BBCTamil.com

-o❢o-

b r e a k i n g   n e w s...