அமெரிக்காவில் சொத்துக்களுக்கான கடன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளின் பாதிப்புகள் குறித்த கவலைகளை அடுத்து, நிதிச் சந்தையில் போதிய பணத்தை உறுதி செய்யும் நோக்கில், ஐரோப்பிய மத்திய வங்கி தலையிட்டுள்ளது. சந்தையின் ஒழுங்கு நிலையைச் சரி செய்யும் வகையில், ஏனைய வங்கிகளுக்கு, 130 பில்லியன் டொலர்களை ஐரோப்பிய வங்கி கிடைக்கச் செய்துள்ளது.
சாத்தியமான கடன் அழுத்தம் குறித்த அச்சங்கள் காரணமாக நிதி நிறுவனங்களும், கூட்டுத்தாபனங்களும், மற்றும் முதலீட்டாளர்களும் ஆட்டடம் கண்டுள்ளனர்.
இந்த அச்சங்கள் காரணமாக இன்று முன்வேளையில் நியூயோர்க் பங்குச் சந்தையில் பங்கு விலைகளில் வீழ்ச்சியும் காணப்பட்டது.
தமிழ் பிபிசி
Zee News - ECB injects USD 130 bn in European financial system
BBC NEWS | Business | ECB moves to help banking sector
Subprime: The Ugly American Hits Europe - BusinessWeek
Stocks Tumble as Home Loan Worries Spread - New York Times
Economics focus | The mandarins of money | Economist.com: "Central banks in the rich world no longer determine global monetary conditions"
Monetary policy | It ain't easy | Economist.com: "Despite the recent turbulence in the credit markets, the Federal Reserve holds fire on interest rates"
Thursday, August 9, 2007
அமெரிக்காவில் சொத்துக்களுக்கான கடன்கள் குறித்து கவலைகள்
Posted by Boston Bala at 11:55 PM 0 comments
தீவிரவாதிகள் தாக்குதலில் மணிப்பூர் அமைச்சர், எம்எல்ஏக்கள் தப்பினர்
மணிப்பூர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அம்மாநில கல்வி அமைச்சர் ஜெயந்தா குமார், மற்றும் கா ரதான், லோகேஸ்சோர் சிங் ஆகிய இரண்டு எம்எல்ஏக்கள் உயிர் தப்பினர்.
சாண்டல் மாவட்டம், லோக்சோ பகுதியில் முகாமிட்டிருந்த அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்துக் கொண்ட அமைச்சரின் பாதுகாவலர்கள் தீவிரவாதிகளை திருப்பி தாக்கினர். இருதரப்பினருக்கும் இடையில் அரைமணி நேரத்துக்கு மேலாக துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இறுதியில், பாதுகாப்பு வீரர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாத தீவிரவாதிகள் அடர்ந்த காடுகளின் வழியாக தப்பி சென்று விட்டனர்.
'குகி தேசிய ராணுவம்' என்ற பெயரில் செயல்படும் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
தினமணி
NDTV.com: Manipur minister escapes militant attack
The Telegraph - Calcutta : Northeast - Militants ambush convoy
Udayavani - 1363 people dead, 2816 injured in extremist violence
July 17: Indian police accused of torturing Kuki rebel leader
July 14: The Telegraph - Calcutta : Northeast - Kuki outfit’s top gun arrested
July 14: Manipur may hold peace talks with Kuki militants
Posted by Boston Bala at 11:02 PM 0 comments
ராமேசுவரம் விழா: மக்களைத் தொல்லைப் படுத்தாதீர் - இந்து இயக்கங்கள் கோரிக்கை நிறைவேறியது
ராமேசுவரத்தில் மக்களைத் தொல்லைப்படுத்தாமல் ரயில் சேவைத் தொடக்க விழாவை நடத்த வேண்டும் என்று இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் விநாயகர் முரளி கேட்டுக்கொண்டுள்ளார்.
ராமேசுவரத்தில் ஆடி அமாவாசை தினமான வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள ரயில் சேவைத் தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதியும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் கலந்து கொள்வதால் மக்கள் கெடுபிடிக்கு ஆளாகியுள்ளனர்.
ஆடி அமாவாசையன்று ராமேசுவரத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். தற்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. ராமேசுவரத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் உட்பட அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பக்தர்களுக்கு இந்த சோதனை நடவடிக்கை பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
விழா இடத்தை மாற்றலாம்: இதனால், ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக இறைவனை தரிசிக்க வசதியாக, விழா நடைபெறும் இடத்தை மாற்றி அமைக்கலாம் என இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு, முன்னதாக சில கிலோ மீட்டர் தொலைவில் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடத்தில் இருந்து, விடியோ கான்பரசிங் முறை மூலம் தினசரி ரயில் சேவையை முதல்வரும், சோனியாவும் தொடங்கி வைக்கின்றனர்.
இதற்குப் பதிலாக, முதல்வர் கருணாநிதி சென்னையில் இருந்தும், சோனியா தில்லி அல்லது சென்னையில் இருந்தோ விடியோ கான்பரசிங் முறை மூலம் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கலாம். எப்படியும் விடியோ கான்பரசிங் முறை மூலம் தான் விழா நடைபெறப் போகிறது. அதை எங்கு இருந்து செய்தால் என்ன என்று குறிப்பிட்டார் விநாயகர் முரளி.
இந்த விண்ணப்பத்தை ஏற்று சற்றுமுன் விழாவை மதுரைக்கு மாற்றிவிட்டார்கள்.
தினமணி
The Hindu News :: Hindu outfit to hold black flag demo during Sonia's visit
Chennai Online News Service - View News :: Sonia to inaugurate rly line in TN
Posted by Boston Bala at 10:45 PM 0 comments
ஹைதராபாத்தில் தஸ்லீமா நஸ் ரீன் தாக்கப்பட்டார்
வங்கதேச எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் ஹைதராபத்தில் தாக்கப்பட்டார். தஸ்லீமா எழுதிய Shodh-இன் தெலுங்கு மொழியாக்க வெளியீட்டு விழாவில் அவர் மீது நாற்காலிகள் மீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மஜ்லிஸ் இட்டாஹூதுல் முஸ்லிமின் கட்சி (Majlis Ittehad-ul-Muslimeen - MIM) சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் ப்ரியரஞ்சன் தாஸ்முன்ஷி இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளார்.
நஸ்-ரீன் தலைக்கு ஐந்து லட்சம் ரூபாய் தருவதாக மதவாத அமைப்புகள் சில அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முந்தைய சற்றுமுன்...: இந்து-முஸ்லீம் கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்: தஸ்லீமா
Taslima Nasrin attacked in Hyderabad
NDTV.com: Taslima Nasreen attacked in Hyderabad
Exiled Bangladeshi female writer attacked by Muslims in India - International Herald Tribune
Posted by Boston Bala at 6:32 PM 12 comments
அசோமில் தீவிரவாதம்: இந்தி பேசுவோர் மீது தாக்குதல்
அசோம் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் மீண்டும் தீவிரவாதத்தை முன்னெடுத்து இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழும் கூட்டம் நிறைந்த பொது இடங்களில் குண்டு வெடிப்புக்கள் நடத்தி அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.இத்தகைய குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 15 பேர் மரணமடைந்திருக்கின்றனர், 28 பேர் காயமடைந்திருக்கின்றனர். கடைசியாக கர்பி அங்லோங் மாவட்டத்தில் 8 இந்தி பேசும் தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA)யும் கர்பி லோங்க்ரி வடக்கு கச்சார் விடுதலை முன்னணியும் (KLNLF) சேர்ந்த தீவிரவாதிகள் இந்தத் தொழிலாளிகளை அவர்களது வீட்டிலிருந்து வெளியே இழுத்து தானியங்கி துப்பாக்கி முனையில் சுட்டுக் கொன்றுள்ளனர்.
மேலும்...India eNews - Terror run in Assam by militants, Hindi-speakers fresh targets
Posted by மணியன் at 4:29 PM 0 comments
ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை: மகா. அரசு நடவடிக்கை எடுக்கும்
1992-93 வருடங்களில் மும்பையில் நடந்த கலவரங்கள் குறித்த ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தவறியதை ஆய்வு செய்ய காவல்துறையையும் சட்டத்துறையையும் மகாராட்டிர முதல்வர் விலாஸ்ரராவ் தேஷ்முக் ஆணையிட்டுள்ளார். இந்தக் கலவரங்களில் பங்கேற்ற அரசியல் தலைவர்களின் மீது, சிவசேனையின் தலைவர் பால் தாக்கரே உட்பட, நடவடிக்கை எடுப்பது பற்றிய நிகழ்வறிக்கையையும் காங்கிரஸ் மேலிடத்திற்கு சமர்ப்பித்துள்ளார். கட்சியின் பொது செயலர் மார்கரேட் ஆல்வா கடந்த ஏழாம் தேதியன்று மூம்பை வந்திருந்தபோது இந்த அறிக்கையை அவரிடம் கொடுத்தார். பிரபல சினிமா இயக்குனர் மகேஷ் பட்டும் முன்னாள் அமைச்சர் நசீம் கானும் இந்த அறிக்கை மீது தகுந்த எஅடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டி மனு கொடுத்துள்ளனர்.ஆகஸ்ட் 20ம் தேதி யன்று பல முஸ்லிம் அமைப்புக்கள் இவ்வறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன.
The Hindu News Update Service
Posted by மணியன் at 4:16 PM 0 comments
இந்தியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்!
பெரியார் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றிவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு திராவிடக்கழக தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். பகுத்தறிவின் தந்தையான பெரியார் தன் வாழ்நாளில் அணிந்திருந்த மோதிரம் பெரியார் திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் சத்யராஜிக்கு வழங்கப்பட்டது. நடிகர் சிவகுமார், நடிகைகள் மனோரமா, குஷ்பு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பெரியார் திரைப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். திரையுலக நட்சத்திரங்கள், தமிழகஅமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர்.
Posted by Adirai Media at 10:24 AM 4 comments
பாக்கிஸ்தானில்்தானில் எமர்ஜென்சி?
பாக்கிஸ்தானின் முஷ்ரப் ஒரு மாதத்துக்கு அவசரநிலை பிரகடனப் படுத்தவிருப்பதாக பாக்கிஸ்தானின் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. நம்பத்தகும் ஆதாரங்களிலிருந்த செய்தி கிடைத்திருப்பதாக ஜியோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாக்கிஸ்தான் அரசு இந்த செய்திகளை மறுத்துள்ளது.
Emergency imposed in Pak? -Zee News
Emergency likely to be declared in Pak - TOI
Musharraf set to impose emergency: Reports - NDTV
Posted by சிறில் அலெக்ஸ் at 1:36 AM 1 comments
டிவி விளம்பரத்தை பெருக்கும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள்
இந்தியாவில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட சில்லரை வர்த்தக நிறுவனங்கள் தங்கள் சந்தை இருப்பு விகிதத்தை அதிகரிக்க தொலைக்காட்சி விளம்பரங்களில் அதிக தொகை செலவு செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆடெக்ஸ் இந்தியா சேகரித்த தரவுகளின் அடிப்படையில் ஜனவரி-மே 2007 காலகட்டத்தில் மட்டும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் கொடுக்கும் விளம்பரங்கள் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதே காலக்கட்டத்தில்தான் சுமார் 255 புதிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் முதன் முதலாக தொலைகாட்சி விளம்பரங்கள் பக்கம் திரும்பியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த விளம்பரத் துறையில் சில்லரை விற்பனை நிறுவனங்களின் பங்களிப்பு 1 சதவீதம் மட்டுமே என்று கூறுகிறது ஆடெக்ஸ் ஆய்வு.
குறிப்பாக 60 பெரிய வர்த்தக நிறுவனங்கள் தென் இந்திய தொலைக்காட்சி சேனல்களிலேயே விளம்பரம் கொடுத்து வருவதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது.
நடப்பு நிதியாண்டு ஜனவரி-மே காலகட்டத்திற்கிடையே நாளொன்றுக்கு ஒளிபரப்பாகும் மொத்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 45,000. இதில் ஒரு நாளைக்கு 700 விளம்பரங்கள் வீதம் வந்துள்ளதாக அந்த ஆய்வுக்குறிப்பு கூறியுள்ளது.
விளம்பர வருமானத்தில் ஏறத்தாழ 50 சதவீதம் பொழுதுபோக்கு சேனல்களுக்கே கிடைக்கிறது. சில அரிய வேளைகளில் சில்லறை விற்பனையாளர்கள் இசை சேனல்களிலும் விளம்பரங்கள் அளிப்பதாக ஆடெக்ஸ் ஆய்வு கூறுகிறது.
தமிழ் எம்.எஸ்.என்.
Retailers increase ad spend on TV :: Economic Times
Indiantelevision.com > AdEx India Analysis > Snapshot on TV Advertising in first half of 2007 - Part 1
Social Advertisements on TV in H1 2007
Posted by Boston Bala at 12:13 AM 0 comments
b r e a k i n g n e w s...