.

Wednesday, March 14, 2007

எழுத்தாளர்களை கவுரவிக்கும் இளையராஜா

இளையராஜா விரைவில் இலக்கியப் பேரவை ஒன்றை தொடங்கவுள்ளாராம். அதன்மூலம் இலக்கியவாதிகளை தேர்வு செய்து ரொக்கப்பரிசும், இளையராஜா விருதும் வழங்க திட்டமிட்டுள்ளார்.

தமிழறிஞர் பா.நமச்சிவாயம், எழுத்தாளர் வண்ணதாசன் ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்க இருக்கிறார்கள். சேதுபதி, பழனிபாரதி ஆகியோருக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும், இளையராஜா விருதும் வழங்கப்படவுள்ளது.

Yahoo - Tamil

ஆஸ்திரேலியா 334/6

ஸ்காட்லாந்துக்கு எதிரான தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி
334 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் பாண்டிங் 113 ரன்கள் அடித்தார். இந்த உலகக்கோப்பையின் முதல் சதத்தை அவர் 85 பந்துகளில் அடித்தார். இன்று அவர் 9 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடித்தார். இதுவரை உலகக்கோப்பையில் அதிக ஸிக்ஸ்கள் அடித்த பெருமையை உடையவர் கங்கூலி (23 ஸிக்ஸ்கள்). இன்று 5 ஸிக்ஸ்கள் அடித்ததன் மூலம் பாண்டிங் அந்த சாதனையை முறியடித்தார் (24 ஸிக்ஸ்கள்). ஆஸ்திரேலியாவின் ஹெய்டன் 60 ரன்களும் கில்கிறிஸ்ட் 46 ரன்களும் அடித்தனர். மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. 300 ரன்களை 48.3 ஓவர்களில் அடைந்த ஆஸ்திரேலியா கடைசி 9 பந்துகளில் 34 ரன்கள் அடித்தது! அவ்வணியின் ஹாக் மின்னல் வேகத்தில் 15 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார்.

விரிவான ஸ்கோர்கார்ட்.

இன்று நடந்த மற்றொரு போட்டியில் கனடா அணி கென்யாவுக்கு எதிராக 199 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இப்போட்டியின் ஸ்கோர்கார்ட்

பாண்டிங் சதம்

ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்து உலகக்கோப்பை 2007ன் முதல் சதத்தை அடித்த பெருமையை அடைந்தார். 85 பந்துகளில் அடித்த சதத்தில் 4 சிக்ஸரும் 9 பவுண்டரிகளும் அடங்கும்.

ஆஸ்திரேலியா 44 ஓவரில் 259 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருக்கிறது

காமன்வெல்த்தில் "கபடி" இல்லை - மணிசங்கர் ஐயர்

2010ல் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் கபடி போட்டியும் கோ-கோ போட்டியும் இடம்பெறாது என மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் மக்களவையில் தெரிவித்தார்.

THE HINDU

இரேமேஸ்வரம் கோவில் உண்டியலில் தீ

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலின் உபகோவிலான பத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில் தீ பிடித்து பக்தர்களின் காணிக்கைப் பணம் எரிந்து சாம்பலாகியது.

கோயில் வெளியே சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த பக்தர்களில் ஒருவர் கோவில் உண்டியலுக்கு கர்பூரம் ஏற்றியதில் இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.

நன்றி: தினமலர்

தொடர் உள்ளாடைத் திருடன் கைது

டோக்கியோவில் கட்டிட வேலையாள் ஒருவர் தொடர்ச்சியாக பெண்களின் உள்ளாடைகளைத் திருடிவந்தார். 54 வயதான இவர் நேற்று பிடிபட்டார். கட்டிடத்தொழிலாளியாக இருப்பதால் எளிதில் கட்டிடங்களில் ஏறி அங்கே காயப் போட்டிருக்கும் உள்ளாடைகளைத் திருட இயன்றது.

ஷிகோ கொடாமா மொத்தம் 3,977 Panties, 355 Bras, 10 Pair of stockings கடந்த ஆறு ஆண்டுகளுக்குள்ளாக சேர்த்துள்ளார்.

Serial lingerie thief arrested - படத்துடன் செய்தி

அங்கோலா: IMF பேச்சுவார்த்தைகள் ரத்து

ஐ எம் எப் எனப்படும் சர்வதேச நிதி நிறுவனத்துடனான தனது பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் அங்கோலா இரத்து செய்துள்ளது. தன்னுடைய பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணும் வழி ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அங்கோலா தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக உள்நாட்டில் உள்ள மூலதனத்தைக் கொண்டே பொருளாதாரக் ஸ்திரத்தன்மையை கொண்டுவரக் கூடிய கொள்கைகளை அமல் படுத்தியதாக அந்நாட்டின் நிதி அமைச்சர் தெரிவித்தார். அங்கோலாவில் இருக்கும் பெருமளவிலான எண்ணை வளம் காரணமாக அந்நாட்டிற்கு சர்வதேச நிதி நிறுவனத்தின் உதவி தேவைப்படவில்லை என்று அந்நாட்டில் இருக்கும் பி பி சி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

BBCTamil.com

நந்திகிராம் கலவரம்:3 பேர் பலி

விவசாய நிலத்தை தொழிற்சாலைகள் அமைக்க விற்பது குறித்து சர்ச்சைக்குள்ளான நந்திகிராம் பகுதியில் இன்று(03/14/2007) பொதுமக்களுக்கும் போலீசுகும் இடையே நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிரமாக காயமைடைந்துள்ளனர்.

Three killed in Nandigram violence; Sonia expresses concern

Update: Patil to assess Nandigram situation

Left Front partners slam police action at Nandigram

Industry condemns firing, asks Govt to take balance view

"300" திரைபடம் - இரானியர்கள் கொந்தளிப்பு!

மிகுந்த எதிர்பார்புக்கு நடுவே வெளி வந்திருக்கும் திரைபடம் "300". முதல் வார இறுதியிலேயே சுமார் எழுபது மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டியிருக்கும் இந்த திரைபடம் ஈரானியர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மேலும் படிக்க


http://www.msnbc.msn.com/id/17599641/?GT1=9145

பாகிஸ்தான் தோல்வி ! !

மேற்கிந்தியத்தீவுகளுடன் இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் 54 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. வெகு சொற்ப ரன்களுக்கு மேற்கிந்தியத்தீவுகள் ஆட்டம் இழந்துவிடுவது போல் தோன்றிய நிலையில் அவ்வணியின் சர்வானும், லாரவும் ஜோடி சேர்ந்து அணியை சற்று நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தனர். பின்பு சாமுவேல்ஸ் சிறப்பாக ஆடி 63 ரன்கள் சேர்த்து அணிக்கு உதவினார். இறுதியில் ஆடிய ஸ்மித்தும் ப்ரேவோவும் அதிரடியாக ஆடி அணி 241 ரன்கள் சேர்க்க உதவினர். கடைசி பத்து ஓவர்களில் 85 ரன்கள் அடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இஃப்திகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்பு ஆடத்துவங்கிய பாகிஸ்தான் தொடக்கம் முதலே தடுமாறி வந்த்து. அவ்வணியின் கேப்டன் இண்ஜமாமும், யூசுஃபூம் நிதானமாக் ஆடி 4வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அதன் பின் வந்த அனைவரும் மளமளவென ஆட்டமிழந்து திரும்பினர். ஷோஹைப் மாலிக் மட்டும் தாக்குபிடித்து ஆடி 62 ரன்கள் சேர்த்தார். மேற்கிந்தியத்தீவுகளிம் ஸ்மித்தும் ப்ரேவோவும் த்லா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணி வெற்றி பெற உதவினர். இதன் மூலம் 2 புள்ளிகள் பெற்று மேற்கிந்தியத்தீவுகள் முதலிடத்தில் உள்ளது.

விரிவான ஸ்கோர்களுக்கு

-o❢o-

b r e a k i n g   n e w s...