.

Friday, April 6, 2007

கமலுக்கு வரும் மர்மக் கடிதங்கள்

கமல் வீட்டிற்கு கடந்த சில நாட்களாக மொட்டைக் கடுதாசி வந்து தொந்தரவு செய்த வண்ணம் உள்ளதாம். அதில் கமலைப் பற்றி தரக்குறைவாக எழுதப்பட்டிருக்கிறதாம். அதை அனுப்பியவர்கள் யார் என்று தேடிப்பிடிக்கும்படி தனது அலுவலக பணியாளர்களுக்கு அவசர ஆணை பிறப்பித்துள்ளார் கமல்.

தினமணி

வேளாண் பல்கலை. மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக புகார்: பேராசிரியர் கைது

கோவை, ஏப் 6: மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக கோவை வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிலிப் (45) கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த தனவேலின் மகள் லீனா (23). கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்ஸி. முதலாண்டு படித்து வருகிறார். பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்தார். பல்கலை.யின் வேளாண் விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் பேராசிரியர் பிலிப், லீனாவுக்கு துறை வழிகாட்டியாக இருந்துள்ளார்.

பாடங்களில் சந்தேகம் கேட்கச் செல்லும் லீனாவிடம் தவறாகப் பேசி தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த லீனா புதன்கிழமை மாலை சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

தினமணி

விருத்தாசலம் எஸ்.ஐ.யிடம் ரூ.1 லட்சம் வசூலிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சிதம்பரம், ஏப்.6: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இறந்து போன அண்ணாதுரை குடும்பத்துக்கு எஸ்.ஐ. பாபுவிடம் ரூ.1 லட்சம் நஷ்டஈட்டுத் தொகையாக வசூலித்து வழங்க வேண்டும் என தனது தீர்ப்பில் மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.

விருத்தாசலம் அருகே உள்ள கோமங்களம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மற்றும் பழனிவேல் ஆகியோரை 7-11.2004ல் குற்றப்பிரிவு எஸ்.ஐ. பாபு மற்றும் 3 காவலர்கள் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இரவு முழுவதும் எஸ்.ஐ. மற்றும் காவலர்களால் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

8-ம் தேதி காலை இருவரையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு அண்ணாதுரை இறந்தார்.

பின்னர் ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது அப்போதிருந்த கோட்டாட்சியர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் வழக்குப் பதிந்து முறையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தும் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என அண்ணாதுரை மனைவி செல்வி சென்னை மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

தீர்ப்பில் தமிழக அரசு எஸ்.ஐ. பாபுவிடமிருந்து ரூ.1 லட்சம் தொகையை வசூலித்து அதனுடன் அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் தொகை சேர்த்து மொத்தம் ரூ.1.50 லட்சத்தை செல்வியிடம் ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி

பாஜக அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்: வி.பி. சிங்

புது தில்லி, ஏப். 6: வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் பாஜக வெளியிட்ட பிரசார சி.டி.க்கள் விவகாரம் தொடர்பாக அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ஜன் மோர்ச்சா இயக்கத் தலைவர் வி.பி.சிங்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள இந்த பிரசார சி.டி.க்கள் பாபர் மசூதி, கோத்ரா சம்பவம் போன்றவற்றை உள்ளடக்கியதாக உள்ளது. வகுப்புவாதத்தை தூண்டிவிடக்கூடிய இந்த சிடிக்கள் மாநிலத்தில் சுமுக நிலை சீர் கெட வழி செய்துள்ளது. தேர்தலில் ஆதாயம் பெற மதவாதம் எனும் விஷத்தை பரப்பும் நோக்கில் இந்த சிடியை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த சி.டி.யை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த சி.டி.யை போட்டுப்பார்த்த பாஜக தலைவர்கள் அதற்கு ஒப்புதலும் அளித்துள்ளனர். ஆனால் தற்போது அவர்கள் மறுக்கின்றனர். இது வெட்கக்கேடான விஷயம். தேர்தலைவிட மிக முக்கியமான விவகாரம் இது.

எனவே பாஜகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் வி.பி.சிங்.

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி

உலகக்கோப்பையில் இந்தியாவின் அதிர்ச்சி தோல்வி குறித்து விவாதிக்க பிசிசிஐ குழு இன்று மும்பையில் கூடியது. இந்திய அணியின் பயிற்சியாளர் சாப்பல், மேனேஜர் ஆகியோர் தங்கள் அறிக்கையை சமர்பித்தனர். பிசிசிஐன் நிர்வாகிகள், கேப்டன் திராவிட், இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் இதில் கலந்து கொண்டனர். நாளை பிசிசிஐ தனது முடிவுகளை அறிவிக்கும். இந்நிலையில் திராவிட் கேப்டனாக நீடிப்பார் என்றும் வரவிருக்கும் பங்களாதேஷ் தொடருக்கு ரவி சாஸ்திரி மேனேஜராகவும் கோச்சாகவும் செயல்படுவார் எனத் தெரிகிறது.

http://content-usa.cricinfo.com/india/content/current/story/289185.html

☈ அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை

முஸ்லீம்கள் சிறுபான்மையினர் அல்ல என்று அலகாபாத் ஐகோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து உ.பி., அரசு அலகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட் பெஞ்ச் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

தினமலர்

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் தொழில் குழுமத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

மத்தியப் பிரதேசத்தில் மாதவ தேசிய பூங்கா வழியாக அதிகாரிகளின் முன் அனுமதி பெறாமல் 22 கிலோமீட்டர் தூரத்துக்கு "ஆப்டிக்கல் பைபர் கேபிள்" பதித்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளாது. அபராத தொகையை ஒரு மாததுக்குள் செலுத்தவேண்டும்.

மேலும் ....

குப்பை தொட்டியில் பெண் சிசு சடலம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் பிறந்த ஒரு நாளே ஆன பெண் சிசு இறந்து கிடந்தது.

தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நிலையில் அந்த பெண் சிசு இறந்து கிடந்தது.

நன்றி :-தினமணி

இலங்கை ரானுவத்துடன் புலிகள் மோதல் 7 ரானுவவீரர்கள் பலி.

இலங்கை கடற்பரப்பில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு ஒன்று தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் 7 கடற்படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க...

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு

கோடியக்கரை அருகே நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் காயமடைந்தார்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 7 மீனவர்கள், 2 நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

இன்று அதிகாலை அவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், சண்முகவேல் என்ற மீனவரின் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தார்.

திரும்பத் திரும்ப இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.

சிடி சர்ச்சையில் சிக்கியது பா.ஜ.க

உ.பி.யில் நாளை முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பா.ஜ.க சார்பில் வெளியிடப்பட்ட சிடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங், மாநில தலைவர் திரிபாதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும், போலீசார் வழக்கு பதிவு செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சிடியில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், அயோத்தி விவகாரம் போன்ற பிரச்னைகள் விளக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டசபைத் தேர்தல் உ.பியில் ஜெயலலிதா 2 நாள் பிரசாரம்.

உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாடிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 2 நாள் பிரசாரம் மேற்கொள்கிறார் .

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு பா. ம. க வரவேற்ப்பு


தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

இன்று கூடுகிறது கிரிக்கெட் வாரிய கூட்டம்.

பரபரப்பான சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் இன்று மும்பையில் கூடுகிறது. இந்த கூட்டத்தின் முதல் நாளான இன்று இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த சேப்பல், அணியின் மேலாளர் ஜக்தலே ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.

ச: ஷோரூம்களில் விற்கப்படும் இலவச கலர் டி.வி.: கடும் நடவடிக்கை எடுக்க எல்காட் இயக்குநர் உத்தரவு

திருநெல்வேலி, ஏப். 5: பாளையங்கோட்டை பகுதியில் அரசு வழங்கி வரும் இலவச கலர் டி.வி., ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறித்து விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க எல்காட் இயக்குநர் உமாசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல கட்டங்களாக மாநிலம் முழுவதும் இலவச கலர் டி.வி.களை வழங்கி வருகிறது. இந்நிலையில், பாளையங்கோட்டை மகாராஜநகரைச் சேர்ந்த இளங்கோ (40), கடந்த 19-ம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் டி.வி. ஷோரூமில் வீடியோகான் 14 அங்குல கலர் டி.வி. ஒன்றை ரூ.2,740-க்கு வாங்கினார். அந்த கலர் டி.வி.யின் மேல் ஒட்டப்பட்டிருந்த டி.வி. தயாரிப்பு நிறுவனத்தின் சின்னத்தோடு கூடிய ஸ்டிக்கர் சில நாள்களுக்கு முன்பு தானாகக் கீழே விழுந்தது. அதில் தமிழக அரசின் சின்னம் வெளியே தெரிந்தது.

அந்த டி.வி., தமிழக அரசு வழங்கி வரும் இலவச கலர் டி.வி. என்பதை அறிந்து இளங்கோ அதிர்ச்சியடைந்தார். அதுபோல, அவரது நண்பர் வாங்கிய டி.வி.யிலும் ஸ்டிக்கர் தானாக கீழே விழுந்து, தமிழக அரசின் சின்னம் தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள், டி.வியை அந்த ஷோரூமிற்கு கொண்டு சென்று காட்டி விளக்கம் கேட்டனர். அதற்கு அவர்கள், சரியான பதில் கூறவில்லையாம்.

வீடியோகானின் 14 அங்குல கலர் டி.வி.யின் தற்போதைய விலை ரூ.4 ஆயிரம். அதே கடையில் ரூ.4 ஆயிரத்துக்கும், வேறு மாடல் டி.வி.கள் விற்கப்படுகின்றன. ஆனால், இலவச கலர் டி.வி. ரகத்தில் உள்ள டி.வி.களின் விலை மட்டும் ரூ.2,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கம்யூட்டர் மொத்த விற்பனையாளர் சங்கத் தலைவர் சங்கர்.

இதுகுறித்து எல்காட் இயக்குநர் உமாசங்கரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் கூறியதாவது:

அரசின் இலவச கலர் டி.வி.யை கடையில் விற்பது கடுமையான குற்றமாகும். இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

மேலும் வீடியோகான் நிறுவனத்தைச் சேர்ந்த இலவச கலர் டி.வி. திட்ட அதிகாரி கே.எஸ்.ஹரிகுமார் தெரிவித்ததாவது;
தமிழக அரசின் இலவச கலர் டி.வி. திட்டத்துக்கு தயாரிக்கப்பட்ட அரசின் சின்னம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனியார் விற்பனைக்கு தயாரிக்கப்பட்ட டி.வி.களில் வந்துவிட்டது என்றார்.

ச: பாக்.கில் இந்து பிரமுகர்கள் கடத்தல்: அமைச்சர்கள் வீடுகளின் முன் ஆர்ப்பாட்டம்

இஸ்லாமாபாத், ஏப். 5: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து மதத் தலைவர் கடத்தப்பட்டார். அவரை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர்கள் வீட்டின் முன் இந்துக்கள் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள இந்து மதத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் காணாமல் போகின்றனர்.

சமீபத்தில் இந்து மதத் தலைவர் ஓம் பிரகாஷ் என்பவர் கடத்தப்பட்டார். அவர் கடத்தப்பட்டு 18 நாள்களுக்கு மேலாகியும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் அவரை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஜகோபாத்தில் உள்ள சிந்து மாகாண அதிகாரி நஸிர் கான் கோஸாவின் வீட்டின் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அமைச்சர் மிர் மன்சூர் கான் வீட்டின் வெளியே அமர்ந்து அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஓம் பிரகாஷை மீட்க வேண்டி வாசகங்கள் அடங்கிய பேனர்களை எதிர்ப்பாளர்கள் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். குடியுரிமைக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி

-o❢o-

b r e a k i n g   n e w s...