.

Monday, March 5, 2007

அணியில் என்னை சேர்க்காதது ஏன்? கைஃப் கேள்வி

உலக்கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் தன்னை சேர்க்காதது பற்றி முன்னாள் வீரர் கைஃப் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலதிக விவரங்களுக்கு

தென்னாப்பிரிக்கா 192 ரன்களுக்கு ஆல்-அவுட்

உலகக்கோப்பையை முன்னிட்டு இன்று பயிற்சி(warm-up) போட்டிகள் தொடாங்கின. தென்னாப்பிரிக்கா அயர்லாந்துக்கு எதிரான போடியில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளியும் இழந்தது.

மேல் விவரங்களுக்கு

பெர்முடாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்துள்ளது.
மேல் விவரங்களுக்கு

ஸ்காட்லாந்துக்கு எதிரான் போட்டியில் இலங்கை 38 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்துள்ளது.
மேல் விவரங்களுக்கு

'பருத்தி வீரன்': குறவர் சமுதாயம் எதிர்ப்பு

பருத்திவீரன் திரைப்படத்தில் குறவர் சமுதாயத்தை கீழ்த்தரமாக காண்பித்திருப்பதை கண்டித்து கண்டனப் பேரணி நடத்த இருப்பதாக குறவர் பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர் கேப்டன் தூரை ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளார்.

தினமணி

ஜார்கண்ட் முக்தீ மோட்சா எம்.பி கால்பந்து மைதானத்தில் சுட்டுக் கொலை

ஜா.மு.மோ எம்.பி சிநீல் மாதோ(38) மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளால் ஞாயிறன்று கால்பந்து மைதானத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தினமணி

தென்காசியில் இயல்புநிலை திரும்பியது

திருநெல்வேலி மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட்கானை மர்ம நபர்கள் சிலர் அரிவாளில் வெட்டியதைத் தொடர்ந்து வெள்ளிமுதல் தென்காசியில் இருந்த பதட்ட நிலை குறைந்தது. இருப்பினும்போலிஸ் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் உள்ளனர்

தினமணி.

நுழைவுத் தேர்வு ரத்து சட்டத்துக்கு கலாம் ஒப்புதல்

பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் தமிழக அரசின் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று ஒப்புதல் அளித்தார்.

எனவே, பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு கிடையாது என்று தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி தெரிவித்தார்.

தினகரன்

டிடீஎச் கட்டணங்களை ட்ராய் கட்டுப்படுத்தாது

வீடுகளுக்கு நேரடியாக தொலைக்காட்சி சேவை அளிக்கும் டிடீஎச் கட்டணங்களை தொலைதொடர்பு வரன்முறை ஆணையம் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளது.

டிடீஎச்கள் கேபிள் தொலைக்காட்சியில் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவை ட்ராய் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தை சரியாக செயல்படாமல் இருந்தாலோ போட்டி குறைவாக காணப்பட்டாலோ மட்டும்தான் கட்டுப்பாடுகள் அவசியம் என்று ட்ராய் கூறியுள்ளது.

MSN -Tamil்

வழக்குகளை விரைந்து முடிப்பதில் தமிழகம் முதலிடம்

வழக்குகளை விரைந்து முடிப்பதில் நாட்டில் உள்ள 21 உயர் நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளதாக சட்ட அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை உயர்நீதிமன்றம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 648 வழக்குகளை முடிக்கிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கோர்ட்டுகள் முடிக்கும் வழக்குகளின் தேசிய சராசரியில் மூன்றரை மடங்கு அதிகம். தமிழகத்தை தொடர்ந்து, உத்தரபிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது



Yahoo -Tamil்

மார்ச் 23ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்

2007-08ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இம்மாதம் 23ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 22ம் தேதி துவங்குகிறது. இதற்கான அறிவிப்பை கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா இன்று வெளியிட்டார்.


MSN -Tamil்

சென்னையில் 4 புதிய மேம்பாலங்கள் - ஸ்டாலின்

சென்னையில் 4 புதிய மேம்பாலங்கள் - ஸ்டாலின்
சென்னையில் ரூ. 58.5 கோடி செலவில் 4 புதிய மேம்பாலங்கள் கட்டப்பட இருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இவற்றுக்கு இன்னும் பத்து நாளில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்ட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேம்பாலம் கட்டப்பட உள்ள தி.நகர் உஸ்மான் சாலை -துரைசாமி சாலை சந்திப்பு, கோபதி நாராயணா சாலை -திருமலை சாலை சந்திப்பு, வடக்கு உஸ்மான் சாலை -எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பு, முத்துராமலிங்கம் சாலை -டர்ன்புல் சாலை சந்திப்பு ஆகிய இடங்களை அவர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

ஸ்ரீலங்கா, அமெரிக்கா இராணுவ ஒப்பந்தம்

இலங்கை அரசும் அமெரிக்காவும் பல்வேறு பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் உதவிக்கான இராணுவ ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியுள்ளன. 10 வருடங்களுக்கான இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு இராணுவ பரஸ்பபர உதவிகளை இரு நாடுகளும் வழங்கவும் பெறவும் உள்ளன.

Sri lanka enters military pact with US

Sri Lanka and the United States today entered into a 10-year agreement to provide reciprocal logistical support for their respective military forces.

The Acquisition and Cross-Servicing Agreement (ACSA) was signed by Sri Lanka's Defence Secretary Gotabhaya Rajapakse and US ambassador Robert Blake, the US embassy said.
"The agreement will allow the US and Sri Lanka to transfer and exchange logistics supplies, support, and re-fueling services, either in kind or at cost," a statement from the embassy said.

சிமெண்ட் விலை குறைக்க மறுப்பு

சிமெண்ட் தயாரிப்பாளர்கள், விலையேற்றத்தை குறைக்கக்கோரிய அரசின் வேண்டுகோளை மறுத்தனர். இரட்டை சுங்கவரி சிமெண்ட் மீது விதிக்கப்பட்டிருப்பதால் அதன் விலை அதிகரிக்கப்பட்டது. வரியை சமாளிக்க வேறு வழியில்லை என சிமெண்ட் தயாரிப்பாளர்கள் பதிலளித்துள்ளனர்.

Cement manufacturers refuse to cut prices

முல்லைப் பெரியார் நா.மன்றத்தில் விவாதிக்க வேண்டும் - மு.க

நடுவராணயத் தீர்ப்பு வந்தபிறகும் காவிரி நதிநீர் பங்கீடு நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூடுமானால் முல்லைப் பெரியார் அணை விவகாரமும் விவாதிக்கப் படக் கூடியதே என தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறியிருக்கிறார். அவரது முரசொலி கட்டுரையை மேற்கோள் காட்டும் The Hindu செய்தி.

ஆவின் பால் விலை உயர்வு

ஆவின் பாலின் விலை ரூ1.25வீதம் அனைத்து இரகங்களுக்கும் ஏற்றப்பட்டுள்ளது.கொள்முதல் விலையும் ஒரு லிட்டருக்கு ரூ10.50இலிருந்து ரூ12/-க்கு உயருகிறது.

The Hindu செய்தி

ஆஃப்கனில் தற்கொலைப் படை -16 பேர் மரணம்

இன்று காலை ஒரு மகிழுந்தியில் வந்த தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 16 ஆஃப்கன் சிவிலியன்கள் 16 பேர் மரணம் அடைந்தனர்; 25 பேர் காயமடைந்தனர். மேல் விவரங்களுக்கு...

காமில்லா சார்லஸ்க்கு கர்ப்பபை நீக்க ஆபரேஷன்


பிரிட்டனின் இளவரசர் சார்லஸ்ஸின் மனைவியும், கார்ன்வால் சிற்றரசியுமான 59 வயதான காமில்லா பார்க்கர் பௌல்ஸ் கர்ப்பை நீக்கும் அறுவை சிகிட்சைக்காக தனியார் மருத்துவமனையொன்றில் சேர்க்கப் பட்டிருக்கிறார்.


DNA - World - மேல் விவரங்களுக்கு.....

இங்கிலாந்தில் இந்திய டாக்டர்கள்-புதியவிதிக்கு தடையுத்தரவு

இந்திய வம்சாவளி மருத்துவர்கள் இங்கிலாந்தின் நாட்டு மருத்துவ சேவைக்கான பணியிடங்களுக்கு போட்டியிட ஆகஸ்ட் 1,2007க்கு பிறகு தங்கக்கூடிய விசா வைத்திருக்க வேண்டுமென்ற நலவாழ்வு அமைச்சின் ஆணைக்கு அவசர தடை உத்தரவை பெற்றுள்ளனர்.

DNA - World - இது பற்றிய செய்தி

ஜார்கண்ட் எம்பி சுட்டுக் கொலை சிபிஐ சிசாரணை


ஜார்கண்ட் முக்திமோர்ச்சாவைச் சேர்ந்த எம்பி சுனில் மஹதோ நேற்று நக்ஸலைட்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இன்று மாநிலம் தழுவிய கடையடைப்பு நடக்கிறது. இக்கொலைக்குக் கண்டனம் தெரிவித்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்மந்திரி மது கோடா உடனடியாக இதுபற்றி சிபிஐ குற்ற ஆய்வுக்கு உத்திரவிட்டார்.

ஜம்ஷெட்பூரில் கால்பந்து விலையாட்டுப் பார்த்துக் கொண்டிருந்தபோது நேற்று மாலை அவர் சுடப்பட்டார்.

மேலும்....

சென்செக்ஸ் 541 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே சென்செக்ஸ் குறியீடு 541 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.

சென்செக்ஸ் 541 புள்ளிகள் வீழ்ச்சி

ஆஸ்திரேலியா வீரர் சைமண்ட்ஸ் உடல்தகுதியில் முன்னேற்றம்

காயம் காரணமாக உலகக்கோப்பையில் இடம்பெறுவாரா என எதிர்பார்க்கப்படும் ஆஸ்திரேலியா வீரர் சைமண்ட்ஸ் இன்று வலைப் பயிற்சியில் பங்கேற்றார். மேல் விவரங்களுக்கு

இ மெயிலில் கோர்ட் நோட்டீஸ்

வழக்குகள் விசாரணை தாமதத்தை தவிர்க்க இ-மெயில் மூலம் கோர்ட் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார்.

வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பினால் அது அவர்களது கைக்கு கிடைக்க ஒரு மாதம் வரை ஆகிறது. இந்த கால தாமதத்தை தவிர்ப்பதற்காக இ-மெயில் மூலம் நோட்டீஸ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்சீப் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நீதிபதிகளுக்கு லேப்- டாப் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

உழவர் சந்தை கணினி மயம்

தமிழகத்திலேயே முதன்முறையாக ஓசூர் உழவர் சந்தை கணினி மயமாக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சந்தோஷ்பாபு, நேற்று இதை தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் ஓசூர் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்வது, காய்கறிகள் வரத்து பதிவு செய்தல், விலை நிர்ணயம் செய்தல், தினசரி அறிக்கை, மாதாந்திர அறிக்கை போன்ற அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட உள்ளது.


தினகரன்

டெண்டுல்கரின் ஐந்தாவது உலகக்கோப்பை

சச்சின் டெண்டுல்கர் ஐந்தாவது உலகக்கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறார். Reutersன் பத்தியில் இதுபற்றிய செய்தித் தொகுப்பு.

Tendulkar eyes special fifth World Cup

In 2003, he smashed Pakistan paceman Shoaib Akhtar over point for six to score 98 and lead the team to an emotional victory. In 1999, he returned to England after his father's funeral to score 140 against Kenya.

"It is always special to be part of the World Cup," he told reporters at the weekend. "I've been part of that four times and all four times it has been great."

தேமுதிக மகளிர் மாநாடு விஜயகாந்த் அழைப்பு

தே.மு.தி.க.வின் முதல் மகளிர் மாநாடு (உலக மகளிர் எழுச்சி மாநாடாக) வேலூரில் வரும் 8ம் தேதி நடக்கிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து திரளான மகளிர் பங்கேற்க வேண்டும் என்று விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.



தினகரன்

பெண்களுக்கான சிறப்பு திரைப்பட விழா: டெல்லியில் இன்று ஆரம்பம்

இன்றைய தலைமுறை இந்தியப் பெண்களை முன்வைத்த திரைப்படவிழா டெல்லியில் இன்று(மார்ச் 5) ஆரம்பிக்கிறது.

Film festival of the Indian woman from today

The five-day festival will showcase the emerging Indian women through works by well-known directors, including Satyajit Ray and Shyam Benegal, and begin with the screening of 'Mitr-My Friend' directed by Revathy.

The festival is jointly held by the Ministries of Information and Broadcasting and Women and Child Development.

Other films to be screened at the festival are "Not Only Mrs Raut" (Marathi, Dir. Gajendra Ahire), "Paromitar Ek Din (Bengali, Dir. Aparna Sen), Zubaida (Hindi, Dir Shyam Benegal), "Perumazhakkalam" (Malayalam, Dir. Kamal), "Dosar" (Bengali, Dir. Rituparno Ghosh), Chandni Bar (Hindi, Dir. Madhur Bhandarkar), "Sringaram", (Tamil, Dir. Sharda Ramanathan) and "Devi" (Bengali, Dir. Satyajit Ray).

13 கிலோமீட்டர்வாலா

தெற்கு தைவானில் உலக சாதனைக்காக 13 கிலோமீட்டர் நீளமுள்ள சரவெடி வெடிக்கப்பட்டது. இது முற்றிலும் வெடித்து முடிக்க 2 மணிநேரம் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

S.Taiwanese light up 13-km-long cracker string in world record bid

இந்திய தபால்துறையை மேம்படுத்த KPMG

இந்திய தபால்துறையை மேம்படுத்தும் பணியில் KPMG consulting அமர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிடத் தகுந்த சேவையாக தபால் நிலைய வங்கிகளை உருவாக்கும் திட்டம் இருக்கும்.

KPMG appointed consultants for revamping Postal Department

The Central Government has appointed KPMG as consultants for revamping activities of the Department of Posts, a senior official said here on Sunday.

The Government is awaiting a report from KPMG. However, one of the recommendations of KPMG is to set up Post Office Banks similar on the lines of Japan, which has been successful, the official told PTI.

கிராமங்களில், டாக்டர்கள் பணிபுரிய புதிய சட்டம்: அன்புமணி

மத்திய மந்திரி அன்புமணி மயிலாடுதுறையில் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

கடந்த 1 வருடமாக செயல்படுத்தபட்டு வரும் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் சிறப்பாக பயன டைந்து வருகிறது. இதன் மூலம் குழந்தைகளின் இறப்புவிகிதம் குறைந்து உள்ளது.

மருத்துவ கல்லூரி படிப்பு முடித்தவர்கள் கிராம சுகாதார நிலையங்களில் 1 ஆண்டு கட்டாயமாக பணியாற்றிய பின்னர் மேற்படிப்பையோ அல்லது பணி நியமனமோ செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறை படுத்தப்படும்.



மாலை மலர்

-o❢o-

b r e a k i n g   n e w s...