உலக அளவில் ரோபோட்டிக்ஸ் எனப்படும் இயந்திர மனிதனை வடிவமைக்கும் தொழிற்நுட்பத் துறையின் மிக உயர்ந்த விருதான எங்கல்பர்கர் விருது முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழத்தை சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருபவருமான டாக்டர் பாலா கிருஷ்ணமூர்த்திக்கு அவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 25 வருடங்களாக இயந்திர மனிதனை உருவாக்குவதற்கு தேவையான பல வகையான மென்பொருள் மொழிகளை அவர் உருவாக்கியுள்ளார். 1980 களின் தொடக்கம் 1990 ஆம் ஆண்டுகளின் மைய காலம் வரை மருத்துவ துறையில் உதவக் கூடிய வகையில் தன்னிறைவுடன் செயல்படக் கூடிய வகையில் இயந்திர மனிதனின் வடிவமைப்பில் அவர் முக்கிய பங்காற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
தான் வடிவைமைத்துள்ள இந்த இயந்திர மனிதன் மருத்துவமனைகளில் பெரிதும் உதவியாக இருக்கும் என டாக்டர் பாலா கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். இந்த ரோபோவின் விலை தற்போது 70,000 அமெரிக்க டாலர்கள் அளவில் இருந்தாலும், வணிக ரீதியில் தயாராகும் போது அதன் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
- பிபிசி தமிழ்
1. Deccan Herald - First Indian American woman receives Robotics Tech Award
2. Indian American woman gets US tech award-Software-Infotech-News By Industry-News-The Economic Times
Tuesday, June 19, 2007
உலகின் தலைசிறந்த ரோபோட்டிக்ஸ் விருதைப் பெற்றார் தமிழகப் பெண்மணி
Posted by Boston Bala at 11:28 PM 0 comments
சேதுசமுத்திரத் திட்டம்- சென்னை உயர் நீதிமன்றம் புதிய யோசனை
சென்னை உயர்நீதிமன்றம் ஆதாம் பாலம் என்றும் ராமர் சேது என்றும் அழைக்கப்படும் பாறைத்திட்டுககளை இடிககாமலேயே சேது சமுத்திரத்திட்டத்தை அமல்படுத்தமுடியுமா என்று முடிவு செய்யுமாறு கேட்டுககொண்டுள்ளது.
சேதுசமுத்திரத்திட்டத்திற்காக இந்தியாவிற்கும் இலங்கைககுமிடையே உள்ள கடற்பகுதியை ஆழப்படுத்தும்போது, கடலுககடியில் இருககும் சில பாறைத்திட்டுக்களும் உடைக்கப்படவிருககின்றன. இத்திட்டுககள் ஆதாமின் பாலம் என்று பொதுவாக அறியப்பட்டாலும், பல இந்துககள் இவை ராமர் கடல்கடந்து இலங்கையை அடைவதற்கு உதவிய அனுமனின் வானரசேனை கட்டிய பாலத்தின் மீதம்தான் என நம்புகின்றனர்.
அதன் காரணமாகவே அப்பகுதி இடிககப்படகககூடாது, கப்பல் போவதற்கான வழியை வேறு பகுதியில் உருவாககலாம் என விஸ்வஇந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புககள் கூறுகின்றன. முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியசுவாமி மற்றும் இந்துமுன்னணித்தலைவர் ராமகோபாலன் ஆகியோர், ராமர் சேது அகற்றுவதற்கு தடைவிதிகககோரியும், அப்பகுதியை தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாககல் செய்திருககின்றனர்.
அம்மனு திங்கள் கிழமையன்று விசாரணைககு வந்தபோது தலைமைநீதிபதி
மதம் தொடர்பான நம்பிகககையினை எளிதில் பறககணித்துவிடமுடியாது என்று கூறியிருந்தார். இன்று பிறப்பித்த இடைககால உத்திரவில் தலைமை நீதிபதி ஷாவும் நீதிபதி ஜோதிமணியும், கடல்அகழ்வுப்பணிக்கு இடைகாலத் தடைவிதிககமுடியாது, எனினும் இப்பிரச்சினை குறித்து தனது நிலைப்பாட்டினை மத்திய அரசு நான்கு வாரங்களுககுள் தெரிவிகக முன்வரவேண்டும் என கூறியுள்ளனர்.
மேலும் தொல்லியில் துறையினரோ வேறு எவருமோ பாறைத்திட்டுகள் குறித்து ஆய்வு நடத்தியிருககின்றனரா, அவற்றை தேசிய சின்னமாக அறிவிககமுடியுமா என்று மத்திய அரசு விளககவேண்டும், தவிரவும் அப்பகுதியைத்தவிர்த்து சேதுககால்வாய்திட்டத்தினை அமல்படுத்தமுடியுமா என்றும் அது கூறவேண்டும் எனவும் நீதிபதிகள் உத்திரவிட்டிருககின்றனர்.
ரிட்மனு இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரையில் திட்டுககளை உடைககாமல் இருககவேண்டுமா என்பது குறித்து மத்திய அரசே முடிவுசெய்யலாம் எனவும் நீதிபதிகள் கூறியிருககின்றனர். ஆனால் சேது திட்டம் குறித்த காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டுமானால், தற்போதையை நிலையில் இத் திட்டப் பணிகளை நிறுத்த முடியாது என்று சேது கால்வாய் பணிகளை மேற்கொண்டுவரும் தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவரான ரகுபதி தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் காரணங்கள், கப்பல் போக்குவரத்துக் காரணங்கள், மீனவர் நலன் ஆகிய மூன்று காரணங்களையும் கருத்தில் கொண்டு தற்போதைய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதை மாற்ற சாத்தியமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
- BBC Tamil
Posted by Boston Bala at 11:23 PM 0 comments
பாக்தாதில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 60 பேருக்கு மேல் பலி
இராக்கின் தலைநகர் பாக்தாதிலுள்ள ஷியா இன முஸ்லீம் பிரிவினரின் பள்ளிவாசல் அருகே இடம்பெற்ற ஒரு குண்டுத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என இராக்கிய போலீசார் தெரிவித்துள்ளார்கள்.
ஒரு டிரக் குண்டுமூலம் நடைபெற்றிருக்கக் கூடும் என நம்பப்படுகின்ற இந்தத் தாக்குதலில் 130 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாக்தாதின் மையப்பகுதியிலுள்ள அல் கிலானி பள்ளிவாசலுக்கு அருகில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் அந்தப் பள்ளிவாசல் சேதமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சமாராவிலுள்ள ஷியா இனப் பள்ளிவாசல் குறிவைத்து தாக்கப்பட்டதையடுத்து, எதிர் தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கும் முகமாக விதிக்கப்பட்டிருந்த நான்கு நாள் ஊரடங்கு உத்தரவு கடந்த ஞாயிறன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. ஊரடங்கு உத்திரவு விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு இடம் பெற்றுள்ள மிகவும் மோசமான ரத்தக்களரியான தாக்குதலில் இதுதான் என, பாக்தாதிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
சமாராவிலுள்ள ஷியா பள்ளிவாசல் குறிவைக்கப்பட்டதை அடுத்து பழிவாங்கும் நடவடிக்கையாக பாக்தாதிலும் அதற்கு தெற்கு பகுதியிலும் உள்ள பல சுன்னி இன பள்ளிவாசல்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
- Tamil BBC
BBC NEWS | Middle East | Baghdad truck bomb kills dozens
Posted by Boston Bala at 11:17 PM 0 comments
அகில இந்திய டென்னிஸ் போட்டி: தமிழக வீரர்கள் வெற்றி
கோவையில் நடைபெற்ற அகில இந்திய டென்னிஸ் போட்டியில் தமிழகத்தின் அவினாஷ், ஸ்வேதா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். ப்ரோ செர்வ் டென்னிஸ் அகாதெமி மற்றும் ஆயில் நேச்சுரல் கேஸ் கமிஷன் சார்பில் 12, 14 வயதுக்குள்பட்டோருக்கான டென்னிஸ் போட்டி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டனர்.
14 வயதுக்குள்பட்ட ஆடவர் இறுதி ஆட்டத்தில் தமிழகத்தின் அவினாஷ் 4-6, 8-6, 6-3 என்ற செட் கணக்கில் தமிழக வீரர் யூனிசை வென்றார்.
மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை ஸ்வேதா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஆந்திரத்தின் ஷேக் அம்ரீனைத் தோற்கடித்தார்.
12 வயதுக்குள்பட்ட ஆடவர் பிரிவில் கேரள வீரர் சூரஜ் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் குஜராத்தின் அன்விட் பேந்த்ரேயை வென்றார்.
மகளிர் பிரிவில் ஆந்திர வீராங்கனை ஷேக் அம்ரீன் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தமிழக வீராங்கனை ஸ்வேதாவை வென்றார்.
தினமணி
Posted by Boston Bala at 9:18 PM 0 comments
கலாம் மறுப்பு: மூன்றாவது அணிக்கு பின்னடைவு.
சற்று முன் கிடைத்த செய்திகளின் படி, குடியரசுத்தலைவர் தேர்தலில் தான் நிற்பதில்லை என்று தான் எடுத்த முடிவில் அப்துல்கலாம் உறுதியுடன் இருப்பதாக குடியரசுத்தலைவர் மாளிகை வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன. இது 'அப்துல்கலாம்' என்கிற வியூகத்தை இத்தேர்தலில் வகுத்த ஜெயலலிதா தலைமையிலான மூன்றாவது அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்று தெரிகிறது.
இதன் மூலம் குடியரசுத்தலைவர் தேர்தலில் நேரடிப்போட்டியும் சாத்தியமாகியுள்ளது.
எனினும், திட்டமிட்ட படி, மூன்றாவது அணி தலைவர்கள் நாளை அப்துல் கலாமைச் சந்திக்க உள்ளனர்.
Posted by வாசகன் at 8:01 PM 0 comments
கலாமை ஆதரிக்கத்தயார் !
மேலும் அறிய...
Posted by Adirai Media at 4:26 PM 0 comments
தலைமை ஆசிரியர் இடமாற்றம்: கிராமம் கொந்தளிப்பு.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இதுவரை பிரேம்குமார் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக மாற்றப்பட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக கனகமணி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகரமன்ற உறுப்பினர் வேல்விழி தலைமையில் வாழப்பட்டு கிராம மக்கள் அனைவரும் பள்ளி தாளாளரிடம் சென்று ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், பள்ளியின் தலைமை ஆசிரியராக பிரேம்குமார் பொறுப்பேற்ற பின்னர் எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் நன்றாக படித்து வந்தனர். மேலும் அவர்களுக்கு நல்லபழக்க வழக்கங்களை கற்றுக்கொடுத்தார். இதனால் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பிரேம்குமாரை மீண்டும் நியமிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்..
இதைப்பார்த்த பள்ளியின் தாளாளர் இது நிர்வாகத்தின் முடிவு மற்றவர்கள் தலையிட முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் செய்தனர். மாலையில் ஆசிரியர்கள் வீட்டுக்கு சென்ற பின்னர் பொதுமக்கள் அனைவரும் அந்த பள்ளிக்கு சென்று மற்றொரு பூட்டால் பூட்டிவிட்டு சென்றனர்
இந்த நிலையில் நேற்று இந்த பள்ளியியை பொதுமக்கள் திறந்தனர். தலைமை ஆசிரியர் கனகமணி இங்கு பணியாற்றக்கூடாது என்று மீணடும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று தலைமை ஆசிரியர் கனகமணியை மாற்ற வற்யுறுத்தி, தங்களின் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவிலலை. அதனால் வழக்கமாக150 மாணவர்கள் செல்லும் இந்த பள்ளியில் நேற்று 40 பேர் மட்டுமே சென்றனர். 110 குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை.
இந்த சம்பவம் குறித்து நேற்று கிராம மக்கள் கடலூரில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர்.
தினத்தந்தி செய்தி
Posted by வாசகன் at 11:42 AM 1 comments
கிரிக்கெட்: 2011 உலகக்கோப்பை சரத்பவார் தலைமை.
2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆலோசனை கூட்டத்தில், ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவராக சரத்பவார் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். உள்ளூர் ரசிகர்களுக்கு டிக்கெட் விலையில் தாராளம் காட்டுவது, பொதுவான விசா வழங்குவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
2011-ம் ஆண்டு நடக்கும் 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. இதில் இந்தியாவில் இறுதிப்போட்டி உள்பட 22 ஆட்டங்களும், பாகிஸ்தானில் 14 ஆட்டங்களும், இலங்கையில் 9 ஆட்டங்களும், வங்காளதேசத்தில் 6ஆட்டங்களும் நடக்கின்றன.
இந்த உலக கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகளை தொடங்குவது தொடர்பாக 4 நாட்டின் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் நேற்று முதல் முறையாக கூடி ஆலோசித்தனர். இந்த கூட்டம் பாகிஸ்தானின் புர்பான் நகரில் நடந்தது. இதில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சரத்பவார் தேர்வு செய்யப்பட்டார். மேலும் தலைமை கன்வீனராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நசிம் அஷ்ரப், பொருளாளராக இலங்கையின் சுஜீவா ரஜபக்சே ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதன் தலைமையகம் லாகூரில் செயல்படும்.
இந்த கூட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீசில் நடந்த 9-வது உலக கோப்பை போட்டியில் நடந்த குழப்பம், தவறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மீண்டும் அது போன்று தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, கடந்த உலக கோப்பையில் டிக்கெட் விலை உயர்வால் உள்ளூர் ரசிகர்கள் போட்டியை புறக்கணித்தனர். இதனால் அந்த உலக கோப்பை போட்டி, உலக கோப்பைக்கே உரிய `களை'யை இழந்தது. இது பற்றியும், போட்டியின் கால அளவு குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
இதன் முடிவில் 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு அதிக ரசிகர்களை வரவழைக்க உள்ளூர் ரசிகர்களுக்கு டிக்கெட் விலையை குறைந்த விலையில் விற்பது என்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சரத்பவார் கூறுகையில், `அடுத்த உலக கோப்பை போட்டி பார்வையாளர்கள் நட்பு முறையில் பழகுவதற்கான தொடராக இருக்கும் வகையில் தேவையான எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். உள்ளூர் ரசிகர்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றார்.
மேலும் இந்த போட்டியை காண வரும் 4 நாட்டு ரசிகர்களுக்கும் தனித்தனியாக விசா வழங்காமல், 4 நாட்டிலும் போட்டியை காணும் வகையில் பொதுவான விசா வழங்க அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தங்களது அரசிடம் உதவி கோருவது என்று முடிவு செய்யப்பட்டது. வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை போட்டிக்காக அங்குள்ள ஸ்டேடியங்களை புதுப்பிக்க ஐ.சி.சி. சிறப்பு நிதி வழங்கியது. அதே போன்று இந்த உலக கோப்பை போட்டிக்கும் தாங்கள் எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நசிம் அஷ்ரப் கூறினார். `இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்திய அனுபவம் உள்ளது. எனவே அடுத்த உலக கோப்பை போட்டி வரலாற்றில் தனிச்சிறப்பு பெற்றதாக இருக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கமிட்டி அடுத்ததாக நவம்பர் மாதம் இந்தியாவில் கூடி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி
Pawar named head of 2011 World Cup Organising Committee
Posted by வாசகன் at 11:32 AM 0 comments
அப்துல் கலாமுக்கு மறுப்பு - தே.ஜ.கூட்டணி
குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை மீண்டும் போட்டியிடச் செய்யும் மூன்றாவது அணியின் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கலாமை வேட்பாளராக ஏற்கப் போவதில்லை என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துவிட்டது.
அதே போல காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆதரவும் இல்லாத நிலையில் இத் தேர்தலில் கலாம் மீண்டும் போட்டியிட மாட்டார் என்றே தெரிகிறது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்,
இரண்டு மாதங்களுக்கு முன்பே கலாமை வாஜ்பாய் தலைமையிலான பாஜக தலைவர்கள் சந்தித்து மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரினர். அப்போது, அனைத்து கட்சிகளும் ஒரு மனதுடன் ஆதரித்தால் மட்டுமே பதவி ஏற்க முடியும் என கலாம் கூறிவிட்டார்.
கலாம் மறுத்ததால்தான் துணை குடியரசு தலைவர் பைரோன்சிங் ஷெகாவத்தை ஆதரிக்க தீர்மானித்துள்ளோம். ஜனாதிபதி பதவிக்கான அனைத்து தகுதிகளும் ஷெகாவத்திடம் உள்ளன. பிரதீபாவைப் போல இது ஒரு குடும்பத்தின் (சோனியா குடும்பம்) மீதான விசுவாசம் அல்ல. நாடு, ஜனாதிபதி பதவி, அரசியல், சட்டம் ஆகியவற்றின் மீதான விசுவாசத்தினால் தேர்வு செய்திருக்கிறோம்.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக அறிவித்துள்ளவருக்கு ஜனாதிபதியாக எந்தத் தகுதியும் இல்லை. இந்த விஷயத்தில் எங்கள் கருத்துடன் 3வது அணியின் கருத்தும் உடன்படுகிறது. பைரோன்சிங் ஷெகாவத்தை 3வது அணி ஆதரிக்க வேண்டும் என்றார் சுஷ்மா.
அதே போல அப்துல் கலாமை ஏற்க இடதுசாரிக் கட்சிகளும் மறுப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன், மூத்த தலைவர் ராஜா ஆகியோர் கூறுகையில்,
பிரதீபா பாட்டீல் பெண் வேட்பாளர் மட்டுமல்ல, பொறுப்பான கவர்னர். பொது வாழ்க்கையில் அனுபவம் மிக்கவர். அதுமட்டுமின்றி சட்ட நிபுணராகவும் இருக்கிறார். எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்காதவர். சிறந்த சமூக சேவகி. இத்தனை தகுதியுடன் கூடிய அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். அவரை விட்டுவிட்டு வேறு ஒருவரை ஏன் நாட வேண்டும். பாஜகவிற்கு உதவுவதற்காகவே 3வது அணி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது என்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் பாந்தே கூறுகையில்,
அப்துல் கலாமுக்கு பாஜக ஆதரவு கேட்டபோதே நாங்கள் அதை நிராகரித்து விட்டோம். இப்போது எப்படி ஆதரிக்க முடியும். கடந்த முறை ஜனாதிபதி தேர்தலிலேயே கலாமை ஆதரிக்காமல் லட்சுமி செகாலை நிறுத்தினோம். இப்போது ஏன் அவரை ஆதரிக்கப் போகிறோம். 3வது அணியின் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என்றார்.
பார்வர்டு பிளாக் தேசிய செயலாளர் தேவராஜன் கூறுகையில்,
3வது அணியின் இந்த கோரிக்கை மிகவும் தாமதாக வந்துள்ளதால் இப்போது எங்களால் பின் வாங்க முடியாது. நாங்கள் பிரதீபா பாட்டீலை ஆதரிக்கிறோம் என்றார்.
அதே போல பிரதீபா பாட்டீலை ஆதரிக்க முடிவு செய்துள்ள பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் நிர்வாக தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், கடந்த 5 வருட காலத்தில் அப்துல் கலாமின் பணியில் எங்களுக்கு திருப்தியில்லை. அவரது பணியை அவர் நிறைவாக செய்யவில்லை. இருப்பினும் இதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் பால் தாக்கரேவுக்கே உண்டு என்றார்.
சுயேச்சையாகப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பைரோன்சிங் ஷெகாவத்தையும் சிவசேனை ஆதரிக்காது என்றே தெரிகிறது.
மராட்டியரான காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா பாட்டீலையே ஆதரிக்க அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த விஷயத்தில் பால் தாக்கரேவின் மனதை மாற்ற பாஜக தலைவர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
நன்றி: தட்ஸ்தமிழ்
Posted by வாசகன் at 11:20 AM 0 comments
மூன்றாவது அணி: அப்துல் கலாமை நாளை சந்திக்கிறது
தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.வுக்கு மாற்றாக சமாஜ் வாடி, அ.தி.மு.க., தெலுங்கு தேசம், ம.தி.மு.க., அசாம் கணபரிஷத், ஜார்க்கண்ட் விகாஸ் மோட்சா, இந்திய தேசிய லோக்தளம் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய 8 கட்சிகளும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த கூட் டணிக்கு ``ஐக்கிய தேசிய முற் போக்கு கூட்டணி'' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் கடந்த 6-ந் தேதி ஐதராபாத்தில் கூடி பேசினார்கள். அந்த அணியின் 2-வது கூட்டம் நேற்று சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் நடந்தது.
கூட்டத்தில் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்- மந்திரி பாபுலால் மராண்டி, அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா, அசாம் கணபரிஷத் தலைவர் பிருந்தாவன் கோஸ்யாமி ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரம் இந்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் மீண்டும் போட்டியிட ஆதரவு தெரிவிப்பதாக முடிவு எடுக் கப்பட்டது.
``இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைப் பெற கூடிய தகுதி அப்துல் கலாமுக்கு மட்டுமே உள்ளது. அவரை அனைவரும் ஆதரிக்க வேண்டும்'' என்று 8 கட்சி கூட்டணித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 கட்சி கூட்டணி தலை வர்கள், தாங்கள் இறுதி முடிவு எடுக்கும் முன்பு அப்துல் கலாமை தொடர்பு கொண்டு பேசவில்லை. நேற்று மதியம் அவர்கள் ஜனாதிபதி மாளிகையுடன் தொடர்பு கொண்டு அப்துல் கலாமை சந்திக்க அனுமதி கேட்டனர். அவர்களுக்கு 20-ந் தேதி (புதன்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு நேரம் ஒதுக்கி அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தலைவர்கள் நாளை ஜனாதிபதி அப்துல் கலாமை சந்திக்க உள்ளனர். இதற்காக 8 கட்சித் தலைவர்களும் நாளை டெல்லி செல்கிறார்கள்.
ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய தளகர்த்தாவாக கருதப்படும் அ.தி.மு.க. பொதுச் செயலா ளர் ஜெயலலிதா நாளை காலை சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் நாளை டெல்லி செல்கிறார்.
ஜனாதிபதி அப்துல் கலாமிடம் 8 கட்சித் தலைவர்களும், ``ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும்'' என்று கேட்டுக் கொள்வார்கள். ``நாட்டின் நலன்கருதி ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி முடிவை ஏற்க வலியுறுத்தவும் 8 கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
அவர்களுக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் நன்றி தெரிவிப்பார். ஆனால் 3-வது அணி முடிவையும் கோரிக்கையையும் ஏற்பாரா என்பது இன்னமும் உறுதியாக தெரியவில்லை.
எல்லாரும் சம்மதித்து ஏகமனதாக தேர்வு செய்தால் மீண்டும் ஜனாதிபதி பொறுப்பை வகிக்க அப்துல் கலாம் சம்மதிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் போட்டியிட சம்மதிப்பாரா என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.
பா.ஜ.க. கூட்டணியும் ஆதரித்து, ஷெகாவாத் விலகும் பட்சத்தில் அப்துல் கலாம் போட்டியிட கூடும் என்றும் டெல்லியில் பேசப்படுகிறது. இது தொடர்பாக இன்னும் ஓரிரு நாட்களில் தெளிவான நிலை தெரிந்துவிடும்.
நன்றி: மாலைமலர்
Posted by வாசகன் at 11:11 AM 1 comments
b r e a k i n g n e w s...