.

Showing posts with label சட்டமன்றம். Show all posts
Showing posts with label சட்டமன்றம். Show all posts

Thursday, August 9, 2007

ஹைதராபாத்தில் தஸ்லீமா நஸ் ரீன் தாக்கப்பட்டார்

வங்கதேச எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் ஹைதராபத்தில் தாக்கப்பட்டார். தஸ்லீமா எழுதிய Shodh-இன் தெலுங்கு மொழியாக்க வெளியீட்டு விழாவில் அவர் மீது நாற்காலிகள் மீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மஜ்லிஸ் இட்டாஹூதுல் முஸ்லிமின் கட்சி (Majlis Ittehad-ul-Muslimeen - MIM) சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் ப்ரியரஞ்சன் தாஸ்முன்ஷி இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளார்.

நஸ்-ரீன் தலைக்கு ஐந்து லட்சம் ரூபாய் தருவதாக மதவாத அமைப்புகள் சில அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முந்தைய சற்றுமுன்...: இந்து-முஸ்லீம் கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்: தஸ்லீமா

Taslima Nasrin attacked in Hyderabad
NDTV.com: Taslima Nasreen attacked in Hyderabad
Exiled Bangladeshi female writer attacked by Muslims in India - International Herald Tribune

Tuesday, August 7, 2007

அ.தி.மு.க.-தி.மு.க. கோரிக்கை நிராகரிப்பு - விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. தொகுதி புதிதாக உருவாகிறது

அ.தி.மு.க.- தி.மு.க. கோரிக்கை நிராகரிக்கப் பட்டு விருகம்பாக்கம் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர், ஆவடி, மாதவரம், பல்லாவரம் தொகுதிகளும் வருகின்றன. தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தொகுதிகளை பிரித்தது போல் சட்டமன்றத் தொகுதிகளும் பல பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் சேரன்மாதேவி, சாத்தான்குளம், திருவல்லிக்கேணி, ஆலந்தூர் தொகுதி பெயர் நீக்கப்பட்டு வேறு தொகுதியில் சேர்க்கப்பட்டு விட்டது.

சேரன்மாதேவி தொகுதியை பிரித்து அதில் உள்ள பாப்பாக்குடி (முக் கூடல்) கடையம் பஞ்சாயத்து யூனியன் பகுதிகள் ஆலங்குளம் தொகுதியிலும் சேரன்மாதேவி யூனியன் அம்பாசமுத்திரம் தொகுதியில் சேர்க்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய தொகுதியான வில்லிவாக்கம் தொகுதி 3 ஆக பிரிக்கப்பட்டு, ஆவடி, அம்பத்தூர், விருகம்பாக்கம் தொகுதியாக உருவாக்கப்பட்டு உள்ளது.

வில்லிவாக்கம் தொகுதியை பிரிக்கும் போது கே.கே.நகர் பெயரில் ஒரு தொகுதி உருவாக்க வேண்டும் என்று தி.மு.க. பிரதிநிதிகள் வலி யுறுத்தி இருந்தனர்.

எம்.ஜி.ஆர்.நகர் பெயரில் ஒரு தொகுதியை உரு வாக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பிரதிநிதிகள் தேர்தல் கமிஷனில் வலியுறுத்தி இருந்தனர். ஆனால் 2 கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு விருகம்பாக்கம் பெயரில் தொகுதி உருவாக்கப்பட்டு விட்டது.

வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் இது வரை ராயபுரம், துறை முகம், ஆர்.கே.நகர், பெரம்பூர், திருவொற்றியூர், வில்லி வாக்கம் ஆகிய தொகுதிகள் இருந்தன. இதில் தற்போது வில்லிவாக்கம், துறைமுகம் தொகுதியை மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில், சேர்த்து உள்ளனர். அதற்கு பதிலாக வட சென்னையில் மாதவரம், பூங்காநகர் (தனி) தொகுதிகளை இணைத்துள்ளனர்.

தென்சென்னை பாராளுமன்றத் தொகுதியில் தி.நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய தொகுதிகள் இருந்தன. தற்போது இதில் ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய தொகுதிகள் வருமாறு பிரித்துள்ளனர்.

மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில் ஏற்கனவே பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகள் இருந்தன. இதை தற்போது மாற்றி புரசைவாக்கம், வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம், அண்ணா நகர் தொகுதிகள் இடம் பெறுமாறு செய்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதியில் மதுரவாயல், சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும் புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம் சட்டசபை தொகுதி களும், திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதியில் ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், கும்மிடிப் பூண்டி, பொன்னேரி, திருவாலங்காடு, தொகுதிகளும் சேருகின்றன.

சென்னையை பொறுத்தவரை, திருவல்லிக்கேணி, ஆலந்தூர் பெயரில் தொகுதி கள் இனி இருக்காது.

மாலைமலர்

Friday, August 3, 2007

மசூதி மற்றும் கிறிஸ்தவ ஆலயத்துக்கு விஜயகாந்த் நிதியுதவி

தனது தொகுதியில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வுசெய்ய, விஜயகாந்த் புதன்கிழமை விருத்தாசலம் வந்தார். அங்கு அவரது எம்எல்ஏ அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்தார்.

விருத்தாசலத்தில் உள்ள நவாப் பள்ளிவாசல் மதில் சுவர் எழுப்பவும், கிறிஸ்தவ ஆலய புனரமைப்புக்கும் தலா ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

இதையடுத்து கெங்கைகொண்டான் காலனியைச் சேர்ந்த அஞ்சலையம்மாள் என்ற பெண்ணுக்கு மூக்குக் கண்ணாடியும், ஆலடி கிராமத்தைச் சேர்ந்த 15 நபர்களுக்கு முரசும் (தப்பட்டை), மங்கலம்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட பழையபட்டணம் ஊராட்சிப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியருக்கு ஒரு ஆண்டுச் சம்பளம் ரூ. 12 ஆயிரமும் வழங்கினார்.

விருத்தாசலம் நகராட்சிக்கு உள்பட்ட 13-வது வார்டில் வசிக்கும் பெண்களும், கோ-மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெண்களும் தங்கள் பகுதிக்கு குடிநீர் சரிவர வருவதில்லை என்றும், சுகாதார சீர்கேடு இருப்பதாகவும் கூறினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக விஜயகாந்த் உறுதியளித்தார்.

தினமணி

Monday, July 30, 2007

கோவா: காங். அரசு தப்பியது

திகம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கோவா சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தை வென்று தனது ஆட்சிக்கு வந்த ஆபத்திலிருந்து தப்பியது. கட்சி மாறிய தனது மூன்று எம் எல் ஏக்களை பதவிநீக்கம் செய்யுமாறு முன்னதாக காங். மனு கொடுத்திருந்தது. அவைத்தலைவர் பிரதாப்சிங் ரானே அம்மூவரையும் வாக்களிக்க விலக்கிவைத்தார். இதனால் அவையின் வாக்கிடுவோர்் எண்ணிக்கை 40இலிருந்து 37ஆக குறைந்தது. அவைத்தலைவரின் வாக்கையும் கணக்கில் கொண்டு மயிரிழையில் அரசு பிழைத்தது.

NDTV.com: Goa: Kamat govt survives floor test

-o❢o-

b r e a k i n g   n e w s...