.

Showing posts with label பங்குமார்க்கட். Show all posts
Showing posts with label பங்குமார்க்கட். Show all posts

Thursday, August 9, 2007

அமெரிக்காவில் சொத்துக்களுக்கான கடன்கள் குறித்து கவலைகள்

அமெரிக்காவில் சொத்துக்களுக்கான கடன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளின் பாதிப்புகள் குறித்த கவலைகளை அடுத்து, நிதிச் சந்தையில் போதிய பணத்தை உறுதி செய்யும் நோக்கில், ஐரோப்பிய மத்திய வங்கி தலையிட்டுள்ளது. சந்தையின் ஒழுங்கு நிலையைச் சரி செய்யும் வகையில், ஏனைய வங்கிகளுக்கு, 130 பில்லியன் டொலர்களை ஐரோப்பிய வங்கி கிடைக்கச் செய்துள்ளது.

சாத்தியமான கடன் அழுத்தம் குறித்த அச்சங்கள் காரணமாக நிதி நிறுவனங்களும், கூட்டுத்தாபனங்களும், மற்றும் முதலீட்டாளர்களும் ஆட்டடம் கண்டுள்ளனர்.

இந்த அச்சங்கள் காரணமாக இன்று முன்வேளையில் நியூயோர்க் பங்குச் சந்தையில் பங்கு விலைகளில் வீழ்ச்சியும் காணப்பட்டது.

தமிழ் பிபிசி

Zee News - ECB injects USD 130 bn in European financial system
BBC NEWS | Business | ECB moves to help banking sector
Subprime: The Ugly American Hits Europe - BusinessWeek
Stocks Tumble as Home Loan Worries Spread - New York Times
Economics focus | The mandarins of money | Economist.com: "Central banks in the rich world no longer determine global monetary conditions"
Monetary policy | It ain't easy | Economist.com: "Despite the recent turbulence in the credit markets, the Federal Reserve holds fire on interest rates"

Sunday, June 17, 2007

கூகிளில் விளம்பரம் செய்வதை ஈ-பே நிறுத்தியது

கூகுளின் 'ஆட்வோர்ட்ஸ்' பயனர்களில் ஈ-பே மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. கூகிள் விளம்பரங்களுக்காக மட்டும் வருடத்திற்கு 25 மில்லியன் டாலர்களை ஈபே செலவழிக்கிறது.

ஈபே-யின் மாநாட்டுக்குப் போட்டியாக கூகிளும் தவணை அட்டை செயலாக்க கருத்தரங்கை ஒரே நேரத்தில் நடத்துவது இதற்கான காரணம். கடன்/தவணை அட்டை வியாபாரத்தில் கூகிளும் நுழைவதால் ஈபே-யின் நிறுவனமான பே-பால் (PayPal) வணிகம் பாதிக்கப்படும் என்று எண்ணுவதால், இந்த திடீர் வாபஸ் அறிவிப்பு வெளியானது.

BBC NEWS | Business | Angry eBay pulls Google adverts

Friday, June 15, 2007

ச: ஸ்பைஸ்ஜெட் பங்குகளை ஜெட் வாங்குகிறதா ?

இந்தியாவின் விலைகுறைந்த சேவை வழங்கும் விமான சேவை நிறுவனங்களில் ஏர் டெக்கானை அடுத்துப் பெரிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை வளைத்துப் போடும் விதமாக அந்நிறுவனத்தில் துபாய் நிறுவனங்களின் பங்கை ஜெட் வாங்குவதாக எழுந்த வதந்தியை ஒட்டி நேற்று ஸ்பைஸ்ஜெட்டின் பங்குவிலைகள் உயர்ந்தன. இந்த செய்தி உண்மை இல்லை என்று ஸ்பைஸ்ஜெட் தலைவர் சித்தாந்த சர்மா ் ப்ளூம்பெர்க் நிதி செய்திநிறுவனத்திற்கு தொலைபேசியில் அளித்த பேட்டியில் கூறினார்.

Friday, April 27, 2007

பாரதி ஏர்டெல்லின் நான்காம் பருவ இலாபம் இருமடங்கானது

முக்கியமான இந்திய செல்பேசி சேவையாளர்களில் ஒன்றான பாரதி நிறுவனம் இன்று வெளியிட்ட நான்காம் பருவ முடிவுகளில் அதன் இலாபம் இருமடங்காக அதிகரித்துள்ளது.
மேல்விவரங்களுக்கு..Business-The Times of India

Monday, April 2, 2007

ச:தொடர்ந்த விற்பனையால் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி

ஆட்டோ, வங்கிகள், கட்டுமானத்துறை பங்குகளின் விற்பனை நெருக்கடியை அடுத்து பங்குசந்தையின் எல்லா பங்குகளுமே இன்று விலை குறைந்துள்ளன. இன்று 2.01 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 504.77 புள்ளிகள் குறைந்து 12567.33ஆக இருந்தது. சென்செக்ஸின் 30 பங்குகளில் 29 விலை குறைந்திருந்தன.


Moneycontrol India :: News ::

சிகரெட் விற்பனையில் சரிவு

சிகரெட்டுக்கான 33% வரி உயர்வினால், விற்பனை மந்தமாகி உள்ளது. மதிப்புக் கூட்டு வரியை 12.5 சதவிகிதமாக ஆக்கியதன் விளைவினால், புகை பிடித்தல் குறையும் என்று ஐடிசி கவலை தெரிவிதுள்ளது.

The Statesman :: ITC expects dip in cigarette sales

Friday, March 16, 2007

ராஜ் டிவி பங்கு ரூ.275இல் விற்பனை துவக்கம்

ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க், இன்று மும்பை பங்கு சந்தையில் தன் பங்குகளின் விற்பனையைத் துவக்கியது. தன் முதல் பொதுவிற்பனை விலையை விட 7% அதிக விலையில் ரூ.275இல் ஆரம்பித்தது. கடைசியாக ரூ.227.90க்கு விற்றுக் கொண்டிருந்ததாக இந்த The Hindu News Update Service செய்தி கூறுகிறது.

Saturday, March 10, 2007

ரிலையன்ஸுடன் இணைந்தது IPCL

பங்கு சந்தையில் எதிர்பார்த்ததுபோலவே இன்று கூடிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீட்ஸின் இயக்குனர்குழு தன்னுடன் IPCL இணைவதை 1:5 என்ற வீதத்தில் அனுமதித்துள்ளது.


இதுபற்றி - Daily News & Analysis

Monday, March 5, 2007

சென்செக்ஸ் 541 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே சென்செக்ஸ் குறியீடு 541 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.

சென்செக்ஸ் 541 புள்ளிகள் வீழ்ச்சி

Thursday, March 1, 2007

மும்பை பங்கு சந்தையில் பங்கு வர்த்தகம் ஏற்றம்

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை துவங்கியவுடன் பங்கு வர்த்தகம் ஏற்றம் அடைந்தது. காலை 10 நிலவரப்படி சென்செக்ஸ் 142 புள்ளிகளும் (13080.37 புள்ளிகள்), நிப்டி 34 புள்ளிகளும் (3780.05 புள்ளிகள்) ஏற்றமடைந்தன. முன்னதாக நேற்று பார்லிமெண்டில் 2007-08 ம் ஆண்டு பட்ஜெட்டை நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த பின் சென்செக்ஸ் 500 புள்ளிகள், 148.60 புள்ளி சரிவை கண்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமலர்.

Wednesday, February 28, 2007

பட்ஜெட் : பங்குசந்தையில் வீழ்ச்சி

மும்பை: பார்லிமென்டில் 200708 ம் ஆண்டு பட்ஜெட்டை நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த பின்னர் பங்குசநதை பெரும் சரிவை கண்டது. சுமார் 500 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.மாலை 4 மணி நிலவரப்படி , சென்செக்ஸ் 12938.09 புள்ளியாக இருந்தது.சுமார் 540.74 புள்ளிகள் சரிவை கண்டது. நிப்டி 3745.30 புள்ளியாக இருந்தது. சுமார் 148.60 புள்ளி சரிவை கண்டது.

விலை குறையும் பொருட்கள்

1. ரெடிமேட் உணவு பொருட்கள்
2. பிஸ்கட்டுகள்
3. "மவுத் ப்ரஷ்னர்'கள்
4. காலணிகள்
5. குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்,"பில்டர்'கள்
6. குடைகள்
7. சூரியகாந்தி மற்றும் பாமாயில் எண்ணெய்
8. நாய் பிஸ்கட்
9. மொபைல் போன்கள்
10. கம்ப்யூட்டருக்கு தேவைப்படும் பிளாஷ் டிரைவ்,
"டிவிடி' டிரைவ் மற்றும் ரைட்டர்
11. சொட்டு நீர் பாசன கருவிகள்
12. குறிப்பிட்ட சில மருத்துவ கருவிகள்
13. கடிகார உதிரி பாகங்கள்
14. வைரம் மற்றும் செயற்கை வைரங்கள்
15. ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள்
16. இரண்டாம் நிலை உருக்கு
17. நுõல் இழைகள்
18. பாலிஸ்டர் நுõலிழைகள்
19. கச்சா பவளங்கள்
20. அகழ்வுப் பணி இயந்திரங்கள்
21. கல்கரி
22. பிளைவுட்கள்
23. பயோ டீசல்

விலை அதிகரிக்கும் பொருட்கள்

1. சிகரெட் மற்றும் பீடிகள்
2. "செட் டாப் பாக்ஸ்' கருவிகள்
3. தனிப்பட்ட உபயோகத்துக்காக இறக்குமதி செய்யப்படும்குட்டி விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்

source தினமலர்.

அமெரிக்கப் பங்குகள் பின்னடைவு

அமெரிக்க சைன பொருளாதாரங்கள் தளர்வடைகின்றன என்கிற கருத்தின் அடிப்படையில், சைன பங்குகளள அடுத்து அமெரிக்க பங்குகள் வெகுவாக வீழ்ந்தன. டவ் ஜோன்ஸ் குறியீடு 200 புள்ளிகள் குறைந்தது.

Yahoo News.

Google news

Saturday, February 24, 2007

ஜப்பான் வர்த்தகம் - தினவட்டி விகிதம் 0.25% உயர்வு

ஜப்பானின் வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதமாக அந்த நாட்டின் தேசிய வங்கி அதிகரித்தது.

கடன் கொடுப்பதற்கான வட்டி அதிகரிப்பது; வைப்புநிதிகளுக்கான வட்டி மேலும் வருவது - போன்றவை, அதைத் தொடர்ந்து உயர்கிறது. இதன் பிரதிபலிப்பாக, பங்குச்சந்தை குறியீடான நிக்கெய், கடந்த ஏழு வருடங்களில் முதல் தடவையாக 18,000 ஆக உயர்ந்திருக்கிறது.

சாதாரணமாக வட்டி விகிதம் ஏறினால், கடன் பத்திரங்களின் விலை உயர்ந்து, பங்குச்சந்தை சரியும். ஆனால், ஜப்பானில் தலைகீழ். பணவீக்கத்திற்கு பயந்து எக்கச்சக்க சேமிப்பை வங்கிகளில் வைத்திருக்கும் நடுத்தர வர்க்கம், இவ்வித நடவடிக்கைகளினால் நம்பிக்கை அடைந்து, நுகர்வோராக செலவழிக்கவும், முதலீட்டாளராக சந்தையில் ஈடுபடவும் வழிவகுக்கும்.

Bloomberg.com: Japan | FT.com / World / Asia-Pacific - Nikkei hits seven-year high on rate hopes

Thursday, February 22, 2007

ஐ ஃப்ளெக்ஸ் பங்குகள்; அரசுத் தலையீடு?

ஐ ஃப்ளெக்சின்(i Flex) பங்குகளை ஆரக்கிள் கார்ப்பரேஷனுக்கு விற்கும்படி பங்குதாரர்களை வர்புறுத்த இந்திய அரசாங்கத்தை அமெரிக்கா கேட்டுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற ச்டாம் இருப்பது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

ஆரக்கிள் தற்போது ஐ ஃபெளெக்சின் பங்குகளில் 82.9% பங்குகளை கைப்படுத்தியுள்ளது.

இந்திய சட்டப்படி பங்குகளை விற்கச் சொல்லி வர்புறுத்த எந்த வழியுமமில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் ET

-o❢o-

b r e a k i n g   n e w s...