.

Friday, April 13, 2007

பிளாக்கரில் இந்தியில் பதிவது இனி எளிது

பிளாக்கரில் இந்தியில் நேரடியாகபதிய கூகிள் புதிய நிரலியை நிறுவியுள்ளது. அதுவாகவே கற்றுக் கொள்ளும் திறன் உள்ள நிரல் ஆதலால் ஆங்கில எழுத்துக்களின் வினோத கூட்டுக்களை ( உ-ம்: maNam) நினைவில் கொள்ள வேண்டாம். இந்த கற்றல் தனியொருவருக்கானதாகையால் இந்தி ஆங்கில மொழிபெயர்ப்பு நம் விருப்பப்படி இருக்கலாம். இணையத்தில் எங்கிருந்தாலும் கிடைக்கின்ற வசதி வேறு.

இது பற்றி..Official Google Blog: Now you can blog in Hindi

இதுபற்றிய விவாதக் களம்

இந்திய வேளாண் துறையை மேம்படுத்த உலகவங்கி நிதியுதவி

இந்தியாவில் வேளாண் துறையை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அடிப்படையில் உருமாற்றுவதற்கு உலக வங்கி 200 மில்லியன் டாலர் கடனுதவி அளிக்க உள்ளது. உலக வங்கியின் மேம்பாட்டு அமைப்பான சர்வதேச மேம்பாட்டு சங்கத்தின் மூலம் இந்த கடன் வழங்கப்படுவதாகவும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் 50 மில்லியன் டாலர் அளிக்கவிருப்பதாகவும் உலக வங்கி வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

இந்திய வேளாண் துறையை குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றுவதற்கும், குறைந்தபட்ச தன்னிறைவை அத்துறை எட்டுவதற்கும் இந்த கடனுதவி வழிவகை செய்யும். வறுமை ஒழிப்பு, வருவாயைப் பெருக்குதல் போன்றவற்றையும் செயல்படுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இத்திட்டம் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு அடுத்த 6 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் துறை வளர்ச்சி விகிதம் கவலையளிக்கக் கூடிய வகையில் உள்ளதாகவும் போதிய அளவுக்கு இல்லை என்றும் கார்ட்டர் கூறினார்.

MSN INDIA

இந்தியாவில் ஆசிய விளையாட்டு: சீனா பின்வாங்கியது

வரும் 2014ம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டியை புது டெல்லியில் நடத்த இதுவரை ஆதரவு தெரிவித்து வந்த சீனா, தனது நிலையில் இருந்து பின் வாங்கியுள்ளது. தென் கொரியாவில் உள்ள இன்சியான் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த தனது ஆதரவை சீனா தெரிவித்துள்ளது.

கொரியாவுக்கு பயணம் மேற்கொண்ட சீன பிரதமர் வென் ஜியாபாவோவை, இன்சியான் நகர மேயர் ஆம்-ஸங்- சூ சந்தித்துப் பேசினார். அப்போது, 2014ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியை தங்கள் நாட்டில் நடத்த சீனாவின் ஆதரவைக் கோரினார். இதற்கு பதிலளித்த சீன அதிபர், தாயகம் திரும்பியதும் தென் கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளை கேட்டுக் கொள்ளப் போவதாக உறுதி அளித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் புது டெல்லியில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அளித்த பேட்டியில் ஆசிய விளையாட்டு போட்டி நடத்து முயற்சியில் இந்தியாவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

MSN INDIA

-o❢o-

b r e a k i n g   n e w s...