மேற்கு வங்கத்தில் சிங்கூரில் சிறுகார் தயாரிக்க ஏதுவாக டாடா மோடார்ஸ் நிறுவனத்துடன் குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திட்டதை ஆளும் கூட்டணியின் அங்கமான சி.பி ஐ கட்சி குறை கூறியுள்ளது. "எல்லோருடனும் பொதுதளத்தில் விரிவான விவாதத்திற்குப் பிறகே கையொப்பமிட்டிருக்க வேண்டும்" என சிபிஐ தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா தொழிலாளர் கூட்டமொன்றில் கூறினார்.
மேலும்....
Saturday, March 10, 2007
டாடாவுடன் ஒப்பந்தம் - CPI எதிர்ப்பு
Posted by மணியன் at 8:37 PM 0 comments
பாதல் மீது சொத்து குவிப்பு வழக்கு
வருமானத்துக்கு மீறிய சொத்து குவித்ததாக போனவாரம் பதவி ஏற்ற பஞ்சாப் முதலமைச்சர் பாதல் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கப்பட்டுள்ளது.
வெறும் குற்றப்பத்திரிகைதான் தாக்கப்பட்டுள்ளதென்றும் அதூவே குற்றத்தை நிரூபிப்பதாகாதென்பதால் அவர் பதிவியை ராஜினஅமா செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
Charges framed against Badal
Charges framed against badal, wife
More embarrassments for Badal within a week in office
தொடர்புள்ள செய்தி
Many Punjab MLAs have criminal records: watchdog
Posted by சிறில் அலெக்ஸ் at 7:15 PM 0 comments
பிச்சைக்காரரின் ஒரு லட்ச உயில்
வாழ்நாள் முழுவதும் பிச்சைக்காரராய் வாழ்ந்துவிட்டு 65 வயதில் இறந்துபோன பிச்சைக்காரர் ஒருவர் மசூதி ஒன்றிற்கு 1லட்சம் ரூபாய் உயில் எழுதி வைத்திருந்தார்.
Beggar wills Rs one lakh to mosque
Interestingly, the neighbours, who were unaware of Khan's wealth, had collected money from local people for conducting his funeral.
Posted by சிறில் அலெக்ஸ் at 6:54 PM 1 comments
மேகாலயா முதல்வர் பதவி விலகல்
மேகாலயா முதல்வர் J D ரிம்பாய் தனது எட்டு மாத கால ஆட்சியிலிருந்து இன்று விலகினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அழைப்பை ஏற்று நிதிநிலையறிக்கைக்கான கூட்டத் தொடருக்கு ஒருநாள் முன்பாக ஆளுநர் ஜேகப்பிடம் தன் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார்.
நேற்று இரவு வரை கூட்டணிகட்சிகளின் பக்கபலத்தால் கட்சி மேலிட முடிவை ஏற்க மறுத்து வந்தார்.
The Hindu
Posted by மணியன் at 6:15 PM 0 comments
சதாம் வழக்கு நீதிபதி - ஓட்டம்
ஈராக்கின் சிறுபான்மை குர்திஷ் வகுப்பைச் சேர்ந்தவரும் இராக்கின் சுப்ரீம் குற்ற ஆணையத்தின் தலைவருமான அப்டெல் ரஹ்மான் ஈராக்கிலிருந்து தப்பியோடி பிரிட்டனில் அடைக்கலம் கேட்டிருக்கிறார்.
மேல் விவரங்களுக்கு...
Posted by மணியன் at 4:12 PM 0 comments
ரிலையன்ஸுடன் இணைந்தது IPCL
பங்கு சந்தையில் எதிர்பார்த்ததுபோலவே இன்று கூடிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீட்ஸின் இயக்குனர்குழு தன்னுடன் IPCL இணைவதை 1:5 என்ற வீதத்தில் அனுமதித்துள்ளது.
இதுபற்றி - Daily News & Analysis
Posted by மணியன் at 4:00 PM 0 comments
குஜராத்தில் ஒப்பமிட்ட வெற்று கேள்வித் தாள்கள் விவகாரம்
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் வாங்கிய கதையை அடுத்து குஜராத்தில் மாநில சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப வெற்று படிவங்களில் கையெழுத்து வாங்கிய விவகாரம் வெளிவந்துள்ளது. அரசின் 'சாதனைகளை' வெளிக்கொணருமாறு கேள்விகள் கேட்க மாநில உள்துறை கூடுதல் தனிச் செயலர் திரு பிரஜாபதி இந்த வெற்றுப் படிவங்களை அனுப்பியுள்ளார்.
இது பற்றி மேலும் ..The Hindu : Blank forms for questions scandal in Gujarat
Posted by மணியன் at 3:52 PM 0 comments
மும்பையின் முதல் OBC பெண் மேயர்
சமீபத்தில் நடந்த மாநகரத் தேர்தல்களை அடுத்து இன்று நடந்த மேயர் தேர்தலில் 117 வாக்குகள் பெற்று சிவசேனையின் டாக்டர் சுபா ரௌல் வெற்றி பெற்றுள்ளார். துணை மேயராக கூட்டணிக்கட்சியான பிஜேபியின் வித்யா தாகூர் பதவி வகிப்பார்.
CNN-IBN
Zee News
Posted by மணியன் at 3:33 PM 0 comments
ரயிலில் கர்ப்பிணிகளுக்கு தனி ‘கூபே'
ரயில்வே பட்ஜெட் மீதான முதல் கட்ட விவாதத்தை முடித்து வைத்து மக்களவையில் நேற்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசினார்.
ரயிலில் பயணம் செய்யும் கர்ப்பிணிகளுக்கு சிறப்புச் சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்களுக்கு இருவர் பயணம் செய்யும் தனி “கூபே’’ ஒதுக்கப்படும். உதவிக்கு ரயில்வே ஊழியர்களை அழைத்துக் கொள்ளலாம். அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எல்லா ரயில் நிலையங்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
தினகரன் , The Hindu
Posted by சிவபாலன் at 10:08 AM 1 comments
5 மாநிலங்களில் போலியோ பாதிப்பு
இதுகுறித்து லோக்சபையில் சுகாதாரத்துறை இணையமைச்சர் பனபகா லெட்சுமி கூறியதாவது: போலியா சொட்டு மருந்து முகாம்கள் மூலம் போலியோ நோய் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை உ.பி.யில் 3 பேர், பீகாரில் 5 பேர், ஹரியானா, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் தலா ஒருவர் வீதம் 5 மாநிலங்களில் மொத்தம் 11 பேர் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
Yahoo - Tamil
Posted by சிவபாலன் at 9:54 AM 0 comments
காஷ்மீர் கவிஞருக்கு ஞானபீட விருது
பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல காஷ்மீரி கவிஞர் ரெஹ்மான் ராஹி (82), 2004-ம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
DNA - India - Kashmiri poet Rehman Rahi gets Jnanpith award - Daily News & Analysis
Posted by Boston Bala at 4:06 AM 0 comments
சென்னை செண்ட்ரலிலிருந்து Prepaid ஆட்டோ கட்டணங்கள்
கீழுள்ள PDF கோப்பில் சென்னை செண்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் செல்ல ஆட்டோ முன் கட்டண விவரங்கள் உள்ளன.
கோப்பு
Posted by சிறில் அலெக்ஸ் at 3:22 AM 6 comments
அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டதா? - Just in Time Watch
நீங்கள் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டி நினைத்து காலதாமதம் ஆகிவிட்டதா? கவலையை விடுங்கள்.. இந்த "Just in Time Watch" வாங்கி அணிந்துகொள்ளுங்கள். அது உங்களை குறித்த நேரத்திற்குள் செல்ல வழிகாட்டும்.
இந்த Just in Time Watchல் நாட்குறிப்பு, வழிகாட்டும் கையேடு மற்றும் இனையத்துடன் இனைக்கப்பட்ட GPS வழிகாட்டும் கருவியும் இருக்கும்.
A new watch (still in prototype) that uses a calendar, a route planner, and navigation applications along with GPS and wireless Internet could help get you where you're going on time.
For the perpetually late, the "Just in Time Watch" could improve punctuality and, its inventors hope, bring wristwatches back into fashion.
Discovery Channel News
Posted by சிவபாலன் at 1:22 AM 0 comments
இந்தியா மாபெரும் வெற்றி
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று ஜமைக்காவில் பயிற்சிப் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட் செய்த மே.தீ. அணி 85 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை இழந்தது.
தொடர்ந்து ஆடிய இந்தியா அபாரமான ஆட்டத்தினால் வெகு எளிதாக இலக்கை எட்டியது.
Final Score:
West Indies 85 (25.5 ov)
India 86/1 (18.3 ov)
For Detail Score.. Click Here
Posted by சிவபாலன் at 12:28 AM 2 comments
விவசாயிகள் தற்கொலை : பவார் அறிவுரை
நாட்டில் விவசாயிகள் தற்கொலையை முழுவதும் தடுப்பதற்கு, அவர்களுக்கு மனோபலத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகாவைக் காட்டிலும் வளம் குறைந்த மாநிலங்களான ஒரிஸ்ஸா, பீகார் மற்றும் ஜார்க்கண்டில் எந்த விவசாயிகளும் தற்கொலை செய்துகொள்வதில்லை என்பதை சரத்பவார் சுட்டிக் காட்டினார்.
Yahoo - Tamil
Posted by சிவபாலன் at 12:17 AM 0 comments
b r e a k i n g n e w s...