.

Tuesday, March 27, 2007

சற்றுமுன்: வருமானவரி - ஏமாற்றினால் குற்றவியல் குற்றம்

உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பொன்றில் வருமானவரி கட்டாமல் ஏமாற்றுபவர்கள் மீது குற்றவியல்(Criminal) வழக்கு தொடரலாம் எனக் கூறியுளது.

'வருமானவரி சட்டம் அபராதங்களை விரித்தபோதும், குற்றவியல் குற்றமாக கருதுவதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை' என தீர்ப்பு சொல்கிறது.

IT defaulters liable for criminal prosecution: SC
"It is true that the Act (Income Tax) provides for imposition of penalty for non-payment of tax. That, however, does not take away the power to prosecute accused persons if an offence has been committed by them," a Bench of Justices C K Thakker and P K Balasubramanyan said, while dismissing an appeal filed by Madhumilan Syntex Limited, a company engaged in the production of yarn.

சற்றுமுன்:IIM கட்டண உயர்வு

பெங்களூர் மற்றும் இந்தூர் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணங்களை உயர்த்தியுள்ளன. IIM-B ரூ. 75,000மும் இந்தூர் ரூ.40,000மும் உயர்த்தியதில் பெங்களூர் ஐ.ஐ.எம்மின் புதிய கட்டணம் ரூ2.5 லட்சமாகவும் இந்தூரின் கட்டணம் ரூ. 1.90 லட்சமுமாக மாறுகிறது.

மற்ற நிறுவனங்களும் விரைவில் கட்டண உயர்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

IIMs in Bangalore, Indore hike fees; others to follow

சற்றுமுன்:ஐ.சி.சி Vs. யூ-ட்யூப்

கிரிக்கெட் குறும்படங்களை யூ-ட்யூபிலிருந்து எடுத்துவிடும்படி ஐ.சி.சி கூகுள் நிறுவனத்தை கேட்டுள்ளது. யூ-ட்யூபில் கிரிக்கெட் வீடியோ காட்சிகளை காண்பிப்பது ஒளிபரப்பு உரிமை மீறல் என ஐ.சி.சி கூறியுள்ளது.

இதை அடுத்து உலகக் கோப்பை குறும்படங்களை யூ-ட்யூப் அகர்ர ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.


YouTube removes WC cricket videos CIOL
ICC targets YouTube World Cup clips
ICC tells YouTube to remove World Cup video Expressindia.com

சற்றுமுன்: வால்மார்ட் , ரிலையன்ஸ்: சிறுத்தைகள் வரவேற்பு

ரிலையன்ஸ், வால்மார்ட் நிறுவனங் கள் பெருநகரப் பகுதிகளில் தான் கடைகளை அமைக்க முடியும் என்றும், இந்த நிறுவனங்கள் கிராமப் புறங்களுக்கு செல்ல வாய்ப்பு இல்லை.

எனவே, இந்த நிறுவனங்களால் தமிழகத்தில் உள்ள சிறுவியாபாரி களுக்கோ, வணிகர்களுக்கோ பாதிப்பு ஏற்படாது; நகர்ப் பகுதிகளிலும் கூட இவற்றால் மளிகைக்கடைக்காரர்கள், காய்கறி வியாபாரிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.

இந்த நிறுவனங்களின் கடைகளில் சந்தை விலையை விட பொருட்கள் குறைவான விலையில் கிடைப் பதால் பொதுமக்கள் இந்த கடை களை வரவேற்கின்றனர். இதனை உணர்ந்து ரிலையன்ஸ், வால்மார்ட் கடைகளுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்து கொண்டு பேசியபோது விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் ரவிக்குமார்இந்த கருத்தை தெரிவித்தார்.

மாலைச் சுடர்

சூப்பர் 8 போட்டி அணிகள், தேதி

உலகக் கோப்பை கிரிக்கெட் இரண்டாவது சுற்றான சூப்பர்-8 பிரிவில் அணிகள் மோதும் தேதி, இடம் குறித்த விவரங்கள்:

மார்ச் 27: (ஆன்டிகுவா) மே.இ.தீவுகள் -ஆஸி.

மார்ச் 28: (கயானா) தென் ஆப்பிரிக்கா -இலங்கை.

மார்ச் 29: (ஆன்டிகுவா) மே.இ.தீவுகள்-நியூஸி.

மார்ச் 30: (கயானா) அயர்லாந்து-இங்கிலாந்து.

மார்ச் 31: (ஆன்டிகுவா) ஆஸி.-வங்கதேசம்.

ஏப்ரல் 01: (கயானா) மே.இ.தீவுகள்-இலங்கை.

ஏப். 02: (ஆன்டிகுவா) வங்கதேசம்-நியூஸி.

ஏப். 03: (கயானா) அயர்லாந்து-தென் ஆப்.

ஏப். 04: (ஆன்டிகுவா) இங்கிலாந்து-இலங்கை.

ஏப். 5 மற்றும் 6: ஓய்வுதினம்.

ஏப். 07: (கயானா) வங்கதேசம்- தென் ஆப்.

ஏப். 08: (ஆன்டிகுவா) ஆஸி.-இங்கிலாந்து.

ஏப். 09: (கயானா) அயர்லாந்து-நியூஸிலாந்து.

ஏப். 10: (கிரெனாடா) மே.இ.தீவு-தென் ஆப்.

ஏப். 11: (பார்படோஸ்) இங்கி.-வங்கதேசம்.

ஏப். 12: (கிரெனாடா) இலங்கை-நியூஸிலாந்து.

ஏப். 13: (பார்படோஸ்) ஆஸி.-அயர்லாந்து.

ஏப். 14: (கிரெனடா) தென் ஆப்.-நியூஸி.

ஏப். 15: (பார்படோஸ்) வ.தேசம்-அயர்லாந்து.

ஏப். 16: (கிரெனடா) ஆஸி.-இலங்கை.

ஏப். 17: (பார்படோஸ்) தென் ஆப்.-இங்கி.

ஏப். 18: (கிரெனடா) அயர்லாந்து-இலங்கை.

ஏப். 19: (பார்படோஸ்) மே.இ.தீவு-வங்கதேசம்.

ஏப். 20: (கிரெனடா) ஆஸி.-நியூஸி.

ஏப். 21: (பார்படோஸ்) மே.இ.தீவு-இங்கிலாந்து.

ஏப். 24: (ஜமைக்கா) அரை இறுதி.

ஏப். 25: (செயின்ட் லூசியா) அரை இறுதி.

ஏப். 28: (பார்படோஸ்) இறுதி.

சற்றுமுன்: அனா நிக்கோலி ஸ்மித் சாவில் துப்புதுலங்கியது

அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி மாடல் அழகிஅனா நிக்கோலி ஸ்மித். இந்த அழகி நிக்கோலி பல கோடிகளுக்கு அதிபதி.

கடந்த சில வாரங்களுக்கு முன் அனாநிக்கோலி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டாரா? சொத்து தகராறில் இந்த கொலை நடந்ததாப அவர் விஷம் தின்று தற்கொலை செய்தாரா என்று தீவிர விசாரணை நடந்தது. பிரேத பரிசோதனை முடிந்ததும்கூட பல நாட்களுக்குப்பிறகு தான் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அனாநிக்கோலி சாவில் நீடித்த மர்மம் இப்போது நீங்கி விட்டது. நிக்கோலி அளவுக்கு அதிகமாக மருந்து மற்றும் போதை மாத்திரை சாப்பிடும் பழக்கம் உள்ளவர். ஓட்டலில் தங்கி இருந்த போது அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டார். ஊசியும் போட்டுக்கொண்டார்.
- மாலை மலர்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு தடை

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் இடங்களில் தாவரவியல் பூங்காவும் ஒன்று. 22 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா பார்ப்பதற்கு ரம்யமாக காட்சி அளிக்கும். 2 லட்சம் மலர்கள் நடவு செய்யப்பட்டு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

கண்ணுக்கு குளுமையாக காட்சி அளிக்கும் தாவரவியல் பூங்காவில் அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடைபெறும்.

அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். படப்பிடிப்புக்கு பாதுகாப்பு தர முடியாது என்பதால் ஏப்ரல் 1-ந்தேதி முதல் தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜுன் 1-ந்தேதி வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும்.

இதேபோல் ரோஜா பூங்காவிலும் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தோட்டக் கலைத்துறை அதி காரிகள் அறிவித்துள்ளனர்.

- மாலை மலர்

தமிழகத்தில் 69 சத இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோரை கண்டறியாதது குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் முடிவு

புது தில்லி, மார்ச் 27: தமிழகத்தில் 69 சத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் நிலையில், பிற்பபடுத்தப்பட்டோரில் வசதி படைத்தோரைக் கண்டறியாதது குறித்த பிரச்சினை குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கேரளத்தில், பிற்பபடுத்தப்பட்டோரில் வசதி படைத்தோர் (கிரீமி லேயர்) குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் இன்னொரு பெஞ்ச் அளித்த தீர்ப்பை அடுத்து, இப் பிரச்சினை குறித்து ஆய்வு நடத்த வேண்டியது அவசியம் என்று நீதிபதிகள் ஏ.கே. மாத்தூர் மற்றும் தல்வீர் பண்டாரி ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் திங்கள்கிழமை அறிவித்தது. மாநிலத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.ஆர். அந்தியார்ஜுனா, 69 சத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ள நிலையில், அதையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோரைக் கண்டறிய வேண்டும் என, "வாய்ஸ்' என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் மனுத் தாக்கல் செய்த தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன், மண்டல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, பிற்பட்டோரில் வசதி படைத்தோரைக் கண்டறியாத ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழகம் இவ்வளவு ஆண்டுகளாக உதாசீனப்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், 69 சத இட ஒதுக்கீடு சட்டத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும், அதை தனியாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

""கேரள பிரச்சினை தொடர்பான சமீபத்திய தீர்ப்பை அடுத்து, இப் பிரச்சினையை கோடை விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் விசாரிக்கும். 69 சத இட ஒதுக்கீடு தொடர்பான மனுவையும் விசாரிப்போம். தேவைப்பட்டால், தற்போதைய மனுவை 69 சத இட இட ஒதுக்கீட்டு மனுவுடன் சேர்த்து விசாரிப்போம்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

"வாய்ஸ்' அமைப்பு தனது மனுவில், தமிழகம் பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோரை இனம் காணாமல் இருப்பதன் மூலம், உண்மையாக இட ஒதுக்கீடு தேவைப்படும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் மறுக்கப்படுவதாகக் கூறியுள்ளது. கல்வி மற்றும் மாநில அரசுப் பணி ஆகிய இரண்டிலுமே அந்தப் பயன்கள் மறுக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மண்டல் வழக்கில் வசதி படைத்தோர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இட ஒதுக்கீட்டிலிருந்து வசதி படைத்தோரை விலக்கி வைப்பதற்காக அவர்களைக் கண்டறிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனைக்கு தகுதியற்றது என்று அரசு கருத்துத் தெரிவித்துள்ளது.

வசதி படைத்தோரைக் கண்டறியாமல் இருப்பதன் மூலம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோரில் உண்மையான இட ஒதுக்கீடு தேவைப்படுவோர் பாதிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் கூறியிருப்பது வெறும் கற்பனை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Dinamani

சற்றுமுன்: 10, 12&ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாசில் பால், பிஸ்கட்

மாநகராட்சி பள்ளிகளில் 10, 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் நடத்தப்படுகிறது. அந்த நேரத்தில் மாணவர்கள் சோர்வடைந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு பால், பன், பிஸ்கட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
இவ்வாறு சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

- மாலை முரசு

சற்றுமுன்:ஐஸ்வர்யா - அபிஷேக் கல்யாணதேதி அறிவிப்பு


வெகுநாட்களாக ஊடகங்களில் பலவித ஆரூடங்களை எழுப்பி வந்த பாலிவுட் நட்சத்திரங்கள் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் திருமணம் எளிய முறையில் அமிதாப் பச்சனின் மும்பை ஜுஹூ இல்லத்தில் வரும் ஏப்ரல் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு ஜனவரி 14 அன்று நிச்சயதார்த்தம் நடந்தது.


DNA - After Hrs - செய்தி

சற்றுமுன்: மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள்் தாக்குதல்

இன்று மட்டக்களப்பு செங்காலடி இராணுவமுகாமை விடுதலைபுலிகளின் தற்கொலைப் படையொன்று நடத்திய தாக்குதலில் நான்கு பேர் மரணமடைந்தனர், பதினாறு பேர் காயமுற்றனர். டிரைலருடன் கூடிய ட்ராக்டர் வண்டியில் வெடிப்பொருள்களை கொணர்ந்து முகாமின் வாயிலருகே வெடித்ததில் சில சிவிலியன்களும் பாதிக்கப் பட்டிருக்கலாம் என்றபோதும் மேல் விவரங்கள் தெரியவில்லை.


LTTE strikes again - World-Sections-TIMES NOW.tv

சற்றுமுன்: இஸ்ரேல் பாலஸ்தீன அரசுடன் பேச்சுக்களுக்கு சம்மதம்

இஸ்ரேலிய பிரதமர் ஒல்மெர்ட் அமெரிக்காவின் வற்புறுத்தலின் பேரில் பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட சம்மத்திதுள்ளார். அமெரிக்க வெளியுறவு செயலர் காண்ட்லெஸ்ஸா ரைஸின் தீவிர தூதுமுயற்சிக்குப் பிறகு தீவிரவாத அமைப்பான ஹமாஸின் கீழ் இயங்கும் பாலஸ்தீன அரசுடன் பேச மாட்டேன் என அடம் பிடித்த ஒல்மெர்ட் குறைந்தபட்ச பேச்சுக்களுக்கு உடன்பட்டார். இது நம்பிக்கையை வளர்க்கும் என்றும் பின்னால் முழுஅளவு பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கும் என்றும் அறிமுகப் படுத்திக் கொள்ள விரும்பாத அதிகாரிகள் கூறினர்.
மேலும் விவரங்களுக்கு.. Los Angeles Times

இந்தியரை கவர குவைத்தில் சட்டம் தளர்வு.

இந்திய தொழிலாளர்களை கவர்ந்து இழுக்கும் வண்ணம் குவைத் அரசு தனது தொழிலாளர் சட்டத்தை தளர்த்தி உள்ளது எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள விரிவாக்கமே இதற்க்கு முழுக்காரணம்.

நன்றி: தமிழ் சுடர்

சற்றுமுன்:-பெண்ணுறை வழங்கும் திட்டம்

தமிழ்நாட்டில் பெண்பாலியல் தொழிலாளர்களுக்கு பெண்ணுறையை விநியோகிக்கும் மிகப்பெரிய திட்டம் ஒன்று துவங்கப் பட்டுள்ளது.

தமிழக அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையமும், வேறு சில தொண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கின்றன.
இதன்படி, மாநிலத்தில் இருக்கும் சுமார் மூவாயிரம் பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு, அடுத்த நான்கு மாத காலத்தில் அறுபதாயிரம் பெண்ணுறைகள், மிகக்குறைந்த விலையில் விநியோகிக்கப்பட இருக்கின்றன.

பெண் பாலியல் தொழிலாளர்கள் மூலம் எச்.ஐ.வி தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, அவர்களிடம் வரும் ஆண் வாடிக்கையாளர்கள் ஆணுறையை அணிய மறுக்கும் சூழல்களில், இந்த பெண்ணுறை அவர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்கிற கருத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளாளும், தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்களாலும் முன்வைக்கப்படுகிறது.

மேலும், பெண்ணுறை என்பது, பாலியல் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், சராசரி பெண்களுக்கும் கூட, பால்வினை நோய்களிலிருந்தும், தேவையற்ற கருத்தரிப்பிலிருந்தும் பாதுகாப்பளிக்கும் என்கிற கருத்தும் இவர்களால் முன்வைக்கப்படுகிறது.

பெண்களின் பாலியல் சுதந்திரம் மற்றும் உடல் ஆரோக்கியத்திலும் இந்த பெண்ணுறை ஆக்கப்பூர்வமான பங்காற்றக்கூடிய சாதனமாக உருவெடுக்கும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இதன் பல்வேறு பரிமாணங்களை அலசும் பெட்டகத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

ஒலிவடிவில் :- www.bbc.co.uk/tamil/wcondom.ram

நன்றி: பிபிசி-தமிழ்

சற்றுமுன்: ஏப்ரல் 6ல் பிசிசிஐ செயற்குழு கூட்டம்

இந்திய கிரிக்கெட் வீரர்களின் தலையெழுத்தை நிர்ணயம் செய்ய அடுத்த மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் பிசிசிஐயின் செயற்குழு கூட்டம் கூடுகிறது.

இந்த கூட்டத்தில் இந்திய பயிற்சியாளர் கிரேக் சாப்பல், அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் ஆகியோர் பதவி குறித்தும், மற்ற வீரர்களின் நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும்.


"Yahoo Tamil"

-o❢o-

b r e a k i n g   n e w s...