.

Thursday, May 24, 2007

அனில் அம்பானிக்கு உ.பி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய பிரச்சினை

உத்தர பிரதேச நிர்வாகம் அனில் அம்பானி குழுமத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலம் குறித்த சட்டமீறல்களை சுட்டிக்காட்டி, நடுவண் அரசிடம் தொடர்பு கொண்டுள்ளது. முதல்வர் மாயாவதி பதவியேற்றவுடன் நிகழ்ந்த அதிகாரி மாற்றங்களுக்குப் பிறகு முலாயம் சிங் யாதவின் நண்பர்களின் நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்துள்ளார்.

நொய்தாவில் ரிலையன்சுக்கு ஒதுக்கப்பட்ட 1200 ஏக்கர் நிலத்தின் நடுவே சாலை அமைந்திருக்கிறது. இது சுங்கச்சோதனைக்கு இடையூறாக இருக்கும்.

சிங்குர் டாடா போராட்டத்தைப் போலவே உத்தர பிரதேச விவசாயிகளும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தாத்ரி மின் நிலையத் திட்டத்தை எதிர்த்து ஜூலை 2006-இல் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

NDTV.com: Anil Ambani's SEZ plan in trouble

லெபனானிலுள்ள் பாலத்தீன அகதி முகாமில் தொடர்ந்து மோதல்

லெபனானிய இராணுவத்துக்கும் அங்குள்ள ஒரு பாலத்தீன அகதி முகாமில் நிலைகொண்டுள்ள இஸ்லாமிய ஆயுதபாணிகளுக்கும் இடையிலான மோதல் இழுபறி நிலை தொடருகின்ற அதேவேளையில், லெபனானியப் பிரதமர், பௌட் சினியோரா அவர்கள், தனது அரசு ஆயுத பயங்கரவாதத்தை ஒழிக்கும் என்று கூறியுள்ளார்.

பத்தா அல் இஸ்லாம் குழுவைச் சேர்ந்த, தீவிரவாதிகள், இஸ்லாம் மற்றும் பாலத்தின விடயம் ஆகியவற்றின் முகமூடிக்குள் பதுங்கியிருக்கின்ற ஒரு குற்றக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு லெபனானின் நஃர் அல் பாரட் முகாமில் உள்ள தீவிரவாதிகளை, லெபனான் துருப்புகள் சுற்றிவளைத்துள்ளன.

நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிகாரபூர்வமற்ற மோதல் நிறுத்தத்தின் போது, அங்கிருந்து வெளியேற முடியாது போன ஆயிரக்கணக்கான அகதிகளின் பாதுகாப்புக் குறித்து தாம் அச்சம் அடைந்துள்ளதாக மனித நேய அமைப்புகள் கூறுகின்றன.

- BBC Tamil

BBC NEWS | Middle East | Analysis: Lebanon's new flashpoint: "This week's heavy fighting between the Lebanese army and a shadowy radical Islamist group is adding a new flashpoint to a region in crisis."

தயாநிதி மாறன் திடீர் டெல்லி பயணம்

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ள தயாநிதி மாறன் நேற்று திடீரென டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

1. Maran trying to make peace with MK : Dayanidhi Maran, Karunanidhi, DMK, Dinakaran, Centre : IBNLive.com : CNN-IBN

2. Will Maran return to DMK?- News-Sections-TIMES NOW.tv

பண்ணை கூரை இடிந்து 10,000 கோழிகள் சாவு.

திருச்சி அருகே கோழிப்பண்ணையின் கூரை இடிந்து விழுந்ததில் 10 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக இறந்தன. திருச்சியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு, துறையூர் அருகே உள்ள கலிமுடையபட்டியில் உள்ள முனியப்பன் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் பண்ணையில் இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் பரிதாபமாக இறந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சம் என கூறப்படுகிறது.

இழுத்து மூடு !

மூன்று பக்கம் கடலாலும் நான்கு பக்கம் கடனாலும் சூழப்பட்டு இந்தியாவை தடுமாற வைப்பதிலும் தள்ளாட வைப்பதிலும் மது முக்கியக் காரணமாக உள்ளது காந்தியடிகள் நாடு முழுவதிலும் மதுவிலக்கு செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை பெருமளவில் நடத்தினார்.காந்தியடிகள் மது எதிர்ப்பு போராட்டத்தைதமிழகத்தில் பெரியார் வலுப்படுத்தினார்.கள்ளை ஒளிப்பதற்க்காக் ஆயிரக்கணகான தென்னை மரங்களை பெரியார் வெட்டி சாய்த்தார்.கள்ளுக்கடை போராட்டத்தை கைவிடுவார்களா? என்று காந்தியிடம் செய்தியாளர் கேட்டபோது ஈரோட்டில் உள்ள இரு பெண்களிடம் கேட்டுத்தான்(பெரியாரின் மனைவி மற்றும் சகோதரி)அதை முடிவெடுக்க முடியும் என்று காந்தியடிகள் கூறுமளவுக்கு பெரியாரின் குடும்பம் அந்த போராட்டத்தில் பங்கேற்றது காந்தி வழி வந்தவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் பெரியார் வழி வந்தவர்கள் தமிழகத்தையும் மாறி மாறி ஆண்டு வருகின்றனர் ஆனாலும் மதுவுக்கு தடை ஒரு போதும் இல்லை.

காந்தி சிலைபக்கத்தில்
கள்ளுக்கடை,
மக்கள் போராடினார்கள்
அரசாங்கம் அகற்றியது
கள்ளுக்கடியை அல்ல
காந்தி சிலையை
என்ற நிலைதான் நாட்டில் நிலவுகிறது
"அவன் குடித்தான்
குடும்பம் தள்ளாடுகிறது"

என்ற நிலை வீட்டில் நிலவுகிறது.கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தமிழகமெங்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு அங்கே படித்த இளைஞர்களுக்கு வேலை(?) வழங்கப்பட்டது.இதை விட கேவலமாக கல்வியை அவமதிக்க முடியாது புதிதாக பொறுப்பேற்ற தி மு க அரசு மதுக்கடைகளை மூடியிறுக்க வேண்டும் அதைச்செய்யவில்லை மதுவால் வருமானம் வருவதாக கூறுவது அவமானம் குடிமக்களை,குடிகாரர்களாகுவதால் உழைப்பு ஊனப்படுகிறது ஆள்வோர் இதை அறியாதவர்கள் அல்ல ஆனாலும் மதுகடைக்கு பூட்டு போடமுடியவில்லை காரணம் மதுவுக்கு அரசியல் கேடயமாகிவிட்டது மத்திய மாநில அரசுகள் மதுவை ஒழிப்பதில் உறுதி பூண வேண்டும் மத வெறி மது வெறியும் நாட்டின் முதன்மை எதிரிகள் என்பதை உணர்ந்து மதுகடைகலை அர்சு இழுத்துமூட வேண்டும். திருப்பூரில் நேற்று நடந்த சோக சம்பவத்தை நினைவில் கொள்ள வேண்டும் செய்வார்களா ?

பொறியியல் கவுன்சலிங் கட்டணம் ரத்து

பொறியியற் கல்லூரிகளில் சேரவுள்ள மாணவர்களுக்கான கவுன்சலிங் கட்டணம் முழுவதுமாக நீக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இத்தொகை ரூ.200/- ஆகும்.

தினமலர் செய்தி

ச: இட ஆக்கிரமிப்பு விவகாரம்: கொச்சியில் கடையடைப்பு

கேரளாவில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து கட்டிய விடுமுறை விடுதிகளை மூணாறில் தகர்க்க ஆரம்பித்த கேரள முதல்வரின் முயற்சி மற்ற மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. கொச்சி நகரின் முக்கிய சாலையான மகாத்மா காந்தி சாலையில் ஒரு சென் ட் நிலம் 25-30 இலட்சம் பெறுமானமுள்ளது. மாவட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில் பலகோடி பெறுமான ஆக்கிரமிப்புக்கள் கண்டறியப் பட்டு அவை அழிக்கப் பட்டன. அதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளும் கடை உரிமையாளர்களும் தங்களுக்கு தக்க முன்னறிவிப்பு கொடுக்கபடவில்லை என்று எழுப்பிய எதிர்ப்பை யடுத்து அவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டுள்ளன. இருப்பினும தங்கள் ஒற்றுமையை காட்டும் விதமாக கேரள சாம்பர் ஆப் காமர்ஸ் தரப்பில் இந்த கடையடைப்பு நடத்தப் படுகிறது. உணவகங்களும் அவர்களுக்கு ஆதரவாக இன்று மூடப்பட்டுள்ளன.

The Hindu News Update Service

செளதி: பணம், நகை - கஸ்டம்ஸுக்கு சொல்லுங்க!

செளதி அரேபிய நிதி அமைச்சகத்தின் புதிய அறிவிப்பின்படி, ஜூன் 2 , 2007 முதல் அந்நாட்டினுள் வருகிற; வெளியேறுகிற பயணிகள் தம்மிடமுள்ள பணம்,நகைகள், விலை உயர்ந்த கற்கள் ஆகியவற்றின் மதிப்பு செளதி ரியால் 60,000/ஐ த் தாண்டும் நிலையில் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் முறைப்படி தெரிவிக்க வேண்டும். தவறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அரப்நியூஸ் செய்தி தெரிவிக்கிறது

ச: செல்பேசி கட்டணப் போட்டி: வளைகுடா நாடுகளுக்கு கட்டணம் குறைப்பு

செல்பேசி நிறுவனக்களிடையே நிகழ்ந்துவரும் கட்டணப் போட்டியின் தொடர்ச்சியாக இன்று அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வளைகுடாநாடுகளுக்கு வெளிநாட்டு பயனர் கூப்பிடும் கட்டணத்தொகையை நிமிடத்திற்கு ரூ.6.99ஆக அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்கா, கனடாவிற்கு நிமிடத்திற்கு ரூ1.99ஆக அறிவித்தது. இவை ரூ1900 ப்ரீபெய்ட் கார்டுகளுக்கு மட்டுமே.

பாரதி ஏர்டெல்லும் வெளிநாட்டு அழைப்புகளுக்கான கட்டணத்தை 39% குறைத்திருக்கிறது.

The Hindu News Update Service

கருணாநிதிக்கு உமறுப்புலவர் விருது

முதலமைச்சர் கருணாநிதிக்கு, வாழ்நாள் இலக்கியச்சாதனைக்காக, ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியுடன் கூடிய உமறுப்புலவர் விருது வழங்கப்படும் என்று இஸ்லாமிய இலக்கிய கழகம் அறிவித்துள்ளது.

இஸ்லாமிய இலக்கிய கழக இயக்குநர் கவிஞர் அப்துல் ரகுமான், தலைவர் அமீர் அலி, பொதுச் செயலாளர் இதாயத்துல்லா ஆகியோர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினர்.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் 7வது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது.

தட்ஸ் தமிழ்

ச: இந்தோனேஷியாவில் சுனாமி அபாய அறிவிப்பு

கிழக்கு இந்தோனேஷியா கடலடியில் இன்று நிகழ்ந்த 6.5 அளவுள்ள நிலநடுக்கத்தை யடுத்து அந்நாட்டு வானிலைத் துறை சுனாமி அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

The Hindu News Update Service

ச:விடுதலைப் புலிகள் கடற்படையை தாக்கி 35 வீரர்கள் மரணம்

சிரிலங்காவின் வடக்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படை முகாமொன்றை இன்று காலையில் தாக்கியதில் 35 கடற்படை வீரர்கள் இறந்தனர்.இதுபற்றிய தி ஹிண்டு செய்தி

ச: ஸ்ரீலங்கா: இராணுவ பேருந்து குண்டுவெடிப்பில் ஆறுபேர் காயம்

கொழும்பு நகரின் வணிகப்பகுதியில் இன்று ஒரு சிங்கள இராணுவ பேருந்து அண்மையில் கண்ணிவெடியொன்று வெடித்து நான்கு சிங்கள இராணுவத்தினரும் பொதுமக்களிருவரும் காயமடைந்தனர். கொழும்புவின் ரிக்ளமேஷன் சாலையில் காலை 8 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேல் விவரங்களுக்கு ..Sri Lanka: Blast hits military bus - CNN.com

ஃபிடல் காஸ்ட்ரோ உடல் நிலை!

கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ தான் நலமாக, நன்கு திடஉணவருந்துவதாகவும், வயது ஒன்றே பிரசினை என்றும் தெரிவித்துள்ளார்.

1959ல் ஒரு புரட்சியின் மூலம் அதிபரான ஃபிடல், கடந்த ஜூலை 31ல் தனது தம்பி ரவுலுக்கு ஆட்சிப்பொறுப்பை தோள் மாற்றியிருந்தார். தான் எப்போது மீளவும் பொறுப்பேற்பது என்பதையோ, பொதுமக்கள் மத்தியில் காட்சியளிப்பது பற்றியோ அவர் எதுவும் சொல்லவில்லை.

80 வயதாகும் காஸ்ட்ரோ, 20 வருடங்களுக்கு முன்பே சுருட்டு புகைப்பதை நிறுத்திவிட்டிருந்தாலும் இளவயதில் உடல்நலத்தில் தவறிழைத்ததே இன்றைய நிலைக்கு காரணம் என்றார்.

ராய்ட்டர் செய்தி

துருக்கி குண்டுவெடிப்பில் ஆறு பேர் இறப்பு

துருக்கியின் தலைநகர் அன்காராவில் உள்ள வணிக வளாக அங்காடி தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளானது. குண்டுவெடிப்பினால் ஆறு பேர் மரணமடைந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.

குர்து பிரிவினைவாதிகளின் தீவிரவாதக் குழுவான பி.கே.கே (குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சி) இதன் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கிறார்கள்.

1. Deccan Herald - Turkey blast: Injury toll rises to 102
2. BBC NEWS | Europe | Suicide attack behind Turkey bomb

மலேசியன் ஓபன் கோல்ஃப்: இந்தியாவுக்கு பட்டம்

கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய அமெச்சூர் ஓபன் கோல்ஃப் போட்டியில் இந்தியக் குழு பட்டத்தை தட்டிச் சென்றது. இந்திய வீரர்கள் அனீர்பன் லஹிரி, ஜஸ்ஜீத் சிங் ஆகியோர் சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்தமாக 294 புள்ளிகள் சேர்த்தனர்.

இப்போட்டியில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், பிலிப்பின்ஸ் மூன்றாவது இடத்தையும் பெற்றது.

தினமணி

குலதீபமங்கலம் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் உள்ளே சென்று வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும்

விழுப்புரம் அருகே குலதீபமங்கலத்தில் உள்ள கோயிலுக்குள் சென்று தாழ்த்தப்பட்டோர் வழிபட அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் இயக்க மாநில இணைப் பொதுச் செயலர் சிந்தனைச் செல்வன் தெரிவித்தார்.

திருக்கோவிலூர் அருகே குலதீபமங்கலத்தில் நடைபெற்ற திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு தொடர்பாக 500 க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததோடு, இந்த கோயிலுக்கு சீல் வைத்துள்ளனர்.

அரசு அதிகாரிகளால், இக்கோயிலுக்கு பூட்டுப் போடப்பட்டுள்ளது. எம்எல்ஏ முன்னிலையில் இந்த கிராம மக்கள் பூட்டை உடைத்திருப்பது அரசியல் சாசனத்தை மீறிய செயல். இது தொடர்பாக முகையூர் பா.ம.க. எம்எல்ஏ கலிவரதன் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

தினமணி

'அல்லா' பெயரில் பதவி பிரமாணம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும்போது அல்லா பெயரில் பதவி பிரமாணம் ஏற்றது அரசியலமைப்பு சட்டப்படி செல்லுபடி ஆகுமா என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கேரள மாநில பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர் மது பருமலா, இதுதொடர்பாக முன்னதாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு: அதில், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவி பிரமாணம் செய்யும்போது 'கடவுள் அறிய' என்றோ அல்லது 'உளமார' என்றோ கூறி தான் உறுதி மொழி ஏற்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எந்தவொரு தனிப்பட்ட கடவுளின் பெயரையும் குறிப்பிட்டு உறுதி மொழி ஏற்க சட்டத்தில் கூறப்படவில்லை. இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இந்திய தேசிய லீக் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள், கடந்த 2004 மே 24-ல் பதவியேற்கும் போது அல்லாவின் பெயரில் உறுதி மொழி ஏற்றுள்ளனர்.

ஆதலால், அவர்களது பதவியேற்பை ரத்து செய்ய வேண்டும் என கோரி இருந்தார். இவ்வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அல்லா பெயரில் பதவி பிரமாணம் எடுத்ததில் தவறில்லை என தீர்ப்பளித்திருந்தது.

தினமணி

தமிழகத்தில் சுவர் இடிந்து விழுந்து 27 பேருக்கு மேல் பலி

தமிழகத்தின் கோவை மாவட்டத்திலுள்ள திருப்பூரில் இன்று-புதன்கிழமை இரவு பின்னலாடை தொழிற்சாலை ஒன்றின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில், அதையொட்டியிருந்த ஒரு அரசு மதுபானக் கடையின் வளாகத்திலிருந்த பார் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த 27க்கும் அதிகமானவர்கள் சிக்கி பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன்.

அந்தப் பகுதியில் பெய்த கடும் மழையின் காரணமாக, அந்தப் பின்னலாடை தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

BBC Tamil

NDTV.com: Tamil Nadu: 27 killed as wall collapses

-o❢o-

b r e a k i n g   n e w s...