'சிவாஜி' திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமைக்கு ஜீ.வி. பிலிம்ஸ் 52 கோடி கொடுக்கிறது. இதில் ஆறரை கோடியை அபிராமி திரையரங்க குழுமம் பங்களித்துள்ளது.
சிவாஜி படத்தின் டிவி உரிமைக்கு கலைஞர் டிவி ரூ. 6 கோடி கொடுத்திருக்கிறது.
கிட்டத்தட்ட 1000 பிரிண்டுகள் வரை இப்படத்துக்குப் போடப்பட்டிருக்கிறது. ஒரு பிராந்திய மொழிப் படத்துக்கு இதுவரை இந்த அளவுக்கு பிரிண்டுகள் போடப்பட்டதில்லை என்பதால் இது ஒரு சாதனை அளவாக கூறப்படுகிறது.
படத்தை மினிமம் கியாரண்டி முறையில் வாங்குமாறு ஏவி.எம். நிறுவனம் கூறியபோது அதை ஏற்க மறுத்த தியேட்டர் உரிமையாளர்களில் ஒரு பகுதியினர், பர்சன்டேஜ் அடிப்படையில்தான் படத்தை வாங்க முடியும் என்று முரண்டு பிடித்தனர். (சற்றுமுன்...: 'சிவாஜி' ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு)
இந்த நிலையில்தான் கலைஞர் டிவிக்கு சிவாஜி படம் விற்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்டதும் தியேட்டர்காரர்கள், ஏவி.எம். நிறுவனத்தை அணுகி, மினிமம் கியாரண்டி முறையிலேயே படத்தை வாங்கிக் கொண்டார்கள்.
ஆந்திராவில் வெளியாகும் தெலுங்குப் பதிப்புக்கு 15 கோடி தரப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு உரிமம் 12 முதல் 15 கோடிக்கு சென்றிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
சிவாஜியின் தயாரிப்புக்கு அறுபது கோடி செலவானது.
அபிராமி அரங்குகளில் எட்டரை மணி காலைக்காட்சிக்கு லேண்ட்மார்க் மூலமாக வாங்குபவர்களின் (ரூ. 300, 500 & 750) பணம் அனைத்தும் Ray of Light அமைப்புக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள்.
1. GV Films bags 'Sivaji' distribution rights for Rs 52 crore | Televisionpoint.com News
2. Shivaji Channel Rights sold for record price!
3. The Hindu : Tamil Nadu / Chennai News : A charity spin on `Sivaji'
4. Huge price for Sivaji rights
Tuesday, June 12, 2007
சிவாஜி - விற்பனை விவரங்கள்
Posted by Boston Bala at 11:39 PM 12 comments
பாலுறவு மறுப்புக்கு மணமுறிவு: உயர்நீதிமன்றம்.
இயல்பான உடலுறவுக்கு, தம்பதியரில் ஒருவர் மறுத்துவிடுவதே விவாகரத்து காண போதுமான காரணமாகும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறாக, பதிமூன்று வருட விவாகம் ஒன்றை ரத்து செய்து நீதியரசர் S.முரளிதர் தீர்ப்பளித்துள்ளார்.
அஜய்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பொன்றை இதன்படி உயர்நீதிமன்றம் மாற்றி எழுதியுள்ளது. இவ்வழக்கில் மனைவி மறுத்ததால் கணவனுக்கு மனசஞ்சலம் ஏற்பட்டதை நீதிபதி தீர்ப்பில் சுட்டியுள்ளார்.
இரண்டு மாதத்துக்குள் 02 இலட்சம் ரூபாய் நிரந்தர வாழ்வாதார தொகையாக மனைவிக்கு வழங்கிவிடுவதற்கும் அவர் கணவனைப் பணித்துள்ளார்.
இங்கு படித்துப்பாருங்கள்.... வாசகன்
Posted by வாசகன் at 11:27 PM 0 comments
கிரிக்கெட்: தோனி ODI துணைத்தலைவர்.
மஹேந்திர சிங் தோனி என்கிற அந்த அதிரடி ஆட்டக்காரர் இனி இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளுக்கான துணைத்தலைவராகவும் உயர்த்தப்பட்டுள்ளார். தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்கசர்க்கார் அயர்லாந்து, இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள 15 பேர் அணி விபரங்களை வெளியிட்ட போது இதைத் தெரிவித்துள்ளார்.
நட்சத்திர மட்டையாளர் டெண்டுல்கர் ஐந்துநாள் ஆட்டங்களின் துணைத்தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
15 பேர் கொண்ட அணியில், திறன் குறைந்து காணப்படும் ஷேவாக், ஹர்பஜனுடன், காயமடைந்துள்ள பந்துவீச்சாளர் முனாஃப் பட்டேலும் விலக்கப்பட்டுள்ளார். உடல் தகுதி திறன் மீட்டிய ஜாஹீர்கான் இருவகை ஆட்டங்களிலும் பந்துவீச்சைத் தொடங்குவார் என்று சொல்லப்படுகிறது. அஜித் அகர்கரும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இந்த அணியின் ஒற்றைப் புதுமுகமாக மும்பையின் ரோஹித் ஷர்மா உள்ளார்.
தொடர்ந்து படிக்க..
Posted by வாசகன் at 11:07 PM 1 comments
கமல் நடிக்கும் தசாவதாரம் படத்தை எதிர்த்து மீண்டும் வழக்கு
கமலஹாசன் 10 வேடத்தில் நடிக்கும் தசாவதாரத்தை எதிர்த்து சினிமா உதவி டைரக்டர் செந்தில்குமார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் "தசாவரதாரம் படத்தின் கதை தன்னுடையது எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்'' என்று கூறி இருந்தார். ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இப்போது செந்தில்குமார் மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் "தசாவதாரம் படத்தின் கதை என்னுடையது தான் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இது பற்றி சரியாக விசாரிக்காமல் தள்ளு படி செய்து விட்டனர். எனவே அந்த படத்தை எங்களுக்கு போட்டு காட்ட வேண்டும் படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்'' என்று கூறி இருந்தார்.
தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, தசாவதாரம் படத்தின் திரைக்கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். செந்தில்குமாரும் தனது கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டார்.
Malaimalar.com | HC wants English version of 'Dasavatharam' script
Posted by Boston Bala at 11:02 PM 0 comments
இந்தியா: விரைவில் பெட்ரோல் விலை உயர்வு.
கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்து விட்டது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவதால், பெட்ரோலியப் பொருட்களின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை வலிபுறுத்தி வந்தன. ஆனால் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தாமல் இருந்து வந்தது.
இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாவிட்டால் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை தாங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள், அண்மையில் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஆய்வு செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
அதற்கு முன்பதாக எண்ணை நிறுவனங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச மத்திய அரசு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகே பெட்ரோல், டீசல் விலையை எவ்வளவு உயர்த்துவது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by வாசகன் at 10:59 PM 0 comments
தமிழக தலைநகர் சென்னையில் அருந்ததியர்கள் பேரணி
துப்புரவுப்பணி மற்றும் செருப்பு தைக்கும் பணி போன்றவற்றில் ஈடுபடுத்தப்படும் அருந்ததியர்கள், பட்டியலினத்தவர், ஷெட்யூல்ட் காஸ்ட் அல்லது தலித் மககள் என்றறியப்படுவோரில் மிகப்பின் தங்கியவர்களாவார்கள்.
விடுதலைபெற்று 60 ஆண்டுகள் ஆன பின்னரும் மனித மலத்தை அள்ளும் இழிதொழிலுக்கு இம்மக்களை உட்படுத்தும் கொடுமைக்கு ஓர் முடிவு கட்டவேண்டும், தலித்மக்களுக்கான 18 சத இடஒதுககீட்டை ஒரு சதம் உயர்த்தி, அந்த 19 ல் அருந்ததியர்களுக்கு 6 சத உள் ஒதுக்கீடு வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இன்று செவ்வாய்கிழமை தமிழகத் தலைநகர் சென்னையில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் இப்பேரணிக்கு திரண்டனர். இன்றைய ஆர்ப்பாட்டத்தை மார்கசிஸட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று நடத்தியுள்ளது.
இதன் பின்னர் அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் சமர்பிக்கப்பட்டது.
BBCTamil
Posted by Boston Bala at 10:51 PM 0 comments
இந்தியா: முதல் குடிமகனாக யாருக்கு வாய்ப்பு அதிகம்?
குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நெருங்கி விட்ட நிலையில், வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தள்ளப்பட்டுள்ளது.
அநேகமாக தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் சிவராஜ் பாட்டீல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.
சோனியா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பாட்டீல், ஏற்கனவே மக்களவை சபாநாயகராக பதவி வகித்த அனுபவம் வாய்ந்தவர். மேலும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த லிங்காயத் பிரிவைச் சேர்ந்தவரான அவரது அரசியல் சட்ட அறிவு மற்றும் அனுபவத்திற்காக சோனியாவால் மிகவும் மதிக்கப்படுபவர்.
கர்நாடகம் மற்றும் கோரக்பூரில் மதவாத மோதல்கள் ஏற்பட்ட போது, கட்டுப்படுத்தத் தவறியதாக இடதுசாரிக் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
எனவே இடதுசாரிக் கட்சிகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பாட்டீலை மிக உயர்ந்த பதவிக்கு தகுதியானவராக ஏற்க மறுத்து வருகின்றன.
லத்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 7 முறை வெற்றிபெற்ற போதிலும், கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் பாட்டீல் தோல்வியடைந்தார்.
எப்படியிருப்பினும் இந்த வார இறுதிக்குள் வேட்பாளர் யார் என்பது தெரிந்து விடும்.
அதிக வாக்குகளை கைக்கொண்டுள்ள மாயாவதியும் ஐ.மு.கூ வுடன் இவ்விடயத்தில் 'உடன்பாடு' கண்டுள்ளதாகத் தெரிகிறது.
குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வதற்காக சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்துவதற்காக முதல் அமைச்சர் கருணாநிதி புதுடெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by வாசகன் at 10:49 PM 0 comments
ரயில் தடம் புரண்டு 100 பேர் படுகாயம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள துவாடா அருகே நாகர்கோயில் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு 11.15 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 100 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் நாகர்கோயில் - ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண்.2659) ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், காயமடைந்த பயணிகள் விசாகப்பட்டிணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பகுதியில் ரயில் வழக்கத்தைவிட மெதுவாகச் சென்றுள்ள போதும், தொழில் நுட்பக் கோளாறால் விபத்து நேர்ந்துள்ளதாக, நேரில் பார்வையிட்ட பின் ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்து குறித்த விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் 0891 - 2575083 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
TamilMSN.com
Posted by Boston Bala at 8:54 PM 1 comments
ச: கோவை பாரதியார் பல்கலையில் 'நனோ'நுட்ப சோதனைச்சாலை
கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ500 கோடி மதிப்புள்ள 'நனோ' நுட்பத்திற்கான ஆய்வுசாலை அமைக்கபட உள்ளதாக துணைவேந்தர் ஜி.திருவாசகம் கூறினார். தமிழக அரசு, பாரதியார் பல்கலைகழகம், இராணுவ ஆய்வுமற்றும் மேம்பாடு நிறுவனம்( DRDO),உடன் அர்கான்சாஸ் பல்கலைக் கழகம் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்ற விருப்பதாக அவர் கூறினார்.
The Hindu News Update Service
Posted by மணியன் at 7:37 PM 1 comments
ச:சிவகாசி: பட்டாசுதொழிற்சாலையில் தீவிபத்து: இருவர் மரணம்
சிவகாசியருகே நாராயணபுரத்தில் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ பிடித்துக் கொண்டதில் இரு பெண் தொழிலாளர்கள் இறந்தனர்;ஐவர் கடும் தீக்காயங்கள் அடைந்தனர். பட்டாசு ஒன்று திடீரென்று வெடித்ததில் தீ மூண்டது. ஐந்து மணிநேரம் போராடி தீயணைப்பு வண்டிகள் தீயை அணைத்தன.
The Hindu News Update Service
Posted by மணியன் at 7:29 PM 0 comments
ச:தொலைபேசி சேவை உரிமம்: வழங்குமுறைகள் மீளாய்வு
தொலைதொடர்புத் துறையில் பெருமளவு இணைதல்களும் தொழிற்நுட்ப வளர்ச்சிகளும் பல்கிவரும் வேளையில் தொலைதொடர்பு கட்டுப்பாடு ஆணையம் இப்போதிருகின்ற உரிமம் வழங்கின்ற விதிகளை மாற்றியமைக்க அவற்றை மீளாய்வு செய்ய எண்ணியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் ஒரே உரிமத்தில் ் GSM மற்றும் CDMA வகை செல்பேசி சேவைகளை வழங்க விண்ணப்பித்திருப்பது இந்த மீளாய்விற்கு வழிவகுத்துள்ளது. அந்நிறுவனம் தற்சமயம் தனித்தனி உரிமங்களை வைத்து ரிலையன்ஸ் டெலிகோம் GSM சேவையையும் ரிலையன்ஸ் இன்ஃபோகோம் சிடிஎம் ஏ சேவையையும் வழங்குகிறது.
The Hindu News Update Service
Posted by மணியன் at 7:17 PM 0 comments
ச: குடியரசுத்தலைவர் தேர்தல்: மாயவதி காங்.கூட்டணிக்கு முழு ஆதரவு
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பிஎஸ்பிக்கும் ஐக்கிய முன்னேற்ற கூட்டணிக்கும் இன்று உடன்பாடு ஏற்பட்டது. யார் அந்த வேட்பாளர் என்பதை அறிவிக்க மறுத்த மாயாவதி மதவாத கட்சிகளுக்கு பிஎஸ்பி எப்போதும் ஆதரவளிக்காது என்று கூறினார்.
DNA - India - Agreement reached with UPA over Prez candidate: BSP - Daily News & Analysis
Posted by மணியன் at 7:04 PM 0 comments
நீதிபதிகள் இனி 'My Lord' இல்லை!
கேரள உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் எடுத்துள்ள தீர்மானத்தின்படி நீதிபதிகள் இனி My Lord என்றோ Your Lordship என்றோ விளிக்கப்படமாட்டார்கள். பகரமாக, கண்ணியத்திற்குரிய என்றோ 'கண்ணியம் வாய்ந்த அவையோர்' என்றோ அழைக்கப்படுவார்கள்.
உச்ச; உயர்நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு விளிக்கப்படுகையில் கீழ்நீதிமன்றத்தார் 'ஐயா' என்றோ அதற்கிணையான சொல்லாலோ விளிக்கப்பெறுவர் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
காலனியாதிக்க கால நடைமுறை மரபுகளில் மாற்றம் வேண்டி கடந்த டிசம்பர் மாதம் இந்திய பார் கவுன்சில் எடுத்த முடிவுக்கும், தொடர்ந்த வழிகாட்டுதலுக்கும் ஏற்ப இவ்வாறு கேரள வழக்குரைஞர்கள் முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
கேரள வழக்கறிஞர்களே இம்மாற்றத்தை செயற்படுத்துவதில் முன்னோடிகளாக இன்றுமுதலே இதை நடைமுறைப்படுத்துகின்றனர். நடை, உடைகளில் இல்லாவிட்டாலும், விளிக்கின்ற அடைமொழிகளில் நல்ல மாற்றம் வந்தமைக்கு அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
Posted by வாசகன் at 6:45 PM 0 comments
விமானக்கோளாறு: பயணிகள் உயிர் தப்பினர்
இன்று காலை சென்னையிலிருந்து மும்பைக்குப் புறப்பட்டுச் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமொன்றில் முன்புற கண்ணாடியில் விரிசல் காணப்பட்டது. இதையடுத்து, சென்னை நிலைய தரை கட்டுப்பாட்டு நிலையத்தை அவசரமாக தொடர்புகொண்ட விமானஓட்டி, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். விமானத்திலிருந்த 139 பயணிகள் உயிர்தப்பினர். அவர்களுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மக்கள் தொ.கா.செய்திஅறிக்கை
Posted by வாசகன் at 6:34 PM 0 comments
ச: கிரிக்கெட்: சந்து போர்டே பயிற்சியாளராக நியமனம்
இந்தியாவின் இங்கிலாந்து,அயர்லாந்து பயணங்களுக்கு முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் சந்து போர்டே அணி யின் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Chandu Borde named manager for England tour - Daily News & Analysis
Posted by மணியன் at 6:12 PM 2 comments
கருணாநிதி இன்று டெல்லி பயணம்.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து இறுதி செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்த முதல்வர் கருணாநிதி இன்று மாலை டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் சிவராஜ் பாட்டீலை நிறுத்த காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இந்த முடிவை ஏற்க வேண்டுமானால் சோம்நாத் சாட்டர்ஜிக்கு குடியரசுத் துணைத் தலைவர் பதவியை தர வேண்டும் என இடது சாரிகள் நிபந்தனை விதித்துள்ளன. இந்த நிலையில், பாட்டீலுக்கு கூட்டணிக் கட்சிகளிடையே ஒருமித்த ஆதரவைத் திரட்ட காஙகிரஸ் முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக ஆலோசிக்க முதல்வர் கருணாநிதி இன்று மாலை டெல்லி செல்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் அவர் ஆலேசானை நடத்துகிறார். முதல்வருடன் துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி உள்ளிட்ட 9 பேர் செல்கின்றனர்.15ம் தேதி வரை டெல்லியில் தங்கவுள்ளார் கருணாநிதி. அப்போது பிரதமர், சோனியா ஆகியோருக்கு கனிமொழியை அறிமுகமும் செய்யவுள்ளார். தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு 15ம் தேதி இரவு சென்னை திரும்புகிறார் முதல்வர் கருணாநிதி.
குடியரசு தலைவர் பற்றி ஜெயலலிதா கூறுகையில் ... குடியரசுத் தலைவர் தேர்தலில் பைரான் சிங் ஷெகாவத் சுயேச்சையாக களம் இறக்கப்பட்டால், அவரை ஆதரிக்கலாம் என 3வது அணி தலைவர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறி வருவதாக தெரிகிறது.
Posted by Adirai Media at 6:04 PM 0 comments
இங்கு மட்டுமல்ல அங்கும்தான் !
சிவாஜி ரிலீஸ் தமிழ் நாட்டில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் அனல் பறக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவாஜி படத்தின் ரிசர்வேஷன் தொடங்கியதை தமிழ்நாட்டில் உள்ள ரஜினி ரசிகர்கள் விழா போல் கொண்டாடினர். இதே போல் அமெரிக்க ரசிகர்களும் ஞாயிற்றுக்கிழமை ஆட்டம், பாட்டம் என்று தூள் கிளப்பி விட்டனர். டிக்கெட் புக்கிங் செய்வதற்காக அமெ ரிக்காவில் சிவாஜி திரையிடப் படும் நகரங்களுக்கு மற்ற நகரங் களில் உள்ள ரசிகர்கள் பல மைல் தூரம் காரில் பய ணம் செய்து வந்தனர். மிகப் பெரிய ஆன்மீகச் சொற் பொழிவாளர்கள் அமெரிக் காவுக்கு வரும் போது தான் ரசிகர்கள் இவ்வாறு பல மைல் தூரம் பயணித்து வருவது வழக்கம்.
டிக்கெட் முன் பதிவு தொடங்கியதும் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என்று தங் கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர். ரஜினி கட்- அவுட் களை வைத்து தியேட் டரை அலங்கரித் திருந்தனர். "மை நேம் இஸ் பில்லா'' "ராக்கம்மா கையத்தட்டு'' போன்ற ரஜினியின் ஹிட் பாடல்களை போட்டு ரசிகர்கள் தியேட்டர் வாசலில் ஆடினர். 50 வயதைத் தாண்டிய முதியவர்களும் இவ்வாறு ஆடிப்பாடி தங் கள் உற்சாகத்தை வெளிப் படுத்தினர். தமிழ்நாட்டில் இருந்த போது பழைய ரஜினி படங்களின் ரிலீஸ் சமயம் தாங்கள் டிக்கெட் எடுக்கப்பட்ட கஷ்டத்தை சுவையாக ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.சிவாஜி பட ரிலீசை முன் னிட்டு சிறப்பு விழாக்களுக்கும், கலை இரவு போன்ற நிகழ்ச்சி களுக்கும் சிறப்பு விருந்து களுக்கும் அமெரிக்க ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
Posted by Adirai Media at 5:42 PM 0 comments
தமிழகத்தில் சிக்குன்குன்யா ?
குமரி மாவட்டத்தில் ஒருவர் பழி.
அவர்கள் மூலம் இங்குள்ளவர்களுக்கும் நோய் பரவுகிறது. நேற்று நோய் தாக்கிய பத்துகாணியைச் சேர்ந்த சசி இறந்து விட்டார். அவர் சிக்குன் குனியா தாக்கி தான் இறந்துள்ளார். தனியார் ஆஸ்பத்திரியில் சசிக்கு சிக்குன் குனியா தாக்கி இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கான சான்றிதழ் தர மறுக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். சசி மரணத்தை தொடர்ந்து பத்துகாணி மற்றும் அதைச் சுற்றி வசிக்கும் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதற்கிடையே இன்று நாகர்கோவிலில் இருந்து 22 பேர் கொண்ட மருத்துவ குழு கடையாலுமூடு, பத்துகாணி பகுதிக்கு செல்கிறது. அங்கு வீடு-வீடாக சென்று அவர்கள் ஆய்வு செய்கிறார்கள். நோய் தாக்கியவர்கள் யார்-யார்ப அவர்களை தாக்கியது என்ன நோய்ப என்பது குறித்து மருத்துவ குழு ஆய்வு செய்கிறது. மேலும் அந்த கிராமங்களில் கொசு மருந்து அடிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
Posted by Adirai Media at 2:15 PM 1 comments
ஈரான் மீது இராணுவ நடவடிக்கை - அமெரிக்க அரசியல் குரல்.
ஜோ லீபர்மேன் என்கிற அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர் ஈரான் மீது அமெரிக்காவின் இராணுவ தாக்குதலை கோரியுள்ளார். இராக்கில் அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதலுக்கு ஈரான் உதவி வருவதாக குற்றஞ்சுமத்தியுள்ள அவர், செனட்டில் கடந்த ஆண்டு முதல் சுயேச்சையாக செயற்பட்டு வருபவராவார்.
அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியொருவர் வெளிப்படையாக இப்படி பேசியுள்ளது இதுவே முதல் முறை. சைனாவின் ஆயுதங்களை இராக் போராளிகளுக்கு ஈரான் வழங்குவதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டு.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை "இராக் விடயத்தில் ஈரானின் ஆக்கப்பூர்வ பங்களிப்பை மட்டுமே எதிர்பார்க்கிறோம்" என்றது. அமெரிக்க தூதர் ரையான் குரோக்கர் இதுபற்றி தன் ஈரானிய சகாவிடம் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
Posted by வாசகன் at 1:46 PM 0 comments
சவூதி: பிலிப்பைனியருக்கு STC விலைச்சலுகை!
ஜூன் 12 ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் சுதந்திர தினம் என்பதை முன்னிட்டு சவூதி அரேபிய தொலை தொடர்புத்துறை வாழ்த்துக்களுடன் விசேட விலைச்சலுகையினை அறிவித்துள்ளது.
அதன்படி ஃபிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இன்று நள்ளிரவு வரையிலான 24 மணி நேரத்துக்கு தொலைபேசி கட்டணங்களில் 50 சதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
தொலைதொடர்புத்துறை உயரதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார்.
Posted by வாசகன் at 11:16 AM 0 comments
விசாகப்பட்டிணம் அருகே ரயில் தடம் புரண்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே நாகர்கோயில் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நள்ளிரவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 100 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.விசாகப்பட்டிணத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள துவாடா என்ற இடத்தில் நேற்றிரவு 11.15 மணிக்கு இந்த விபத்து நடந்ததாக ரயிவே வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த விபத்தில் நாகர்கோயில் - ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண்.2659) ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், காயமடைந்த பயணிகள் விசாகப்பட்டிணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த பகுதியில் ரயில் வழக்கத்தைவிட மெதுவாகச் சென்றுள்ள போதும், தொழில் நுட்பக் கோளாறால் விபத்து நேர்ந்துள்ளதாக, நேரில் பார்வையிட்ட பின் ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ள ரயில்வே அதிகாரிகள், மீட்பு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். சிறப்பு பஸ்கள் மூலம் பயணிகள் விசாகப்பட்டிணம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.விபத்து குறித்த விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் 0891 - 2575083 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் இவ்விபத்தில் மூன்று பேர் பலியானதாக இன்றுகாலை தனியார் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
Posted by Adirai Media at 10:18 AM 0 comments
அரசு பள்ளியில் அவமதித்ததால் தலித் மாணவர்களுக்கு தனி பள்ளிக்கூடம் கிராம மக்களே திறந்தனர்
ராம்கார், ஜுன். 11- ராஜஸ்தான் மாநிலம் தாதி என்ற கிராமத்தில் அரசு பள்ளிகளில் தலித் மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள் அவமதித்தனர். இதுபற்றி கிராம மக்கள் கல்வி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து மாணவர்களை அவமதித்து வந்தனர்.
இதனால் தலித் மக்கள் அனை வரும் தங்கள் குழந்தை களை அரசு பள்ளிகளில் இருந்து வாபஸ் பெற்றனர். அவர்களாகவே தனி பள்ளிக்கூடம் அமைத்தனர். 50 மாணவர்கள் இதில் சேர்ந்துள்ளனர் இதற்கான ஒரு அறை கொண்ட வகுப்பு அறையை அவர்கள் கட்டியுள்ளனர்.
இதுபற்றி கிராம மக்கள் கூறும் போது "நாங்கள் சத்தியாக்கிரக முறையில் போராடுவதற்காகவே பள்ளிக கூடம் திறந்து இருக்கிறோம. அரசு மாற்று ஏற்பாடு செய்து தரும்வரை இந்த பள்ளிக் கூடத்தை தொடர்ந்து நடத்துவோம்" என்றனர்.
மாலைமலர்
Posted by Boston Bala at 1:20 AM 2 comments
b r e a k i n g n e w s...