.

Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

Tuesday, September 4, 2007

நஜ்மா ஹெப்துல்லாவின் கணவர் மரணம்.

முன்னாள் ராஜ்ய சபா துணைத்தலைவரும், எம்.பியுமான நஜ்மா ஹெப்துல்லாவின் கணவர் அக்பர் அலி ஹெப்துல்லா இன்று காலமானார். சிறந்த மனித ஆற்றல் ஆலோசகரான இவரது வயது 75. வயிற்றுவலி காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்பர் அலி ஹெப்துல்லா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தினமலர்

Monday, September 3, 2007

இடிந்து விழுந்த மேம்பாலம்



பாகிஸ்தானின் கராச்சி புறநகரில் சனிக்கிழமை இடிந்து விழுந்த மேம்பாலம். இதில் பத்து பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர். 2 மாதங்களுக்கு முன்புதான் இப் பாலத்தை அதிபர் முஷாரப் திறந்து வைத்தார்.


தினமணி

Daily Times - Leading News Resource of Pakistan - The authorities just can’t be trusted any more: Karachi residents
Ten dead in Karachi bridge collapse, inquiry ordered- Hindustan Times

Saturday, September 1, 2007

சற்றுமுன்:கௌஹாத்தி மார்க்கெட்டில் குண்டுவெடிப்பு

கௌஹாத்தியின் மைய சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு இன்று மதியம் நடந்துள்ளது. இதனால் பலர் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. மேல் விவரங்கள் இல்லை.

Blast rocks Guwahati market - Yahoo! India News

கடைசியில் கிடைத்த விவரங்கள்:DNA - India - One killed, 12 injured in Guwahati blast - Daily News & Analysis

Thursday, August 30, 2007

கட்சிகளின் போராட்டத்தால் ஆம்புலன்ஸில் இறந்த குழந்தை

சிம்லா நகரில் காங்கிரஸ் கட்சியினரும் பிஜேபி கட்சியினரும் நடத்திய பேரணிகளால் போக்குவரத்து தடைபட்டு நான்கு வயது சிறுவன் டிங்கூ சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லமுடியாமல் வழியிலேயே இறந்தான். விதான்சபை( மக்களவை) எதிரில் இருகட்சிகளுமே பேரணி நடத்த முயன்ற கூட்டத்தில் அதிக சுரத்தினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனை கொண்டுசென்ற ஆம்புலன்ஸ் மாட்டிக்கொண்டது. காவலர்கள் இலேசான தடியடி செய்தே மக்களவை அங்கத்தினர்களை கலைக்க முடிந்தது.

இது பற்றி:While Cong, BJP fight, boy dies in ambulance

Monday, August 27, 2007

எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் உயிருடன் புதைக்கப்படுவதாகச் செய்தி

பசிபிக் பெருங்கடலிலுள்ள பாப்புவா நியூகினியாத் தீவுகளில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, அவர்களது உறவினர்கள் உயிருடன் புதைப்பதை தாம் கண்டுள்ளதாக சுகாதாரச் செயற்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார். தங்களுக்கும் எய்ட்ஸ் நோய் பரவிவிடும் என்கிற அச்சத்தின் காரணமாக அவர்கள் இவ்வாறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை புதைத்து விடுகிறார்கள் என்று மார்கிரெட் மராபே என்னும் அந்த சுகாதாரச் செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

உயிருடன் இருக்கும் மூன்று பேர் புதைக்கப்படுவதை தாம் நேரில் கண்டதாகவும், அங்கு இவ்வாறு செய்யப்படுவது சாதாரண வழக்கம் என்று தம்மிடம் அங்குள்ளவர்கள் கூறியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தெற்கு பசபிக் பகுதியில் பாப்புவா நியூகினியாவில்தான் அதிகபட்சமாக எச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள வயதுவந்த மக்களில் இரண்டு சதவீதம் பேர் இந்தத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ் பிபிசி

BBC NEWS | Asia-Pacific | PNG Aids victims 'buried alive'

Sunday, August 26, 2007

விதர்பாவில் 8 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியில் மூன்று நாள்களில் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

யாவத்மால் மாவட்டத்தில் மூன்று பேரும், அமராவதி மாவட்டத்தில் 2 பேரும், வாசிம், பந்த்ரா, புல்தானா மாவட்டங்களில் தலா ஒருவரும் கடன்தொல்லையால் தற்கொலை செய்திருப்பதாக தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

அப்பகுதியில், இந்த மாதத்தில் மட்டும் 65 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி

Another 8 more cotton farmers commit suicides in Vidarbha: VJAS demands Rs. 2700 per quintal as price of cotton
In Vidarbha’s darkness, the first glimmer: farmer suicides down :: indianexpress.com
Zee News - 259 farmer suicides between May-July 2007: Govt

Saturday, August 25, 2007

எலிக்காய்ச்சலுக்கு குஜராத்தில் 34 பேர் சாவு

தெற்கு குஜராத்தில் கடந்த 2 வாரங்களில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சூரத், நவ்சாரி மற்றும் வல்சாத் மாவட்டங்களில் இந்த நோய்க்கு அதிகம் பேர் ஆளாகியுள்ளனர்.

தினமணி

Leptospirosis claims 34 lives in Gujarat
NDTV.com: Leptospirosis outbreak in Surat, Navsari and Valsad

Wednesday, August 22, 2007

மும்பையில் பதின்மவயது சிறுவன் கொலை


பதினாறு வயது அத்னன் பத்ரவாலாவின் கொலை மும்பைநகரையே கலக்கிக் கொண்டிருக்கிறது. சனிக்கிழமையன்று காணாமல்போன சிறுவனின் பெற்றோருக்கு ரூ.இரண்டு கோடி கேட்டு வந்த தொலைபேசி அழைப்பின் பின்னரே அது ஒரு கடத்தல் முயற்சி எனத் தெரியவந்தது. அவன் 'ஆர்குட்' தளம் மூலம் அறிமுகமான நண்பர்களால் கடத்தப் பட்டதும் பின் செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து பீதியடைந்த பதின்மவயது குற்றவாளிகள் அவனைக் கழுத்தை நெறித்து கொலை செய்ததும் நேற்றும் இன்றும் ஊடகங்களில் பேரிடத்தை எடுத்துக் கொண்டுள்ளன. சமூக கூட்டமைப்பு தளங்களான ஆர்கூட், மைஸ்பேஸ், ஃபேஸ்புக் முதலியவற்றின் தாக்கம் குறித்து பல விவாதங்கள் நடத்தப் படுகின்றன.

கைது செய்யப்பட்டுள்ள மூவரில் 28 வயதான சுஜித் நாயர்தான் இச்சதியின் இயக்குவிசையென காவலர்கள் கருதுகின்றனர். முன்னாள் BPO ஊழியரான இவர் கடந்த ஒரு வருடமாக வேலை ஏதும் இன்றி இருந்திருக்கிறார். பிணைப்பணத்துடன் துபாய்க்கு தப்பியோட திட்டமிட்டிருந்தார்.ஆனால் பதின்ம வயது கூட்டாளிகள் பயந்து அத்னனுக்கு தூக்கமாத்திரைகளைக் கலந்து மது கொடுத்து பின்னர் கழுத்து நெரித்து கொன்றுள்ளனர்.

ஆனால் இரு சிறுவர்களின் பெற்றோர்கள் தங்கள் மக்கள் தவறிழைக்க வாய்ப்பேயில்லை என ஊடகங்களில் கூறிவருகிறார்கள். சிலமாதங்கள் முன் பதின்ம வயது சிறுவன் கையில் ஸ்கோடா காரைக் கொடுத்து நடைபாதை மக்களை வதம்செய்த மும்பையில் பொறுப்பற்ற பெற்றொர்களின் மற்றுமொரு அத்தியாயமே இது.
NDTV.com: New angle emerges in Adnan murder case

DNA - Mumbai - Adnan murder: 3 sent to cop custody - Daily News & Analysis

Monday, August 20, 2007

உயர்நீதிமன்ற நீதிபதி வீரராகவன் காலமானார்

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இருந்த வீரராகவன் இன்று காலை சென்னையில் காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நீதிபதி வீரராகவன் காலமானதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 16, 2007

ஹிமாச்சலில் வெள்ளம்: ஆறு சடலங்கள் மீட்பு, 52 பேர் காணவில்லை

இமாச்சல பிரதேசத்தில் நேற்று பெய்த பெருமழையில் சிம்லா மாவட்டத்தில் ஒரு கிராமமே திடீர் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனது.அந்த இடிபாடுகளை இராணுவத்தினர் மற்றும் துணைராணுவத்தினர் உதவியுடன் அகற்றி பிழைத்தவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த முயற்சியில் இதுவரை ஆறுபேரின் உடல்களே கிடைத்திருக்கின்றன. இன்னும் 52 பேர் சிம்லாவிலிருந்து 175 கி.மீ தூரத்திலுள்ள கான்வி என்ற அந்தக் கிராமத்திலிருந்து காணவில்லை. மழையினால் ஏற்பட்ட மலைச்சரிவு பெரும் பாறைகளை உருட்டி விட்டு வழியில் இருந்த அனைத்து வீடுகளையும் தவிடுபொடியாக்கியது. இறந்த அறுவரில் ஐவர் பெண்டிர். காணாமல் போனவரிலும் பெரும்பான்மையினர் பெண்களே. அவர்கள் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது இந்த திடீர்மழையும் மலைச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

HP cloudburst: 6 bodies found, 52 still missing-India-The Times of India

பெருவில் பூகம்பம்: 72 மரணம், 680 காயம்

தென்னமெரிக்க நாடான பெருவில் ரிக்டர் அளவுகோளில் 7.9 வலிமையுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டு 72 பேர் மரணமடைந்துள்ளனர்; 680 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் லிமாவில் உயர்ந்த கட்டிடங்கள் தொடர்ந்த இரு நில அதிர்வுஅலைகளால் ஆடின. அலுவலகத்திலிருந்து பணியாளர்கள் வெளியே ஓடினர்.கடலோர மாநிலமான இகாவில் கிருத்துவ தேவாலயமொன்று சரிந்ததாகவும் வானொலி நிலையங்கள் கூறுகின்றன.

இந்நிலநடுக்கத்தையொட்டி பெரு,சிலி,ஈகுவேடர்,கொலம்பியா நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

Powerful quake hits Peru, 72 killed, 680 hurt

Tuesday, August 14, 2007

முன்னாள் தினமணி ஆசிரியர் சம்பந்தம் மறைவு

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் செய்தித்துறை தலைவராகவும் தினமணி நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய ஆர் எம் டி சம்பந்தம் இன்று காலை தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 73. கடந்த மூன்று வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார்.

தனது இதழியல் பணியை அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு நாளிதழில் துவங்கினார். பின் இந்தியன் எக்ச்பிரஸ் நாளிதழிற்கு மாறினார். அக்குழுமத்தின் நாளிதழான தினமணியின் ஆசீரியராகவும் பணியாற்றினார். தன் பணிக்காலத்தில் அரசியல் தலைவர்களான கு.காமராஜ், பெரியார் ஈ வெரா, அண்ணாதுரை, தற்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

அவரது விருப்பப்படி அவரது உடல் ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்படுவதாக குடும்பத்தினர் கூறினர்.

The Hindu News Update Service

Monday, August 13, 2007

மலேசியாபஸ் விபத்து:20 பேர் பலி

மலேசியாவின் புகிட் காங்டங் அருகே விரைவுவழித்தடத்தில் சென்ற பேருந்து ஒன்று சறுக்கி கவிழ்ந்ததில் 20 பேர் வரை மரணமடைந்துள்ளனர். இன்று காலை 4:45க்கு நடந்த இந்த விபத்தில் பத்தொன்பது பேர், ஏழு பெண்கள் உட்பட, சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் இறந்தனர். மேலும் ஆறுபேர் சிகிட்சை பெற்று வருகின்றனர். மலையின் இறங்குபாதையில் வந்துகொண்டிருக்கும்போது சாலையின் பிரிவுச்சுவரை இடித்து பேருந்து கவிழ்ந்ததாகக் காவலர்கள் கூறுகின்றனர்.

20 dead in Malaysian road accident- Hindustan Times

பெங்களூரு: கூட்டு தற்கொலை, மூன்று பள்ளி மாணவிகள் பலி

சனியன்று பத்தாம் வகுப்பு மானவிகள் திவ்யா,அம்மு,ஜயந்தி, ஹம்சவேணி என்ற நால்வரும் கூட்டுத் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து 10-11 மருந்துவில்லைகளையும் மூட்டைப்பூச்சி மருந்தையும் உட்கொண்டுள்ளனர். "எங்கள் மரணத்திற்கு யாரும் காரணமில்லை, நாங்கள் யாரையும் காதலிக்கவில்லை, யாரும் எங்களை ஏமாற்றவில்லை. நாங்கள் கூடி இறக்க விரும்புகிறோம். எங்கள் முழு சம்மதத்துடன் நாங்கள் இறக்கிறோம்" என தற்கொலை குறிப்பு எழுதிவைத்துள்ளனர்.அவர்கள் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மூச்சு திணறிக்கொண்டிருந்ததாக அவசர சிகிட்சைப் பிரிவு மருத்துவர் இரவீந்திரா கூறினார். அவர்களில் தற்போது ஹம்சவேணி மட்டுமே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். மற்ற மூவரையும் காப்பாற்றமுடியவில்லை.
அவர்களின் பெற்றோருக்கும் பள்ளிநண்பர்களுக்கும் இது பேரதிர்ச்சியையும் வியப்பையும் கொடுத்திருக்கிறது.அவர்களின் இந்த விபரீதப் போக்கிற்கு காரணம் காணமுடியாவிடினும் அவர்களது வறுமை பின்னணி யைக் கொண்டு தங்கள் பெற்றோரால் தங்களை மேற்படிப்பு படிக்க வைக்கமுடியாது என்ற அவர்களின் எண்ணமே இதற்கு உந்துவிசையாக அமைந்திருக்கலாம் என பலரும் கருதுகின்றனர்.

IBNLive.com > Mass suicide in Bangalore, 3 teenage girls dead : Bangalore, student suicide, Bapuji Memorial School

Saturday, August 11, 2007

அசோம்: இந்தி பேசுவோர்மீது மீண்டும் வன்முறை: 14 பேர் மரணம்

வெள்ளி இரவு கர்பி அங்லோங் மலைமாவட்டத்தில் டோலோராமா ரங்க் டெரொன் கிராமத்தில் ஆறு குழந்தைகள் உட்பட 14 இந்தி பேசும் மக்கள் மீது சரமாறியாக துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் 14 பேர் மரணமடைந்தனர்;மேலும் மூவர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் திலீப் சாஹூவின் வீட்டிலிருந்த அரிசி மில்லிற்கும் தீ வைத்தனர். குடும்பத்தலைவரான தில்லி சாஹூ தனது பிகார் கிராமத்திற்கு சென்றிருந்த நேரம் இது நடந்துள்ளது. இவர் வீட்டை அடுத்துள்ள ராம்குமார் சிங், ராம் நரேஷ் சிங் மற்றும் தினநாத் சர்மா ஆகியோர் வீடுகளிலும் உள்ளே நுழைந்து குடும்பத்தினரை சுட்டுக் கொன்றனர்.

மேலும்.Assam: 14 Hindi-speaking people slain

Thursday, August 9, 2007

அசோமில் தீவிரவாதம்: இந்தி பேசுவோர் மீது தாக்குதல்

அசோம் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் மீண்டும் தீவிரவாதத்தை முன்னெடுத்து இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழும் கூட்டம் நிறைந்த பொது இடங்களில் குண்டு வெடிப்புக்கள் நடத்தி அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.இத்தகைய குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 15 பேர் மரணமடைந்திருக்கின்றனர், 28 பேர் காயமடைந்திருக்கின்றனர். கடைசியாக கர்பி அங்லோங் மாவட்டத்தில் 8 இந்தி பேசும் தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA)யும் கர்பி லோங்க்ரி வடக்கு கச்சார் விடுதலை முன்னணியும் (KLNLF) சேர்ந்த தீவிரவாதிகள் இந்தத் தொழிலாளிகளை அவர்களது வீட்டிலிருந்து வெளியே இழுத்து தானியங்கி துப்பாக்கி முனையில் சுட்டுக் கொன்றுள்ளனர்.

மேலும்...India eNews - Terror run in Assam by militants, Hindi-speakers fresh targets

Tuesday, August 7, 2007

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தொற்று நோய்களால் அபாயம்

தெற்காசியாவில் சமீபத்தில் பெய்த அடைமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு, அடுத்த சில நாட்களில் அவசரகால உதவிகள் கிடைக்காவிட்டால், பல லட்சக்கணக்கான மக்கள் மலேரியா, டெங்குக் காய்ச்சல் போன்ற பல விதமான நோய்களால் பாதிக்கப்படக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கியுள்ள பல கிராமங்கள், மிகப் பெரிய சுகாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாக இந்தியாவில் இருக்கும் ஐ நா சபையின் குழந்தைகள் நிதியத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இந்திய மாநிலமான பீஹாரில் மட்டும், நிவாரணப் பணிகளைச் செய்வதற்கு மேலும் பல ஹெலிகாப்டர்கள் தேவைப்படுவதாகவும், வயிற்றுப்போக்கை தடுக்கக்கூடிய வாய்வழி திரவ மருந்துப் பாக்கெட்டுகள் குறைந்தது பத்து லட்சம் தேவை என்றும் ஐ நா சபை தெரிவித்துள்ளது.

வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் வெள்ளத்தின் உயரம் குறையத் துவங்கியிருந்தாலும், பல லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து மேடான பகுதிகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

தமிழ் பிபிசி

U.N. sees health crisis risk from South Asia floods | Top News | Reuters
Monsoon health crisis 'days away' - Weather - MSNBC.com
South Asian Flood Death Toll Hits 311
India, Nepal bicker over cause of flood

மதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக 'அட்டாக்' பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர். இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.

முந்தைய சற்றுமுன்: கருத்துக் கணிப்பு, தாக்குதல், கொலைகள் - விவாதம்

தினமணி

IBNLive.com > Top cop, 15 others charged for Dinakaran attack
DNA - India - 16 chargesheeted in Dinakaran attack case - Daily News & Analysis

கங்கையில் படகு மூழ்கியது: 80 பேர் பலி

பிகாரில் கங்கை ஆற்றில் 130 பேருடன் சென்ற படகு திங்கள்கிழமை மூழ்கியது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பேர் பலியாகினர். இன்னும் 100 பேரைக் காணவில்லை. அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

சைதாபாதிலிருந்து பதர்காட் நோக்கி படகு சென்று கொண்டிருந்தது. அப்போது கிழக்கு நோக்கி கடுமையான காற்று வீசியது. இதில் நிலைகுலைந்த படகு, நடு ஆற்றில் அப்படியே மூழ்கியது என சமஸ்திபூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் தெரிவித்தார்.

தினமணி

The Hindu : Front Page : 80 feared drowned in boat tragedy

Monday, August 6, 2007

மரம் கடத்தியவருக்கு மரண தண்டனை

வடகொரியாவில் அரசால் பாதுகாக்கப்பட்ட மரங்களை வெட்டிக் கடத்தியவர் பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தகவலை தென்கொரிய செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

'வடபாம்கியாங்க் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள யோன்சா என்ற கிராமத்தைச் சேர்ந்த மர வியாபாரியான மும்-ஹைக் என்பவர் வடகொரியாவில் அரசால் பாதுகாக்கப்பட்டு வந்த மரங்களை வெட்டி, சீனாவுக்குக் கடத்தியதாக புகார் எழுந்தது. விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை எனத் தெரிய வந்ததையடுத்து, ஜூலை 23-ம் தேதி பொதுமக்கள் முன்னிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் அவரது கூட்டாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது' என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு நிறைவேற்றப்பட்டத் தண்டனையை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1920 முதல் 1930-ம் ஆண்டு வரை வடகொரியா ஜப்பான் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அப்போது ஜப்பானின் அடக்குமுறையை எதிர்த்து சோசலிச வடகொரியாவின் நிறுவனர் எனப் போற்றப்படும் கிம் இல்-சங் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தார்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர், வனப்பகுதிகளில் உள்ள மரங்களில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் வாசகங்களை எழுதினார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அவரது வாசகங்கள் இடம்பெற்ற மரங்களை சோசலிச வடகொரியா பாதுகாத்து வந்தது. மேலும் அந்த மரங்களை 'சுலோகன் மரங்கள்' என்றும் அழைத்தது.

இந்த சுலோகன் மரங்களை வெட்டி சீனாவுக்குக் கடத்தியக் குற்றத்திற்காகத்தான் 5 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி

Slogan tree smuggler executed in N Korea
North Korea executes "slogan tree" smuggler: report

-o❢o-

b r e a k i n g   n e w s...