தேர்தல் கூட்டணி தொடர்பாக யார் வேண்டுமானாலும் என்னிடம் பேச வரலாம், நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
நாகர்கோவிலில் நேற்று நடந்த மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த விஜயகாந்த், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை மேற்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வருகிறது. இதில் நாங்கள் தனித்துத்தான் போட்டியிடுவோம்.
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட தனித்தே போட்டியிடுவோம். அதேசமயம், கூட்டணிக்காக யாராவது விரும்பினால் அவர்கள் தாராளமாக வந்து பேசலாம். யார் வேண்டுமானாலும் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக என்னுடன் பேசலாம்.
நான் யாரையும் எதிரியாகப் பார்க்கவில்லை. எந்த முடிவாக இருந்தாலும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிதானத்துடன் தான் எடுப்பேன் என்றார் விஜயகாந்த்.
"மேலும் செய்திக்கு தட்ஸ் தமிழ் "
Tuesday, April 3, 2007
ச: யாருடனும் கூட்டணிக்கு நான் ரெடி: விஜயகாந்த்
Posted by சிவபாலன் at 8:13 PM 9 comments
ச: BCCI க்கு போட்டியாக புதிய கிரிகெட் அணி - Zee Telefilms
Zee Telefilms நிறுவனர் சுபாஷ் சந்திரா BCCI க்கு போட்டியாக ஒரு புதிய கிரிகெட் அணியை உருவாக்கப் போகிறார். 100 கோடி முதலிட்டீல் துவங்க இருக்கும் இந்த கிரிகெட் அணியில் ஆட சில வீரர்களும் சம்மத்திது இருப்பதாக தெரிகிறது.
"மேலும் செய்திக்கு CNN-IBN "
Posted by சிவபாலன் at 8:02 PM 1 comments
ச: Monkey Falls இனி ஆண்களுக்கே
ஆழியாறு குரங்கு அருவியில் இனி ஆண்களை மட்டுமே குளிக்க அனுமதிப்பது பற்றி வனத்துறை பரிசீலிக்கிறது. புலியருவியில் பெண்கள் அனுமதிக்கப்படுவர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து சுமார் 5 கிமீ தொலை வில் உள்ளது குரங்கு அருவி (மங்கி பால்ஸ்). இங்கு சுற்றுலா பயணிகள் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தற் போது கோடை துவங்கி உள்ளதால், வனப்பகுதியில் தீ தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 30ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ஸ்ளப்பட உள்ளது.
வன உயிரின காப்பாளர் வரதராஜன் கூறியதாவது:
குரங்கு அருவியில் ஆண்க ளும் பெண்களும் சேர்ந்து குளிப்பதால் சில நேரங்களில் பிரச்னை ஏற்படுகிறது. புலி அருவியிலும் குளிக்க சுற்று லா பயணிகள் ஆர்வமாக உள்ளனர். அதற்கு அந்த இடம் போதுமானதாக உள் ளது. ஆகவே குரங்கு அருவி யில் ஆண்கள் குளிக்கவும், புலி அருவியில் பெண்கள் குளிக்கவும் ஒதுக்கீடு செய்ய லாம் என ஆலோசிக்கிறோம். இதுதொடர்பாக அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றார்.
- மாலை முரசு
Posted by சிவபாலன் at 7:11 PM 6 comments
ச: கிரிகெட்டை ஒழிக்க வேண்டும் - பாமக கழுதை ஊர்வலம்
இங்கிலாந்தில் பிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை ஒழிக்க வேண்டும். கபடி, சிலம்பாட்டம், வாள் சண்டை போன்ற தமிழ் வீர விளையாட்டுகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கோரி சென்னை மெமோரியல் ஹால் அருகே பா.ம.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிரிக்கெட் வீரர்கள் போல வேடமணிந்தவர்களை கழுதையில் ஊர்வலமாக வரச்செய்து எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.
- மாலை முரசு
Posted by சிவபாலன் at 6:56 PM 1 comments
ச: "தி.மு.க., வந்தாலே "கரன்ட்' இருக்காது'
"தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே கிராமப்புறங்களில், "கரன்ட்' இருக்காது என்ற பேச்சு பரவலாக உள்ளது. அந்த அளவுக்கு மின்வெட்டு பல இடங்களில் உள்ளது' என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., ராமசாமி பேசினார்.
சட்டசபையில் மின்துறையின் மீது நடந்த விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., ராமசாமி பேசுகையில், ""தி.மு.க., ஆட்சி வந்தாலே, "கரன்ட்' இருக்காது என்ற பேச்சு கிராமப்புறங்களில் வந்துவிடுகிறது. (உடனே, அ.தி.மு.க., உறுப்பினர்கள் மேஜையை தட்டி, சிரித்தனர்).
- தினமலர்
Posted by சிவபாலன் at 6:35 PM 7 comments
ச: டில்லியில் சார்க் அமைப்பின் 14வது உச்சி மாநாடு - மன்மோகன்சிங் உரை
சார்க் அமைப்பின் 14வது உச்சி மாநாட்டை டில்லியில் இன்று தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மர், பூடான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சார்க்< அமைப்பின் 14வது உச்சி மாநாடு டில்லியில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில், ஆப்கானிஸ்தான் சமீபத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டது. இம்மாநாட்டில் பங்கேற்க எட்டு நாடுகளின் தலைவர்களும், வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் இந்தியா வந்துள்ளனர். மேலும் சீனா, ஜப்பான்,தென்கொரியா, மாலத்தீவு, ஈரான் உள்ளிட்ட நாடுகள் பார்வையாளர்களாக கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மன்மோகன்சிங் , சார்க் நாடுகளிடையே பரஸ்பர நல்லுறவு மேம்பட வேண்டும் எனவும், இந்தியா வரும் சார்க் நாடுகளின் பொருட்களுக்கு தடை இல்லா வர்த்தகத்தை ஏற்படுத்தும் பொருட்டு இந்த ஆண்டின் இறுதிக்குள் சுங்க வரி ரத்து செய்யப்படும் எனவும், சார்க் நாடுகளுக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், நோயாளிகளுக்கு விசா விதிகள் தளர்த்தப்படும் எனவும், சார்க் நாடுகளின் தலைநகரங்களை இணைக்க விமான போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என உரையாற்றினார்.
தினமலர்
Posted by சிவபாலன் at 6:28 PM 0 comments
ச: அயர்லாந்து பயிற்சியாளர் ஆவேசம்
அயர்லாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு உரிய மரியாதையை பத்திரிகைகள் அளிக்காமல் இருப்பதாக அதன் பயிற்சியாளர் ஆட்ரியன் பிரல் கூறியுள்ளார்.
அயர்லாந்து அணி இன்று தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அயர்லாந்து பயிற்சியாளர் ஆட்ரியன் பிரல் கூறியதாவது: அயர்லாந்து கிரிக்கெட் வீரர்கள் ஏதோ கேளிக்கை நிகழ்ச்சிக்கு வந்திருப்பது போல பத்திரிகைகள் கருதுகின்றன.
சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், பத்திரிகைகள் உரிய மதிப்பு அளிக்கவில்லை. மற்ற அணியின் கிரிக்கெட் வீரர்கள் எங்களை அங்கீகரித்து வாழ்த்து தெரிவிக்கின்றன. ஆனால் பத்திரிகைகள் மட்டும் உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை.
"மேலும் செய்திக்கு மாலைச் சுடர்"
Posted by சிவபாலன் at 6:04 PM 1 comments
ச: விலைவாசி உயர்வுக்கு மாநில அரசே காரணம் - வைகோ
விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளின் தவறான அணுகுமுறையே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தால் கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் விலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்துவிட்டதாக கூறி மதிமுக அறப்போராட்டம் நடத்தும் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று சென்னை கலெக்டர் அலு வலகம் அருகே மதிமுக சார்பாக கண்டன அறப்போராட்டம் நடைபெற்றது.
"மேலும் செய்திக்கு மாலைச் சுடர்"
Posted by சிவபாலன் at 5:58 PM 0 comments
குமரி மாவட்டத்தில் பந்த் பஸ், ஆட்டோ ஓடவில்லை-கடைகள் அடைப்பு
இலங்கை கடற்படையால் குமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்புப் பேராாட்டம் நடத்தியதின் காரணமாக இம் மாவட்டத்தில் இயல்பு நிலை முடங்கிப் போயுள்ளது.
Posted by Adirai Media at 4:54 PM 0 comments
ரூ.1,100 கோடியில் நிலத்தடி மின் கேபிள் !
கோவை, மதுரை, திருச்சி,நெல்லை, சேலம் ஆகிய மாநகரங்களில் ரூ. 1,100 கோடியில் பூமிக்கடியில் மின் கேபிள் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்துள்ளார்.
மேலும் அறிய...
http://thatstamil.oneindia.in/news/2007/04/03/minister.html
Posted by Adirai Media at 4:41 PM 1 comments
ச: பொடா வழக்கிலிருந்து நெடுமாறன், சுப.வீ விடுதலை
பொடா வழக்கிலிருந்து நெடுமாறன், சுப.வீ விடுதலை
பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த பொடா வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்து இன்று பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13-ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது பொடா வழக்கு போடப்பட்டது.
அதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் பிணையில் வெளிவந்த பிறகும், பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது, ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கக் கூடாது, தடை செய்யப்பட்ட இயக்கங்களை பற்றி பேசக் கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என பல விதத் தடைகள் அவர்கள் மீது போடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்ததன் அடிப்படையில், தமிழக அரசு, பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறும் மனுவை அளித்தது.
அம்மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த பொடா சிறப்பு நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கில் சான்றுகள் உள்ளன என்ற அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த நிலையில் வழக்கை திரும்பப் பெற இயலாதெனக் கூறியது.
பின்னர், தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொடா மறு ஆய்வுக் குழு இவ்வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் வழக்கை அரசு திரும்பப் பெறலாம் என வாதிட்டார்.
அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட பொடா சிறப்பு நீதிமன்றம், இன்று, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகிய அனைவரையும் இவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
நன்றி: தென்செய்தி
Posted by முத்துகுமரன் at 3:06 PM 1 comments
ச: ஆஃப்கனில் கடும் நிலநடுக்கம், இந்தியா,பாக்.இல் அதிர்வுகள்
ஆஃப்கன் தலைநகர் காபுலில் இன்று காலை 8 மணியளவில் ஏற்பட்ட ரிக்டர் அளவில் 6.2 சக்திகொண்ட நிலநடுக்கம் ் மக்களை பீதியடையச் செய்தது. பொருள்,உயிர் சேதங்களைக் குறித்து இதுவரை தகவல் எதுவும் வரவில்லை. பூமியின் அடியே 200 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு கூறுகிறது.
தொடர்புள்ள செய்தி ... DNA - World - Daily News & Analysis
Posted by மணியன் at 2:17 PM 0 comments
ச: கோவளத்தில் திராவிட் !
நேற்று இந்திய கிரிக்கெட் காப்டன் (?) திராவிட் கேரளாவின் கோவளத்திற்கு மனைவி இரஜேதாவுடன் மனக்கவலைகளை தலை முழுக வந்தபோது எடுத்தப் படம்.
நன்றி: DNA
Posted by மணியன் at 2:02 PM 1 comments
சற்றுமுன்: குமரி மாவட்டத்தில் இன்று பந்த்!
சென்னை, ஏப்.3-: சிங்கள ராணுவத்தினரின் வெறியாட்டத்துக்கு பலியான 5 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும். முதல்-அமைச்சர் கருணாநிதி, சட்டசபையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சிங்கள கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து, தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் ஜெயக்குமார் (அ.தி.மு.க.), வேல்முருகன் (பா.ம.க.), ஜான் ஜோசப் (மார்க்சிஸ்ட் கம்நனிஸ்டு), சிவபுண்ணியம் (இந்திய கம்நனிஸ்டு) ஆகியோர் பேசினார்கள்.
இந்த விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-
குமரிக் கடலில் 5 மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது சிங்கள ராணுவ வெறியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட கொடுமை பற்றியும், அவர்களை இழந்த குடும்பங்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை பற்றியும் இங்கே உறுப்பினர்கள் விளக்கங்களை தந்திருக்கிறார்கள்.
அவையில் இருக்கின்ற அத்தனை பேருடைய குரலாக, தமிழகத்திலே இருக்கின்ற கோடானு கோடி மக்களின் குரலாக, உலகத்திலே பல்வேறு திசைகளிலே வாழ்கின்ற தமிழ் மக்களின் உள்ளத்தின் பிரதிபலிப்பாகத்தான் இந்தக் குரல்கள் இங்கே ஒலித்ததாக நான் கருதுகிறேன்.
ஏனென்றால் இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களுக்கு ஆபத்து- இங்கே இருக்கின்ற தமிழர்கள் இலங்கைக்குச் சென்றால் ஆபத்து- இப்படியரு சூழ்நிலை கடந்த பத்தாண்டு காலத்திற்கு மேலாக இருந்து வருகின்றது. இதற்கு விடியலே கிடையாதா என்று தான் அகில உலகத்திலே உள்ள எல்லா நாடுகளும் யோசித்து இதற்கொரு நல்ல தீர்வு நார்வே காணக்கூடும் என்று நம்பி அவர்களும் தூது வந்து பேசிப்பார்த்து, அந்தப் பேச்சு பயனளிக்காத ஒரு சூழ்நிலையில் மீண்டும் என்ன ஆகுமோ என்ற வினாக்குறி விசுவரூபமெடுத்த நிலையில் நாம் இன்றைக்கு இலங்கை ராணுவத்தால் நம்முடைய மீனவர்களுக்கு ஏற்பட்ட தொல்லை குறித்தும், இழப்பு குறித்தும், மரணம் குறித்தும் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்.
அரசியல் வாடையே வீசாமல் நாம் ஒரு நாட்டு மக்கள், இந்திய நாட்டு மக்கள், இந்திய நாட்டிற்கு ஒரு அறைகூவல் இன்றைக்கு இலங்கையிலிருந்து தொடர்ந்து விடப்படுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய கட்டத்திலே இருக்கிறோம் என்பதை மறந்து விட முடியாது. அப்படிப்பட்ட ஒரு சூழலிலேதான் ஐந்தாறு முறை நம்முடைய மீனவர்கள் தாக்கப்பட்டார்கள், அவர்களுடைய படகுகள் கவிழ்க்கப்பட்டன, ஒருசிலர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வரிசையாக, படிப்படியாக வந்தபோதுதான் நான் சொன்னேன்- இனியும் இதைப் பார்த்துக் கொண்டு எங்கள் கரங்கள் மீன்களை மாத்திரம் பிடித்துக் கொண்டிருக்காது என்று சொன்னேன்.
அதற்குக் காரணம் இனியும் இதைப் பொறுத்துக்கொண்டே இருந்தால், இன்னும் எத்தனை மீனவர்களைப் பலி கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான்.
அதுபற்றி பாரதப் பிரதமருக்கு, இந்திய அரசியலிலே ஈடுபட்டிருக்கின்ற மிக முக்கியமான இடத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கின்ற அலுவலர்களுக்கு, சோனியா காந்திக்கு கடிதங்களை எழுதி இதை உடனடியாகக் கவனிக்க வேண்டுமென்று நான் எடுத்துச் சொன்னபோதெல்லாம், அவர்களும் மிகுந்த அனுதாபத்தோடு அதற்குப் பதிலனுப்பியுள்ளனர்.
உச்சகட்டமாக ஐந்து மீனவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன் நான் அமைச்சர் சுரேஷ்ராஜனை அங்கே அனுப்பி வைத்து, ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அங்கே சென்று மீனவ மக்கள் எஞ்சியிருப்போரையெல்லாம் விசாரித்து நிலைமைகளைத் தெரிந்து கொண்டு, அந்த வட்டாரத்திலே உள்ள பாதிரிமார்கள், மற்றுமுள்ள கிறிஸ்தவ பெருமக்கள், மீனவப் பெருமக்கள் - அவர்கள் எடுத்துரைத்த முறையீடுகள், கோரிக்கைகளையெல்லாம் குறித்துக் கொண்டு வந்திருக்கிறார்.
முதலில் அந்தக் கோரிக்கைகளின் நியாயத்தை நாம் புரிந்து கொண்டு அதற்கேற்ப கடமைகளையாற்ற வேண்டும் என்பதற்காக அதை இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன். காணாமல் போன மீனவர்களைக் கண்டு பிடிக்க இனியேனும் அதிவேக விசைப்படகு மாவட்டத்திற்கென்று ஒன்று தனியாக வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். அதை மத்திய அரசோடு தொடர்பு கொண்டு உடனடியாகக் கொடுப்பதற்கு இந்த அரசு ஆவன செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு முன் வராவிட்டால் அந்த இயந்திரத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை அறிந்து மாநில அரசே அத்தகைய விசைப்படகினை வாங்கி அந்த மீனவர்களுக்கு வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர்கள் கடலில் செல்லும்போது அவர்களைத் தொடர்பு கொள்ள இன்றைக்குள்ள விஞ்ஞான தொழில் தட்பம் நிறைந்த கருவி, மற்றும் லைப் ஜாக்கெட் வழங்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். அந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படும். காணாமல் போன மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதியும், தளமும் தேவைப்படுகிறது என்று கேட்டிருக்கிறார்கள். அதுவும் உடனடியாக செய்து தரப்படும்.
தற்போது இறந்தவர்களின் குடும்பத்திலே உள்ள ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் சுரேஷ்ராஜன் தொலைபேசி வாயிலாக எனக்குத் தெரிவித்தவுடன், நான் தலைமைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டேன். அவரும் யார் யாருக்கு வேலை கொடுக்க இயலுமென்று குறித்துக் கொண்டு நாளையே வந்தால் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
கடல் நடுவே எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் அடிக்கடி கடலோரக் காவல்படை ஈடுபடவேண்டுமென்ற இந்தக் கோரிக்கையை நாம் தனியாக நிறைவேற்ற முடியாது. ஏனென்றால் நாம் மாநில அரசு. மத்திய அரசைக் கேட்டு, வலியுறுத்தி அதில் ஈடுபடுத்த வேண்டும். அப்படி ரோந்துப் பணியில் அடிக்கடி ஈடுபட்டு இந்தச் சிங்கள வெறியர்களைத் தடுத்து நிறுத்த ஆவன செய்யப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரோந்து பணி என்றதும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஏதோ நான் ரோந்து பணியில், சிங்கள ராணுவமும், நம்முடைய இந்திய ராணுவமும் சேர்ந்து ரோந்து நடத்தலாம் என்பதை ஒத்துக் கொண்டதாக ஒரு பிரசாரம் செய்யப்படுகிறது. நம்முடைய அமைச்சர் பெருமக்களும், கழக நண்பர்களும் பல்வேறு தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒரு நாள் இங்கேயுள்ள சிங்கள தூதுவர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவர்களை உள்ளே அழைத்து அந்த அதிகாரி பேசிய நேரத்தில்- அவர் தெரிவித்த கருத்து இது- நாம் கூட்டாக இருவரும் சேர்ந்து ரோந்து பணியாற்றலாம் என்று சொல்லியிருக்கிறோம், இந்திய அரசு இன்னும் அதற்கு சம்மதம் தரவில்லை என்று சொன்னார்.
அதை அமைச்சர்கள் வீராசாமியும், துரைமுருகனும் கேட்டு வந்து, நாங்கள் உள்ளே அழைக்கப்பட்டோம், இப்படிச் சொன்னார்கள் என்று சொன்ன போது, நான் அதற்கு எந்த சம்பந்தமும் தெரிவிக்காமல், நிருபர்களிடம் கூட இதைப்பற்றி முடிவெடுக்கவேண்டியது இந்திய அரசு தான் என்று சொன்னேன். இந்தக் கூட்டு எலியும், தவளையும் செய்து கொண்ட கூட்டாக ஆகிவிடக் கூடாது, அப்படிப்பட்ட கூட்டு முயற்சி, ராணுவங்கள் ஒன்றாக இந்தப் பணியிலே ஈடுபடுவது சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது, இதை மத்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டுமென்று தான் இறுதியாகச் சொல்லியிருக்கிறேன்.
ஆனால் நான் சொன்னதாக ஒரு கற்பனை இன்றைக்கு நாட்டிலே அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி விமர்சனங்கள் எல்லாம் செய்யப்படுகின்றன. நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் காரியத்தை - நான் நன்மை செய்ய வேண்டுமென்று கருதினால் - தமிழர்களுக்காகப் பாடுபட வேண்டும், தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும், அந்தப் பொறுப்பு இந்த அரசுக்கு உண்டு என்பதை நான் ஏற்றுக்கொண்டு பணியாற்றினால், அதற்கு குறுக்கே யார் வந்தாலும் நான் அதைப்பற்றிக் கவலைப்படாமல் என் வழியிலே சென்று கொண்டே இருப்பேன்.
இப்போது யார் சொன்னார்கள் என்று அல்ல - முதன் முதலில் ஜெயக்குமார் தான் சொன்னார், அந்தக் குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றார்- அதைத் தொடர்ந்து இங்கே உரையாற்றிய நண்பர்கள் எல்லோரும் அதையே சொன்னார்கள். இப்போது இதுபோல சம்பவங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவது தான் வழக்கம். விபத்து என்பதற்காக இரண்டு லட்ச ரூபாய் கொடுப்போம். இது விபத்தோடு இல்லை, இது வேண்டுமென்றே திட்டமிட்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி. நம்முடைய தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இதை விபத்தாக கருதாமல், உங்களுடைய வேண்டுகோள்படி, அல்லது உங்களுடைய ஆணைப்படி ஐந்து லட்ச ரூபாய் அந்தக் குடும்பங்களுக்கு தரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஞானசேகரன் பேசும்போது, ஒரு சிறு குழப்பம் ஏற்பட ஏதுவாயிற்று. அவர் சுட்டிக்காட்டியது - சிங்கள ராணுவத்திற்கு இந்திய ராணுவம் கைக்கூலியாக ஆகிவிட்டது என்று வந்துள்ள ஒரு செய்தியைப் பற்றிச் சொன்னார்கள். நான் இன்னொரு பத்திரிகையிலே பார்த்தேன். சிங்கள அதிபர் ராஜபக்சேயின் ஊதுகுழலாக ஆகிவிட்டார் கருணாநிதி என்று அவர்கள் எங்கேயோ சொன்னார்கள். நான் அதை இங்கே படித்துப் பதிவு செய்கிறேன், பரவாயில்லை, நான் சிங்கள சர்வாதிகாரிக்கு ஊதுகுழலாக ஆகி இங்கேயுள்ள தமிழர்களையெல்லாம் வதைப்பேன் என்று அதற்கான காரணமாக, கருவியாக இருக்கிறேன் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. பரவாயில்லை. சொன்னவர் பழைய நண்பர் தான், இன்னும் சொல்லப் போனால் பழைய தம்பி தான் சொல்லியிருக்கிறார், பரவாயில்லை, நான் விட்டு விடுகிறேன்.
ஆனால் ஒன்றை மறந்துவிடக் கூடாது. எல்லோரும் ஒன்றுபட்டு செய்ய வேண்டிய காரியங்கள் சில இருக்கின்றன. சில பொதுப் பிரச்சினைகள் இருக்கின்றன. இப்போது இட ஒதுக்கீடு என்றால் எல்லோரும் ஒன்று பட்டு செய்ய வேண்டிய காரியங்கள். காவிரி பிரச்சினை என்றால் எல்லோரும் ஒன்றுபட்டு செய்ய வேண்டிய காரியங்கள். அது போல தமிழன் கொல்லப்படுகிறான், தமிழனின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது என்றால், அவனை மீட்க வேண்டியது எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியங்கள். இதிலே ஒருவருக்கொருவர் நாம் மோதிக் கொண்டால், பொதுப் பிரச்சினை கெட்டு விடும் என்பதை மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இது ஏதோ சிங்களப் படைக்கு இந்திய ராணுவம் அடிமையாகி விட்டது, கூலியாகி விட்டது என்றால், ஏறத்தாழ நம்முடைய முன்னாள் முதலமைச்சர் அம்மையார் அவர்களைக் கேட்டால் - இது ஏறத்தாழ அந்தக் காலத்து திருமங்கலம் பேச்சுப் போலத் தான் என்று அவர்கள் சொல்லக்கூடும். அதையே கூட உதாரணமாக எடுத்துக் கொண்டு, இன்றைக்கு இருக்கின்ற மத்திய அரசு, அன்றைய முன்னாள் முதலமைச்சர், இதைக் கண்டிக்கவில்லையா, இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையா, அதே நடவடிக்கை நாங்கள் எடுத்தால் என்ன தவறா என்று கூட மத்திய அரசு கேட்கக் கூடும். அதற்கெல்லாம் இடம் தராமல் இப்போது எது குறி, எது தேவை, எது பிரச்சினை என்பதை மாத்திரம் பார்த்து, அதில் நம்முடைய கவனத்தைச் செலவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு இந்த ஒத்தி வைப்பு தீர்மானத்தை இந்த அளவோடு விவாதமின்றி முடித்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
நன்றி:- விகடன் டாட் காம்
Posted by - யெஸ்.பாலபாரதி at 12:38 PM 4 comments
ச: ஆஸ்திரேலிய கடற்கரைத் தீவுகளில் திடீர் சுனாமி
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாலமன் தீவுகளில் திங்கள் காலை உள்ளூர் நேரம் காலை 7:30 மணிக்கு, திடீரென தாக்கிய பசிபிக் பெருங்கடல் ஆழிப்பேரலையால், கிட்டத்தட்ட பதின்மூன்று பேர் மரணமடைந்தனர். முந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் அலையில் அடித்துச் செல்லப்பட்டதால், இறந்தவர் எண்ணிக்கை இன்னும் கூடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து நிமிடங்களுக்குள் பதினாறடி உயரத்திற்கு எழுந்த நீர்ச்சுவரானது, சிட்னி நகரின் பாண்டி (Bondy beach) கடற்கரை முழுவதும் நிறைந்துவிட்டது. ஹவாய் நகரத்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தில் சாலமன் தீவுகளுக்கான சுனாமி அபாயம் பதிவாகி இருந்தது. ஆழிப் பேரலைத் தாக்குதலுக்குப் பின்னர் தொடர்ச்சியாக ஆறு ரிக்டர் அளவிலான நில நடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன
Posted by பொன்ஸ்~~Poorna at 12:09 PM 0 comments
b r e a k i n g n e w s...