‘பத்து மாதம் கருவில் சுமந்த தாயை காலம் முழுவதும் சுமக்கிறோம். ஆனால், 10 வருடம் சுமக்கும் பள்ளியை மறந்து போகிறோம்’ என்ற முன்னுரையோடு தொடங்கும் படம். கிராமத்து பள்ளிக்கூடங்களின் நிலை, அதற்குள் உறங்கி கிடக்கும் உணர்வுகள், அதை வாழவைக்க நல்ல யோசனைப் பற்றி பேசுகிறது.
பல்லவமங்கலம் பச்சைமுத்து உயர்நிலை பள்ளியில் படிக்கும் நரேன் கலெக்டராகிறார், சீமான் சினிமா இயக்குனராகிறார், தங்கர் பச்சான் படிப்பு ஏறாமல் அதே ஊரில் கூலிக்காரராகிறார். சினேகா அதே பள்ளியில் ஆசிரியையாகிறார். போதிய பராமரிப்பின்மையாலும் சொத்துக்கு ஆசைப்படும் நிர்வாகியாலும் பள்ளி மூடப்படும் நிலை வருகிறது. இதனால் முன்னாள் மாணவர்களைத் திரட்டி அவர்களது நன்கொடை மூலம் பள்ளியை மூடாமல் தடுப்பது என்று முடிவு செய்யப்படுகிறது. முன்னாள் மாணவர்கள் பட்டியலிடப்படுகிறார்கள். கலெக்டர் நரேனை அழைத்து வரும் பொறுப்பை தங்கர் பச்சான் ஏற்றுக்கொண்டு கிளம்புகிறார். சென்ற இடத்தில் இயக்குனர் சீமானையும் சந்திக்கிறார். நரேன், சீமான் இருவருக்குமே கிராமத்தில் அழுத்தமான பிளாஷ்பேக் இருக்கிறது. அந்த உணர்வுகளையும், அதனால் ஏற்படும் சிக்கல்களையும் மீறி அவர்கள் பள்ளியை காப்பாற்றுகிறார்களா? என்பது கதை.
இனி சொந்த ஊருக்குச் செல்லும் ஒவ்வொருவரும் கும்பிடும் இடம் கோவிலாக மட்டும் இருக்காது, பள்ளிக்கூடமும் அதில் இணைந்திருக்கும். அதைச் செய்திருக்கிறது பச்சானின் இந்தப் பள்ளிக்கூடம்.
முழுவதும் படிக்க "தமிழ் முரசு" செல்லவும்.
Monday, August 13, 2007
"பள்ளிக்கூடம்" வி ம ர் ச ன ம்
Posted by சிவபாலன் at 9:25 PM 4 comments
ஷங்கர், விஜய்க்கு டாக்டர் பட்டம்
மதுரவாயலில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக் கழகம் இயகுநர் ஷங்கருக்கும் நடிகர் விஜய்க்கும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கவுள்ளது.
விஜய்க்கு டாக்டர் பட்டம் - சினி சவுத்
Posted by சிறில் அலெக்ஸ் at 7:54 PM 8 comments
புஷ்ஷின் 'வலது கை' பதவி விலகுகிறார்
புஷ்ஷின் நீண்ட நாள் ஆலோசகரும் வெள்ளை மாளிகையில் அதிபருக்கு அடுத்த அதிமுக்கிய உறுப்பினருமான கார்ல் ரோவ் தன் பதிவியிலிருந்து சுயவிலக்கம் செய்துள்ளார். தன் குடும்பத்திற்காக இதைச் செய்வதாகவும் தான் பதவி விலக கட்டாயப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் முடிவில் அவர் வெள்ளை மாளிகை பதவியிலிருந்து விடுப்பு பெறுவார். கார்ல் ரோவ் தன் அரசின் கொள்கைகளின் சிற்பி என அதிபர் புஷ்ஷினால் வர்ணிக்கப்பட்டவர். ்ஷஅ
புத்தகம் ஒன்றை எழுதுவதிலும் ஆசிரியராய் கல்வி புகட்டுவதிலும் நேரம் செலவிடப் போவதாக கார்ல் அறிவித்துள்ளார்.
Rove says he was not forced to quit
Karl Rove To Resign At End Of August
Posted by சிறில் அலெக்ஸ் at 7:45 PM 0 comments
ஆஸ்த்ரேலியாவில் இந்திய கலாச்சார விழா துவக்கம்
இந்தியாவின் 60ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு மிகப்பெரிய இந்திய கலாச்சாரத் திருவிழா நேற்று துவங்கப்பட்டது. இந்தக் கொண்டாட்டங்களை யுனைட்டட் இந்தியா அசோசியேஷன் ஒருங்கிணைத்துள்ளது.
Indian cultural fair kicked off in Australia The Hindu
Posted by சிறில் அலெக்ஸ் at 7:39 PM 0 comments
கர்நாடகாவில் 'எடுசாட்'
உயர்கல்வி மேம்பாட்டுக்கென செயற்கைகோள் வழி தொலை-விரிவுரைகளை வழங்கும் எடுசாட் திட்டத்தை ஐ.எஸ்.ஆர்.ஓ உதவியுடன் கர்நாடக அரசு இன்று துவங்கியது. முதல் கட்டமாக 102 கல்லூரிகளில் தொலை விரிவுரைகளைக் காணும் வசதி உருவாக்கப்படவுள்ளது இதில் 72ல் ஏற்கனவே இந்த வசதி நிறுவப்பட்டுள்ளது. மொத்தம் 349 கல்லூரிகள் இத்திட்டத்தால் பயன்பெறவுள்ளன.
Karnataka CM launches Edusat network to promote higher education Hindu
Karnataka CM launches Edusat network
Posted by சிறில் அலெக்ஸ் at 7:31 PM 0 comments
இந்தியா: ஆடைவடிவமைப்பாளர் தீயிட்டுக் கொலை
ஆகஸ்ட் 11,சனியன்று தில்லியில் 36 வயது தர்வீன் சூரி என்ர ஆடைவடிவமைப்பாளர் மீது இரு அடையாளம் காணப்படாத நபர்களால் அமிலம் மற்றும் மண்ணெண்ணெயால் நனைக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்டார். வசதியான கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வாழும் அவர் 80% தீக்காயங்களுடன் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கீழ் உடல்பகுதி முழுவதும் கருகியுள்ளநிலையில் அவர் உடல்நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளது.
தன்னுடைய கணவர் வீட்டினருடனும் தன்னிரு பெண்களுடனும் மகிழ்ந்திருந்த தர்வீன் வீட்டிற்கு இரவு 7.30 மணிக்கு நீலநிற பல்சர் பைக்கில் வந்த இருவர் அழுத்திய அழைப்புமணி சாவுமணியாக மாறியது. அழைப்புமணிக்காக கதவைத் திறந்தவரை வெளியே இழுத்து அமிலத்தையையும் கெரசினையும் கொட்டி தீக்குச்சியை கொளுத்திப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். தர்வீனுக்கு அவரது கணவர் நவீனுடன் இருந்த பிணக்கையொட்டி காவலர்களின் சந்தேகமும் விசாரணையும் தொடர்கிறது. சம்பவத்தன்று கோவாவில் இருந்த அவரின் அலுவலக தோழி இரச்னாவுடனான தொடர்பும் ஆராயப்படுகிறது.
India : Fashion designer doused in acid, burnt alive - Fashion News India
Posted by மணியன் at 6:43 PM 0 comments
மலேசியாபஸ் விபத்து:20 பேர் பலி
மலேசியாவின் புகிட் காங்டங் அருகே விரைவுவழித்தடத்தில் சென்ற பேருந்து ஒன்று சறுக்கி கவிழ்ந்ததில் 20 பேர் வரை மரணமடைந்துள்ளனர். இன்று காலை 4:45க்கு நடந்த இந்த விபத்தில் பத்தொன்பது பேர், ஏழு பெண்கள் உட்பட, சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் இறந்தனர். மேலும் ஆறுபேர் சிகிட்சை பெற்று வருகின்றனர். மலையின் இறங்குபாதையில் வந்துகொண்டிருக்கும்போது சாலையின் பிரிவுச்சுவரை இடித்து பேருந்து கவிழ்ந்ததாகக் காவலர்கள் கூறுகின்றனர்.
20 dead in Malaysian road accident- Hindustan Times
Posted by மணியன் at 6:26 PM 0 comments
சிபிஐ(மா) பொலிட்பீரோ வாரயிறுதியில் கூடுகிறது
இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் பின்னணியில் எழுந்துள்ள சர்ச்சையையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு (Politburo) வார இறுதியில் கூட்டப்படுகிறது. பிரதமருடன் எழுந்துள்ள மோதலுக்குப் பிறகு முழு அங்கத்தினர்களும் பங்கேற்கும் பொலிட் பீரோவின் கூட்டம் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இன்று பிரதமரின் உரையின் போது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இரு அவைகளிலும் வெளிநடப்பு நடத்தி தங்கள் எதிர்ப்பை தீவிரமாக தெரிவித்தன. இந்த உடன்பாட்டின் பின்விளைவுகளை தலைமைக்குழு ஆராயும் என சீதாராம் யெச்சூரி கூறினார். தவிர மக்களின் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியனவற்றை எவ்வாறு பிரச்சாரம் செய்து ஆளும் கூட்டணிக்கு தலைவலி ஏற்படுத்துவது என்பதும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
DNA - India - Meeting of top CPI(M) leadership this weekend - Daily News & Analysis
Posted by மணியன் at 6:01 PM 0 comments
ஐ.நா வலைத்தளத்தில் ஊடுருவல்
ஐக்கிய நாடுகள் சபையின் வலைத்தளத்தில் கட்டுப்பாட்டை மீறி ஹாக்கர்கள் ஊடுருவியுள்ளனர். இதனால் சில பக்கங்கள் அகற்றப்பட்டன. ஐ.நா, அமெரிக்கா மற்றும் இஸ்ராேலுக்கு எதிரான வாக்கியங்கள் ஐ.நா பொதுச்செயலாளருக்காக ஒதுக்கப்பட்டிருந்த பக்கங்களில் தெரிந்தன.
இந்த ஊடுருவலை 'இணையப் போராட்டம்' (cyberprotest) என இதைச் செய்தவர்கள் வர்ணித்துள்ளனர்.
UN's website breached by hackers BBC
Posted by சிறில் அலெக்ஸ் at 5:48 PM 0 comments
பெங்களூரில் சிறுநீரக திருட்டு அம்பலம்
ஏழை மக்களை ஏமாற்றி சிறுநீரகங்களை குறைந்த விலை கொடுத்து, போலி ஆவணங்கள் கொண்டு வாங்கி இலாபம் கண்ட கும்பலைச்சார்ந்த மூன்றுபேரை பெங்களூர் போலிஸ் இன்று கைது செய்துள்ளது. இன்னும் இரண்டு பெரும்புள்ளிகளைத் தேடிவருகிறது. இதுவரை இவர்கள் 30 சிறுநீரகங்களை வரை விற்றிருக்கலாம் என்றும், 50 முதல் 85 ஆயிரத்துக்கு சிறுநீரகத்தைப் பெற்றுவிட்டு 3 முதல் 4 இலட்சங்களுக்கு விற்பனை செய்வதாக அறியப்படுகிறது.
Kidney racket unearthed; 3 held in Bangalore The Hindu
Posted by சிறில் அலெக்ஸ் at 5:37 PM 0 comments
பெங்களூரு: கூட்டு தற்கொலை, மூன்று பள்ளி மாணவிகள் பலி
சனியன்று பத்தாம் வகுப்பு மானவிகள் திவ்யா,அம்மு,ஜயந்தி, ஹம்சவேணி என்ற நால்வரும் கூட்டுத் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து 10-11 மருந்துவில்லைகளையும் மூட்டைப்பூச்சி மருந்தையும் உட்கொண்டுள்ளனர். "எங்கள் மரணத்திற்கு யாரும் காரணமில்லை, நாங்கள் யாரையும் காதலிக்கவில்லை, யாரும் எங்களை ஏமாற்றவில்லை. நாங்கள் கூடி இறக்க விரும்புகிறோம். எங்கள் முழு சம்மதத்துடன் நாங்கள் இறக்கிறோம்" என தற்கொலை குறிப்பு எழுதிவைத்துள்ளனர்.அவர்கள் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மூச்சு திணறிக்கொண்டிருந்ததாக அவசர சிகிட்சைப் பிரிவு மருத்துவர் இரவீந்திரா கூறினார். அவர்களில் தற்போது ஹம்சவேணி மட்டுமே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். மற்ற மூவரையும் காப்பாற்றமுடியவில்லை.
அவர்களின் பெற்றோருக்கும் பள்ளிநண்பர்களுக்கும் இது பேரதிர்ச்சியையும் வியப்பையும் கொடுத்திருக்கிறது.அவர்களின் இந்த விபரீதப் போக்கிற்கு காரணம் காணமுடியாவிடினும் அவர்களது வறுமை பின்னணி யைக் கொண்டு தங்கள் பெற்றோரால் தங்களை மேற்படிப்பு படிக்க வைக்கமுடியாது என்ற அவர்களின் எண்ணமே இதற்கு உந்துவிசையாக அமைந்திருக்கலாம் என பலரும் கருதுகின்றனர்.
IBNLive.com > Mass suicide in Bangalore, 3 teenage girls dead : Bangalore, student suicide, Bapuji Memorial School
Posted by மணியன் at 5:17 PM 2 comments
இலண்டன்: பிக்பென் கடியாரத்திற்கு ஓய்வு
Photographs: Scott Barbour/Getty Images
இலண்டனின் நகரமக்களுக்கு பழக்கமான பிக்பென் கடிகாரத்தின் மணியோசை சனிக்கிழமை 8 மணிக்கு நின்றது. அடுத்த ஆறு வாரத்திற்கு பராமரிப்பு வேலைகளிற்காக நிறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் அதன் தென்மூலையில் ஏறி சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.2009 ஆண்டு கொண்டாடப்படவிருக்கும் அதன் 150 வருட ஆண்டுநிறைவிற்கு ஆயத்தமாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கடிகாரம் செப்.7.1859இல் நிறுவப் பட்டது.
rediff.com: Big Ben, London
Posted by மணியன் at 4:50 PM 0 comments
டாடா தொழிற்சாலை: இ.கம்யூ எதிர்ப்பு
ஆளும் கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பரந்த நிலப்பரப்பை கையகப்படுத்தி டாடாவின் டைடானியம் தொழிற்சாலை அமைவதை கடுமையாக எதிர்ப்பதாக அக்கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு திருச்சியில் நிருபர்களிடையே பேசும்போது கூறினார்.ஏன் பரந்த நிலப்பரப்பு ஒரு தனியார் நிறுவனத்திற்கு கையகப்படுத்தப்பட்டு கொடுக்கப்படவேண்டும் என்றும் நடுவண் அரசே ஏன் இத்திழிற்சாலையை நடத்தக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தங்கள் கட்சி ஏற்கெனவே சாத்தான்குளம், இராதாபுரம் பகுதி மக்களை சந்தித்து 'முதல் தகவல் அறிக்கை' தயாரித்திருப்பதாகவும் மக்களிடையே அச்சமும் குழப்பமும் நிரவி இருப்பதாகவும் அவர் கூறினார்.
கையகப் படுத்தவிருக்கும் 16,000 ஏக்கரா நிலப்பரப்பில் 315 ஏக்கராநிலம் மட்டுமே விளைநிலமென்ற அரசின் கூற்றை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
The Hindu News Update Service
Posted by மணியன் at 4:34 PM 0 comments
123 உடன்பாடு: பிரதமர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான அணுசக்தி உடன்பாட்டினால் நமது பாதுகாப்பு சுதந்திரம் பாதிக்கப்படாது என்றும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் எந்தவொரு இடையீடும் வராது என்றும் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் இன்று மக்களவையில் நிகழ்த்திய உரையில் கூறினார். பலத்த கோஷங்களுக்கிடையே தன் உரையை நிகழ்த்திய அவர் இந்திய அணுசக்தி பரிசோதனைகளையோ இராணுவ நடவடிக்கைகளையோ இந்த ஒப்பந்தம் பாதிக்காது என்றும் கூறினார்.் வெளியுறவுக் கொள்கையில் இந்திய அரசின் நேர்மைபற்றி மற்ற நாடுகள் வைத்திருக்கும் அளவாவது தம் அரசின் மீது குறைகாணுபவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டுமென்றார்.
அவரது உரையின் மற்ற விவரங்களுக்கு....The Hindu News Update Service
அவரது மக்களவை பேச்சின் முழு உரைவடிவம்:
Posted by மணியன் at 4:15 PM 0 comments
b r e a k i n g n e w s...