.

Monday, April 9, 2007

திண்டிவனம் வெடிவிபத்து - தேடப்பட்டவர் சரண்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செண்டூரில் கடந்த சனியன்று நிகழந்த ஜீப் வெடிவிபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்து முக்கிய குற்றவாளி சேகர் இன்று வேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
அவரை 15 நாள் காவலில் வைக்க வேலூர் மாவட்ட குற்றவியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ராஜ்நாத் சிங், அத்வானியை கைது செய்ய போலீசார் மறுப்பு.

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோரை கைது செய்ய லக்னோ போலீசார் மறுத்து விட்டனர். அக்கட்சியின் பிரச்சார சிடி விவகாரத்தின் எதிரொலியாக இன்று ராஜ்நாத் சிங், எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகிய தலைவர்கள் இன்று தானாக முன்வந்து ஹஸ்ராத்காஞ்ச் காவல் நிலையத்தில் கைதாக முற்பட்டனர். ஆனால், அவர்களை போலீசார் கைது செய்ய மறுத்தனர்.லக்னோவில் தானாக முன்வந்து கைதாக முற்பட்ட பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குடன் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கையா நாயுடு, நக்வி மற்றும் அருண் ஜெட்லி உள்ளிட்ட தலைவர்களும் சென்றிருந்தனர். இதுகுறித்து, டிஜிபி ஜி.எல்.ஷர்மா செய்தியாளர்களிம் கூறுகையில், இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் இல்லை என்பதால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், தான் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று கூறினார்.

'வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அரசு தத்தெடுக்கும்

வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அரசு தத்தெடுத்து தேவையான உதவிகளை செய்யும்' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்

மும்பை பெண் இந்திய அழகியாக தேர்வு

ஞாயிறு அன்று நடந்த பன்டலூன்ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் மும்பையைச் சேர்ந்த சாரா ஜேன் முதலிடத்தில் வந்தார். இவர் இந்தியாவிலிருந்து Miss World உலக அழகிப் போட்டிக்கு ்போட்டிக்கு அனுப்பப் படுவார். இரண்டாவதாக தில்லியைச் சேர்ந்த பூஜா குப்தா தேர்வானார். இவர் Miss Universe உலக அழகிப் போட்டிக்கு அனுப்பப் படுவார்.
மூன்றாவது இடம் பெங்களூருவைச் சேர்ந்த பூஜா சிட்கோபகருக்கு கிடைத்தது.


மேலும்..NDTV.com

தில்லி விமானவளாகத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து, பயணிகள் தப்பினர்

ஏர் இந்தியாவின் பாங்காக்- தில்லி விமானம் தரையிறங்கும்போது அதன் சக்கரப் பகுதி கோளாறை கவனித்த விமானியின் கோரிக்கையால் 'அவசரநிலை' அறிவிக்கப் பட்டு முழுபாதுகாப்புடன் இறக்கப் பட்டது. மெயின் தளத்தில் இறங்கியபிறகு அதனை டாக்ஸி பாதைக்கு கொண்டுசெல்ல முடியவில்லை. இதனால் 183 பயணிகளும் அவர்களின் உடமைகளும் ஓடுதளத்திலேயே இறக்கப் பட்டு பிறகு விமானம் டிராக்டர் உதவியால் தள்ளப் பட்டது. அப்போது அதன் முன்சக்கரம் (Nose wheel) ஒடிந்து ஓடுதளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் இந்த ஓடுதளத்தை மற்ற விமானங்கள் பயன்படுத்தமுடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மும்பையிலிருந்து பெரிய கிரேன்கள் வந்தபிறகே விமானத்தை அகற்ற முடியும். இன்று மாலை 3 மணிவரை இந்த நெரிசல் நீடிக்கும் எனத் தெரிகிறது.

Plane blocks runway at Delhi airport, causes delays | Reuters.com

The Hindu News Update Service

உலகக் கோப்பை - ஆஸி 7 விக்கெட்டில் வெற்றி

ஆஸ்திரேலிய காப்டன் ரிக்கி பான்ட்டிங்கின் அதிரடி 86 ஓட்டங்கள் இங்கிலாந்து அணியின் 248 ரன் வெற்றி இலக்கை ஒன்றுமில்லாததாகச் செய்துவிட்டது.
விவரங்களுக்கு..Moneycontrol India :: News ::

அரசியின் ஆலய தரிசனம்

இந்தியாவில் பிரபலமான விஷ்ணு ஆலயங்களில் ஒன்று பூரி ஜனன்நாதர் ஆலயம். ஒரிசா மாநிலத்தில் இது அமைந்துள்ளது. இன்று அந்த ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரு முக்கிய நிகழ்வுக்காகக் கூடினார்கள்.

அதாவது, பூரியின் மகாராணியார் தனது வாழ் நாளில் அந்த ஆலயத்துக்கு பிரத்தியேகமாக ஒரு தடவைதான் விஜயம் செய்ய முடியுமாம். அந்த தினம் இன்று; அதற்காகத்தான் பக்தர்கள் எல்லாம் இன்று அங்கு கூடியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்துக்கு பல லட்சக் கணக்கான இந்துக்கள் வந்து வழிபட்டுச் செல்வார்கள். ஆனால் பூரி ராஜகுடும்ப வழமைப் படி மகாராணியார், தனது வாழ் நாளில் ஒரு தடவை மாத்திரந்தான் அந்த ஆலயத்துக்குச் செல்ல முடியும்.

இந்த ஜகன்நாதர் ஆலயத்தில் இருந்து சுமார் 200 மீற்றர்கள் தூரத்தில் உள்ள தனது மாளிகையில்தான், பூரியின் மகாராணியான லீலாவதி பட்டமஹாதேவி கடந்த மூன்று தசாப்தமாக வாழ்ந்து வருகிறார்.

ஆனால் இன்றுவரை அவர் அந்த ஆலயத்தில் காலடி வைத்தது கிடையாது.

மகாராணியும், பூரியின் மஹாராஜாவான கஜபதி திவ்யசிங் தேவ் அவர்களும், இன்று, 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஆலயத்துக்கு விஜயம் செய்யும் போது, அவர்களுடன் இந்தியாவெங்கிலும் இருந்து வந்த இரண்டு டஜன் அரச குடும்ப உறுப்பினர்களும் அவர்களுடன் இணைந்து கொள்வார்கள்.

கோயிலுக்குள் சென்றவுடன் மஹாராஜா ராணிக்கு ஒரு பட்டுச் சேலையைச் தலையைச் சுற்றிவிட, அதன் பின்னர் அங்கு ஒரு சிறுவயதான அர்ச்சகர் மற்றும் ஒரு திருமணமான பிராமண குலப் பெண் ஆகியோரின் உதவியுடன் மஹாராணியார் அங்கு விளக்கை ஏற்றி வழிபாடு செய்வார் என்று கோயில் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பர்தா அணிந்த மஹாராணியின் இந்த விஜயத்தின் போது பொதுமக்கள் பார்வையில் அவர் படக் கூடாது என்பதற்காக, அவர் அங்கு விஜயம் செய்த 3 மணி நேரத்துக்கு, அந்த ஆலயம் பொதுமக்களுக்கு மூடப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினார்கள்.

ஏனைய அர்ச்சகர்களுக்கும் அப்போது அங்கு அனுமதி கிடையாது.

கடைசி மஹாராணி ஜகன்னாதர் ஆலயத்துக்கு விஜயம் செய்தது 1966 ஆம் ஆண்டாம்.

BBC-Tamil

-o❢o-

b r e a k i n g   n e w s...