இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. சாமுவேல்ஸ் 63 ரன்களும் சர்வான் 49 ரன்களும் எடுத்தனர். தான் ஆடிய முதல் பந்தில் சர்வான் கொடுத்த கேட்சை யூனிஸ்கான் தவறவிட்டது குறிப்பிடத்தக்கதாகும். பாகிஸ்தானின் இஃப்திகார் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
விரிவான ஸ்கோர்கார்ட்
Tuesday, March 13, 2007
மேற்கிந்தியத்தீவுகள் 241/9
Posted by மணிகண்டன் at 11:34 PM 0 comments
மலேசிய கோலாலம்பூர் உலகின் சிறந்த விமான நிலையம்
'ஏர்போர்ட் கவுன்சில் இன்டர்னேஷனல்'ஆண்டுதோறும் சிறந்த விமான நிலையங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.பல்வேறு பிரிவுகளில் விருதுகள் கொடுக்கப்படுகின்றன.
2006-ம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையத்துக்கான விருதுக்கு கோலாலம்பூர் விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டது.இவ்விருது,ஆண்டுக்கு ஒன்றைரை கோடியிலிருந்து இரண்டரை கோடி வரையிலான எண்ணிக்கை கொண்ட பயணிகளால் பயணம் செய்யப்படும் விமான நிலையத்துக்கான பிரிவில் மலேசியாவுக்கு வழங்கப்பட்டது.
மலேசியாவை அடுத்து அமெரிக்காவின் சான் டியாகோ விமான நிலையம் இரண்டாம் இடத்தையும்,சுவிட்ஸர்லாந்தின் சூரிச் விமான நிலையம் மூன்றாம் இடத்தையும் தட்டிச் சென்றன.
Yahoo - Tamil
Posted by சிவபாலன் at 10:34 PM 3 comments
பிரிட்டிஷ் ராணியுடன் ஷில்பா ஷெட்டி சந்திப்பு
"பிக் பிரதர்' தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ் பெற்றுள்ள பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி லண்டனில் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தை சந்தித்தார்.
அவருக்கு பேச்சாளர் என்ற பெருமையை பெற்றுத் தந்தது.
பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத், அவரது கணவர் பிலிப் முன்னிலையில் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் தின நிகழ்ச்சியில் பேசிய ஐந்து சொற்பொழிவாளர்களில் ஷில்பா வும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. "வெஸ்ட் மின்ஸ்டர் அபே'வில் நடந்த இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி இனப் பாகுபாடு, எய்ட்ஸ் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி உரையாற்றினார்.
உரை முடிந்ததும் ஷில்பா, எலிசபெத் மகாராணியை சந்தித்தார். அப்போது ஷில்பா அணிந்திருந்த குதியுயர்ந்த காலணியால் தவறி விழ இருந்தார். அச்சமயம் மகாராணியின் அருகில் இருந்த அவரது கணவர் இளவரசர் பிலிப், ஷில்பா ஷெட்டியை பார்த்து "கவனம்' என்று கூறினார்.
மாலைச் சுடர்
Posted by சிவபாலன் at 9:44 PM 0 comments
வள்ளுவர் கோட்டத்தில் ஜெயலலிதா உண்ணாவிரதம்
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை செயல்படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளாத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தும், இறுதித் தீர்ப்பை உடனடியாக மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் வருகிற 18.3.2007 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையிலும், 21.3.2007 புதன்கிழமை அன்று ஏனைய மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
18-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள உண்ணா விரதப் போராட்டத்திற்கு கழக பொதுச் செயலாளர் ஜெய லலிதா தலைமை ஏற்கிறார்.
- மாலை மலர்
Posted by சிவபாலன் at 9:24 PM 0 comments
எத்தியோப்பியாவில் பிணையக் கைதிகள் விடுவிப்பு
எத்தியோப்பியாவில் கடத்தப்பட்டு பிணையக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து தூதரகத்தின் பணியாட்கள் 12 நாட்களுக்குப்பின் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
Britons seized in Ethiopia freed
Posted by சிறில் அலெக்ஸ் at 9:18 PM 0 comments
துபாயில் சம்பள உயர்வு கேட்ட 250 பேர் சிறையில் அடைப்பு
துபாயில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊதிய உயர்வு கேட்டதற்காக 250 தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இனிமேல் ஐக்கிய அரபு நாடுகளுக்குள் நுழைய முடியாத அளவுக்கு அவர்கள் மீது பழி சுமத்தப்பட்டு தமிழகத்துக்கு அனுப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
துபாயில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக எந்தவித சம்பள உயர்வும் இல்லாமல் பணிபுரிந்த தமிழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் தமிழக முதல்வரும், இந்திய அரசும் தலையிட்டு எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
- மாலைமுரசு
Posted by சிவபாலன் at 9:07 PM 2 comments
190 போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா
இந்தியா 190 போர் விமானங்களையும் 80 ஹெலிகாப்டர்களையும் வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் இந்த ஆண்டு கையெழுத்து ஆகிறது. இந்த தகவலை விமானப் படை தலைமை தளபதி எஸ்.பி. தியாகி தெரிவித்தார்.
தென் பிராந்திய விமானப் படை தலைமையகத்தைப் பார்வையிட்ட விமானப் படை தலைமை தளபதி ஏர் சீப் மார்ஷல் எஸ்.பி. தியாகி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய விமானப் படைக்கு 126 போர் விமானங்களும் கூடுதலாக 40 சுகோய்-30 ரக விமானங்களும் வாங்கப்படும். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சிறந்த நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்படும். அதற்கான ஒப்பந்தம் இந்த ஆண்டே கையெழுத்து ஆகும்.
தினகரன்
Posted by சிவபாலன் at 8:32 PM 0 comments
சீனாவில் வலைப் பதிவர்களுக்கு கட்டுப்பாடு?
வளர்ந்துவரும் வலைப்பதிவர்களின் விகதத்தையும் அவரகள் பதியும் விதயங்களை கட்டுக்குள் வவக்கவும் சீன அரசு திட்டம் தீட்டவுள்ளது. 'இணையத்தின் அசுர வளர்ச்சி, அரசுக்கு புதிய சோதனையாக அமைந்துள்ளது' என்கிறார் சீனத்தின் ஊடகத்துறை இயக்குனர். குறிப்பாக சீனத்து வலைப்பதிவர்களை கட்டுப்படுத்தும் புதிய வரைமுறைகளை ஏற்படுத்தவுள்ளார்கள்.
China looks to rein in bloggers
Posted by சிறில் அலெக்ஸ் at 8:05 PM 0 comments
'இது புத்திசாலிக் குரங்கு'
Dinamani:
செஞ்சி அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வயிற்றில் காயத்துடன் ஒரு குரங்கு வந்தது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற காத்திருந்தவர்களை சீண்டி காயத்தைக் காண்பித்தது.
ஆனால் யாரும் மருந்து போடாததால் கட்டுப் போடும் அறைக்குள் சென்றது. பின்னர் காயத்துக்கு கட்டுப் போடும் மருத்துவமனை ஊழியர் சுப்பிரமணி, குரங்கின் காயத்துக்கு மருந்து வைத்து கட்டுப் போட்டார். எந்தவித சேஷ்டையும் செய்யாமல் அமைதியாக குரங்கு அங்கிருந்து சென்று விட்டது. குரங்கு கர்ப்பமாக உள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
Posted by Boston Bala at 8:01 PM 3 comments
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் புதிய இணைய தளம்
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) மேம்படுத்தப்பட்ட இணைய தளத்தை, அமைச்சர் பரிதி இளம்வழுதி துவக்கி வைத்தார்.
கடந்த 2001ம் ஆண்டு, சிஎம்டிஏவுக்கு புதிய இணைய தளம் தொடங்கப்பட்டது.
இது, தற்போது முற்றிலுமாக மாற்றி, புதிய வடிமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.சிஎம்டிஏவின் தற்போதைய தகவல்கள் உள்ளிட்ட அனைத்தும் மேம்படுத்தப்பட்ட இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன. கட்டடம் கட்டுவதற்கான விண்ணப்பங்களும், இந்த இணைய தளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
இணைய தள முகவரி: http://www.cmdachennai.org/
Posted by சிவபாலன் at 7:54 PM 2 comments
டாஸை வென்றது பாகிஸ்தான். மேற்கிந்தியத்தீவுகள் பேட்டிங் !
உலகக்கோப்பையின் முதல் போட்டி இன்று தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத்திவுகள் மோதும் இப்போட்டியில், பாகிஸ்தான் டாஸை வென்று மேற்கிந்தியத்தீவுகளை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
மேலும் விவரங்கள் விரைவில்..
Posted by மணிகண்டன் at 7:54 PM 0 comments
சில்வெஸ்டர் ஸ்டாலோன் மீது 'ஊக்கமருந்து' வழக்கு
ராக்கி பால்பொவா(Rocky Balboa) படப்பிடிப்புக்காக ஆஸ்த்ரேலியா சென்றபோது அங்கு தடைவிதிக்கப்பட்டிருந்த உடல்வளர்ச்சிக்கான ஊக்கமருந்தூகளை எடுத்துச் சென்றதாக சில்வெஸ்டர் ஸ்டாலோன் மீது ஆஸ்திரேலிய கஸ்டம்ஸ் செர்விஸ் வழக்கு தொடுத்துள்ளது. இந்த ஊக்க மருந்து 48வைல்களில் ஸ்டாலோன் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Posted by சிறில் அலெக்ஸ் at 7:49 PM 0 comments
சென்னையில் மேலும் 3 மேம்பாலங்கள்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வடசென்னையில் தங்கசாலை சந்திப்பு (மின்ட்), பேசின் பாலம் சந்திப்பு ஆகிய இடங்களிலும், தென்சென்னையில் மயிலாப்பூர் லஸ் சாலை சந்திப்பிலும் புதிதாக மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தினகரன்
Posted by சிவபாலன் at 7:33 PM 0 comments
மூன்று இந்தியருக்கு அமெரிக்க வாரண்ட்
அமெரிக்க வர்த்தக நிறுவனங்களின் கணினிகளை கட்டுடைத்ததாகவும் பல மிலியன் டாலர் வரை சந்தைபங்குகளின் மதிப்பை அதிகரித்ததாகவும் சென்னையைச் சேர்ந்த ஜெய்சங்கர் மாரிமுத்து(வயது 32) , சொக்கலிங்கம் இராமநாதன் (33) மற்றும் மலேசியாவில் வாழும் திருஞானம் இராமநாதன் (34) ஆகியோர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவில நடந்த இணையக் குற்றங்களுக்கு வெளிநாட்டில் கைது செய்யப் படுவது இதுவே முதல் முறையாகும்.்
DNA - World - Three Indians charged with hacking into US brokerage accounts - Daily News & Analysis
Posted by மணியன் at 5:46 PM 0 comments
கேரள அரசு சிபல் பேச்சுக்கு எதிர்ப்பு
கேரளா இயற்கைபேரழிவு ஏற்படக்கூடிய நிலப்பரப்பல்ல என மத்திய அறிவியல்நுட்ப அமைச்சர் கபில் சிபல் கூறியதிற்கு கேரள அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது. விஞ்ஞானிகளி நுட்பவியலாரும் கேரளா நிலநடுக்கங்களுக்கு ஆட்பட வாய்புள்ள நிலப்பரப்பாக பரிந்துரைப்பதை மாநில வருவாய்துறை அமைச்சர் கேபி இராஜேந்திரன் சட்டமன்றத்தில் கூறினார்.
The Hindu News Update Service இன் மேல் விவரம்.
Posted by மணியன் at 5:28 PM 0 comments
தர்மபுரி: 25 பேருக்கு ஜாமீனில் விடுதலை
இன்று சென்னை உயர்நீதிமன்றம் தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் ஏழு வருடம் கடுங்காவல் தண்டனை பெற்ற 25 பேருக்கும் அந்த தண்டனையை நிறுத்திவைக்கவும் ஜாமீனில் வெளிவரவும் உத்தரவிட்டுள்ளது.
IBNLive.com : CNN-IBN
Posted by மணியன் at 4:56 PM 0 comments
சவுதியில் தனியார் வானொலி நிலையங்கள்
கூடிய விரைவில் சவுதியில் தனியார் வானொலி நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Saudi Arabia to allow private radio stations
Saudi Arabia will soon allow private Radio stations with the Government completing a study on how much investments can be allowed into the sector.
The study was carried out by the Ministry of Culture and Information in association with the Saudi Arabian General Investment Authority.
"We are now in the final stage of announcing how such investments can be made, especially in radio stations," Culture and Information Minister Iyad Madani said.
"The ministry will set out a regulatory framework for private participation," Madani said.
Posted by சிறில் அலெக்ஸ் at 4:52 PM 0 comments
ஏப்ரல் 2008ல் பெங்களூரு பன்னாட்டு விமானநிலையம்
ஏப்ரல் 2, 2008ல் பெங்களூரில் பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ப்ரஃபுல் படேல் அறிவித்துள்ளார்.
New international airport at Bangalore soon
A new international airport at Bangalore will open for operations in less than 13 months from now, Civil Aviation Minister Praful Patel informed the Rajya Sabha today.
"The opening date of the new international airport at Bangalore, as fixed by the Bangalore International Airport Ltd, is April 2, 2008," he said in a written reply to a question.
He said the Karnataka government has suggested the new airport be known as Bangalore International Airport.
"As a matter of general policy, the name of the city is retained for naming the airport since passengers and visitors in general, and foreign tourists in particular, find it easier to identify the airport when it is named after the city it services," Patel said.
Posted by சிறில் அலெக்ஸ் at 4:45 PM 0 comments
நாடாளுமன்றத்தில் திமுக கம்யூ தோழர்களிடையே் கைகலப்பு
தமிழகத்தில் கப்பல்துறை பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டவரைவை கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி ஆர் பாலு முன்மொழியத்தயாரான போது இடது சாரி உறுப்பினர்கள் மன்ற முற்றத்தில் ( Well of the House) ஒருமித்து அவரை பேசவிடாமல் தடுத்தனர். மற்ற திமுக அமைச்சர்கள் டி ஆர் பாலுவை சூழ்ந்து கொண்டு அரண் எழுப்பினர். மன்றக் காவலர்கள் இடதுசாரி உறுப்பினர்களை வெளியேற்றியபின் அவை 1300 மணிவரை ஒத்தி வைக்கப் பட்டது.
Sahara Samay:: செய்தி
Posted by மணியன் at 4:00 PM 1 comments
சென்னையில் பரவுகிறது சின்னம்மை
சென்னை, மார்ச் 12: சென்னையில் சின்னம்மை ('சிக்கன்பாக்ஸ்'), தட்டம்மை ('மீஸில்ஸ்') பரவத் தொடங்கியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையில் சின்னம்மை - தட்டம்மையால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அலோபதி மருத்துவத்தில் தற்போது அம்மை நோயைக் குணப்படுத்த நல்ல மருந்து உள்ளது.
'ஏசைக்ளோவிர்' என்ற பொதுப் பெயர் கொண்ட மாத்திரையை தொடர்ந்து 5 நாள்களுக்குச் சாப்பிட்டால் அம்மை நோய் குணமாகும். இந்த மாத்திரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. அம்மையின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு 5 வேளைகள் வீதம் தொடர்ந்து 5 நாள்களுக்கு இந்த மாத்திரையைச் சாப்பிட்டால் அம்மை மறையும். இத்துடன் வைட்டமின் ஏ சத்து மாத்திரையும் தரப்படும்.
Posted by Boston Bala at 5:48 AM 3 comments
திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுமா?
வீரர்கள் 'ரெடி'; ஸ்டேடியம் 'நாட் ரெடி'
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மைதானங்களில் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளன. இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இது குறித்து மைதானங்கள் மேம்பாட்டு இயக்குநர் டான் லாக்கர்பீ செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
அனைத்து மைதானங்களும் இன்னும் முழுமையாகாமல் இருப்பது எனக்கு மனவருத்தத்தை அளிக்கிறது.
- கென்சிங்டன் ஓவல்,
- கிரெனடா,
- ஆன்டிகுவா,
- கயானா
ஆகிய இடங்களில் உள்ள மைதானங்கள் விரைவில் தயார் செய்யப்படும் என்றார் அவர்.
லீக் சுற்று போட்டிகள் நடைபெறவுள்ள செயின்ட் கிட்ஸ், குயின்ஸ் பார்க் ஓவல், செயின்ட் லூசியா ஆகிய மைதானங்கள் புத்தாக்கம் செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளன.
சூப்பர்-8 போட்டிகள் நடைபெறவுள்ள ஆன்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், கயனா தேசிய ஸ்டேடியம் ஆகியவைகளும் தயாராக உள்ளன.
Posted by Boston Bala at 5:45 AM 1 comments
b r e a k i n g n e w s...