.

Showing posts with label நாடாளுமன்றம். Show all posts
Showing posts with label நாடாளுமன்றம். Show all posts

Thursday, August 30, 2007

அணுசக்தி ஒப்பந்தம்: 6 வினாக்கள் கேட்கும் இந்திய கம்யூனிஸ்ட்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து இதுபற்றி ஆலோசிப்பதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு ஆதரவை இப்போது வாபஸ் பெறுவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளனர்.

இருந்தாலும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசிடம் 6 விளக்கங்களை கேட்க இந்திய கம்யூனிஸ்டு முடிவு செய்துள்ளது.

1. அணுசக்தி 123 ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்கு என்ன பயன்கள் ஏற்படும் இதன் விளைவு என்ன?

2. அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படுமா?

3. ஒப்பந்தத்தில் இந்தியாவில் சொந்த அணுசக்தி திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? குறிப்பாக அணு ஆயுதம் தொடர்பாக என்ன விளைவு ஏற்படும்?

4. இதனால் இந்தியா- மேற்கு ஆசியா, 3-ம் உலக நாடுகள் இடையே பாதிப்பு ஏற்படுமாப அணி சேரா கொள்கை என்ன ஆகும்?

5. இந்த ஒப்பந்தத்தால் நமது மின்சார தேவை எந்த அளவுக்கு பூர்த்தியாகும். இது பொருளாதார ரீதியில் லாபம் தரக்கூடியதா?

6. இது பாதுகாப்பான ஒப்பந்தம்தானா?

மாலைமலர்

Cong likely to freeze nuke deal temporarily - Newindpress.com
Govt bows to Left, will go slow on nuclear deal

Wednesday, August 22, 2007

நாடாளுமன்றத்தில் ஜப்பான் பிரதமர்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் இணைந்த கூட்டத்தில் ஜப்பானின் பிரதமர் சின்சோ அபே இன்று உரையாற்றினார். அணுசக்தி எரிபொருள் விற்கும் குழுமத்தைச் சேர்ந்த ஜப்பானின் பிரதமர் இவ்வாறு இந்த நேரத்தில் உரையற்றியது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இடதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி இருநாட்டு பிரதமர்களின் பேச்சுவார்த்தையில் அணுசக்தி ஒத்துழைப்பு முக்கிய இடம் வகிக்கும். பொருளாதார பங்கீடல் மற்றும் தில்லி- மும்பை தொழிற்தடம் திட்டத்திற்கு பண உதவி ஆகியவை குறித்து அபேயின் தற்சமய வருகையின்போது முடிவெடுக்கப்படும்.

NDTV.com: Japan PM addresses Parliament

Tuesday, August 14, 2007

மக்களவையில் அமளி: தெற்கு இரயில்வே பிரிவினை

இன்று கேரள எம்பிக்கள் மக்களவையில் தெற்கு இரயில்வேயின் நிர்வாக சீரமைப்பு குறித்து ஏற்படுத்திய அமளியை அடுத்து அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அவையை 20 நிமிடங்களுக்கு தள்ளிவைத்தார். கேள்விநேரத்தை இரத்து செய்து இப்பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் எழுப்பிய கோரிக்கையை நிராகரித்த அவைத்தலைவர் அவர்களது நடத்தையை கடுமையாக விமரிசித்தார்.

மேலும் ...The Hindu News Update Service

Monday, August 13, 2007

123 உடன்பாடு: பிரதமர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான அணுசக்தி உடன்பாட்டினால் நமது பாதுகாப்பு சுதந்திரம் பாதிக்கப்படாது என்றும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் எந்தவொரு இடையீடும் வராது என்றும் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் இன்று மக்களவையில் நிகழ்த்திய உரையில் கூறினார். பலத்த கோஷங்களுக்கிடையே தன் உரையை நிகழ்த்திய அவர் இந்திய அணுசக்தி பரிசோதனைகளையோ இராணுவ நடவடிக்கைகளையோ இந்த ஒப்பந்தம் பாதிக்காது என்றும் கூறினார்.் வெளியுறவுக் கொள்கையில் இந்திய அரசின் நேர்மைபற்றி மற்ற நாடுகள் வைத்திருக்கும் அளவாவது தம் அரசின் மீது குறைகாணுபவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டுமென்றார்.
அவரது உரையின் மற்ற விவரங்களுக்கு....The Hindu News Update Service

அவரது மக்களவை பேச்சின் முழு உரைவடிவம்:

Friday, August 10, 2007

ஓட்டுப்போடுவது எப்படி?- எம்.பி.க்களுக்கு பாடம் நடத்திய சோனியா

கடந்த முறை ஜனாதிபதி தேர்தலின் போது எம்.பி.க்கள் பலர் செல்லாத ஓட்டுக்கள் போட்டு விட்டனர். காங்கிரஸ் கூட்டணியில் 6 ஓட்டுகளும், பாரதீய ஜனதா கூட்டணியில் 2 ஓட்டுகளும் செல்லாத ஓட்டுகளாகி விட்டன. எம்.பி.க்களுக்கு ஓட்டுப்போடுவது பற்றி முறையான பயிற்சி அளிக்கப்படாததால் காங்கிரஸ்கட்சி 6 ஓட்டுகளை இழக்க நேரிட்டது.

இதனால் இந்த முறை துணை ஜனாதிபதி தேர்தலில் செல்லாத ஓட்டுகளை தடுக்க காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியே தனது கட்சி எம்.பி.க்களுக்கு பாடம் நடத்தினார்.

இதற்காக அவர் ஒருநாள் முழுவதும் செலவழித்தார். மாநில வாரியாக எம்.பி.க்களை வரவழைத்து ஓட்டுப்போடு வது பற்றி சொல்லி கொடுத்தார். துணை ஜனாதிபதி தேர்தலுக்கு அச்சடிக்கப்பட்டுள்ள ஓட்டுச் சீட்டு போல மாதிரி ஓட்டு சீட்டுகளை சோனியா காந்தி கையில் வைத்திருந்தார்.

அதில் காங்கிரஸ் வேட்பாளர் ஹமீத்அன்சாரியின் பெயர் எங்கு இடம்பெற்றுள்ளது. எம்.பி.க்கள் எந்தமுறை யில் எப்படி முத்திரையிட வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி சொல்லித் தந்தார். அனைத்து எம்.பி.க்களுக்கும் இது போல் பாடம் நடத்தினார்.

மேலும் வரைபடம் மூலமும் எம்.பி.க்களுக்கு விளக்கினார்.

ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்களுக்கும் பாடம் நடத்த அவர் 5 நிமி டங்கள் முதல் 6 நிமிடங்கள் வரை எடுத்துக்கொண்டார்.

இதுபற்றி மேற்கு வங்கா ளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர்சவுத்திரி கூறு கையில், சோனியாகாந்தி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி ஓட்டுப் போடுவது பற்றி சொல்லிக் கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

இதுபோல் பாரதீய ஜனதா எம்.பி.க்களுக்கு சுஷ்மா சுவராஜ் பாடம் நடத்தினார் மாணவர்களுக்கு ஆசிரியை பாடம் சொல்லிக் கொடுப்பதுபோல் எம்.பி.க்களுக்கு ஓட்டுப்போடுவது பற்றி சொல்லிக் கொடுத்தார்.

இதுபற்றி சுஷ்மாசுவராஜ் கூறுகையில், நாங்கள் ஒரு ஓட்டை கூட இழக்கவிரும்பவில்லை. இதனால் செல்லாத ஓட்டு விழாத வகையில் ஓட்டுப்போடுவது பற்றி எம்.பி.க்களுக்கு சொல்லி கொடுத்தோம் என்றார்.

மாலைமலர்


V-P polls: Sonia says vote carefully - India - The Times of India

Tuesday, August 7, 2007

தொகுதி சீரமைப்பு பட்டியல் திருவள்ளூர்-காஞ்சீபுரம் புதிய எம்.பி.தொகுதி - 11 தொகுதிகள் பெயர் மாற்றம்

மக்கள் தொகை அடிப் படையில் நாடு முழுவதும் பாராளுமன்ற, சட்டசபை தொகுதிகளை மாற்றியமைக்கும் பணி கடந்த 1 வருடமாக நடந்தது. தேர்தல் கமிஷன் நியமித்துள்ள தொகுதி சீரமைப்பு ஆணையம் இதற்கான பணிகளை மேற்கொண்டது.

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை எண்ணிக்கை 6 கோடியே 24 லட்சத்து 5 ஆயி ரத்து 679 பேர் உள்ளனர். ஒரு தொகுதிக்கு 2 லட்சத்து 66 ஆயிரத்து 691பேர் என்ற அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் மற்றும் 39 பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்ற மும் இல்லை.

மாற்றாக உருவாகும் எம்.பி. தொகுதி களின் பெயர்களும், அதில் அடங்கி உள்ள எம்.எல்.ஏ. தொகுதிகளும் வருமாறு:

1. காஞ்சீபுரம் (தனி)
செங்கல்பட்டு, திருப் போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திர மேரூர், காஞ்சீபுரம்.

2. திருவண்ணாமலை
ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் (பழங்குடி தொகுதி).

3. திருவள்ளூர் (தனி)
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவாலங்காடு (தனி), திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர்.

4. ஆரணி
போளூர், ஆரணி, செய் யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம்.

5. விழுப்புரம் (தனி)
திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, முகையூர், ரிஷிவந்தியம்.

6. கள்ளக்குறிச்சி (தனி)
சின்னசேலம், கள்ளக்குறிச்சி (தனி) கங்காவள்ளி (தனி), ஆத்தூர், வாழப்பாடி (தனி), திட்டக்குடி (தனி).

7. நாமக்கல்
வீரபாண்டி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி- பழங்குடி), நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு.

8. ஈரோடு
குமாரபாளையம், ஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு), மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம்.

9. தேனி
சமயநல்லூர் (தனி), உசி லம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரிய குளம் (தனி), போடி நாயக்கனூர், கம்பம்.

10. தூத்துக்குடி
விளாத்திக்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி.

11. கன்னியாகுமரி
கன்னியாகுமரி, நாகர் கோவில், குளச்சல், திருவட் டாறு, விளவங்கோடு, கிள்ளியூர்.

நீக்கப்பட்ட பெயர்
11 தொகுதி புதிய பெயர்களு டன் உருவாக்கப்பட்டுள்ளதால் நீக்கப்பட்ட தொகுதி பெயர்கள் வருமாறு:

1. செங்கல்பட்டு
2. திருப்பத்தூர்
3. வந்தவாசி
4. திண்டிவனம்
5. ராசிபுரம்
6. திருச்செங்கோடு
7. பழனி
8. பெரியகுளம்
9. மயிலாடுதுறை
10. திருச்செந்தூர்
11. நாகர்கோவில்

மாலைமலர்

Thursday, July 26, 2007

கனிமொழி,இராஜா எம்பியாக உறுதிமொழி எடுத்தனர்

தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று மாநிலங்களவையின் உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.பிரதமர், முதல்வரோடு அனைத்து தி முக மத்திய அமைச்சர்களும் விழாவில் பங்கேற்று அவரை வாழ்த்தினார்கள்.
அவருடன் திருச்சி சிவாவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி இராஜாவும் மாநிலங்களவை துணைத்தலைவர் இரகுமான்கான் அறையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஜி கே வாசன், நாடாளுமன்ற செயல்துறை அமைச்சர் தாஸ்முன்ஷி, அஹ்மத் படேல் ஆகியோரும் உடனிருந்தனர்.


NDTV.com: Kanimozhi, D Raja take oath

Saturday, July 14, 2007

ஆதாயம் தரும் பதவி:பாஜ எம்பி பதவி பறிப்பு

ஆதாயம் தரும் இரட்டை பதவியை வகித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக-வின் கிருஷ்ண முராரி மொகேவின் எம்பி பதவியை பறித்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நடவடிக்கை எடுத்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான இவர், அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான மாநில நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

அரசியல் சட்ட விதிகளின் கீழ் ஆதாயம் தரும் இரண்டு பதவிகளை ஒரேநேரத்தில் கிருஷ்ண முராரி வகித்து வந்ததாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜமுனா தேவி, குடியரசுத் தலைவருக்கு புகார் அனுப்பியிருந்தார்.

- MSN INDIA

BJP loses strength ahead of presidential poll- Hindustan Times
Kalam’s nod to Moghe disqualification

Wednesday, June 20, 2007

ராகுல்காந்தியின் 37 வது பிறந்தநாள்

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல்காந்தியின் 37 வது பிறந்தநாள் விழாவை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை கொண்டாடினர் அக் கட்சியினர். காங்கிரஸ் கட்சித் தலைவரும் ராகுல்காந்தியின் தாயாருமான சோனியாகாந்தியின் வீட்டின் முன் கட்சியினர் ஏராளமானோர் ஒன்று கூடி அமேதி தொகுதி எம்பி ராகுலின் பிறந்த நாளை கொண்டாடினர்.

ஆனால் ராகுல் தில்லியில் இல்லை. கடந்த ஆண்டு தனது பிறந்தநாள் அன்று தில்லியில் இருந்தபோதிலும் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியினரை சந்திக்கவில்லை. ராகுலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய இளைஞர்கள் காங்கிரஸ் கட்சி நடத்திய விழாவில் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் உள்பட மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி

Thursday, June 7, 2007

அரசுப் பணத்தில் கோயில் கட்ட பணம் கொடுத்த எம்.பி.

சண்டிகர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் பவன்குமார் பன்சால். காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் நிதித்துறைத் துணை அமைச்சராகவும் இருக்கிறார். நாடாளுமன்ற உறுப் பினர் எனும் முறையில் தொகுதி மேம்பாட்டுக்குச் செலவு செய்திட ஒதுக்கப் பட்ட தொகை இரண்டு கோடி ரூபாயில் விதிமுறைகளை மீறிக் கோயில் கட்ட எட்டு லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்தக் காரியங்களுக்கு இந்த நிதியைப் பயன் படுத்தக்கூடாது என்பதே இணைப்பு II-ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டியலின் 13 ஆம் வரிசை எண் "மத வழிபாட்டு இடங்களில் அல்லது மத நம் பிக்கைக் குழுவுக்குச் சொந்தமான இடங்களில் எந்தப் பணியும் மேற்கொள்ளப்படக் கூடாது" என்று தெளிவாக வரையறை செய்துள்ளது.

இதைமீறி இவர், சாமுண்டா தேவி எனும் கோயிலின் மதில் சுவரை வலுப்படுத்துவதற்காகச் செலவு செய்திட ஒதுக்கினார்.

இதோ, ஒரு திருமங்கை ஆழ்வார்; மற்றுமொரு மாணிக்க வாசகர் - விடுதலை

Sunday, May 27, 2007

மாநிலங்களவைக்கான அ தி மு க வேட்பாளர்கள் -

ஜூன் 15ல் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்கான அ தி மு க வேட்பாளர்களாக மைத்ரேயனும், இளவரசனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1999ல் பா ஜ க விலிருந்து தி மு க கூட்டணியை எதிர்த்து வெளியேறி அ தி மு க வில் சேர்ந்த மைத்ரேயன் 2002ல் அ தி மு க சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர்.

இளவரசன் என்பவர் பெரம்பலூர் மாவட்ட கட்சி செயலாளர்.

உதகையிலிருந்து திரும்பியுள்ள ஜெயலலிதா இதை அறிவித்துள்ளார்.
முன்னதாக, கனிமொழியை வேட்பாளராக அறிவித்துள்ள தி மு க வின் முடிவைப் பற்றி பிறகு கருத்து சொல்வதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

The hindu News updation

Monday, May 7, 2007

ச:போலி என்கௌன்டர் வழக்கு: நாடாளுமன்றம் அமளியால் தள்ளி வைப்பு

குஜராத் போலி துப்பாக்கிசூடு விவகாரத்தினால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸும் இடதுசாரி கட்சிகளும் குஜராத் முதல்வர் மோடியின் பதவி விலகலைக் கோரி அவைநடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் அவை நடைவடிக்கைகள் ஒத்திவைக்கப் பட்டன.

News From Sahara Samay:: Parliament adjourned over Guj fake encounter

-o❢o-

b r e a k i n g   n e w s...