.

Wednesday, May 9, 2007

ச:'அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும்' - ஜெயலலிதா

சட்ட ஒழுங்கை காக்கத் தவறியதாற்காக தி.மு.க அரசு கலைக்கப்படவேண்டும் என ஜெயலலிதா அறிக்கைவிட்டுள்ளார். மதுரையில் நடந்த தினகரன் அலுவலகத் தாக்குதலின்போது போலீஸ் பாராமுகமாயிருந்ததைக் கண்டித்த அவர் கருணாநிதி குடும்பத்தில் பதவிக்காக சண்டை நடக்கிறது எனக் குறிப்பிட்டார்.

'தினகரன் எல்லாக் கட்சிகளுக்கும் பிரச்சனையை உருவாக்கிவருகிறது. முதலில் அதிமுகவிற்கு அடுத்த வாரிசு யார் என குழப்பத்தை உருவாக்கியது அதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை அதன்பின் பாமகவிற்கும் இப்போது திமுகவிற்கும் பிரச்சனையை உண்டுபண்ணியிருக்கிறது. தனது கட்சிக்காரர்களையே காப்பாற்ற இயலாத அரசால் பொதுமக்களை எப்படிக் காப்பாற்ற இயலும்?' என்றிருக்கிறார் ஜெயலலிதா.

Dinakaran attack: Jayalalithaa demands dismissal of Govt.

கருத்துக்களை விவாதப் பதிவில் தெரிவியுங்கள்

ச:'இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம்' - கருணாநிதி

தினகரன் அலுவலகத் தாக்குதலில் இறந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி என்றும் அதில் வாரிசு அரசியலுக்கு இஅடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், கருத்துக் கணிப்புக்களின்மேல் தனக்கு ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை என்றும் இதைக்கொண்டு கட்சியில் விரிசலை ஏற்படுத்த யாரும் முயலவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

No room for dynastic politics in DMK: Karunanidhi


கருத்துக்களை விவாதப் பதிவில் தெரிவியுங்கள்

ச: கருத்துக் கணிப்பு, தாக்குதல், கொலைகள் - விவாதம்

தமிழகத்தின் ஆளுங்கட்சியின் ஆளுமைகளாக திகழ்ந்த கருணாநிதியின் வாரிசுகளுக்குள் முன்னெப்போதும் இல்லாத அளவில் பகிரங்கமான மோதல் வெடித்திருக்கிறது. முதலாவதாக கருணாநிதியின் மனசாட்சி என்று வர்ணிக்கப் பட்ட முரசொலி மாறனின் புதல்வர்களின் எழுச்சியால் கருணாநிதியின் குடும்பத்துக்குள் ஏற்பட்ட சலசலப்பும் அதன் தொடர்ச்சியாக தயாநிதிமாறனை முன்னிலைப் படுத்தும் சன்டிவி, தினகரன் குழும ஊடகங்களின் செய்திகள், கருத்துக் கணிப்புகள், அடுத்து திமுக தலைவரின் மகன்களுக்குள் பிளவை உண்டாக்கும் விதமான இரண்டாவது கருத்துக் கணிப்பு இன்று பகிரங்கமான மோதலாக வெடித்து மூன்று உயிர்களைப் பலி கொண்டிருக்கிறது.

இதற்கு காரணமானவராக அழகிரியை நேரடியாக சுட்டி சன்டிவி கடுமையாக விமர்சித்திருக்கிறது. தா. கிருட்டிணன் கொலைவழக்கிலும் அழகிரியின் தொடர்பு குறித்து இன்று முதன்முறையாக சன்டிவி விமர்சித்தது.

ஸ்டாலின் அழகிரியை விட செல்வாக்கு உள்ளவர் என்ற கணிப்புக்கான எதிர்ப்பாக தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப் பட்டுள்ள தாக்குதல் விளைவித்துள்ள சூழல் ஒரு புறம் இப்போது அத்தகைய ஒரு கருத்துக் கணிப்புக்கான அவசியம் என்ன என்பது ஒரு புறம் இதன் பின்விளைவுகளை எதிர்கொள்ளும் ஊடகத்தன்மை மறுபுறம் என நம் முன் கேள்விகள் பல நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இது பற்றி ஒரு அரசியல் அலசல், பொதுவிவாதத்தை முன்வைக்கிறோம்.

இன்றைய அரசியல் நிகழ்வுகள் தமிழக அரசியலில் நிகழ்த்தப் போகும் தாக்கங்கள் என்னென்ன? இந்த நிகழ்வுகளின் பின்னணி என்ன? இது அரசியல்ரீதியாக திமுகவுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இவை பற்றி விவாதிக்கலாம் வாருங்கள். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

(விவாதத்தை திசை திருப்பும் விதமான கருத்துகள் வெளியிடப் படமாட்டாது.)

ச:தினகரன் தாக்குதல் 'போராடுவேன்' - மாறன் - Update

மதுரை. மே 9. தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கும்வரை மத்திய மாநில அரசுகளுடன்ன் போராடுவ்வேன் என சன் நிறுவன இயக்குனர் கலாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

இது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் என அவர் கூறியுள்ளார்.

தாக்குதல் நடந்தபோது காவல்துறையினர் அமைதியாக பார்த்ஹ்துக்கொண்டிருந்தனர் என தினகரன் பணியாளர்கள் கூறியுள்ளதைப்பற்றி கேட்டபோது அவர்களின் கருத்தை நம்புகிறேன் என பதிலளித்தார்.

கருத்துக்கணிப்புக்கு எதிரான அழகிரியின் கருத்துக்களைப் பற்றி கேட்டபோது அதற்கு தினகரன் பணியாளர்கள் 3 பேரைக் கொல்வது முடிவல்ல என்றார்.

Kalanidhi to fight against state, Centre till justice rendered

பத்திரிகையாளர்கள் கண்டனம்
தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூன்றுபேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மெட்ராஸ் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது.
Journalists deplore killing of Dinakaran employees

இதனிடையே பத்திரிகைக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் சம்பவம் குறித்த சரியான விபரம் தங்களுக்கு கிடைக்கவில்லை, உயிர் சேதங்கள் இருப்பின் அது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.
Congress downplays incident of sibling rivalry in DMK

ச:'சம்போவைக் காப்பாத்துங்கள்' லண்டனில் இந்துக்கள் கவலை

வேல்ஸில் அமைந்துள்ள இந்துக் கோவிலுக்குச் சொந்தமான சம்போ எனும் காளை மாட்டைக் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்ற இங்கிலாந்தில் வாழும் இந்துக்கள் பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

மே 3ல் சுற்றுச் சூழல் அலுவலகத்திலிருந்து வந்த ஆணைப்படி சம்போவுக்கு டி.பி நோய் பிடித்துள்ளதால் அதை மே 14க்குள் கொல்லவேண்டும் என ஆணை பிறப்பித்தது. இதை அடுத்து சம்போவின் உயிரைக் காப்பாற்றக் கோரிக்கைகளும் கூட்டு முயற்சிகளும் தொடர்கின்றன.

சம்போவைக் கொல்வது தங்கள் மத நம்பிக்கைக்கையை காயப்படுத்தும் என இதற்காக அமைக்கப்பாட்டுள்ள குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

கோவில் நிர்வாகம் சம்போவுக்கு மருத்துவ உதவியை நாடியுள்ளதாகவும் மற்ற வளர்ப்பு மிருகங்களிடமிருந்து சம்போ தனிமைப் படுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Save Shambo, Hindu groups urge UK Govt.

தீவிரவாதி என நினைத்து நடிகர் ஆர்யா வாரணாசியில் கைது

சென்னை, மே. 9: உள்ளம் கேட்குமே, கலாபக் காதலன், அறிந்தும் அறியாமலும் போன்ற படங்களில் நடித்தவர் ஆர்யா. தமிழ் பட உலகில் வளர்நது வரும் நடிகர். இவர், தற்போது பாலா இயக்கும் நான் கடவுள் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக நீண்ட தாடி, அடர்ந்த மீசையும் வைத்துள்ளார்.

இந்த முகத்தை மறைக்க படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்.

இதற்கிடையில் அமெரிக்க தூதரகத்திற்கு விசா எடுக்கச் சென்ற போது, அவரது தோற்றம் அமெரிக்க போலீஸôருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. அதனால் அவரை தூதரகத்திலேயே வைத்து பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். தீவிரவாதிகளுடன் தொடர்புண்டா என்றெல்லாம் விசாரித்திருக்கின்றனர். தான் யார், தனது அடையாளங்கள் இவை இவை என்று சொல்லி ஒருவழியாக வீடு வந்து சேர்ந்திருக்கிறார்.

இந்த பிரச்சினை அடங்குவதற்குள் அடுத்த பிரச்சினையில் ஆர்யா மாட்டிக் கொண்டு தப்பித்துள்ளார்.

இதே படத்திற்காக வாரணாசியில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படப்பிடிப்பிற்காக கலந்து கொள்ளச் சென்ற ஆர்யாவை, அங்குள்ள போலீஸôர் சுற்றி வளைத்தனர். தீவிரவாதி என நினைத்து அவரை கைது செய்து சிறையில் தள்ளினர். ஆர்யாவை விசாரிக்க உயரதிகாரிகளும் விரைந்துள்ளனர்.

தான் ஒரு நடிகர் என்றும், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும், படப்பிடப்பிற்காக வாரணாசிக்கு வந்தவன் என்றும் ஆர்யா சொன்ன பதில்களை அவரகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன், என்ன திட்டத்தோடு வந்திருக்கிற... என கேள்விகளால் துளைத்தெடுக்க ஆரம்பிக்க, தகவலறிந்த படப்பிடிப்புக் குழுவினர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று தகுந்த ஆதாரங்களைக் காட்டி அவரை விடுவித்துக் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் 3 ஐ.டி. பூங்காக்கள்: முதல்வர் அறிவிப்பு

தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரூ. 1,400 கோடியில் தமிழகத்தில் சென்னை தரமணி, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன. இதுபற்றிய தகவல்களைப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்தபோது முதல்வர் கருணாநிதி அறிவித்தார். விவரம்:

மூன்றாவது டைடல் பூங்கா: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காகச் சென்னை தரமணியில் மூன்றாவது டைடல் பூங்கா ரூ. 800 கோடியில் அமைக்கப்படும். ஏற்கெனவே அறிவித்தபடி, தரமணியில் 2-வது டைடல் பூங்கா அமைக்கும் பணி நடந்துவருகிறது. தற்போது சர்வதேச கருத்தரங்கு மையம், தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்சார் சேவைகளுக்கான 3-வது டைடல் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தரமணியில் 25 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான ஏற்றுமதி மையமாக இது செயல்படும். 21 லட்சம் சதுர அடி பரப்பில், தனியாருடன் கூட்டு முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 12 ஆயிரம் மென்பொருள் வல்லுநர்களுக்கு வேலை கிடைக்கும்.

சென்னை கோட்டூரில் தமிழ் இணைய பல்கலைக்கழகத்துக்கு 2 ஏக்கரில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

தரமணி டைசல் உயிரியல் பூங்கா, ரூ. 250 கோடியில் விரிவுபடுத்தப்படும். இதனால் கூடுதலாக 2 ஆயிரம் உயிரியல் தொழில்நுட்ப -மருந்துத் துறை விஞ்ஞானிகளுக்கு வேலை கிடைக்கும்.

காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர், பெரும்பாக்கத்தில் 213 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பவியல் நகர் அமையும்.

கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 33 ஏக்கரிலும் சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் 100 ஏக்கரிலும் திருச்சி மாவட்டம், நவல்பட்டு கிராமத்தில் 50 ஏக்கரிலும் மதுரையில் வடபழஞ்சி, கிண்ணிமங்கலத்தில் 50 ஏக்கரிலும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் அமையும்.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 100 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். மேலும் 400 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகம் நிறுவப்படும்.

தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம்: தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடத்திட்ட மேம்பாடு, பயிற்றுநர் உருவாக்கம், கல்விசார் சாதனங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக மாணவர் பொதுத் திறன் பயிற்சியளிக்கும் பொருட்டும் தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம் நிறுவப்படும்.

ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 500 கோடி பூங்கா: சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் ரூ. 500 கோடியில் உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (பயோ ஐ.டி. பார்க்) அமைக்கப்படும். இந்திய மென்பொருள் தொழில் பூங்கா, சிங்கப்பூரில் உள்ள அசெண்டாஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்தப் பூங்காவை 100 ஏக்கரில் அமைக்கும்.

இத்திட்டத்துக்கான முதலீட்டில் 11 சதவீதம் பங்கேற்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக அமைகிறது என்ற சிறப்பை இந்த உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பெறும். இதனால் 8000 பேருக்கு வேலை கிடைக்கும்.

ரூ. 80 கோடியில் அம்பத்தூர் பூங்கா: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்குச் சொந்தமான காலியிடத்தில் 4 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ. 80 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். காகித நிறுவனத்தால் அமைக்கப்படும் இந்த பூங்காவின் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்'' என்றார் கருணாநிதி.

Dinamani

3 நகரங்களில் பொருளாதார மண்டலம்

பெரம்பலூர், ஓசூர், விருதுநகர் ஆகிய இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை தரமணியில் ரூ. 850 கோடி மதிப்பில் இரண்டாவது தகவல் தொழிநுட்பப் பூங்கா அமைப்பதற்கான பணிகள் சில மாதங்களில் தொடங்கி, 2009-ம் ஆண்டு துவக்கத்தில் நிறைவுபெறும் என்றார்.

சென்னை சோழிங்கநல்லூரில் அமையவுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று குறிப்பிட்ட அவர், கிராமப்புறம் மற்றும் நகர்புறங்கள் இடையே உள்ள மின்னணுவியல் இடைவெளியை சரிசெய்ய பொது சேவை மையங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்தங்கிய பகுதிகள் மேம்பாடு அடையும் வகையில் பெரம்பலூர், ஓசூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், இதன்மூலம் பொருளாதார வளர்ச்சியையும், விரைவான முன்னேற்றத்தையும் காண முடியும் என்றார்.

3 நகரங்களில் பொருளாதார மண்டலம்: கருணாநிதி

ச:பளு தூக்கும் போட்டி: இந்தியாவுக்கு 45 பதக்கங்கள்

தைவானில் நடைபெற்ற ஆசிய பளு தூக்கும் போட்டியில் 12 தங்கம் உட்பட 45 பதக்கங்கள் பெற்று இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

ஆசிய பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் தைவானில் உள்ள ஹோசிங் நகரில் நடைபெற்றன. இதில் பங்கேற்ற இந்தியா, சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை அள்ளியது.இளையோர், மூத்தோர் மற்றும் சப்-ஜூனியர் பிரிவுகளில் மொத்தம் 68 பேர் இந்தியா சார்பில் பங்கேற்றனர். இவர்களில் 45 பேர் பதக்கங்களைச் தட்டிச் சென்றனர்.

12 தங்கம், 23 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று இந்திய அணி பதக்கப் பட்டியலில் 2-வது இடத்தை பெற்றது. இந்திய வீராங்கனை லட்சுமிக்கு சிறந்த ஆசிய வீராங்கனை விருது வழங்கப்பட்டது.

பளு தூக்கும் போட்டி: இந்தியாவுக்கு 45 பதக்கம்

ச:'8 ஆண்டுகளில் விண்வெளியில் இந்தியர்'

வரும் எட்டு ஆண்டுகளுக்குள்ளாக இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கென ரூ. 9,500 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

Preparations on to send man to space: Govt.

சந்தன மரக் கடத்தலில் திமுக அமைச்சரின் உறவினர்கள்: ஜெ. புகார்

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பகுதியில் சந்தன மரக் கடத்தலில், தி.மு.க. அமைச்சரின் உறவினர்கள் ஈடுபட்டு வருவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா புகார் கூறியுள்ளார்:

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பகுதியில் வசுவம்பாடி தனியார் எஸ்டேட்டுக்குச் சொந்தமான சந்தன மரக் கிடங்கு உள்ளது. இது சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட "ரிசீவரின்" (வழக்கறிஞர்) பொறுப்பில் உள்ளது. இந்தக் கிடங்கில் இருந்து கடந்த 10-ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் காவலாளியை தாக்கி விட்டு, ரூ.2.5 கோடி அளவுக்கு சந்தன மரக் கட்டைகளை கடத்த மூன்று பேர் முயன்று இருக்கிறார்கள். அவர்கள் 2 லாரிகளிலும், 3 சுமோ வாகனங்களிலும் வந்துள்ளனர். அவற்றில், 2 லாரிகளையும், 1 சுமோவையும் மட்டுமே வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷ் மற்றும் குட்டி ஆகியோர் 2 சுமோவில் இருந்துள்ளனர். இவர்கள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சகோதரர் கந்தசாமியின் மகன்கள் என்பது தெரிய வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக் கட்டைகளை வனத் துறையினர் வசம் ஒப்படைத்து விட்டு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை தங்கள் வசம் ஒப்படைக்கும் படி, காவல் துறையினர் வனத் துறையினரிடம் கேட்டு இருக்கின்றனர். வனத்துறையின் சட்டப்படி பிடிபட்ட வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்தால், அந்த வாகனங்களை அரசே எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளது.

ஆகவே, பிடிபட்ட வாகனங்களை வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கிக் கொண்டு காவல் துறையினர் மூலம் வழக்குப் பதிவு செய்தால், அந்த வாகனங்களை நீதிமன்றம் மூலம் மீண்டும் விடுவித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் காவல் துறைக்கு வழக்கை மாற்ற திமுகவினர் முயற்சித்து வருகின்றனர்.

குற்றவாளிகளைப் பிடித்து ஒரு நாள் ஆகியும், முதல் தகவல் அறிக்கை இதுவரை தயாரிக்கப்பட வில்லை. திமுக அரசின் மிரட்டலுக்குப் பயந்து, காவல் மற்றும் வனத் துறையினர் குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Dinamani

ச:தினகரன் தாக்குதல் கருணாநிதி வருத்தம்

மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு இருவர் இறந்த நிகழ்வைக் குறித்து மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும் மே 11ல் நடக்கவுள்ள கொண்டாட்டங்களை ரத்து செய்யவும் கேட்டுள்ளார்.

இதனிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க அழகிரி கருத்துக் கணிப்பு நடத்திய 'ஜென்மங்கள்' என்னிடம் வரட்டும் தமிழகம் முழுவதும் அழைத்துச் சென்று எனக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது காட்டுகிறேன் என சவால் விடுத்துள்ளார்.

Karunanidhi upset over Dinakaran office attack
தினமலர்

உ.பி.: 7 கட்ட தேர்தலில் 46 சதவீத வாக்குப்பதிவு

உ.பி.யில் 403 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 46 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

தொங்கு பேரவை: இந்நிலையில் உ.பி.யில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். அதைத் தொடர்ந்து முலாயம் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

11-ல் வாக்கு எண்ணிக்கை: இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் வெள்ளிக்கிழமை (மே 11) நடைபெறுகிறது. எந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடைபெற்றதால் அன்று பிற்பகலில் முடிவுகள் தெரிந்துவிடும்.

Dinamani

ஆள் கடத்தல்: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை - அப்பீல் செய்வதற்கு 3 மாத அவகாசம்

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் முகம்மது சகாபுதீன் மீது தொடரப்பட்ட ஆள் கடத்தல் வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சைவான் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிபதி ஞானேஸ்வர் பிரசாத் ஸ்ரீவாஸ்தவா செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியின் தொண்டர் சோட்டே லால் என்பவரை 1999 பிப்ரவரி 7-ம் தேதி கடத்திச் சென்றது தொடர்பானது இந்த வழக்கு. (சோட்டே லால் இப்போது உயிருடன் இல்லை).

30-க்கும் மேல் வழக்குகள்: சைவான் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சகாபுதீன் மீது 30-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 29 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 8 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

கொலை, கொலை முயற்சி, கொலை செய்வதற்காக ஆளைக் கடத்துதல், ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்று மிரட்டுவதற்காகக் கடத்துவது, சட்டத்துக்கு விரோதமாக மறைவிடத்தில் ஒருவரை அடைத்து வைப்பது, திருட்டு, கலவரம் செய்தல், ஆயுதங்களுடன் சென்று கலவரம் செய்தல், உரிய அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருத்தல், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துதல், ஆயுதங்களால் மற்றவர்களுக்குக் காயங்களை ஏற்படுத்துதல் என்று பல வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

லாலு பிரசாதின் வலது கரம் போன்றவர் என்பதாலும் சிறுபான்மைச் சமூக மக்களிடையே செல்வாக்கு படைத்தவர் என்பதாலும் பத்திரிகைகளும், பிற எதிர்க்கட்சிகளும் சகாபுதீனையே குறிவைத்து செய்திகள் தருகின்றன.

சோட்டே லாலை மட்டும் அல்ல வேறு 18 மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் தொண்டர்களையும் சகாபுதீன் கடத்திக் கொன்றிருக்கிறார். அவருடைய எம்.பி. பதவியை உடனடியாகப் பறிக்கத் தவறினால் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று நந்தகிஷோர் பிரசாத் எச்சரித்தார்.

அப்பீல் செய்வார்: இந்தத் தீர்ப்பை எதிர்த்து சகாபுதீன் அப்பீல் செய்வார் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாதும், சகாபுதீனின் உதவியாளர் அஜய் குமாரும் தனித்தனியே கூறியிருக்கின்றனர். தீர்ப்பு நகல் கிடைத்ததும் அப்பீல் செய்வார்கள் என்று தெரிகிறது.

தினமணி - முழு விவரங்கள்

தில்லியில் மூன்றாவது மாடி கட்ட அனுமதிக்கக் கூடாது: நீதிமன்றம் ஆணை

புதுதில்லி, மே 9: தில்லி மாநகராட்சியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இரண்டாவது மாடிக்கு மேல் கட்ட இனி அனுமதிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பிறகே இனி மூன்றாவது மாடிகளைக் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று பெஞ்ச் உத்தரவிட்டது.

Dinamani

இலவச கலர் டிவி திட்டத்தில் குறை இருந்தால் தூக்கு மேடைக்குப் போகத் தயார்: அதிமுகவுக்கு கருணாநிதி சவால்

சென்னை, மே 9:ஏழைகளுக்கு இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தில் குறை இருந்தால், தூக்கு மேடைக்குப் போகத் தயாராக இருக்கிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.

தொழில் துறை- தகவல் தொழில்நுட்பத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது பேரவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடந்தது. அப்போது பேசிய டி.ஜெயகுமார் (அதிமுக), இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தில் பெரிய முறைகேடு நடந்திருப்பதாகக் கூறினார். இத்திட்டத்துக்காக ரூ.850 கோடி செலவிடப்பட்டிருப்பதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த அளவுக்கு கலர் டிவிக்கள் விநியோகிக்கப்படவில்லை என்றார் அவர்.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.) பேசுகையில், கலர் டிவி திட்டம் திறந்த புத்தகமாக நடக்கிறது என்றார். இதற்காக முதல்வர் தூக்குமேடைக்குப் போக வேண்டும் என்றால், அதிமுக செய்த முறைகேடுகளுக்கு ஆயிரம் முறை தூக்கு மேடைக்குப் போக வேண்டும் என்றார்.

Dinamani

ச: தினகரன்-சன் டிவி அலுவலகங்கள் தாக்கப்பட்டு 2 பேர் பலி. அடக்கி வாசிக்கும் தினமலர்.

மதுரை தினகரன்-சன் டிவி அலுவலகம் மீது அழகிரி ஆதரவாளர்கள் தாக்குதல்-2 பேர் பலி. 7 பஸ்களுக்கு தீ வைப்பு

தினகரன் நடத்தும் கருத்துக் கணிப்பு காரணமாக பாமகவின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் இன்னொரு புறம் ஸ்டாலினுக்கே அதிக செல்வாக்கு என்று கருத்துக் கணிப்பு வெளியிடப் பட்டதால் ஆத்திரம் கொண்டு அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களில் இருவர் கொல்லப் பட்டனர். மநுரையில் தினகரன் பத்திரிகை, சன் தொலைக்காட்சி அலுவலகங்கள் வன்முறை தாக்குதலுக்கு உள்ளாயின.

விரிவான செய்தி இங்கே (தட்ஸ்தமிழ்)

வழக்கமாக திமுக தரப்பு பிரச்சினைகளை தலைப்புச் செய்தியாக வெளியிடும் தினமலர் இம்முறை அடக்கி வாசிக்கிறது.

தினமலர் இணைய தளத்தில் இப்போதைய செய்தி:

மதுரை தமிழ் பத்திரிக்கை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத சிலர் புகுந்து தாக்குதல் ; இருவர் பலி

உத்தங்குடி: மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தமிழ் பத்திரிக்கை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத சிலர் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் இருவர் இறந்தனர். இதில் ஒருவர் கோபி என்ற ஊழியர் ஆவார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ச:ஹாரி பாட்டர் புத்தகம் முன்பதிவில் சாதனை

அடுத்து, ஏழாவதாக வெளிவரப்போகும் ஹாரி பாட்டர் புத்தகத்திற்கு அமேசான்.காம் இதுவரை 1 மில்லியன் முன் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் 6,20,000 முன் பதிவுகளும் இங்கிலாந்தில் 2,50,000 முன்பட்திவுகளும் செய்யப்பட்டுள்ளன. இதேபோல பார்ன்ஸ் & நோபிள் புத்தகக் கடையிலும் வேறெந்த புத்தகத்துக்கும் இல்லாதவாறு முதன் முறையாக 5,00,000 முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

'Harry Potter and the deathly hallows' புத்தகம் ஜூலை 21ல் வெளியிடப்படவுள்ளது.

Over one million Harry Potter advance orders on Amazon

ச:டில்லி டாக்டர்கள் மருத்துவ சாதனை

டில்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனை டாக்டர்கள் குழு ஒன்று ஒரே நேரத்தில் ஒருவருக்கு இரு உறுப்புக்களை வெற்றிகரமாக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்துள்ளனர்.

காணேஷ் நேரு எனும் 15 வயது சிறுவனுக்கு நுரையீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்ததை சரி செய்ய ஒரே நேரத்தில் இவை இரண்டுக்கும் மாற்று உறுப்புக்கள் பொருத்தப்பட்டன. உலகில் இதுவே முதன்முறையாக ஒரே நேரத்தில் இரு மாற்று உறுப்புக்கள் பொருத்தும் அறுவைசிகிச்சை நடைபெறுகிறது.

மொத்தம் 50 பேர்கொண்ட குழு 18 மணிநேரங்களில் இதைச் செய்துமுடித்துள்ளது.

Path-breaking surgery by doctors in DelhiHindu
Indian doctors perform twin transplants NDTV.com
World's first simultaneous dual transplant by Ganga Ram docs Times of India

ச: மெட்ரிக்குலேசன் பாஸ் செய்த MLA

JMM சட்டமன்ற உறுப்பினர் சுக்ராம் ஓரௌன் இந்த வருட மெட்ரிக்குலேஷன் பரிச்சையில் தேர்வுபெற்றுள்ள்ளார். படிப்பை வீட்டு 20 வருடங்கள் கழித்து தன் மகன் மற்றும் மைத்துனரோடு சேர்ந்து இந்த வருடப் பரிட்சையில் தேர்ந்துள்ளார் ஓரௌன்.

தன் தொகுதி மக்களுக்கு முன்மாதிரியாய் விளங்கவே இதைச் செய்ததாகவும் படிப்பை தொடரவிருப்பத்தாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

MLA passes matriculation two decades after leaving school
"Frankly, I realised the importance of education more after I took the plunge into politics," he said. Oraon confided he had learnt that proper education could be helpful in every aspect of life, from running a good administration to doing social work or looking after one's family

-o❢o-

b r e a k i n g   n e w s...