காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட கோரி ஜெயலலிதா இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருந்தார். அவருடன் ஆயிரக்கணக் கானோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். காவிரி பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் தமிழகத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய, மாநில அரசுகளை மக்கள் தூக்கியெறிவார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியிருக்கிறார். விரைவில் தேர்தல் வரும் என்று கூறிய அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் அதிமுக வினரின் ஆதரவுடன் கூடிய ஆட்சியும் அமையும் என்றும் அவர் கூறினார்.
மாலைச் சுடர்
Sunday, March 18, 2007
ஜெயலலிதா ஆவேசம்
Posted by சிவபாலன் at 9:24 PM 2 comments
போதையில் தள்ளாடிய இங்கிலாந்து வீரர்கள்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பலர் குடித்து விட்டு போதையில் சுற்றியதற்காக அபராதம் விதிக்கப் பட்டுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு அந்த அணியின் வீரர்கள் நள்ளிரவு குடித்து விட்டு ஓட்டல் அருகே சுற்றிக் கொண்டிருந்தனர். இதனால் ஒழுக்கம் குறைவாக நடந்ததாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
மேலும் இங்கிலாந்து துணை கேப்டன் பிளின்டாப் படகு பயணத்தின்போது ரகளை செய்ததற்காக தனியே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் இந்த நடவடிக்கைகளை இங்கிலாந்து பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
மாலைச் சுடர்,
Cricinfo.com,
Posted by சிவபாலன் at 9:03 PM 3 comments
காலை வாரிய ஷேவாக் சூதாட்டம்
வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா எதிர்பாராத தோல்வியை சந்தித்ததற்கு, அந்த அணியின் அபாரமான பந்துவீச்சு, அதற்கு பக்கபலமாக நின்ற பீல்டிங், இந்திய வீரர்களின் படுமோசமான ஆட்டம் என்று பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் விட தோல்விக்கு பிரதான காரணம் முக்கியமான இந்த முதல் ஆட்டத்தில் பாமில் இல்லாத வீரேந்திர ஷேவாக்கை களமிறக்கியதுதான்.
ரன் குவிக்க முடியாமல் திணறி வரும் ஷேவாக்கை அணியில் சேர்த்தது சர்ச்சைக்கு இலக்கானது. தேர்வுக் குழுவினர் எதிர்ப்பை மீறி கேப்டன் திராவிட் இவரை அணியில் சேர்த்தார். ஷேவாக்கின் மேட்ச் வின்னர் அந்தஸ்தை வைத்து திராவிட் அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம். அது தவறில்லை. எப்படியும் ஷேவாக்கின் தேர்வை ஒரு சூதாட்டம் என்றே பலரும் கருதினர். பலனிக்கலாம், அணியையே கவிழ்க்கலாம் என்று கருத்தப்பட்டது.
இந்திய ரசிகர்கள் அஞ்சியது போலவே ஷேவாக் சூதாட்டம் அணியை மண்ணை கவ்வ வைத்துவிட்டது. உலக கோப்பையில் முத்திரை பதிக்க வேண்டிய முதல் ஆட்டத்தில் ஷேவாக்கை களமிறக்கியது, அதுவும் துவக்க வீரராக ஆடவைத்தது பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
சமீபகால வழக்கப்படி அவர் எடுத்த எடுப்பிலேயே ஆட்டம் இழந்து விட இந்திய அணி திணறத் துவங்கிவிட்டது. இதனால் இந்த சரிவிலிருந்து இந்தியா மீளவே இல்லை. முன்னாள் கேப்டன் வெங்கட்ராகவன் கேட்டது போல, பார்மில் இல்லாத கங்குலியை துவக்க வீரராக களமிறக்க யோசித்த அணி நிர்வாகம், தடுமாறும் ஷேவாக்கை முதலில் ஆடவைத்தது ஏன்? என்பது ரசிகர்கள் மனதில் எழுந்திருக்கும் கேள்வி.
ஷேவாக்கிற்கு பதிலாக உத்தப்பா துவக்க வீரரராக களமிறங்கி ஆரம்ப விக்கெட்டை இந்தியா இழக்காமல் இருந்திருந்தால், ஆட்டமே மாறியிருக்கக் கூடும்.
மாலைச் சுடர்
Posted by சிவபாலன் at 8:23 PM 6 comments
முதுமலையில் புலிகள் எண்ணிக்கைக்கு கேமரா
முதுமலை சரணாலயத்தில் புலிகள் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக மும்பையை சேர்ந்த இந்திய வனவிலங்கு இன்ஸ்டிடியூட் சார்பில் 30 இடங்களில் 60 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மரத்தில் பதிக்கப்பட்டுள்ள கேமரா.
- மாலை முரசு
Posted by சிவபாலன் at 8:03 PM 0 comments
விவசாய செய்திகள்: கரும்பு அரவை துவங்கியது
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று கரும்பு அரவை துவங்கியது. இயந்திரத்தில் கரும்புகளை போட்டு விவசாயிகள் அரவையை துவக்கி வைத்தனர். உள்படம்: கிரேன் மூலம் அரவை இயந்திரத்தில் கரும்புகட்டுகள் போடப்படுகின்றன.
உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. உடுமலை, ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், பல்லடம், பழனி கிழக்கு, பழனி மேற்கு, நெய்க்காரப்பட்டி ஆகிய 8 கோட்டங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் ஆலைக்கு கரும்பு அனுப்புகின்றனர். இந்தாண்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. கரும்பு அறுவடை கடந்த மாதம் இறுதி முதல் துவங்கியுள்ளது. 6 மாதத்துக்குத் தொடர்ந்து அறுவடை நடக்கிறது.
அமராவதி சர்க்கலை ஆலையில் 2006 - 2007ம் ஆண்டுக்கான அரவைப்பட்டத்தில் 2.60 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பாய்லர் இளஞ்சூடேற்றும் பணி கடந்த 9ம் தேதி துவங்கியது.
இன்று காலை 8 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் அரவை துவங்கியது. அக்டோபர் வரை அரவை நடைபெறும். நிகழ்ச்சியில் ஆலை தனி அலுவலர் ஜெய்சிங் செல்வராஜ், தலைமை அலுவலர் திருஞானசம்பந்தம், கரும்பு பயிரிடுவோர் சங்க தலைவர் வேலுசாமி மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
- மாலை முரசு
Posted by சிவபாலன் at 7:25 PM 1 comments
இந்தியாவில் வேலைதேடும் இங்கிலாந்து டாக்டர்கள்
இங்கிலாந்தில் டாக்டர்களுக்கு மொத்தம் 22,000 இடங்கள் காலியாயிருக்கின்றன 30,000 டாக்டர்கள் வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர். வேலைக்கு போட்டி அதிகமாயிருப்பதாலும், இந்தியாவில் மருத்துவச் சுற்றுலா வளர்ச்சியடைவதாலும் இங்கிலாந்து டாக்டர்கள் இந்தியாவில் வேலை தேடும் நிலமை வந்துள்ளது.
இந்திய மருத்துவமனைகள் இங்கிலாந்தில் 'டாக்டர்கள் தேவை' விளம்பரங்களை வெளியிடுகின்றன.
British doctors looking for jobs in Indian hospitals: report
Posted by சிறில் அலெக்ஸ் at 7:16 PM 1 comments
ஜெயலலிதா உண்ணாவிரதம்
அறிவிக்கப் பட்டிருந்தபடி காவிரி பிரச்சினையில் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான உண்ணாவிரத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் அண்ணா சிலைக்கு பின்புறம் உண்ணாவிரதப் பந்தலிட்டு ஜெயல்லிதாவும் கட்சியின் பிற தலைவர்கள், தொண்டர்கள் உட்பட ஏராளமானவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாலை மதிமுக தலைவர் வைகோ உண்ணாவிரத்தை முடித்து வைப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
Posted by ✪சிந்தாநதி at 2:04 PM 0 comments
முதல்வர் தலைமையில் உள்ளாட்சி தலைவர்கள் மாநாடு
முதல்வர் கருணாநிதி தலைமையில், சென்னையில் வரும் 18ம் தேதி உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் நெல்லை ஆகிய 6 மாநராட்சிகளின் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
Yahoo Tamil
Posted by சிவபாலன் at 7:10 AM 0 comments
பாக்கிஸ்தான் அயர்லாந்திடம் தோல்வி
உலகக்கோப்பை போட்டிகளில் இரண்டாவதுமுறையாக பாக்கிஸ்தான் தோல்வியைத் தழுவியது. இந்தமுறை அயர்லாந்திடம்.
டாசை வென்ற அயர்லாந்த் பாக்கிஸ்தானை பேட் செய்ய அழைத்தது. பாக்கிஸ்தான் 45.4 ஓவர்களில் 132 ரன்களை மட்டுமே எடுத்தது.
இரண்டாவது பேட்டிங் செய்த அயர்லாந்த் 7 விக்கட்டுகளை இழந்து 41.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
இடையில் போதிய வெளிச்சமின்மையின்காரணமாய் பாக்கிஸ்தானின் அதிஷ்டம் திரும்ப இருந்தது.
Full Scorecard
Posted by சிறில் அலெக்ஸ் at 4:31 AM 0 comments
சிரிப்பானுக்கு வயது 25 !!!
கணிணி உபயோகிப்பாளர்களுக்கு மிகவும் இன்றியமையாத இந்த " சிரிப்பான்" க்கு
வயது 25 !
மேலும் படிக்க
http://tech.msn.com/news/article.aspx?cp-documentid=4214964>1=9233
Posted by Radha Sriram at 3:32 AM 1 comments
உலக மக்கள் தொகை 920 கோடியை எட்டும்!
அமெரிக்கர்களை போல இந்தியர்கள் வாழ்நாளும் நீடிக்கும் நிலைமை இன்னும் 40 ஆண்டுகளில் நடக்கும்' என்று, மக்கள் தொகை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை சார்பில் உலக மக்கள் தொகை ஆய்வு அமைப்பு, உலக மக்கள் தொகை பற்றி ஆராய்ந்தது. 2050ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 920 கோடியை எட்டும் என்று மதிப்பிட்டுள்ளது.
தினமலர்
Posted by சிவபாலன் at 2:56 AM 1 comments
இந்தியா பங்ளாதேஷிடம் தோல்வி
இது எப்படி சாத்தியம்? ஆச்சர்யம் இன்னும் தீரவில்லை.
டாசை வென்றதும் பேட்டிங்க் தேர்ந்தெடுத்தார் ட்ராவிட். ஆனால் நம் பேட்ஸ்மேன்கள் எதையுமே சாதிக்க இயலவில்லை. கங்குலி சேவாக் தவிர்த்து பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.
சேவாக் துவக்கிவைத்தார். அவர் அவுட் ஆகும்போது அடித்த ஷாட்போன்ற ஒரு தெளிவற்ற ஷாட்டை பங்ளாதேசின் பௌலர்கள்கூட ஆடமாட்டார்கல் போல. பங்ளாதேஷின் பௌலர்கள் பெரிதாய், வித்யாசமாய் எதுவுமே செய்யவில்லை என்றே தோன்றியது. ஸ்லோ பிட்ச்சில் வேகப் பதுவீச்சாளன் பந்துகளும் மெதுவாகவே வந்தன. தோனி ஸ்கோருக்கு எதுவும் சேர்க்காதது இன்னொரு குறை.
பங்ளாதேஷ் தன்னம்பிக்கையுடன் உள்ளே இறங்கி பேட் செய்தது. இந்திய பேட்ஸ்மேன்களைப் போலல்லாமல் துவக்கத்திலிருந்தே நம்பிக்கையுடன் விளையாட ஆரம்பித்தனர். சிறப்பான ஆட்டம்.
ஸ்லோ பிட்சில் ஸ்பின்னர்களை முழுதாகப் பயன்படுத்தாததன் மர்மம் ட்ராவிட்டுக்கு மட்டுமே வெளிச்சம்.
Indians looked totally lost. No confidence what so ever. What's the strategy Dravid?
மேட்ச் ஃபிக்சிங் பற்றிய பழைய முரட்டுக் கனவுகள் வந்துபோகின்றன. இந்த உலகக் கோப்பையில் எந்த நாட்டிலிருந்து என்ன எதிர்பார்ப்பது என்கிற குழப்பமே மிஞ்சுகிறது.
இந்தியாவுக்கு சூப்பர் 8ல் இடம் வாய்க்குமா? பாக்கிஸ்தான் நிலமை என்னவாகும்?
Posted by சிறில் அலெக்ஸ் at 2:33 AM 3 comments
வெற்றி நோக்கி வங்கதேசம்
வங்கதேசம் மூன்று விக்கட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளனர்.
நிதானமாக நகர்கிறது இன்னிங்ஸ்.
நகம் கடிக்கவைக்கும் முடிவில் வந்து நிற்குமா, இல்லை இன்னும் 15 ஓவர்களில் முடியுமா?
விவாதத்தை இங்கே தொடருங்கள்.
Posted by சிறில் அலெக்ஸ் at 12:31 AM 43 comments
வெற்றியை நோக்கி இந்தியா
பங்களாதேஸ் எதிரான இந்திய பவுலிங் சூடுபிடித்துருக்கிறது..
இந்தியா வெற்றிக் கனியை பறிக்குமா?
புலம்ப விட்டுட்டாங்களே
Posted by சிவபாலன் at 12:31 AM 3 comments
b r e a k i n g n e w s...