துருக்கியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அப்துல்லா குல், அந்நாட்டின் அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடப்போவதாக குறிப்புணர்த்தியுள்ளார். கடந்த வாரம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவரது கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, குல் இந்த அறிவிப்பை செய்துள்ளார்.
மே மாதம் அதிபர் தேர்தலில் குல் போட்டியிட்டபோது, இராணுவத்தின் அழுத்தம் காரணமாக அவரது வேட்பு மனு தடுக்கப்பட்டது. முன்னாள் இஸ்லாமியவாதியான குல், துருக்கியின் மதசார்பற்ற அரசியல் சட்டட்திற்கு ஆபத்தாக இருப்பார் என்று இராணுவத்தின் சார்பில் அச்சம் அப்போது வெளியிடப்பட்டது.
ஆனால், தற்போதைய தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மக்களின் மனநிலையை புறந்தள்ளும்படி தம்மிடம் யாரும் எதிர்பார்க்கமுடியாது என்று குல் தெரிவித்துள்ளார். குல்லின் இந்த கருத்துக்கள், அந்நாட்டின் மதசார்பற்ற நிர்வாகத்தின் மத்தியில் கவலையை ஏற்படுத்தக்கூடும் என்று துருக்கியில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் தெரிவித்தார்.
BBC Tamil
BBC NEWS | Europe | Turkey's Gul hints at presidency
Turkish foreign minister Gul hints he will run for president again, despite opposition - International Herald Tribune
Wednesday, July 25, 2007
துருக்கியின் அதிபர் தேர்தலில் அப்துல்லா குல் போட்டியிடலாம்
Posted by Boston Bala at 11:40 PM 0 comments
இராக் குண்டு வெடிப்பில் 50 பேர் பலி
இராக்கின் தலைநகர் பாக்தாதில் கால்பந்து ரசிகர்களின் குழு ஒன்றுக்கு அருகே, குண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இந்தச் சம்பவத்தில் சுமார் 135 பேர் காயமடைந்தனர்.
ஆசிய கிண்ணத்துக்கான கால்பந்து சுற்றுப் போட்டியில் தென்கொரிய அணியை, இராக்கிய தேசிய அணி வெற்றிபெற்றதை இந்த ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கையில் இந்தக் குண்டு வெடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இராக்கிய அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
BBC Tamil
Car bombs strike Iraqi football fans - Gulf - World - The Times of India
Bombs aimed at Baghdad soccer fans kill 50: police | International | Reuters
Posted by Boston Bala at 11:36 PM 0 comments
தீவிரவாதிகள் பட்டியலில் ஏழு வயது சிறுவன்.
தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வருகிறது. விமான நிலையங்களில், தீவிர கண்காணிப்பும் நடக்கிறது. தேடப்படும் அதி பயங்கர தீவிரவாதிகள் பட்டியல்களை தயாரித்து அதை விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் போர்ட் லாடர்லே விமான நிலையத்துக்கு கிறிஸ்டா மார்ட்டின் என்ற பெண் தனது 7 வயது குழந்தை மைக்கேல் மார்ட்டினை அழைத்துக்கொண்டு வந்தார். ஈரான் நாட்டு விமானத்தில் ஏறுவதற்காக வந்த அந்த தாய் மற்றும் குழந்தையின் பெயரை அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது அந்த குழந்தையின் பெயர் தீவிரவாதிகளின் பட்டியலிலும் இருந்தது.
இதனால் அந்த குழந்தைக்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. அது மட்டுமல்ல அந்த 7 வயது குழந்தையை தீவிரவாதியிடம் சோதனை செய்வது போல் சோதனை நடத்தி அதிகாரி களும், போலீசாரும் கெடுபிடி செய்தனர்.
என்ன தப்பு செய்தோம் என்று தெரியாமல் அந்த சிறுவன் திருதிருவென விழித்துக்கொண்டு இருந்தான். நீண்ட நேர சோதனைக்குப் பிறகே அந்த குழந்தைக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள்.
மாலைமலர்
Posted by வாசகன் at 11:25 PM 2 comments
அபுதாபியில் கட்டப்படும் மிகப்பெரிய மசூதி
40 ஆயிரம் முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தவல்ல மிகப் பெரிய மசூதி, ஐக்கிய அரபு குடியரசின் தலைநகரில் ரூ. 2 ஆயிரத்து 300 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு குடியரசு நாடுகளின் பிற மாகாணங்களிலிருந்து தலைநகர் அபுதாபி நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் மக்தா முஸ்தபா பாலத்திற்கு அருகே மிகப்பெரிய மசூதி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மசூதியை அமைக்க முன்னாள் அதிபர் மறைந்த ஷேக் சையது பின் சுல்தான் அல் நகியான் விருப்பப்பட்டார். இதுகுறித்து, அவர் தனது வாரிசுகளிடம் கூறியிருந்தார். அவரது கனவை நனவாக்கும் விதத்தில், தற்போது மசூதி அமைக்கப்பட்டு வருகிறது
முதல்கட்டப் பணிகள் வரும் செப்டம்பர் மாதம் முடிவடைந்து விடும். மீதமுள்ள பணிகளை விரைவில் முடித்து விடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மசூதியின் சுற்றளவு 41 ஆயிரத்து 222 சதுர மீட்டர். ஒரே நேரத்தில் 40 ஆயிரம் பேர் தொழுகை நடத்தவும் விசாலமான இடம் உள்ளது. மசூதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ள தொகை 217 கோடி திர்ஹம் (2,300 கோடி ரூபாய்). முன் ஹாலில் தொழுகைக்கான சிறப்பு அரங்கில் 5 ஆயிரத்து 627 சதுர மீட்டர் பரப்பில் போடப்பட உள்ள தரை விரிப்பு (கார்பெட்) விசேஷமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்த தரைவிரிப்பை கையினால் நெய்யும் பணியில் ஆயிரத்து 200 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான செலவு மட்டும் 32 கோடி ரூபாய்.
நன்றி: தினமலர்
Posted by வாசகன் at 11:18 PM 0 comments
78 வயது சோம்நாத் சாட்டர்ஜிக்கு கருணாநிதி வாழ்த்து.
78 ஆம் பிறந்தநாள் கொண்டாடிய நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்த சோம்நாத் சாட்டர்ஜி, நாட்டின் பெரிய தலைவர்களில் ஒருவரும் அனைத்து மக்களின் மதிப்புக்கு மரியாதைக்குமுரியவருமான கருணாநிதி தன்னை வாழ்த்தியதற்கு தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகச் சொன்னார்."மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு தலைவர் வாழ்த்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார் அவர். "தலைவர்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர் அவர்".
முன்னதாக, குடியரசுத்துணைத்தலைவர் வேட்பாளர் டாக்டர் முஹம்மத் ஹமீத் அன்சாரியும் டெல்லியின் தமிழ்நாடு இல்லத்தில் கருணாநிதியை இன்று காலை சந்தித்துப்பேசினார்.
Posted by வாசகன் at 6:56 PM 0 comments
அண்ணா பல்கலை.யில் அப்துல்கலாமுக்கு சம்பளமில்லை.
குடியரசுத்தலைவர் பதவியிலிருந்து விடைபெற்ற அப்துல்கலாம், இன்று இரவு 9 மணிக்கு சென்னை வருகிறார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன் மற்றும் பேராசிரியர்கள் அவரை வரவேற்கிறார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியதைப் போலவே, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், 'உயிரி தொழிற்நுட்பம்' பாடப்பிரிவின் கவுரவப் பேராசிரியராகவும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் பணியாற்ற உள்ளார். இதற்காக சம்பளம் எதுவும் வழங்கப்படாது என்று துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஆயினும் அவருக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க உள்ளது.
"அப்துல்கலாம் அவர்களின் அறிவும் அனுபவமும் மாணவர்களுக்கு நன்கு பலன் அளிக்கும்" என்ற துணைவேந்தர் இது குறித்து மகிழ்ச்சியும் பெருமையும் தெரிவித்துள்ளார்.
Posted by வாசகன் at 6:33 PM 0 comments
சென்னையை உடனுக்குடன் காண: Sify தளம்
Sify.com சென்னை நகர போக்குவரத்தை உடனுக்குடன்் நிகழ்படங்களாக பரப்பும் வசதியுடன் புதிய தளத்தை வடிவமைத்திருக்கிறார்கள். நகரின் முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள வெப்காம்களிலிருந்து நிகழ்படங்களின் உடனடி பரப்புவதால் நாம் செல்லவேண்டிய வழிகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை அறிந்து திட்டமிட இது வசதியளிக்கும் என தமிழ் திரைப்பட பிரபலங்கள் பங்கேற்ற வண்ணமிகு அறிமுகவிழாவொன்றில் சிஃபியின் இணையதளங்கள் துறை தலைவர் சிவராமகிருஷ்ணன் கூறினார். இந்த தளத்தை (www.chennailive.in) தமிழக தகவல் தொழிற்நுட்ப செயலர் டாக்டர் சி சந்திரமௌலி துவக்கி வைத்தார்.
The Hindu News Update Service
Posted by மணியன் at 6:23 PM 0 comments
ஹங்கேரி: வெயிலுக்கு 500 பேர் பலி
இந்தியாவில் கடும் மழை வெள்ளத்தால் மக்கள் அவதியில் அகப்பட்டிருக்க.,ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் கடும் வெயிலால் நிறைய பேர் பலியாகியுள்ளனர்.
இந்தச்செய்தியின் படி, கடந்த வாரத்தில் மட்டும், வெயிலாலும், அனல் காற்றாலும் ஹங்கேரியில் 500 பேர் வரை பலியாகிவிட்டனராம். 42^C அளவுக்கு வெயில் கொளுத்துகிறதாம்.
பக்கத்து நாடான ருமேனியாவிலும் 30 பேர் பலியாகியுள்ளனராம். செர்பியாவில் விவசாயப்பயிர்கள் கருகிவிட்டன.
நன்றி: மாலைமலர்
Posted by வாசகன் at 6:20 PM 0 comments
நதிநீர் இணைப்பு பற்றி பிரதமரிடம் பேசுவேன்! டெல்லியில் முதல்வர் கருணாநிதி பேட்டி!!
நதிநீர் இணைப்பு பற்றி பிரதமரிடம் பேசவிருப்பதாக டெல்லியில் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புதிய குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற தமிழகமுதல்வர் கருணாநிதிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம், ரகுபதி, வேங்கடபதி, ராதிகாசெல்வி ஆகியோர் வரவேற்றனர். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி, நதிநீர் இணைப்பு பிரச்சினை பற்றி பிரதமருடன் பேசுவீர்களா என்ற கேள்விக்கு, ஏற்கனவே கடிதங்கள் எழுதியிருப்பதாகவும், இதுகுறித்து கடந்தமுறை வந்தபோதும் பேசியிருப்பதாகவும், அவற்றின் தொடர்ச்சியாக மீண்டும் பேசு உள்ளதாகவும் தெரிவித்தார். சுயநிதி மருத்துவ கல்லூரி மாணவர்களின் நலன் காக்க தேவைபட்டால் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
Posted by Adirai Media at 3:59 PM 0 comments
புதிய குடியரசு தலைவராக பிரதிபா பாட்டீல் இன்று பிற்பகல் பதவி ஏற்றார்.
புதிய குடியரசு தலைவராக பிரதிபா பாட்டீல் இன்று பிற்பகல் பதவி ஏற்றார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்துவைத்தார். அப்துல் கலாமின் குடியரசு தலைவர் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி குடியரசு தலைவர் தேர்தல் கடந்த 19ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட பிரதிபா பாட்டீல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். நாட்டின் 13 வது குடியரசு தலைவராகவும், முதல் பெண் குடியரசு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல், நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் இன்று பிற்பகல் பதவி ஏற்றார்.
அவருக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார். பிரதிபா பட்டேல் பதவி ஏற்று உரையாற்றினார். இந்தநிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஷெகாவத், நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜி, ராஜ்யசபா துணைத்தலைவர் ரகுமான்கான், மாநில கவர்னர்கள் மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி உட்பட மாநில முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று முடிந்ததும். நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மகிழ்ந்தனர். பின்னர் அணிவகுப்பு மரியாதையுடன் பிரதிபாபட்டேல் குடியரசு தலைவர் மாளிகைக்கு அழைத்துசெல்லப்பட்டார்.
Posted by Adirai Media at 3:53 PM 0 comments
சபரிமலை பெண்கள் வழிபாடு: கேரள சட்டமன்றத்தில் விவாதம்
கேரள தேவஸ்வம் அமைச்சர் ஜி சுதாகரன்சபரிமலையில் பெண்கள் வழிபட வகைசெய்யவேண்டும் என்ற தங்கள் அரசின் கொள்கைக்கு ஆதரவாக 10-50 வயதுள்ள பெண்கள் அங்கு வழிபட்டதற்கான ஆதாரங்களை சட்டமன்றத்தில் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்த ஒரு உரிமையை மீட்பதே தவிர எந்த ஒரு வழக்கத்தையும் புதியதாக தாங்கள் கொண்டுவர வில்லை எனவும் 1940இல் திருவாங்கூர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி வழிபட்ட ஆதாரம் உள்ளதாகவும் கூறினார். 1990இல் கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை ஒட்டியே இன்று இவ்விதி தீவிரமாக அமலாக்கப் படுகிறது என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் உறுப்பினர் கே சுதாகரன் மத நம்பிக்கையிலும் பழக்கவழக்கங்களிலும் அரசு தலையிடுகிறது என்று அமைச்சருடன் எதிர்வாதம் செய்தார். அமைச்சர் நம்பிக்கை என்பது சபரிமலை ஐயப்பன் மீதானதாகும்;அது ஆணிற்கும் பெண்ணிற்கும் பொது என்று பதிலிறுத்தார். பழக்கவழக்கங்கள் காலத்திற்கேற்ப மாறியே வருகிறது; கோவில் பூசாரி முன்பெல்லாம் குளத்தில்தான் குளிப்பார், ஆனால் தற்போதைய தந்திரிகள் குழாய் தண்ணீரில்தான் குளிக்கிறார்கள் என்றும் அவர் பதிலளித்தார். சபரிமலை செல்லும் பக்தைகளை 'மாளிகாபுரம்' என்றழைப்பதிலிருந்தே அவர்கள் வழிபட தடையேதும் இருந்திருக்கவில்லை எனத் தெரிகிறதென்றார்.
பெண்ணிய சங்கங்களிலிருந்து அரசிற்கு ஏராளமான மனுக்கள் இதுபற்றி வந்திருப்பதாகக் கூறிய அமைச்சர் பெண்களுக்காக தனி பருவம் ஒதுக்கபடலாம் என்ற ஆலோசனையும் வந்திருப்பதாகக் கூறினார்.
The Hindu News Update Service
Posted by மணியன் at 3:43 PM 0 comments
மோனிகா பேடி சிறையிலிருந்து விடுதலை
முன்னாள் இந்திப்பட நடிகையும் 'தாதா' அபு சலெமின் தோழியுமான மோனிகா பேடி இன்று ஹைதராபாத்தின் செஞ்சாலகுடா சிறையிலிருந்து விடுதலையானார். நேற்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. திங்களன்று உச்சநீதிமன்றம் ஜாமீனுக்கான விதிகளை தளர்த்தியது.
தன்னை விடுவித்த நீதிமன்றங்களுக்கு நன்றி தெரிவித்த மோனிகா இனி படங்களில் தொடர்ந்து நடிக்கவிருப்பதாகவும் அதற்காக திரும்ப ஹைதராபாத் வரவேண்டியிருக்கும் என்றும் கூறினார். தற்போது ஹோஷியார்பூரில் உள்ள தனது கிராமத்திற்கு செல்கிறார்.
NDTV.com: Monica Bedi released from jail
Posted by மணியன் at 1:37 PM 1 comments
அணுசக்தி உடன்பாடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அண்மையில் வாஷிங்டனில் செயலர்கள், நுட்பவியலாளர்கள் அளவில் ஏற்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டின் இறுதிவரைவிற்கு இந்தியாவின் கவலைகளுக்கு திருப்திகரமான முறையில் தீர்வு காணப்பட்டிருப்பதாகக் கூறி அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. பிரதமரின் தலமையில் நடந்த இந்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜி , பாதுகாப்பு அமைச்சர் ஏகே அண்டனி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாடீல், நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,வேளாண் அமைச்சர் சரத் பவார்,இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், தரைவழி போக்குவரத்து அமைச்சர் டி ஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். இனி பிரதமர் எதிர்கட்சித் தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் வாஜ்பேயி மற்றும் ஜஸ்வந்த் சிங் ஆகியோருக்கும் இந்த உடன்பாட்டு விதிகளை விளக்குவார். வியாழனன்று இடதுசாரி தலைவர்களின் ஒப்புதலை பெறுவார். பின்னர் நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 10 அன்று தொடங்கவிருக்கும் பருவகால கூட்டத்தொடரில் இந்த உடன்பாடு பற்றி அரசு அறிக்கை வெளியிடும்.
DNA - India - Indian cabinet okays US civilian nuclear pact - Daily News & Analysis
Posted by மணியன் at 1:21 PM 0 comments
சி.ஏ. நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு தனி இணையதளம்
சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்ய புதிய இணைய தளத்தை 'எய்ம்ஸ்' பயிற்சிக் கல்வி நிறுவனம் தொடங்கியுள்ளது.
www.aimseducation.com என்ற இணைய தளத்தை மூத்த சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஜி.நாராயணசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். 'தற்போது நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் சி.ஏ. பட்டதாரிகள் உள்ளனர். ஆனால், இன்றைய தேவை 4 லட்சம் ஆகும். இத்தகைய பயிற்சி பெற்று சி.ஏ. முடிப்போருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது' என்றார் அவர்.
சி.ஏ. படிப்பில் சேருவதற்கு 'சி.பி.டி.' (Common Proficiency Test) எனப்படும் நுழைவுத் தேர்வை இந்திய சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் நிறுவனம் நடத்தி வருகிறது. அத்தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் வகையில் மாதிரித் தேர்வை எய்ம்ஸ் கடந்த 22-ம் தேதி சென்னையில் நடத்தியது. அதில், 750 பேர் பங்கேற்றனர். தேர்வு எழுதிய பின்னர் அவர்களுக்கு முன்னணிக் கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள், பட்டயக் கணக்காளர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.
இணைய தளத்தில் 200 வகையான கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இதற்கும், மாதிரி நுழைவுத் தேர்வுக்கும் கட்டணம் இல்லை என்று 'எய்ம்ஸ்' இயக்குநர் தீபக் சுவாமிநாதன் தெரிவித்தார். மாணவர்களுக்கு சி.ஏ. படிப்புக்கான நுழைவுத் தேர்வு குறித்த பயிற்சியைப் பெறவும், தயார் செய்யவும் மாதிரித் தேர்வு உதவும் என்று 'எய்ம்ஸ்' இயக்குநர் கீதா பிரபு வணிகக் கல்விப் பிரிவு பொறுப்பாளர் சுகன்யா வாசுதேவன் தெரிவித்தனர். எய்ம்ஸ் நடத்தும் சி.ஏ. படிப்புக்கான பயிற்சியில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களும் சேரலாம். ஆனால், 'பிளஸ் 2' முடித்த பிறகுதான் நுழைவுத் தேர்வை எழுதலாம்.
நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி சென்னையில் 5 மையங்களில் மூன்று மாதங்களுக்கு அளிக்கப்படும். இதன்படி ஆண்டுதோறும் 4 அணிகள் பயிற்சி பெறும். இதற்கான கட்டணம் ரூ.6,500.
தினமணி
Posted by Boston Bala at 2:37 AM 0 comments
மத்திய அமைச்சர் இளங்கோவனின் சகோதரர் மீது வழக்கு
மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் சகோதரர் ஈவிகேஎஸ் மதிவாணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிங் கமிட்டியில் நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பு வகித்து வருபவர் மதிவாணன். அதே அலுவலகத்தில் சமூக நல அலுவலராகப் பணிபுரிந்து வருபவர் அருண்.
இந்நிலையில் அருணை ஜாதி பெயரைச் சொல்லி மதிவாணன் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி கோயம்பேடு காவல் நிலையத்தில், அருண் புகார் செய்தார். புகாரின்பேரில் மதிவாணன் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி
Posted by Boston Bala at 2:35 AM 0 comments
சாத்தான்குளத்தில் 'டாடா' தொழிற்சாலை வருகிறது.
சாத்தான் குளத்தில் டாடா நிறுவனம் கனிமத்தொழிற்சாலை நிறுவ உள்ளதாக தினமலர் செய்தியொன்று தெரிவிக்கிறது:
சாத்தான்குளம் பகுதியில் "இல்மனைட்', "மோனாசைட்' போன்ற கனிமப் படிவங்கள் இயற்கையாகவும் பெருவாரியான அளவிலும் உள்ளன. தற்போது ஒரு சில நிறுவனங்கள் இதை வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்து வருகின்றன. இக்கனிமங்கள் சில தனியார் நிறுவனங்களால் சட்ட விரோதமாகவும், அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமலும், உரிய அரசு அனுமதி ஏதுமின்றியும் கடத்தப்படுவதாக தெரியவந்தது.
அணுசக்தி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் கனிமங்களைச் சட்டவிரோதமாக சிலர் வெட்டி எடுப்பதும் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இத்தகைய சட்டவிரோத ஏற்றுமதியால் அப்பகுதி மக்களுக்கு எவ்வித பொருளாதார பயனும் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு "இல்மனைட்' கனிமத்தை அப்பகுதியிலேயே சுத்திகரித்து, மதிப்பூட்டி, "டைட்டானியம் டை ஆக்சைட்' என்ற விலை உயர்ந்த வேதிப் பொருளாக மாற்ற இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய டாடா நிறுவனம் முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், மூவாயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.என அரசு குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"சாத்தான்குளத்தில் "டாடா' நிறுவனம் துவங்க உள்ள "டைட்டானியம் டை ஆக்சைட்' தொழிற்சாலையால் பல பயன்கள் கிடைக்க உள்ளன. இதற்கு தடையாக இருந்தால் நாடு வளர முடியாத நிலையில் வறண்டு கிடக்க நேரிடும்' எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
Posted by வாசகன் at 1:12 AM 2 comments
திருப்பதி கோவில் தரிசன டிக்கெட்டில் பக்தர்கள் போட்டோ தேவஸ்தானம் முடிவு
திருப்பதி - திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் விடுதி அறைகளுக்கான டிக்கெட்டுகள் போன்றவை கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தேவஸ்தான நிர்வாகி கள் தரிசன டிக்கெட், மற்றும் விடுதி டிக்கெட்டுகளில் பக்தர்களின் போட்டோவை அச்சிட் டுத்தர முடிவு செய்துள்ளனர்.
இதற்காக அவர்கள் பெங்களூரில் உள்ள இன் டியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
டிஜிடல் கேமராவை கவுன்டரில் பொருத்தி தரி சன டிக்கெட் எடுக்கும் போது பக்தரை போட்டோ பிடித்து, அதை டிக்கெட்டில் பதிவு செய்து கொடுக்கலாம் என்று அந்நிறுவனம் சார்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைமலர்
TTD to trifurcate Central Reservation System - Newindpress.com
Posted by Boston Bala at 12:21 AM 3 comments
எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து குதித்து 3 பேர் தற்கொலை
உத்தரபிரதேச மாநில எம்.எல்.ஏ.க்களுக்கான விடுதி லக்னோவில் உள்ளது. ஓ.சி.ஆர். கட்டிடம் என்று அழைக்கப்படும் அந்த விடுதியில் தங்கியிருந்த ஒரு பெண் நேற்று அதிகாலை 8-வது மாடியிலிருந்து கீழே குதித்தார். உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அந்த பெண் பலியானார்.
சுமார் இரண்டு மணி நேரம் கழித்து மேலும் ஒரு பெண்ணும், ஆணும் எம்.எல்.ஏ. விடுதியின் 7-வது மாடியிலிருந்து குதித்தனர். குதித்த வேகத்திலேயே உடல் சிதறி அவர்களும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மாலைமலர்
3 suicides in 4 hrs at Lucknow building - India - The Times of India
Posted by Boston Bala at 12:17 AM 0 comments
b r e a k i n g n e w s...