.

Thursday, February 22, 2007

இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிகிறது - தமிழர்கள் அச்சம்

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் உள்ளனர்.

மேலும்...

இங்கிலாந்து இளவரசர், ஈரக்கில் போர் வீரராகிறார்

இங்கிலாந்தின் இளைய இளவரசர் ஹாரி ஈராக்கில் பணிபுரியும் அந்நாட்டின் படையில் சேர்ந்து பணியாற்றவுள்ளார் என இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

CNN
The Hindu
Google news


நன்றி: Surveysan

பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் பயன்தரும் பட்ஜட்

2007 பட்ஜட் பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rediff

வயதான பெற்றோர்களை கவனிக்காமல் விட்டால் ஜெயில்?

கவனிக்கத்தக்க புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படவிருக்கிறது. இதன்படி தனது பெற்றோர்களை பராமரிக்காமல் விடும் பிள்ளைகளுக்கு மூன்றுமாத ஜெயில் தண்டனையும் ரூ. 5000 வரை அபதாரமும் வழங்கப்படலாம்.

Update
தினமலர் 10 ஆண்டு ஜெயில் தண்டனை எனச் சொல்கிறது

Google news 3 articles.

The Bill also makes the government responsible for the elderly. The government will maintain a register of a senior citizens living in an area and pay them Rs 1000 per month.

ஆப்பிரிக்காவை விட இந்தியகுழந்தைகள் நிலை பரிதாபம்







மூன்று வயதுக்குட்பட்ட இந்திய குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகமும், ஐ.நா. சபையின் யுனிசெப் அமைப்பும் இணைந்து அண்மையில் ஒரு ஆய்வை நடத்தின. இதில் 46 சதவீத இந்திய குழந்தைகள் போதிய சத்துணவு இன்றி வாடுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

எத்தியோப்பியா போன்ற வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் கூட 35 சதவீதத்துக்கும் குறைவான குழந்தைகளே சத்துணவு குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இந்தியாவில் உணவுக்கு பஞ்சமில்லை. ஆனால் தாய்மார்களின் அறியாமை மற்றும் சுகாதாரச் சேவைகளில் உள்ள குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு போதுமான சத்துணவு கிடைப்பதில்லை என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.


ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஏராளமான வளங்கள் உள்ளன. பட்ஜெட் நிதி ஒதுக்கீடு இருக்கிறது. பரவலான போக்குவரத்து வசதி உள்ளது. குறித்த காலத்துக்குள் இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு தேவையான பலமும் இருக்கிறது என்கிறார் யுனிசெப் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் மார்சியோ பேபில்லி.

Dominican Today , தினகரன் ,

தோல்விக்கு பவுலர்கள் காரணம் -ஹசி பாய்ச்சல்

மெல்போர்ன்:- நியூசிலாந்துக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலிய அணி இழந்ததற்கு பவுலர்கள் தான் காரணம் என ஹசி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகளில் கொண்ட ஒரு நாள் தொடரை 0-3 என் இழந்தது. இதனால் தரவரிசைப்பட்டியிலிலும் முதலிடத்தை பறிக்கொடுத்தது. இது பற்றி கேப்டன் ஹசி அளித்த பேட்டி:-

சிறப்பாக பந்து வீச பவுலர்கள் ஆர்வமாக இருந்தபோதும் அவர்களால் அதை செயல்படுத்த முடியவில்லை. அவர்களுக்கு போதிய அனுபவமும் இல்லை. நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கடும் நெருக்கடி தந்தனர். இது போன்ற தருணங்களில் பந்து வீச அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 40 ரங்அளுக்கு 4 விக்கெட் இழந்த அணி 350 ரன்களை "சேஸ்" செய்து வென்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. பவுலர்கள் தங்கல் குறைகளை திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் உலக கோப்பையிலும் இதே நிலைத்தான் ஏற்படும்.

இவ்வாறு ஹசி தெரிவித்தார்.

நன்றி :-தினமலர்.

டாடாவுடன் இணைந்து சென்னை விமான நிலையம் நவீனமயம்.

சென்னை மற்றும் கோல்கத்தா விமானநிலையங்களை நவீனப்படுத்தும் பணியில் டாடா குழுமத்துடன் இணைந்து செயல்பட போவதாக சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் (சிஏஐ) நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும்..இங்கே..

இந்தோனேஷிய கப்பலில் தீ: 350 பயணிகளுக்கு ஆபத்து?

பசிபிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு இடையே 1500க்கும் மேற்பட்ட குட்டி தீவுகளால் ஆன இந் தோனேசியாவில் பங்கா தீவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற லெவினா.1 என்ற சிறுகப்பலில் 350க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஜகார்தாவில் உள்ள தான்ஜ×ங் துறைமுகத்தில் சில பயணிகளை இறக்கி ஏற்றிவிட்டு சென்ற கப்பலில் தீ பிடித்தது.

350 பயணிகளும் தீயில் சிக்கியதில் சிலர் உயிர் பிழைக்க கடலில் குதித்தனர். இன்னும் சிலர் புகை மண்டலத்தில் சிக்கியுள்ளனர். தகவல் கிடைத்ததும் கப்பல் படை படகுகளும், ஹெலி காப்டர்களும் அந்த பகுதிக்கு விரைந்துள்ளன.

*source மாலைமலர்

சென்னை சங்கமம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

“சென்னை சங்கமம்” நிகழ்வின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ‘தமிழ்நாடு 2020’ என்ற கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.

9,10, 11, 12 வது வகுப்பு மாணவ, மாணவியர் இதில் பங்கேற்கலாம். வெற்றி பெறும் 3 பேருக்கு “மாணவச சிந்தனையாளர்’ விருது மற்றும் ரூ. 5000/-, ரூ.2000/- ரூ.1000/- ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அறிவுச் சுடர் விருது வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு – அகிலா ஸ்ரீனிவாசன், சென்னை சங்கமம், தமிழ் மையம், 68, லஸ் சர்ர் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. தொ.பெ.எண். 24994344

மேலும் விபரங்களுக்கு .......................

சிரீலங்காவிற்கு 'அம்மா' விஜயம்


தமிழ்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு கட்டியவீடுகளை முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்த ஆன்மிகத் தலைவர் மாதா அமிர்தானந்தமயி , எல்லோராலும் 'அம்மா' என அழைக்கப் படுபவர், வெள்ளியன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.

இலங்கை அதிபர் மகேந்திர ராஜபக்ஷெயின் அழைப்பினை ஏற்று செல்லும் அவர், அவரது மடம் அங்கு சுனாமியால் பாதிப்ப்படைந்தவர்களுக்கு கட்டிய வீடுகளின் சாவிகளை அவரிடம் ஒப்படைப்பார் எனத் தெரிகிறது. மேற்கு மாநிலத்தில் கலுதராவிலும் கிழக்கு மாநிலத்தில் அம்பாரையிலும் சேர்ந்து 600 ச.அடி கொண்ட 96 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இதற்கு முன்னரும் 'அம்மா' இலங்கை சென்று சுனாமி மறுவாழ்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

உ.பியில் அரசு கலைப்பு இல்லை ?

நேற்றைய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் உ.பி்.யில் முலாயம்சிங் ஆட்சியைக் கலைக்கும் திட்டத்தை கைவிடும் எனத்தெரிகிறது.திரு இராகுல் காந்தி உட்பட சில தலைவர்கள் குடியரசு தலைவர் ஆட்சியை ஆதரித்தாலும் கட்சியின் மூத்த தலைவர்கள் இதனால் ஏற்படும் நன்மைதீமைகளை கணக்கில் கொண்டு திரு ஏ.கே ஆண்டனி மூலம் கட்சித்தலைமையிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. பி.ஜேபி யின் ஆதரவின் பின்னணியில் அரசு கலைப்பு நிகழ்ந்தால், காங்கிரஸின் சமயசார்பற்ற நிலை பிம்பத்திற்கு தீங்கு விளையலாம் என்பதும் பீஹார் விதயத்தில் கை சுட்டுக் கொண்ட குடியரசுத் தலைவர், தான் விலகவிருக்கும் நேரத்தில் தன் பெயருக்கு இழுக்கு வருவதை விரும்பாது தடங்கல்கள் கொடுக்ககூடும் என்பதும் முதன்மை காரணிகளாகும்.

தேமுதிக கவுன்சிலர் திமுகவுக்கு தாவினார் - விஜய்காந்த் அதிர்ச்சி

சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக கவுன்சிலர் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

இதன் மூலம் 5 இடங்களில் வென்ற மகிழ்ச்சியில் இருந்த தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு முதல் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

தேமுதிக சார்பில் 27வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சர்தார், திமுகவுக்குத் தாவியுள்ளார்.

அதே போல தேமுதிக சார்பில் வெற்றி பெற்ற மற்ற 4 வேட்பாளர்களுமே திமுகவுக்குத் தாவ தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பாஜக சார்பில் வெற்றி பெற்ற இரு வேட்பாளர்களில் ஒருவர் திமுகவுக்குத் தாவுவது குறித்து பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார் எனத் தெரிகிறது.

உள்ளாட்சி உறுப்பினர்கள் கட்சி தாவினால் பதவி போகாது என்பது குறிப்பிடத்தக்கது.

Ford Fiesta புது மாடல் அறிமுகம் -ரூ.6.30 லட்சம்





போர்டு இந்தியா நிறுவனம், பியஸ்டா வரிசையில் 1.4 இசட்.எக்ஸ்.ஐ. டியூராடெக் (Ford Fiesta 1.4 L ZXI Duratec) என்ற புதிய வகைக்காரை சென்னையில் நேற்று அறிமுகம் செய்தது.

பியஸ்டா கார், மின்சாரத்தின் மூலம் இயங்கும் கண்ணாடிகள், அலாய் வீல், கடிகாரம், வெப்பநிலை காட்டும் கருவி, சாவி இல்லாமல் எலெக்ட்ரானிக் முறை மூலம் இயங்கும் கதவுகள், ஓட்டுநரின் இருக்கையை வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ளும் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.


சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையில் இந்திய, ஐரோப்பிய இன்ஜினியர்களின் கூட்டு முயற்சியில் இக்கார்கள் தயாரிக்கப்படுகின்றன.


The Hindu

ஐ ஃப்ளெக்ஸ் பங்குகள்; அரசுத் தலையீடு?

ஐ ஃப்ளெக்சின்(i Flex) பங்குகளை ஆரக்கிள் கார்ப்பரேஷனுக்கு விற்கும்படி பங்குதாரர்களை வர்புறுத்த இந்திய அரசாங்கத்தை அமெரிக்கா கேட்டுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற ச்டாம் இருப்பது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

ஆரக்கிள் தற்போது ஐ ஃபெளெக்சின் பங்குகளில் 82.9% பங்குகளை கைப்படுத்தியுள்ளது.

இந்திய சட்டப்படி பங்குகளை விற்கச் சொல்லி வர்புறுத்த எந்த வழியுமமில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் ET

நில நடுக்கம் ( ஆனால் ச்சின்னது)

நியூஸியில் நேற்று இரவு அடுத்தடுத்து மூன்று முறை நில நடுக்கம்
ஏற்பட்டது. சேதாரம் ஒன்றும் இல்லை.

நியூஸிப் பதிவர்கள் அனைவரும்(??) நலமே!

மேலதிக விவரங்கள்:

இங்கே

இத்தாலிய பிரதமர் ராஜினாமா

வெளியுறவுக் கொள்கைபற்றிய வாக்கெடுப்பில் தோல்விகண்டதை அடுத்து இத்தாலிய பிரதமர் ரொமானொ ப்ரோடி தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் தந்தார். இத்தாலிய ஜனாதிபதி ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட்டு, விரைவில் அரசியல் கட்சிகளோடு கலந்தாராய உள்ளார்.

முன்னதாக நடந்த ஓட்டெடுப்பில் ஆப்கானிஸ்தானுக்கு மேலும் படைகளை அனுப்புவது, வட இத்தாலியில் அமெரிக்கப் படையின் அளவை அதிகரிப்பது போன்ற ப்ரொடியின் முடிவுகள் நிராகரிக்கப்பட்டன.

It received 158 votes in favour, just short of the majority of 160needed for approval, while 136 members of the conservative oppositionvoted against the motion.

BBC
Google News 175+ articles

-o❢o-

b r e a k i n g   n e w s...