தென்னாப்ப்ரிக்காவில் மைதானத்தில் ஆடி(?) அனைவரையும் மகிழ்வித்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இம்முறை உலகக்கோப்பைக்காக தானே ஒரு பாடலை எழுதி அதில் நடித்தும் உள்ளார். 'தேஷ்' எனப் பெயரிடப்பட்டு மார்ச் 12ம் தேதி வெளியாகவுள்ள இந்த ஆல்பத்தில் 2 பாடல்கள் உலகக்கோப்பை பற்றியும் 8 பாடல்கள் தேசபக்தி பற்றியும் உள்ளன.
மேல் விவரங்களுக்கு
Thursday, March 1, 2007
உலகக்கோப்பைக்காக ஸ்ரீசாந்த் எழுதியுள்ள பாட்டு
Posted by மணிகண்டன் at 11:58 PM 0 comments
இனக்கலவரங்களுக்கெதிரான புதிய சட்டம்
இனக்கலவரங்களை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்கலுக்கு உடனடி நீதிகிடைக்க வழிசெய்யவும் புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளது.
Cabinet approves enactment of Bill on communal violence
The Communal Violence (Prevention, Control and Rehabilitation of Victims) Bill will seek to envisage prevention of communal violence, ensure speedy investigation and dispensation of justice and impose enhanced punishment on the persons involved in such offences, Parliamentary Affairs Minister P R Dasmunshi told reporters
Posted by சிறில் அலெக்ஸ் at 10:59 PM 0 comments
ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் ஒன்றிணைப்பு துவங்கியது
இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியாவை ஒன்றாக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவை ஒன்றானால் தெற்காசியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து சேவையாக உருவாகும்.
Indian, Air India merger takes off
The government tonight gave the final approval for the mega-merger of state-run carriers Air India and Indian, setting in motion the process to create South Asia's largest airline and enable the combined entity to leverage their assets to take on global competition.
Posted by சிறில் அலெக்ஸ் at 10:54 PM 0 comments
பாகிஸ்தான் அணியில் ஷோயப், ஆசிப் இல்லை
உலகக் கோப்பை போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷோயப் அக்தர் மற்றும் முகம்மது ஆசிப் அகியோர் இடம்பெறவில்லை.
காயம் காரணமாக அவர்கள் இருவரும் அணியில் இடம்பெறவில்லை என்று அந்த அணியின் செய்தி தொடர்பாளர் பெர்வேஸ் மிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
MSN தமிழ்Posted by சிறில் அலெக்ஸ் at 10:50 PM 0 comments
பிரச்சனைகளுக்கு மத்தியில் உலகக்கோப்பை
ஒன்பதாவது உலகக் கோப்பை நடக்கவிருக்கும் கரிபியன் தீவுகள் போட்டிக்குத் தயயராயிருக்கின்றனவா எனும் கேள்வியை BBC பத்தி எழுப்புகிறது.
Is the Caribbean ready for the World Cup?
"For the World Cup, however, things are different. If we wait for the day of the games, none of us will get tickets. This event demands a fundamental transformation in our attitude and we have realised that. By the time the event ends, the world too will wake up to the fact that the Caribbean has reinvented itself."
Posted by சிறில் அலெக்ஸ் at 10:40 PM 2 comments
அட்லாண்டிக் நடுவே பூமியில் ஓட்டை
அட்லாண்டிக் பெருங்கடல் நடுவே, பூமியில் மையத்தில் வெற்றிடம் இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. மேலும் ஆய்வுகள் நடத்தப்படவிருக்கின்றன.
Scientists probe 'hole in Earth' (BBC)
Posted by சிறில் அலெக்ஸ் at 10:33 PM 0 comments
குழந்தைகளுக்கான புதிய மலேரியா மருந்து
குழந்தைகளுக்கான, குறைந்த விலையில் கிடைக்கும் மலேரியா மருந்து பாரிசில் வேளியிடப்பட்டது. ஆப்ரிக்காவில் ஐந்துவயதுக்கு குறைந்த சுமார் 3000 குழந்தைகள் தினமும் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர்.
New malaria drug targets children(BBC)
Posted by சிறில் அலெக்ஸ் at 10:28 PM 1 comments
பாலிவுட் நடனம், யாக்சையர் அபிநயம்
வட இங்கிலாந்தில் யாக்சையர்(Yorkshire) பகுதியில் பாலிவுட் நடனத்துக்கு மவுசு வந்துள்ளது.
Bollywood dance craze hits Yorkshire
Posted by சிறில் அலெக்ஸ் at 10:05 PM 0 comments
இன்று (01-03-2007) பிறந்த நாள்
Buddhadeb Bhattacharjee - turns 64, THE HINDU்
(Late)- ANIL BISWAS - THE HINDU்
மு.க.ஸ்டாலின் - 55: தலைவர்கள் வாழ்த்து - THATS TAMIL்
Posted by சிவபாலன் at 9:42 PM 1 comments
உள் விவகாரங்களில் தலையீடு: அமெரிக்காவுக்கு பாக். எச்சரிக்கை
தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் ரியாஸ் முகமது கான், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதர் ரியான் சி. கிராக்கரை நேரில் அழைத்து தனது ஆட்சேபனையை தெரிவித்ததாக 'தி டெய்லி' பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
MSN தமிழ்
Posted by சிறில் அலெக்ஸ் at 9:26 PM 1 comments
இலங்கை : புலிகள் முகாம் தாக்குதல் - 18 பேர் பலி
இலங்கையில் விடுதலைப்புலிகளின் முகாம்களின் மீது தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டுள்ள அந்நாட்டு ராணுவத்தினர், வடகிழக்குப் பகுதியில் வவுனியா முகாம்களில் மிக் விமானத் தாக்குதல் நடத்தியதில் 18 புலிகள் கொல்லப்பட்டனர்.
இலங்கை : புலிகள் முகாம் தாக்குதல் - 18 பேர் பலி MSN தமிழ்
Posted by சிறில் அலெக்ஸ் at 9:24 PM 3 comments
துபாயில் இந்தியர்கள் மறியல் போராட்டம்
ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துபாயில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
MSN - தமிழ்
Posted by சிவபாலன் at 9:14 PM 0 comments
போஸ்னியாவிலிருந்து இங்கிலாந்து படைகள் விலக்கம்
இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் போஸ்னியாவில் மீதமிருக்கும் இங்கிலாந்து படைகளை திரும்பப் பெறவிருக்கிறதென அறிவித்துள்ளது.
சிலநாட்களுக்குமுன் ஈராக்கிலிருந்து படைகளை திரும்பப்பெறும் அறிவிப்பை இங்கிலாந்து வெளியிட்டிருந்தது.
UK to withdraw troops from Bosnia BBC
UK troops to leave Bosnia
Britain to withdraw last troops from Bosnia after 15 years Monsters and Critics.com
Posted by சிறில் அலெக்ஸ் at 8:41 PM 0 comments
+2 தேர்வு துவக்கம்: வினாத்தாளில் குளறுபடி?
+2 தேர்வு இன்று துவங்கியது. தமிழ் முதல் தாள் தேர்வில் ரத்து செய்யப்பட்ட பாடப்பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால் குழப்பம் நிலவியது.
மார்ச் 21ம் த்ஏதி வரை நடக்கும் தேர்வுகளில் மொத்தம் 5,61,710 மாணவ, மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள்.
தாட்ஸ்தமிழ்
Posted by சிறில் அலெக்ஸ் at 8:34 PM 0 comments
அப்ரூவர் ஆக தெல்கி விண்ணப்பம்
முத்திரைத்தாள் மோசடி வழக்கில் அரசு தரப்பு அப்ரூவர் ஆகி வழக்கிற்கு உதவ அனுமதிக்குமாறு முக்கிய குற்றவாளி தெல்கி நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.
I want to be government approver: Telgi (DNA)
Telgi wants to become an approver (ToI)
Telgi decides to turn approver
Posted by சிறில் அலெக்ஸ் at 8:27 PM 0 comments
அப்துல் கலாம் தவறி கீழே விழுந்தார்
டெல்லியில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீரென கால் இடறி விழுந்தார். எனினும் இதில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
MSN - தமிழ், தினமலர்
Posted by சிவபாலன் at 7:15 PM 8 comments
இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் நிலநடுக்கம்
ரிக்டர் அளவுகோலில் 5.9 பதிவான நிலநடுக்கம் இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் காலை 9.00 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. எவ்வித சேதமும் இல்லை எனவும் அறியப்பட்டுள்ளது.
நன்றி அனானி.
Posted by சிறில் அலெக்ஸ் at 6:49 PM 0 comments
பீகாரில் ஸ்ட்ரைக் - 25 மணிநேர மின் தடங்கல்
பீஹார் மின்வாரியத்தை மூன்று தனியதிகாரமுள்ள வணிகக் கழகங்களாக மாற்றும் திட்டத்தை எதிர்த்து 14,000 மின் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தால் பிஹாரில் மின் வினியோகம் தடைபட்டது. இதனால் தீவிர சிகிட்சை மருத்துவமனைகள், குடிநீர் மற்றும் இரயில் போக்குவரத்து ஆகியனவும் பாதிக்கப் பட்டன.
மேலும்...
Posted by மணியன் at 1:14 PM 0 comments
மும்பை பங்கு சந்தையில் பங்கு வர்த்தகம் ஏற்றம்
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை துவங்கியவுடன் பங்கு வர்த்தகம் ஏற்றம் அடைந்தது. காலை 10 நிலவரப்படி சென்செக்ஸ் 142 புள்ளிகளும் (13080.37 புள்ளிகள்), நிப்டி 34 புள்ளிகளும் (3780.05 புள்ளிகள்) ஏற்றமடைந்தன. முன்னதாக நேற்று பார்லிமெண்டில் 2007-08 ம் ஆண்டு பட்ஜெட்டை நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த பின் சென்செக்ஸ் 500 புள்ளிகள், 148.60 புள்ளி சரிவை கண்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமலர்.
Posted by கவிதா | Kavitha at 12:52 PM 0 comments
தமிழ்நாட்டில் நீர்நிலைகளை மேம்படுத்த உலக வங்கி ரூ.2182/-- கோடி கடன்
தமிழ்நாட்டில் 5.763 நீர்நிலைகளை (ஏரி, குளங்கள்) மீண்டும் புதுப்பிக்க ரூ.2,182 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது
இந்த நீர்நிலைகளைத் தூர்வாரி, ஆழப்படுத்தி , மதகுகள், வாய்க்கால்கள் அமைத்து புதுப்பிப்பதன் மூலம் 4 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.
மேலும்..
Posted by கவிதா | Kavitha at 12:40 PM 0 comments
பஸ் படிக்கட்டில் பயணம், மாணவர் சாவு
சென்னையில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர், தவறி கீழே விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் தினேஸ் (20 வயது), அரூம்பாக்கதில்லுள்ள கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ படித்து வந்தார். புதன்கிழமை தினேஷ் திருவேற்காடு நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்து எண்.159-ல் படியில் நின்றபடி பயணம் செய்தார். கோயம்பேடு அருகில் பஸ் சென்றபோது தவறி கீழே விழுந்தார். அப்போது பஸ்ஸின் பின் சக்கரம் தினேஸ் மீது ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.கோயம்பேடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நன்றி :- தினமணி.
Posted by கவிதா | Kavitha at 12:25 PM 0 comments
'பின் லேடன் இங்கு இல்லை': பாக்கிஸ்தான்
பின் லேடனும் அவன் கூட்டாளிகளும் பாக்கிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுகிறார்கள் எனும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பாக்கிஸ்தான் பின்லேடன் பாக்கிஸ்தானில் இல்லை என பதிலளித்துள்ளது.
Pakistan denies US claim on Bin Laden, al-Qaida camps
Posted by சிறில் அலெக்ஸ் at 9:54 AM 0 comments
வளரும் நாடுகளில் போலி மருந்து அமோகம்
போலி மருந்துக்கள் வளரும் நாடுகளில் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக Reuters கட்டுர்ரை தெரிவிக்கிறது.
Bogus medicines flood developing world
Some 25 to 50 percent of the medicines used in developing countries were now believed to be fake, the International Narcotics Control Board said in its 2006 report, quoting World Health Organization (WHO) findings. Providers ranged from makeshift village markets to Web sites.
Posted by சிறில் அலெக்ஸ் at 7:09 AM 0 comments
இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்த வேண்டும் - கருணாநிதி கோரிக்கை
ஐஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள பிற்படுத்ப்பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு மருத்துவ உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
MSN - தமிழ், THE HINDU
Posted by சிவபாலன் at 6:25 AM 3 comments
பாலியல் குற்றவாளிகளுக்குத் தனி வாகன பதிவெண் பலகை
அமெரிக்கா, ஒகையோவில்(Ohio) பாலியல் குற்றவாளிகளுக்கு ஃப்ளோரசண்ட் பச்சை வண்ணத்தில் வாகன பதிவெண் பலகை வழங்கப்பட வேண்டும் எனும் புதிய சட்டத்தை முன்மொழியவுளளனர். பாலியல் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள இது உதவும் என நம்பப்படுகிறது.
ஏற்கனவே பல மாநிலங்களில் போதையில் வண்டி ஓட்டியவர்களை அடையாளப்படுத்த இத்தகைய முறை கையாளப்பட்டுவருகிறது.
Ohio wants special car plates for sex offenders
A Republican and a Democrat in the state legislature in Columbus have joined forces to propose the law, which echoes measures in several U.S. states that require convicted drunken drivers to use a yellow, pink or red plate on their cars.
Police said the green plates would allow them to track sex offenders, who are already required to register with the local sheriff's office and are prohibited from living within 1,000 feet (300 metres) of a school.
Posted by சிறில் அலெக்ஸ் at 3:54 AM 4 comments
க்ரீமிலேயரைக் கண்டறிய நிரந்திரக் கமிஷன்
சாதிகளின் அடிப்படையில் இயங்கும் இட ஒதுக்கீட்டில் வசதிபடைத்த சிலரும் சலுகைகள் பெறுகின்றனர் இவர்கள் 'க்ரீமி லேயர்' (Creamy Layer) என அடையாளப்படுத்தப் படுகின்றனர்.
க்ரீமி லேயரில் இருப்பவர்கள் என வகைப்படுத்துவதற்கான முந்தைய பரிந்துரைகளை (Narendran panel report)உச்ச நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து கேரளாவில் புதிய கமிஷன் அமைக்கப்பட உள்ளது.
சில நாட்களுக்கு முன் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்கு 'க்ரீமி லேயர்' பற்றி அளித்த பதில்.
Permanent Commission to identify 'creamy layer' (Hindu)
Kerala sets up new panel on creamy layer (HT)
Kerala government sets up panel on creamy layer(Newindpress)
Posted by சிறில் அலெக்ஸ் at 2:37 AM 0 comments
குஜராத்தில் நிலநடுக்கம்!
2001 ஆம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!
ரிக்டர் அளவுகோலில் 3.5 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், நேற்று இரவு 11 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
வெப் உலகம்், The Hindu
Posted by சிவபாலன் at 2:12 AM 0 comments
கத்தார் ஓப்பன்: சானியா விலகினார்
சானியா மிர்சா கத்தார் ஒப்பன் போட்டியிலிருந்து மூட்டுவலி காரணமாக விலகிக்கொண்டார். முதல் சுற்று ஆட்டத்தின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
Sania pulls out of Qatar Open
Indian tennis star Sania Mirza on Wednesday pulled out of the Qatar Open WTA tennis tournament due to a knee injury.Sania announced her decision just before her second round singles match against Ukrainian Kateryna Bondarenko in the $1.34 million event.The 20-year-old had sustained the injury during her win against Italy's Romina Oprandi in the opening round on Monday
Posted by சிறில் அலெக்ஸ் at 1:55 AM 0 comments
77% எம்.பி.ஏக்கள் வேலைபெறத் தகுதியில்லாதவர்கள்: ஆய்வு
4கில் மூன்று எம்.பி.ஏ படித்த மாணவர்கள் வேலைபெறத் தகுதியில்லாதவர்களாயிருக்கிர்றார்கள் என தற்போதுவந்துள்ள ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது.
Three out of four MBAs are unemployable, says study
Premier skills-testing agency MeritTrac has just concluded, after testing 790 B-school graduates in six cities on seven key parameters, that 77 per cent of them are “unemployable”. Heads of some top B-schools say this finding doesn’t surprise them.
“The industry is employing more and more students and finding later that many of them are not worth recruiting,” said IIM-Bangalore Director Prakash Apte
He suggests that salaries must be raised to attract better teachers who are getting lucrative offers from the market.
Posted by சிறில் அலெக்ஸ் at 1:27 AM 2 comments
தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தில் பெரும் முதலீடு
தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள 10 நிறுவனங்கள் தமிழகத்தில் இந்த ஆண்டில் அதிக அளவு முதலீடு செய்ய இருப்பதாகவும், இதனால் நாட்டின் தகவல் தொழில்நுட்ப சந்தையில் தமிழகத்தின் பங்கு 25 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் சந்திரமௌலி, மாநிலம் ஏற்கெனவே மென்பொருள் ஏற்றுமதியில் கடந்த ஆண்டின் இலக்கை கடந்து விட்டதாகவும், இதுவரை 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
MSN - தமிழ்
Posted by சிவபாலன் at 12:18 AM 0 comments
b r e a k i n g n e w s...