.

Sunday, June 3, 2007

கலைஞர் 84 - வீடியோ




"செய்திக்கு இங்கே செல்லவும்"

ச: தினமலரில் சற்றுமுன்....& சென்னையில் "போட்காஸ்டிங்' கலந்துரையாடல்

வெப்சைட்களில் எழுதி போரடித்துப் போனவர்கள்... இப்போது தங்கள் குரல் ஒலிபரப்பவும், பதிவு செய்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும் விருப்பப்படுகின்றனர்.

ஒரு ரேடியோ ஸ்டேஷன் செய்ய வேண்டிய வேலையை இப்போது இன்டர்நெட் எளிதில் செய்துவிடுகிறது. ஒவ்வொரு வரும் தங்களது நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப (போட்காஸ்டிங்) அல்லது ஒளிபரப்ப (வீடியோ பிளாக்) இன்டர்நெட் உதவியை நாடுகிறார்கள். இலவசமாக எளிதில் ஒவ்வொருவருவரும் ஒரு வெப்ரேடியோ உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு சென்னையில் ஜூன் 910ம் தேதிகளில் டைடல் பார்க்கில் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் போட்காஸ்டிங் தொடர்பான சந்தேகங்களை தெளி வாக்கிக் கொள்ளவும், விவாதித்துக் கொள்ளவும் முடியும். நாலெட்ஜ் பவுண்டேஷன் சார்பில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு: http://podworks.in/

[இந்தச் செய்தி தினமலர் இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இந்த செய்தியுடன் பின்வரும் சற்றுமுன் குறித்த செய்தியும் அதே பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது.]

"சற்றுமுன்' செய்திகள்

இப்போது பத்திரிகைகள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் இதுபோன்ற பிளாக்கர்கள் வலைப்பதிவர்களும் செய்யத் துவங்கிவிட்டனர். பத்திரிகையாளர்களுக்கு இணை யாக போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு நாளும் செய்தி, கட்டுரைகள் எழுதுவோர் அதிகரித்துவிட்டனர். http://satrumun. blogspot.com இந்த தளத்தில் ஹெல்மட் போன்ற அன்றாட நாட்டு நடப்பு முதல் அரசியல் வரை அலசப்படுகிறது.

25 பூங்காக்களில் இசை நிகழ்ச்சிகள்

சென்னை மாநகராட்சியில் 25 பூங்காக்களில் வாத்தியக்குழுவின் இசை நிகழ்ச்சிகள் நாள்தோறும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெறுகிறது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

மாநகராட்சிக் கூட்டத்தில் அண்மையில் இது குறித்து மேயர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

இதையடுத்து இப்பூங்காக்களில் வாத்தியக்குழுவின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
1. 2வது மண்டலத்தில் 22வது வார்டில் 3ந்தேதி சிமெண்ட் சாலையில் உள்ள அண்ணா பூங்கா,
2. 30வது வார்டில் 4ந்தேதி ஸ்ரீராமுலு பூங்கா,
3. 3வது மண்டலம் 47வது வார்டில் 7ந்தேதி மைலேடிஸ் பூங்கா,
4. 37வது வார்டில் 8ந்தேதி மாதவரம் நெடுஞ்சாலை மகாத்மா காந்தி பூங்கா,
5. 42வது வார்டு 9-ந்தேதி பேசின் யானை கவுனி சாலை நியூபூங்கா,
6. 4வது மண்டலத்தில் 51வது வார்டில் 10ந்தேதி சஜ்ஜாத் உசேன் பூங்காவிலும்,
6. 55வது வார்டில் 11ந்தேதி ஜீவா பூங்காவிலும் இந்த இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Dinamani

குத்தம்பாக்கம் இளங்கோவுக்கு "அறம்' விருது: ஜூன் 6-ல் ஆளுநர் வழங்குகிறார்

2006-ம் ஆண்டுக்கான "அறம்' விருது, திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர். இளங்கோவுக்கு (47) வழங்கப்படுகிறது. இவர், குத்தம்பாக்கம் கிராமத் தன்னாட்சி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.

ஸ்ரீராம் இலக்கியக் கழகத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருதுடன், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் அடங்கும்.

வேதிப்பொறியியலில் பட்டம் பெற்ற இளங்கோ, விஞ்ஞானி பணியை விட்டுவிட்டு கிராமச் சேவையில் ஈடுபடத் தொடங்கினார். குத்தம்பாக்கம் ஊராட்சித் தலைவராக இருந்த காலத்தில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டார். தற்போது, தொடர்ந்து அப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இளங்கோவுக்கு விருதுத் தொகை ரூ. 1 லட்சத்துடன், மேலும் ரூ. 1 லட்சம் மானியமாக அளிக்கப்படுகிறது. இந்தத் தொகை அவரின் 'வலைய வளர்ச்சிப் பொருளாதாரம்' என்ற திட்டத்தைச் செயல்படுத்த உதவும். மேலும், வட்டியில்லாமல் ரூ. 2 லட்சம் கடனுதவி அளிக்கப்படுகிறது என்று கூறினர்.

Dinamani

கருணாநிதி 84

தமிழக முதல்வர் கருணாநிதியின் 84-வது பிறந்தநாள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான நிகழ்ச்சிகளில் கருணாநிதி பங்கேற்கிறார்.

காலை 7 மணிக்கு அண்ணா, பெரியார் நினைவிடங்களில் கருணாநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

காலை 8 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை முக்கிய பிரமுகர்களும், கட்சி நிர்வாகிகளும் சந்தித்து வாழ்த்து கூறுகின்றனர்.

காலை 8.45 மணிக்கு நெடுஞ்சாலைத் துறை சார்பாக தமிழகமெங்கும் மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் மரக்கன்றை கருணாநிதி நடுகிறார்.

காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்திலும், மாலை 4 மணிக்கு சி.ஐ.டி. காலனியில் உள்ள அவரது இல்லத்திலும் முக்கியப் பிரமுகர்களும், கட்சி நிர்வாகிகளும் சந்தித்து வாழ்த்து கூறுகின்றனர்.

வாழ்த்து பெறும் இடங்களில், உண்டியல் மூலம் பிறந்த நாள் நிதி வசூலிக்கப்பட்டு பல்வேறு நலப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

இரவு 7 மணிக்கு கிண்டி ஹால்டா சந்திப்பு அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்றுப் பேசுகிறார். கூட்டத்தில் பலருக்கு நிதி உதவிகளும், தொழில் கருவிகளும் வழங்கப்பட உள்ளன.

பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் க. அன்பழகன், மு.க. ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதி இளம்வழுதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Dinamani

இடைத்தேர்தல்: உல்லால் தொகுதியில் 62% வாக்குப்பதிவு

மங்களூர் மாவட்டம் உல்லால் சட்டப் பேரவைத் தொகுதிக்கு சனிக்கிழமை இடைத்தேர்தல் நடந்தது. இத்தொகுதியில் யூ.டி.காதர் (காங்கிரஸ்), சந்திரசேகர உசில் (பாஜக), அபுபக்கர் நடேகல் (மதச்சார்பற்ற ஜனதா தளம்), பாலகிருஷ்ண ஷெட்டி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) மற்றும் பரத்ராஜ் ஷெட்டி (சுயேச்சை) ஆகியோர் போட்டியிட்டனர்.

சுயேச்சை வேட்பாளர் பரத்ராஜ் ஷெட்டியைத் தவிர மற்ற நான்கு வேட்பாளர்களும் இத் தொகுதியில் வாக்களித்தனர். பரத்ராஜ் ஷெட்டிக்கு இத் தொகுதியில் வாக்கு இல்லை.

வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவு இருந்தும் காதர் செல்போன் எடுத்துச் சென்றதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஏராளமானோர் அந்த வாக்குச்சாடி முன் கூடி, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குரல் எழுப்பினர்.

இத்தொகுதியில் பதிவான வாக்குகள் ஜூன் 5-ம் தேதி எண்ணப்படுகின்றன.

Dinamani.com

ரஜினியின் இமேஜை கண்டு பயந்தேன்

சென்னை, ஜூன் 3-

சிவாஜி படப்பிடிப்பின்போது ரஜினியின் இமேஜை கண்டு பயந்தேன் என்றார் இயக்குனர் ஷங்கர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

சிவாஜி படத்துக்காக 22 மாதங்கள் உழைத்திருக்கிறோம். ஒவ்வொரு காட்சியையும், சிற்பி சிலை செதுக்குவது போல கவனத்துடன் உருவாக¢கி உள்ளேன். ரஜினி ரசிகர்களையும், எனது படம் இப்படித்தான் இருக்கும் என நம்பி வருபவர்களையும் இந்தப் படம் சந்தோஷப்படுத்தும். எனது வாழ்நாளின் சிறந்த படைப்பு இது. படத்தை முடித்துவிட்டேன். இப்போது மக்களின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.

சிவாஜி கதையை உருவாக்கியதும் நான் பயந்தது, ரஜினியின் இமேஜை கண்டுதான். எந்த ஒரு இடத்திலும் அவரது ஸ்டைலான இமேஜை, படக் கதை உடைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். படப்பிடிப்பின்போதும் அதையே மனதில் வைத்திருந்தேன். படம் முடிந்து இப்போது பார்த்தால், இந்த கதைக்கு ரஜினியின் ஸ்டைலான அந்த இமேஜ்தான் தூணாக உள்ளது.

படத்தின் டிரெய்லரை எடிட்டர் ஆண்டனி சிறப்பாக தொகுத்துள்ளார். ரஜினியின் பஞ்ச் வசனங்கள், சென்டிமென்ட், காதல், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளது. டிரெய்லரே ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுக்கும் விதமாக உள்ளது.
சிவாஜியை மே 8ம் தேதி அல்லது 17ம் தேதி திரையிட நான் முயன்றதாகக் கூறுவது உண்மை அல்ல. எனக்கு 8ம் நம்பர¢ ராசி என்பதும் பொய்யான தகவல். எனக்கு ராசி போன்ற விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. ஏதேச்சையாக எனது கார் எண் 8 ஆக அமைந்தது. நான் இயக்கிய சில படங்களும் 8 என வரும் வ¤தமான தேதிகளில் ரிலீஸ¢ ஆனது. இதனால் எனக்கு எட்டு நம்பர் ராசி என வினியோகஸ்தர்கள் முதல் என¢னிடம் வேலை பார்ப்பவர்கள் வரை நினைக்கிறார்கள். இப்போது சிவாஜி படம் 15ம் தேதி திரைக¢கு வருகிறது. இதன் மூலம் எனக்கும் எட்டாம் நம்பருக்கும் தொடர்பில்லை என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும்.



நன்றி: "மாலைச் சுடர்"

-o❢o-

b r e a k i n g   n e w s...