.

Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Wednesday, August 29, 2007

பிழையான ஆணுறைகள் திரும்ப அழைக்கப்பட்டது

தென்னாப்பிரிக்காவின் உடல்நலத்துறை தாங்கள் விநியோகித்த இருபது மில்லியன் ஆணுறைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது. அரசு ஊழியர்களிடமிருந்து தரக்கட்டுப்பாடு பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தார்கள் என்று சலாடெக்ஸ் (Zalatex) மேல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் ஐந்து மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

BBC NEWS | Africa | S Africa recalls faulty condoms

Wednesday, August 1, 2007

புதிய வழிகாட்டி மதிப்பு: தி.நகர் ்- ரூ. 12 ஆயிரம்; அண்ணா சாலை - ரூ.8,850

தமிழ்நாட்டில் நில விற்பனை யில் சந்தை விலைக்கும், வழி காட்டி மதிப்புக்கும் (அரசு விலை) இடையே வித்தியாசம் அதிகமாக இருந்தது. அதாவது வெளியில் நிலத்தை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் அதை பதிவு செய்யும் போது அந்த இடத்தில் அரசாங்க மதிப்பு மிக குறைவாக இருக்கும்.

இதனால் பத்திர பதிவில் பல்வேறு மோசடிகள் ஏற்பட்டன. கறுப்பு பண புழக்கம் அதிகரித்து அரசுக்கு வருவாய் இழப்பும் அதிகமாக ஏற்பட்டது. இதை முற்றிலும் களைய தமிழ்நாடு முழுவதும் வழி காட்டி மதிப்பை மாற்றி அமைக்க அரசு உத்தரவிட்டி ருந்தது. இதன்படி புதிய வழி காட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. சந்தை விலைக்கும் முந்தை வழிகாட்டி மதிப்புக்கும் இடையே வேறுபாட்டை பாதியாக குறைக்கும் வகையில் இந்த விலை நிர்ணயம் உருவாக்கப்பட்டுள்ளது.

அபிராமபுரம் 2-வது தெருவில் ரூ. 872 ஆக இருந்த சதுர அடி இப்போது ரூ. 2365 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் அபிராமபுரம் 4-வது தெருவில் விலை ரூ. 3430 ஆக உள்ளது.

தி.நகர் உஸ்மான் ரோட்டில் பஸ் நிலையம் முதல் பனகல் பார்க் வரை சதுர அடி ரூ. 11 ஆயிரமாக இருந்த விலை ரூ. 12 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. நாகேசுவரராவ் ரோடு முதல் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை பகுதியிலும் ரூ. 12 ஆயிரமாக விலை நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

இதே போல் அண்ணா சாலை பகுதி விலை சதுர அடி ரூ. 8850 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் தெருவின் சதுர அடி விலை எவ்வளவு என்பதை பார்க்க இண்டர்நெட்டில் www.tnreginet.net என்ற முகவரியில் சென்று பார்க்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெரு, அவென்யூ, நகர்களுக்கும் இதில் விரிவாக விலை விவரங்கள் உள்ளன.

மாலைமலர்

Monday, July 30, 2007

'புனர்நிர்மாணப் பணிகளில் இராக் அரசு தோல்வி'

பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஈராக் மீள்கட்டமைப்பு திட்டங்களை பொறுப்பேற்று நிறைவேற்றுவதில், ஈராக் அரசாங்கம் தோல்வியடைந்திருப்பதாக, இராக் புனர்நிர்மாணப் பணிகளை மேற்பார்வையிடும் அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈராக் மீள்கட்டமைப்புக்கான பல திட்டங்களை, ஈராக்கிய அரசின் ஒப்புதல் இல்லாமலே, அமெரிக்க அரசு மாற்றி அமைப்பதாகவும், இந்த நிறுவனத்தின் தணிக்கைக் குழுவின் அறிக்கை கண்டுபிடித்துள்ளது.

இந்தத் திட்டங்களின் தற்போதைய தவறான மேலாண்மையும், அதில் நடக்கும் ஊழலும் தொடர அனுமதிக்கக் கூடாது என்று, ஈராக்கிற்கான அமெரிக்கச் சிறப்பு தலைமை கண்காணிப்புத் தலைவர் ஸ்டூவர்ட் பொவ்ன், பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த நிலைமைகளை இரண்டாவது உள்நாட்டுக் கிளர்ச்சியாக அவர் வர்ணித்தார்.

பல லட்சக்கணக்கான டாலர்களைச் செலவழித்து உருவாக்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையம், இராக்கிய நிர்வாகத்திற்கு மாற்றப்பட்ட பிறகு செயற்படாமல் போனதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

BBC Tamil

Report Finds Dire Humanitarian Crisis in Iraq - New York Times
8 million Iraqis need urgent aid, report says | Iraq | Guardian Unlimited
OXFAM/NCCI REPORT IN FULL - Rising to the humanitarian challenge in Iraq (324KB)

Friday, July 27, 2007

'டி.வி. சேனல் மன்னிப்பு கேட்க வேண்டும்': ரகசிய கேமரா வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் பெற்றுக்கொண்டு அப்துல் கலாம் உள்ளிட்டோருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்ததை ஜீ (Zee) டிவி சேனல் ரகசிய கேமராவில் படம்பிடித்தது தொடர்பான வழக்கில் முக்கியத் திருப்பமாக, அந்த டி.வி. சேனல் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் டி.வி. சேனல் அளித்த விளக்கங்கள் திருப்தியளிக்காததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த 3 வழக்கறிஞர்கள் ரூ.40 ஆயிரம் கொடுத்து அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.கரே, நீதிபதி பி.பிசிங் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.ஜெயின் ஆகியோருக்கு எதிராக கீழ்நீலை நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பெற்றதை ரகசிய கேமராவில் படம்பிடித்து 'ஜீ' டி.வி. 2004-ம் ஆண்டு ஒளிபரப்பியது.

இந்தியா முழுவதும் இச் சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. நீதித்துறையின் கீழ்மட்டத்தில் நடக்கும் முறைகேடுகளைகளைச் வெளிக் கொணரவே இந்த ரகசிய கேமரா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜீ டிவி தரப்பில் கூறப்பட்டது.

'இந்த ரகசிய கேமரா நடவடிக்கையால், நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை முற்றிலுமாகக் கேள்விக்குள்ளானது. இது போன்ற செயல்கள் நடந்திருக்குமோ என நாட்டில் உள்ள அனைவரும் நம்பினார்கள். நீதிபதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல' என தலைமை நீதிபதி கூறினார்.

நீதித்துறையின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கவே இந்த ரகசிய கேமரா நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற நீதிபதிகளின் கருத்துக்கு டி.வி. தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தால் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடவேண்டும் என்ற எண்ணம் டி.வி.க்கு இல்லை; மக்களின் நலன் கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என டி.வி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

'இந்த நடவடிக்கையால் மக்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள்' என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

'இந்த நடவடிக்கை மூலம், அதைச் செய்த செய்தியாளர் மிகப் பெரிய குற்றத்தைச் செய்துள்ளார். அவரது செயலால் வாரன்ட் வழங்கிய நீதிபதி இரண்டு ஆண்டுகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். விசாரணையில் நீதிபதி எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது. எந்த ஆவணமும் இல்லாமல் நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பெறலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வாரன்ட் பெற்ற வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பார் கவுன்சிலுக்கு முழு அதிகாரம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி

NDTV.com: SC orders journalist to apologise
The Hindu News :: Cash-for-warrant: SC for unconditional apology from channel

Friday, July 13, 2007

பாகிஸ்தானிய அமைதிப்படையினர் காங்கோவில் தங்கம் கடத்தியமை குறித்த ஆதாரம்

காங்கோ ஜனநாயகக் குடியரசில், சில பாகிஸ்தானிய அமைதிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில், ஒரு நபர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்கத்துக்குப் பதிலாக காங்கோலிய கிளர்ச்சிக்காரர்களுக்கு, ஆயுத விநியோகம் செய்வதுடன் தொடர்புடைய துப்பாக்கிகளின் கடத்தல்களிலும், குறித்த பாகிஸ்தான் அதிகாரிகள் சம்பந்தப்பட்டதாக, கடந்த மே மாதத்தில் நடந்த பிபிசியின் புலன்விசாரணை ஒன்றிலும் ஆதாரங்கள் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஆதாரம் எதுவும் தமது விசாரணையின் போது கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது.

இந்த அறிக்கை தொடர்பில் பாகிஸ்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தான் நம்புவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாப்புப் பணிகளின் தலைவரான, ஜீன் மரியே கொகென்னோ தெரிவித்துள்ளார்.

- BBC Tamil

BBC NEWS | South Asia | Peacekeeper 'smuggled Congo gold': "A United Nations inquiry has confirmed that a Pakistani peacekeeper in the Democratic Republic of Congo was involved in smuggling gold."
Associated Press of Pakistan - Pakistani peacekeepers not involved in weapons trade in DRC: Munir Akram

Monday, July 9, 2007

முலாயம் சிங் சொத்து மதிப்பு: சிபிஐ கோருகிறது

உத்தரப்பிரதேச முதன்மைச் செயலாளர் ஆர்.பி. பாண்டேவுக்கு சிபிஐ எழுதியிருக்கும் கடிதத்தில், கடந்த 1977ம் ஆண்டில் ஜனதா கட்சி ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்த முலாயம் சிங் தமது சொத்து மதிப்பாக அளித்த உறுதிமொழியை அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

சிபிஐ அனுப்பியுள்ள இந்தக் கடிதம் தலைமைச் செயலகத்திற்கு கடந்த சனிக்கிழமை கிடைத்திருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

லக்னோ மற்றும் முலாயம் சிங்கின் சொந்த கிராமமான மெயின்புரியில் 2 வங்கிக் கணக்குகள் 2.53 ஏக்கர் நிலம், ஒரு வீடு ஆகியவை தமக்கு சொந்தமானவை என்று முலாயம் சிங் 1977ம் ஆண்டு தேர்தலின் போது குறிப்பிட்டிருந்தார். 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஜீப், ஒரு ஸ்கூட்டர், 3 எல்ஐசி பாலிசி போன்றவையும் இருப்பதாக அவர் அந்த உறுதிமொழியில் கூறியிருந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் முடிவடைந்த சட்டசபைத் தேர்தலில் முலாயம் சிங் தமக்கு சொந்தமாக 2.25 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். விவசாய நிலம் 14.63 ஏக்கர், 8 வங்கிக் கணக்குகளில் 35 லட்சம் ரூபாய் போன்றவற்றையும் தமது உறுதிமொழிப் பத்திரத்தில் முலாயம் சிங் குறிப்பிட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- MSN INDIA

The Hindu News Update Service :: CBI seeks information on Mulayam's assets

Sunday, July 8, 2007

புதிய உலக அதிசயங்கள் அறிவிப்பு

பல கோடி மனிதர்களின் பங்களிப்பில் இணையத்தில் கருத்துக் கணிப்பு நிகழ்த்திய ஆய்வில் புதிய ஏழு உலக அதிசயங்களாக அறிவிக்கப்பட்டவை:
1.தாஜ் மஹால், இந்தியா
2.சீன நெடுஞ்சுவர், சீனா
3.பெட்ரா, ஜோர்டன்
4.கிறிஸ்துவின் சிலை, பிராசில்
5.சிசென் இட்சாவிலுள்ள மாயன் அழிவுகள்,மெக்சிகோ
6.மாச்சு பிச்சு, இங்கா பேரரசின் மலைவாழ் குடியிருப்பு, பெரு
7. கொலொசியம்,ரோம்,இத்தாலி
இதற்கான பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேலும்...World | Africa - Reuters.com

Wednesday, June 27, 2007

முத்திரைத்தாள் வழக்கிலிருந்து மூன்று காவல் அதிகாரிகள் விடுதலை

முன்னாள் மும்பை போலிஸ் கமிஷனர் ஆர் எஸ் சர்மா, மும்பை குற்றவியல் டிசிபி பிரதீப் சாவந்த், ஆய்வாளர் வசிஷ்ட் அந்தாலே ஆகிய மூன்றுபேரையும் பலகோடி ஊழல் செய்த முத்திரைத்தாள் வழக்கிலிருந்து சிறப்பு நீதிமன்றம் போதிய சாட்சியங்கள் இல்லாததால் விடுவித்தது.
The Hindu News Update Service

Wednesday, June 20, 2007

சினிமாவில் வசனம் பேசுபவர்கள் அரசியலுக்கு வர முடியாது : திமுக, அதிமுக மீதும் ராமதாஸ் பாய்ச்சல்

திரைப்படங்களில் அரிதாரம் பூசிக்கொண்டு அரசியல் வசனங்களை பேசிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள் என்று பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

கடந்த 45 வருடங்களாக தமிழகத்தை திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி ஆட்சி செய்ததால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. எனவே இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீலகிரி மாவட்ட பாமக சார்பில் உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் மேலும் பேசியதாவது:

தமிழகத்தின் தற்போதைய நிலை மோசமாகவே உள்ளது. குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்பவர்களே குடி மூலம் குடியை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மறந்துவிட்டு இளைஞர்கள் தற்போது திரையரங்குகளிலும், மதுக்கூடங்களிலும்தான் கூடுகின்றனர்.

அரிதாரத்தைக்கூட கலைக்காமல் இளைஞர்களிடம் வசனம் பேசுபவர்களுக்கெல்லாம் எதுவும் தெரியாது. யாரோ எழுதிக் கொடுக்கும் அரசியல் வசனங்களைப் பேசி பகல் கனவு காண்கின்றனர்.

தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வரானதும், அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்வரானதும் விபத்துக்களே ஆகும். அதைப் போலவே திரைத்துறையோடு தொடர்புள்ள யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள். இவர்களெல்லாம் ஸ்டுடியோக்களிலிருந்து நேரடியாக வருகிறார்களே தவிர அரசியல் தெரியாதவர்கள்.

கல்வியும் வியாபாரமாகிவிட்டது. எல்கேஜி நடத்துபவர்கள் சிறு வணிகர்கள் என்றால், மருத்துவக் கல்லூரி நடத்துபவர்கள் பெரும் வணிகர்களாவர். இந்த நிலையை மாற்ற பாமகவைத் தவிர வேறு யாரும் குரல் கூட கொடுக்கவில்லை. பாமக வித்தியாசமான கட்சி. 2020-ல் தமிழகம் எப்படி இருக்க வேண்டுமென இப்போதே திட்டம் தயாரித்துள்ளோம்.

இதை உதகையில் புதன்கிழமை வெளியிடுகிறோம். மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவதில் முன்னணியில் இருப்பது பாமகதான். தமிழக அரசியல் களத்தில் முன்னிலையில் இருப்பதும் பாமகதான். இதை சவாலாகவே சொல்கிறேன்.

உதகை நகரம் அழகாக இருந்தாலும் வளர்ச்சித் திட்டங்கள் ஏதுமில்லை. நல்ல சாலை வசதி கூட இல்லை. இங்குள்ள மக்களுக்கு சமூக, பொருளாதார வளர்ச்சியுமில்லை. இதற்காக ஒதுக்கப்படும் நிதியும் 80 சதவீதம் வரை சுரண்டப்படுகிறது.

எனவே உதகை நகருக்காக ஒரு மாஸ்டர் பிளான் திட்டத்தை உருவாக்கி இந்நகரை அழகுபடுத்த வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியமில்லை என்றார்.

தினமணி

Monday, June 11, 2007

ஊழல் அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை!

உதவித் தொகை வழங்குவதில் மோசடி செய்த சமூக நலத்துறை அதிகாரிகள் உட்பட 17 பேருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் ரூ. 50 கோடி ஊழல் நடந்தது, 2002ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஊழலில் முக்கிய பங்கு வகித்த, சமூக நலத்துறை வார்டன் மோதி நாயக், சமூக நலத்துறை கணக்குப் பதிவாளர் சங்கர் ராவ் உட்பட நான்கு பேருக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்ட 17 பேரில், மற்றவர்க்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இது ஆந்திராவில்!

தினமலர்

ச: முன்னாள் பஞ்சாப் முதல்வர் பத்திரிகை ஆலோசகர் கைது

முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கின் ஊடக தொடர்பாளாராக பணியாற்றிய பாரத் சிங் சாஹல் ஞாயிறன்று கொலை செய்ய முயன்றதிற்கும் பிற குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டார்.

மேல் விவரங்களுக்கு..Amarinder Singh's former media advisor arrested

Saturday, June 9, 2007

ச:கொட்ரொச்சி இந்தியமீட்பு: அர்ஜென்டீனா நீதிமன்றம் மறுப்பு

அர்ஜெ டீனாவின் கீழ் நீதிமன்றம் இரண்டுநாட்களாக சிபிஐ வாதத்தைக் கேட்டபிறகு அவரை இந்தியாவிற்கு வெளியேற்ற முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பின் முழு விவரங்கள் ஜூன்13 அன்று வெளியிடப்படும். சிபிஐ ஐந்து நாட்களுக்குள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும். அதற்கு ஏதுவாக ஜூன் 18 வரை கொட் ரொச்சி அந்நாட்டை விட்டு வெளியே செல்ல தடை விதித்துள்ளது.

NDTV.com: Quattrocchi's extradition: Argentina rejects demand

Wednesday, May 30, 2007

சீனாவில் ஊழல் அதிகாரிக்கு மரண தண்டனை

பெய்ஜிங், மே 30: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை முன்னாள் இயக்குனர் ஜெங் ஜியாவோ-க்கு அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்தது.

63 வயதான ஜெங் ஏற்கெனவே பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவர் தனது பதவிக் காலத்தில் பணமாகவும், பரிசுப் பொருள்கள் மூலமாகவும் ரூ.5 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் ஜெங் தவிர 30 உயர்நிலை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பத்திரிகைகள் ஏற்கெனவே செய்திவெளியிட்டு வந்தன. மருந்து நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக ஜெங்கின் மனைவி, மகன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி

Tuesday, May 29, 2007

ச: ஹிமாச்சல்: முதல்வர் மீது ஊழல்புகார் கூறியதால் காங். எம். எல்.ஏ சஸ்பெண்ட்

ஹிமாச்சல் பிரதேச முதல்மந்திரி வீரபத்ரசிங் மீது நேற்று தர்மசாலாவில் ஊழல் புகார் கூறியதை அடுத்து காங். மேலிடம் விஜய் சிங் மான்கோடியா என்ற ஆளும் கட்சி எம் எல் ஏவை இன்று தற்காலிக பணிநீக்கம் செய்தது. விஜய் சிங் முன்னதாக முதல்வர் மற்றும் அவரது எம்பி மனைவி பிரதிபாசிங் அவர்களின் உரையாடலுடன் கூடிய டேப்பை வெளியிட்டு இருவரும் ஊழலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார். மேலும் பிரதமரும் காங்கிரஸ் தலைவரும் முதல்வரின் சொத்துக்களை ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் ஆராய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முழு விவரம்..The Hindu News Update Service

Sunday, May 27, 2007

சொத்து குவிப்பு வழக்கு: சிக்கிம் முன்னாள் முதல்வர் குற்றவாளி: சிபிஐ

காங்டாக், மே 27: சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிம் முன்னாள் முதல்வர் நார்பகதூர் பண்டாரி குற்றவாளி என்று சிபிஐ கோர்ட்டு சனிக்கிழமை தீர்ப்பளித்தது. காங்டாக் நகரில் பண்டாரி ரூ.15.22 லட்சம் மதிப்பில் 5 மாடி கட்டடம் கட்டியிருந்தார்.

கணக்கில் காட்டப்படாத பணத்தில் அந்த கட்டடம் கட்டப்பட்டதாக கூறப்பட்டதை விசாரிக்க கடந்த 1994-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிபிஐ கோர்ட்டு ஏற்படுத்தப்பட்டது. சிக்கிம் முதல்வராக பண்டாரி கடந்த 1979 முதல் 1994 வரை இருந்துள்ளார். தற்போது மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகிக்கிறார்.

Dinamani

Friday, May 25, 2007

ஊழலுக்கு எதிராகப் பிரசாரம்: கைகொடுக்கிறது இணைய தளம்

கர்நாடக அரசுக்குச் சொந்தமான மைசூர் லேம்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருபவர் விஜயகுமார். முதன்மைச் செயலாளர் அந்தஸ்துள்ள ஐஏஎஸ் அதிகாரி. கர்நாடகத்தில் கடந்த 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

தான் பணியாற்றும் துறைகளில் முறைகேடு, ஊழலை சுட்டிக்காட்டி வருவதால் இவர் எந்தத் துறையிலும் நீண்ட நாள் பணியாற்றியதில்லை. கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2007-ம் ஆண்டு பிப்ரவரி வரை 6 மாதங்களில் 6 துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார் இவர்.

விஜயகுமாரின் நேர்மையான செயல்பாட்டால் அவர் அடையும் மன உளைச்சல், சலிப்பை பார்த்து ஊழலுக்கு எதிராக இப்போது ஆட்களை திரட்டி வருகிறார் இவரது மனைவி ஜெயஸ்ரீ.

இதற்காக இவர் இப்போது http://fightcorruption.freespaces.com & http://jayashree.wikidot.com

என்ற பெயரில் இரு இணையதளத்தை துவக்கியுள்ளார். ஊழலில் ஈடுபட்டு, தகவல் உரிமை சட்டப்படி விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் அதிகாரிகள் குறித்த தகவல்கள் இதில் வெளியிடப்படும்.

தினமணி

Wednesday, May 16, 2007

ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனுக்கு குற்றப்பத்திரிகை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் பரிசாக ரூ.2 கோடி வழங்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இவ்வழக்குக்காக சென்னையில் சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தார் செங்கோட்டையன். விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு நீதிபதி மீனாட்சி சுந்தரம் ஒத்தி வைத்தார்.

1992-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவுக்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்து பிறந்தநாள் பரிசாக காசோலை மூலம் ரூ. 2 கோடி பணம் அனுப்பப்பட்டது. இந்தப் பணத்தை தனது வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா.

இது பற்றி வருமானவரித்துறையின் புகாரின்பேரில் சிபிஐ போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். ஜெயலலிதாவுக்குப் பணம் அனுப்ப ஏற்பாடு செய்ததாக செங்கோட்டையன் மற்றும் அழகு திருநாவுக்கரசு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Dinamani

Wednesday, May 9, 2007

இலவச கலர் டிவி திட்டத்தில் குறை இருந்தால் தூக்கு மேடைக்குப் போகத் தயார்: அதிமுகவுக்கு கருணாநிதி சவால்

சென்னை, மே 9:ஏழைகளுக்கு இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தில் குறை இருந்தால், தூக்கு மேடைக்குப் போகத் தயாராக இருக்கிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.

தொழில் துறை- தகவல் தொழில்நுட்பத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது பேரவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடந்தது. அப்போது பேசிய டி.ஜெயகுமார் (அதிமுக), இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தில் பெரிய முறைகேடு நடந்திருப்பதாகக் கூறினார். இத்திட்டத்துக்காக ரூ.850 கோடி செலவிடப்பட்டிருப்பதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த அளவுக்கு கலர் டிவிக்கள் விநியோகிக்கப்படவில்லை என்றார் அவர்.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.) பேசுகையில், கலர் டிவி திட்டம் திறந்த புத்தகமாக நடக்கிறது என்றார். இதற்காக முதல்வர் தூக்குமேடைக்குப் போக வேண்டும் என்றால், அதிமுக செய்த முறைகேடுகளுக்கு ஆயிரம் முறை தூக்கு மேடைக்குப் போக வேண்டும் என்றார்.

Dinamani

Friday, May 4, 2007

ச:மனித போக்குவரத்து: மற்ற புள்ளிகளின் பெயர்கள் வெளிப்பட்டது

மனிதர்களின் கள்ளக் கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப் படும் ஹைதராபாத்தின் இரஷீத் தனது காவல்விசாரணையில் இதில் சம்பந்தப் பட்டிருக்கும் மற்ற பிரபலங்களின் பெயர்களை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. முந்தைய தெலுங்கு தேச மந்திரிகள் கிருஷ்ண யாதவ் மற்றும் ஸ்ரீனிவாச ரெட்டி ஆகியோரின் பாஸ்போர்ட்டுக்களும் அவனிடமிருந்து பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.


இது பற்றி மேலுமறிய..Zee News - Trafficking scam: Kingpin reveals more names

Monday, April 30, 2007

விசாகப்பட்டிணம் காவல் கண்காணிப்பாளர் ஊழல் குற்றச்சாட்டில்்டில் கைது

விசாகப் பட்டிணத்தின் காவல் கண்காணிப்பாளர் ஜே ஜி முரளி ஞாயிறன்று ஊழல் தடுப்பு காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ1.5 இலட்சம் பணம், 22 தோலா தங்கம், மற்றும் 64 இலட்சம் பெறுமான சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளது.

மேலும்..NDTV.com

-o❢o-

b r e a k i n g   n e w s...