.

Showing posts with label கலவரம். Show all posts
Showing posts with label கலவரம். Show all posts

Saturday, September 1, 2007

மதக் கலவரம்: அலகாபாத்தில் ஊரடங்கு

நேற்று வெள்ளி இரவு கரேலி காவல்நிலைய பகுதியில் ஒரு மத வழிபாட்டுதலத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நூலொன்று இழிவுபடுத்தப்படிருந்ததை ஒட்டி துவங்கிய பிரச்சினை காவலர்களின் உறுதிமொழியை அடுத்து அடங்கியது. ஆனால் இன்று காலை காவல்நிலையத்தின் மீது ஆத்திரமடைந்த கும்பல் கல்லெறிந்து கலாட்டா செய்ததில் பன்னிருவருக்கும் அதிகமான காவலர்கள் காயமடைந்தனர். தடியடியிலும் கண்ணீர்புகையும் கூட்டத்தைக் கட்டுபடுத்தமுடியாத நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெருத்த காவலர்படையும் துணை இராணுவப்படையினரும் அமைதியை மீட்க அமர்த்தப் பட்டுள்ளனர். தவிர சாகஞ்ச், கோத்வாலி,குல்டாபாத், அதார்சுயா தூமன்க்ஞ்ச் காவல் சில பகுதிகள் என இங்கெல்லாம் ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.
மேல் விவரங்களுக்கு: Curfew imposed in Allahabad, many injured

Wednesday, August 29, 2007

ஆக்ராவில் வன்முறை: ஊரடங்கு சட்டம் அமல்


ஆக்ராநகரில் ஷப்-இ- பாராத் ஊர்வலம் சென்று கொண்டிருந்த ஒரு கும்பலின் மீது லாரி ஒன்று மோதி நான்குபேர் பலியானதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கூட்டம் நடத்திய வன்முறையில் இருபது லாரிகள் வரை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவை நாய்கி மண்டி மற்றும் மன்டோலா பகுதிகளில் அமல்படுத்தியுள்ளது. நகர பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.


Voilence in Agra, curfew imposed

Wednesday, August 22, 2007

தாக்காவில் மாணவர் கலவரம்

பங்களாதேசத்தின் இடைக்கால அரசு அடக்கமுயன்றாலும் மாணவர்களின் கலவரம் தாக்கா நகரெங்கும் பரவி வருகிறது. நேற்று இரவு கல்வி அமைச்சர் அயூப் கத்ரியின் வீட்டை சூழ்ந்து கல்லெறிந்தனர்.தாக்கா பல்கலையில் மாணவர்களை இராணுவத்தினர் அடித்ததாக கூறப்படும் நிகழ்வை நீதிபதி ஒருவர் மூலம் விசாரிக்கவும் பல்கலைக்கழகத்திலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ளவும் அரசு முடிவு செய்துள்ளது.

NDTV.com: Student riots spread in Dhaka

Monday, August 20, 2007

தென்காசிபடுகொலை:மேலும் 5 பேர் கைது !

தென்காசியில் நடுரோட்டில் இரு பிரிவினர் வெட்டிக் கொண்டு 6 பேர் படுகொலையான வழக்கில் இன்று மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 14ம் தேதி நடந்த இச் சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று இவ்வழக்கில் மேலகரம், நன்னகரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கண்ணன், தங்கத்துரை, அலெக்சாண்டர், ஆப்ரகாம், பேரின்பராஜா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேரையும் நீதிபதி ஜெயகுமார் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் கடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Thursday, August 16, 2007

தென்காசி கொலைச் சம்பவம் மத மோதல் அல்ல!

தென்காசியில் நடந்த கொலைகள் மத ரீதியிலான மோதலால் ஏற்பட்டவை அல்ல என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலர் ஜே.எஸ்.ரிஃபாயீ தெரிவித்தார்.

திருநெல்வேலியில் புதன்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தென்காசியில் நடந்த கொலைகள் மத ரீதியிலான சம்பவம் அல்ல. நீண்ட நாள்களாகப் பகையோடு இருந்துவரும் இரு கோஷ்டிகளுக்கு இடையிலான மோதல்தான்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நடந்த இந்து முன்னணி நிர்வாகி குமார்பாண்டியன் கொலைச் சம்பவம், அதைத் தொடர்ந்து தமுமுக நிர்வாகி ஷேட்கான் தாக்கப்பட்டது ஆகிய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் பிணையத்தில் இருந்தபோது அவர்கள் இரு தரப்பையும் ஒரே இடமான தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் கையொப்பமிடச் செய்து நீதித்துறை உத்தரவிட்டது வருத்தம் அளிக்கிறது.

காவல்துறையும், உளவுத் துறையும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த மோதலை தடுத்திருக்க முடியும். உளவுத்துறை முற்றிலும் செயலிழந்து விட்டதையே இந்த சம்பவம் காட்டுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட காவல்துறை டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சம்பவத்தை இரு மதங்களுக்கு இடையிலான மோதலாக சித்தரித்து ஆதாயம் தேட நினைப்பவர்களை தமுமுக கடுமையாக கண்டிக்கிறது.
இந்த மோதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது. இதுமட்டுமின்றி அவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும்.
கைது நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவிகள் மீது பொய்வழக்கு போடக் கூடாது என்றார் ரிஃபாயீ.

Tuesday, August 14, 2007

தென்காசியில் திடீர் கலவரம்.

நெல்லை மாவட்டம் தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்து கோவில் அருகே மசூதி கட்டக்கூடாது என்று அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இதனால் இரு தரப்பினரிடையேயும் மோதல் போக்கு உருவானது. அவ்வப் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் குமார் பாண்டியனின் தம்பி செந்தில், அவரது நண்பர் நடராஜன் வெட்டப்பட்டனர்.
இதையடுத்து எதிர் தரப்பை சேர்ந்த மைதீன் சேட்கான் என்பவர் வெட்டப்பட்டார்.
இவ்வாறு மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று நடந்த சண்டையில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். குமார் பாண்டியன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் இன்று காலை 10 மணி அளவில் தென்காசி போலீஸ் நிலையத்துக்கு 2 மோட்டார் சைக்கிளில் சென்றனர். முத்தாரம்மன் கோவில் அருகே சென்றபோது எதிர்தரப்பை சேர்ந்த சிலர் காரில் வந்தனர்.

அரிவாள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இறங்கிய இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அரிவாளால் சரமாரியாக வெட்டினர். வெடிகுண்டுகளை வீசினர். ஆனால் அது வெடிக்க வில்லை.
இதில் சம்பவ இடத்திலேயே அசன் கனி (35), ரவி, சேகர் (குமார் பாண்டியனின் தம்பி) ஆகிய 3 பேர் ரத்தவெள்ளத்தில் பிண மானார்கள். படுகாயம் அடைந்த நசீர் ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குமார் பாண்டியனின் தம்பி செந்தில், நாகூர்மீரான் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மோதலில் சையது அலி (25), அப்துல்லா (30), அபு (27), ராஜா (36), மீரான் (26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாளை. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கர மோதலால் அப்பகுதி போர்க்களம்போல் காணப்பட்டது.
கடைகள் அடைக்கப்பட்டன வியாபாரிகளும், பொது மக்களும் பதறியடித்துக் கொண்டு ஓடினர். வீடுகளில் இருந்தனர்கள் கதவை பூட்டிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அசம்பாதங்கள் ஏற்படாமல் இருக்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்-ஆட்டோக் களும் ஓடவில்லை. இதனால் வெளிவூர் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

தென்காசி சம்பவத்தை தொடர்ந்து கடையநல்லூர் பகுதியிலும் பதட்ட மான சூழ்நிலை உரு வானது. அங்கும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் நெல்லை மாவட்ட கலெக்டர் பிரகாஷ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் ஆகியோர் தென்காசி விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Thursday, August 9, 2007

ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை: மகா. அரசு நடவடிக்கை எடுக்கும்

1992-93 வருடங்களில் மும்பையில் நடந்த கலவரங்கள் குறித்த ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தவறியதை ஆய்வு செய்ய காவல்துறையையும் சட்டத்துறையையும் மகாராட்டிர முதல்வர் விலாஸ்ரராவ் தேஷ்முக் ஆணையிட்டுள்ளார். இந்தக் கலவரங்களில் பங்கேற்ற அரசியல் தலைவர்களின் மீது, சிவசேனையின் தலைவர் பால் தாக்கரே உட்பட, நடவடிக்கை எடுப்பது பற்றிய நிகழ்வறிக்கையையும் காங்கிரஸ் மேலிடத்திற்கு சமர்ப்பித்துள்ளார். கட்சியின் பொது செயலர் மார்கரேட் ஆல்வா கடந்த ஏழாம் தேதியன்று மூம்பை வந்திருந்தபோது இந்த அறிக்கையை அவரிடம் கொடுத்தார். பிரபல சினிமா இயக்குனர் மகேஷ் பட்டும் முன்னாள் அமைச்சர் நசீம் கானும் இந்த அறிக்கை மீது தகுந்த எஅடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டி மனு கொடுத்துள்ளனர்.ஆகஸ்ட் 20ம் தேதி யன்று பல முஸ்லிம் அமைப்புக்கள் இவ்வறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன.

The Hindu News Update Service

Tuesday, August 7, 2007

மதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக 'அட்டாக்' பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர். இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.

முந்தைய சற்றுமுன்: கருத்துக் கணிப்பு, தாக்குதல், கொலைகள் - விவாதம்

தினமணி

IBNLive.com > Top cop, 15 others charged for Dinakaran attack
DNA - India - 16 chargesheeted in Dinakaran attack case - Daily News & Analysis

Thursday, July 26, 2007

தேவகோட்டை அருகே வன்முறை; பதட்டம்

தேவகோட்டை கருதாவூரை சேர்ந்த வேன் டிரைவர் வீரப்பன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இன்று இரண்டு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து பதட்டம் நீடித்து வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர்

Tuesday, June 19, 2007

பாக்தாதில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 60 பேருக்கு மேல் பலி

இராக்கின் தலைநகர் பாக்தாதிலுள்ள ஷியா இன முஸ்லீம் பிரிவினரின் பள்ளிவாசல் அருகே இடம்பெற்ற ஒரு குண்டுத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என இராக்கிய போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு டிரக் குண்டுமூலம் நடைபெற்றிருக்கக் கூடும் என நம்பப்படுகின்ற இந்தத் தாக்குதலில் 130 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாக்தாதின் மையப்பகுதியிலுள்ள அல் கிலானி பள்ளிவாசலுக்கு அருகில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் அந்தப் பள்ளிவாசல் சேதமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமாராவிலுள்ள ஷியா இனப் பள்ளிவாசல் குறிவைத்து தாக்கப்பட்டதையடுத்து, எதிர் தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கும் முகமாக விதிக்கப்பட்டிருந்த நான்கு நாள் ஊரடங்கு உத்தரவு கடந்த ஞாயிறன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. ஊரடங்கு உத்திரவு விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு இடம் பெற்றுள்ள மிகவும் மோசமான ரத்தக்களரியான தாக்குதலில் இதுதான் என, பாக்தாதிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

சமாராவிலுள்ள ஷியா பள்ளிவாசல் குறிவைக்கப்பட்டதை அடுத்து பழிவாங்கும் நடவடிக்கையாக பாக்தாதிலும் அதற்கு தெற்கு பகுதியிலும் உள்ள பல சுன்னி இன பள்ளிவாசல்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

- Tamil BBC

BBC NEWS | Middle East | Baghdad truck bomb kills dozens

Sunday, June 10, 2007

சேலம் சிறையில் அதிமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம்

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் மாரடைப்பால் சனிக்கிழமை அதிகாலையில் இறந்தார். இதையொட்டி சிறை முன்பு ஏராளமான அதிமுகவினர் கூடினர். சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரையும் விடுதலை செய்ய வேண்டும் என சிறை வளாகத்துக்குள் இருந்த கட்சியினர் வலியுறுத்தினர். இதனால் சுகுமாரன் சடலத்தை, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது தாமதமானது.

சேலம் மாநகர எம்ஜிஆர் மன்ற இணைச்செயலர் எம். சுகுமாரனுக்கு (52) சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் சுகுமாரன் திடீரென்று இறந்தார்.

சுகுமாரின் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்; உடனடியாக அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கவில்லை, சிறையில் உள்ள தங்கள் அனைவரையும் விடுதலை செய்து அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி அங்கு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு கூடியிருந்த அதிமுகவினரை முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி அமைதிப்படுத்தினார். பின்னர் அரசு உத்தரவுப்படி, சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அதிமுக புகார்: சேலம் சிறையில் இருந்த சுகுமாரனுக்கு நெஞ்சு வலி என அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும், உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லை. அதனால் அவர் மரணமடைய நேர்ந்தது. இதற்குச் சிறை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று மாநகர அதிமுக செயலாளர் வெங்கடாசலம் புகார் கூறியுள்ளார்.

தினமணி

Saturday, June 9, 2007

சிறையில் இருக்கும் 38 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

அ.தி.மு.க. வினர் நேற்று நடத்திய மறியல், கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. பி.கே.சேகர்பாபு (ஆர்.கே.நகர்)
2. கு.சீனிவாசன் (பூங்கா நகர்)
3. கே.எஸ்.விஜயகுமார் (கும்மிடிப்பூண்டி)
4. பி.பல ராமன் (பொன்னேரி)
5. கோ.அரி (திருத்தணி)
6. கு.பாண்டு ரங்கன் (அணைக் கட்டு)
7. சி.வி.சண்முகம் (திண்டிவனம்)
8. இரா.குமரகுரு (திருநாவலூர்)
9. செல்வி ராமஜெயம் (புவனகிரி)
10. அருண்மொழித்தேவன் (சிதம்பரம்).

11. கணபதி (வானூர்)
12. சி.சண்முகவேலு (உடுமலைபேட்டை)
13. எஸ்.தாமோதரன் (கிணத்துகடவு)
14. ஏ.கே.சின்ன ராஜ் (மேட்டுப்பாளையம்)
15. ஆர்.பிரேமா (அவினாசி)
16. சி.பொன்னுதுரை (பெருந்துறை)
17. எல்.ரவிச் சந்திரன் (சேலம்-1)
18. பி.தங்க மணி (திருச்செங்கோடு)
19. கே.பி.அன்பழகன் (பாலக்கோடு)
20. ஆர்.டி.கணேசன் (தேனி)

21. ம.குணசேகரன் (மானாமதுரை)
22. மு.சந் திரா (ராஜபாளையம்)
23. அனிதா ஆர்.ராதா கிருஷ் ணன் (திருச்செந்தூர்)
24. எல்.ராதாகிருஷ்ணன் (கோவில் பட்டி)
25. பெ. மோகன் (ஓட்டப்பிடாரம்)
26. போ.சின்னப்பன் (விளாத்திக்குளம்)
27. மு.பரஞ்ஜோதி (ஸ்ரீரங்கம்)
28. செ.சின்னச்சாமி (மருங்காபுரி)
29. ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு)
30. துரைக்கண்ணு (பாப நாசம்)

31. எஸ்.இளமதி சுப்பிர மணியன் (வலங்கைமான்)
32. ஆர்.கே.பாரதிமோகன் (திருவிடைமருதூர்)
33. வீர கபிலன் (பேராவூரணி)
34. ஆர்.நெடுஞ்செழியன் (புதுக் கோட்டை)
35. ந.சுப்பிர மணியன் (குளத்தூர்)
36. செந்தில் பாலாஜி (கரூர்)
37. மா.சந்திரகாசி (வரகூர்)
38. க.ராஜேந்திரன் (ஜெயங் கொண்டம்)

எம்.பி.க்கள்

  1. பெருமாள்,
  2. சையதுகான் தங்க தமிழ்ச் செல்வன்,
  3. காம ராஜ்,
  4. நாராயணன் கோவிந்த ராஜன்


மாலைமலர்

Tuesday, June 5, 2007

இராஜஸ்தானில் கலவரம் முடிவுக்கு வந்தது!

குர்ஜார் இன மக்களின் 'பழங்குடி' நிலையை பரிவுடன் ஆராய்வதாக அரசு வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து, கடந்த ஒருவார காலமாக, 26 உயிர்களைப் பலிவாங்கிய கலவரம் முடிவுக்கு வந்தது.

குர்ஜார் மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அடங்கிய உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று தெரிகிறது..

வழக்கம்போல், நடந்த சம்பவங்களுக்கும், உயிர்ப்பலிகளுக்கும் வருந்துவதாக கூட்டறிக்கை விடப்பட்டுள்ளது.

TOI

Saturday, June 2, 2007

ச: இராஜஸ்தானில் முழுஅளவில் இனக்கலவரங்கள்: வன்முறையில் 8 பேர் மரணம்

இதுவரை அரசு/காவலர்களுக்கும் குஜ்ஜர்களுக்கும் இருந்த போராட்டம் நேற்று முதல் மீனா இன மக்களுக்கும் குஜ்ஜர் இனமக்களுக்கும் இடையேயான இனப்போராக வெடித்துள்ளது. ஜெய்பூர்-ஆக்ரா சாலைமறியலில் ஈடுபட்டிருக்கும் குஜ்ஜர் இன மக்களை விரட்டியடிக்க மீனா இனமக்கள் இரும்பு தடிகள், கத்திகள் கொண்டு தாக்க அச்சாலை போர்க்களமாக மாறியுள்ளது. லால்சாட் நகரருகே இந்தச் சண்டையால் எட்டு பேர் வரை இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. ST ஒதுக்கீடு பெற போராடும் குஜ்ஜர்கள் தங்கள் பங்கை அபகரிப்பார்கள் என்று அம்மாநிலத்தின் மிகப் பெரும்பான்மை ST யாக உள்ள மீனா இன மக்கள் பயப்படுகின்றனர். குஜ்ஜர்களுக்கு ST ஒதுக்கீடு வாங்கித் தருவதாக சொல்லி சென்ற தேர்தலை வென்ற பிஜேபி தனதி இந்து வாக்குவங்கியில் இருக்கும் சாதி சண்டைகளை சரிவர புரிந்துகொள்ளாமல் இந்த பிரச்சினையை பூதாகாரமாக வளரவிட்டு செய்வதறியாமல் திகைக்கிறது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக ராஜஸ்தானின் நெடுஞ்சாலைகளும் இரயில் மார்கங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

தொடர்புள்ள செய்தி: Full-blown caste war in Rajasthan, 8 killed- Hindustan Times

-o❢o-

b r e a k i n g   n e w s...