இந்திய தடகள அணியின் மேலாளராக காவல் அதிகாரி சைலேந்திர பாபு
Webdunia
ஜப்பானில் நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் மேலாளராக தமிழக காவல்துறையின் தலைமை ஆய்வாளராக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பானின் ஒசாகா நகரில் நாளை முதல் செப்டம்பர் 2ஆம் தேதி உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.
190 நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்ளும் இப்போட்டிகளில் 12 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.
இந்திய அணியின் மேலாளராக தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு காகித ஆலையின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாகவும்ட உள்ள் சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நமது அணியில் சில சிறந்த வீரர்களும், வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் சிறப்பாக சாதித்து பதக்கங்களுடன் திரும்புவார்கள் என்று நம்பிக்கையுடன் உள்ளேன் என்று தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு குறித்து சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
Sunday, August 26, 2007
இந்திய தடகள அணியின் மேலாளராக காவல் அதிகாரி சைலேந்திர பாபு
Posted by முதுவை ஹிதாயத் at 10:36 PM 0 comments
செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம்
செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம்
ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2007( 13:40 IST )
Webdunia
ஆகஸ்ட் 28ஆம் தேதி ஏற்பட உள்ள முழுச் சந்திர கிரகணம் பிற்பகல் 2.21 முதல் 5.54 வரை நிகழ்கிறது. ஆனால் அதனை 16 நிமிடங்களுக்கு மட்டுமே இந்தியாவில் காண முடியும்.
அந்த 16 நிமிடங்களும் அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் மட்டுமேத் தெரியும்.
Posted by முதுவை ஹிதாயத் at 10:34 PM 0 comments
தமிழகம் முழுவதும் உஷார் நிலை
தமிழகம் முழுவதும் உஷார் நிலை
முன்னெச்சரிக்கையாக 700 பேர் கைது
ஆகஸ்ட் 26, 2007
சென்னை: ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம், சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வட மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
இதேபோல கோவையிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகர மற்றும் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.
மேலும் தமிழத்தின் இதர பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்ள், கோவில்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களிலும் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாமீனில் வெளியே இருக்கும் குற்றவாளிகள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
wwww.thatstamil.com
Posted by முதுவை ஹிதாயத் at 10:29 PM 0 comments
RJD தலைவராக லாலு-ஆறாம் முறையாகத் தேர்வு.
ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித்தலைவராக லாலு பிரசாத் யாதவ் போட்டியின்றி ஆறாம் முறையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். இது அடுத்த இரண்டாண்டு காலத்துக்காகும்.
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட லாலு, சுமார் 20,000 கட்சி ஊழியர்கள் திரண்டிருந்த கூட்டத்தில் பேசினார்.
Posted by வாசகன் at 8:50 PM 1 comments
ஹைதராபாத் குண்டுவெடிப்பு: ஒருவர் கைது.
ஹைதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 50 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இக்குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான், வங்கதேசத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் பின்னணியில் இருந்துள்ளதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் நாக்பூரில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இக்குண்டு வெடிப்புக்கு உதவியதாக ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
தினமலர்
Posted by வாசகன் at 8:43 PM 0 comments
பாலஸ்தீனத்திற்கு இந்தியா சார்பில் பள்ளிக்கூடம், மருத்துவமனை.
பாலஸ்தீனத்தில் காஸா நகரில் இந்திய அரசு சார்பில் பள்ளிக்கூடம் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது. ஜெருசேலம் அருகே கட்டப்படும் இந்த உயர்நிலைப்பள்ளி பகுதி தற்போது ஹமாஸ் பிரிவு நிர்வாகத்திடம் உள்ளது.
இந்திய அரசு கட்டி கொடுக்கும் மற்றொரு இருதய நோய் அறுவை சிகிச்சை மையமும் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது. பள்ளிக்கூட கட்டத்திற்கு ஜவஹர்லால் நேரு பெயர் சூட்டப்படுகிறது. இந்திய தூதர் சிக்கூர்ரஹ்மான் இத்தகவலை தெரிவித்துள்ளார்
Posted by வாசகன் at 8:35 PM 0 comments
ஃபிடல் காஸ்ட்ரோ மரணமா? - சாவேஸ் மறுப்பு.
கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மரணமடைந்து விட்டதாக வந்த தகவல்கள் உண்மையல்ல என காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரும், வெனிசுவேலா அதிபருமான ஹூகோ சாவேஸ் தெரிவித்துள்ளார்.
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவு காரணமாக, அதிபர் பதவியை தனது சகோதரர் ரவுல் காஸ்ட்டிரோவிடம் ஒப்படைத்தார். அதன்பின் அவர் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில் கடந்த 13 ம் தேதி, காஸ்ட்ரோவின் பிறந்த நாளன்று அவர் பொது மக்களுக்கு காட்சி தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தகைய நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாததால், உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்திருப்பார் என அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரும், வெனிசுவேலா அதிபருமான ஹூயூகோ சாவேஸ் இந்த தகவல்களை மறுத்துள்ளார்.
தினமலர்
Posted by வாசகன் at 8:30 PM 0 comments
"நலப்பணிகளுக்கு தடையாக இராமதாஸ் இருக்கிறார்" - ஆற்காடுவீராசாமி
முதல்வர் கருணாநிதி மக்களுக்காக நற்பணிகள் செய்ய முயற்சி மேற்கொள்கிறார். அதற்கு பா.ம.க. இராமதாஸ் தடை போடுகிறார் என்று மின்சாரத் துறை அமைச்சர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சூளைமேடு பகுதியில் தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமை வகித்தார். அவர் தன் தலைமையுரையில் முதல்வர் கருணாநிதி துணை நகரம் கொண்டு வரலாம் என்றார். இதனால் விளைநிலங்கள் வீணாகும் என்று இராமதாஸ் தடை போட்டார். இது போன்று விமான நிலைய விரிவாக்கம், தற்போது டைட்டானியம் தொழிற்சாலை என்று தொடர்ந்து அவர் தடை போட்டுக் கொண்டே வருகிறார் என்று இராமதாஸ் மீது பகிரங்கமாகக் குற்றம்சாட்டி பேசினார்.
நன்றி: தினமலர்
Posted by வாசகன் at 8:26 PM 0 comments
அமெரிக்க டென்னிஸ்: சானியா, மகேஷுக்கு இரட்டையர் ஆட்டங்களில் வெற்றி.
அமெரிக்காவில் உள்ள நியூஹெவன் நகரில் பைலட் பென் டென்னிஸ் போட்டி நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-சாண்டன் ஜிலோ (இத்தாலி) இணை வாகையர் பட்டம் பெற்றது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த இறுதிப் போட்டியில் சானியா இணை 6-1, 6-2 என்ற நேர் கணக்கில் கியூபர்-பிளாக் இணையை வென்றது. இரட்டையர் பிரிவில் சானியா பெற்ற 7-வது பட்டம் இதுவாகும்.
இந்த ஆண்டு ஸ்டான்போர்டு, சின்சினாட்டி போட்டியிலும், 2006-ம் ஆண்டு கொல்கத்தா, பெங்களூரூவிலும், 2004-ம் ஆண்டு ஹைதராபாத்திலும் பட்டம் பெற்று இருந்தார்.
இதே போல ஆண்கள் இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி (இந்தியா)-ஜிமோன்ஜிக் (செர்பியா) இணை வாகையர் பட்டம் பெற்றது. இந்த இணை 6-3, 6-3 என்ற நேர் கணக்கில் மார்சின்- ஸ்பெஸ்டென்பர்க் (போலந்து) இணையை தோற்கடித்தது.
Posted by வாசகன் at 8:19 PM 0 comments
ரூ 2.30 கோடி கள்ள நோட்டுகள் - ஹைதராபாத்தில் பிடிபட்டன.
ஹைதராபாத் நகரில் கள்ள நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து இருந்தது.
ஹைதராபாத் விமான நிலையத்தில் துபாயை சேர்ந்த ஒபைது அலி (31) என்பவன் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டான்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை துபாய் வழியாக மும்பை கொண்டு வந்து அங்கிருந்து ஹைதராபாத்தில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக ஒபைதுவை போலீசார் கைது செய்தனர். மேலும் ஹைதராபாத்தை சேர்ந்த கலியா, முகமது நஜாத், செய்யது கவுஸ்பாசா ஆகியோரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.30 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.
கடந்த ஏப்ரல் மாதம் கள்ள நோட்டுகளை அவர்கள் ஹைதராபாத்துக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.
ஹைதராபாத்தில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இந்த கள்ள நோட்டு கும்பல் பிடிப்பட்டது.
இது தொடர்பாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் பல்வீந்தர்சிங் கூறும் போது, இந்த கள்ள நோட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவை. ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து கடல் வழியாக இந்தியா வந்துள்ளது என்றார்.
பிடிபட்ட ஒபைது 3 முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளான். அங்கிருந்து கள்ள நோட்டுகளை வாங்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக மும்பைக்கு கொண்டு வந்துள்ளான். தாவூத் இப்ராகிமின் கும்பலை சேர்ந்தவனில் இவனும் ஒருவன்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நன்றி:மாலைமலர்
Posted by வாசகன் at 8:10 PM 0 comments
விதர்பாவில் 8 விவசாயிகள் தற்கொலை
மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியில் மூன்று நாள்களில் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
யாவத்மால் மாவட்டத்தில் மூன்று பேரும், அமராவதி மாவட்டத்தில் 2 பேரும், வாசிம், பந்த்ரா, புல்தானா மாவட்டங்களில் தலா ஒருவரும் கடன்தொல்லையால் தற்கொலை செய்திருப்பதாக தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
அப்பகுதியில், இந்த மாதத்தில் மட்டும் 65 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி
Another 8 more cotton farmers commit suicides in Vidarbha: VJAS demands Rs. 2700 per quintal as price of cotton
In Vidarbha’s darkness, the first glimmer: farmer suicides down :: indianexpress.com
Zee News - 259 farmer suicides between May-July 2007: Govt
Posted by Boston Bala at 7:30 PM 5 comments
திடீர் உடல் நலக்குறைவு: நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதி
நடிகை குஷ்பு கலைஞர் டெலிவிஷனுக்காக "நம்ம குடும்பம்'' என்ற டி.வி. தொட ரில் நடித்து வந்தார். "வேகம்'' என்ற படத்திலும் நடித்தார். "ஜாக்பாட்'' என்ற டி.வி. நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் குஷ்புவுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி னார். உடனடியாக அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
குஷ்புவின் கணவர் சுந்தர் .சி காரைக்குடியில் "பொறுக்கி'' படப்பிடிப்பில் இருந்தார். தகவல் அறிந்ததும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவசரமாக இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். நேராக ஆஸ்பத்திரிக்கு சென்று குஷ்புவை பார்த்தார்.
ஒரு வாரம் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது. இதனால் அவர் சம்பந்தப்பட்ட டி.வி. தொடர் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட் டுள்ளன.
மாலைமலர்
Posted by Boston Bala at 6:20 PM 1 comments
திரு.வி.க.வின் 125-வது பிறந்த நாள்
தமிழ்தென்றல் என போற்றப்படும் திரு.வி.க.வின் 125-வது பிறந்த நாளை யொட்டி சென்னை பட்டாளம் மார்க் கெட் அருகில் உள்ள சிலைக்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் மாலை அணி வித்தார்.
இதேபோல் பாரதியஜனதா சார்பில் மாநில தலைவர் இல.கணேசன், பா.ம.க. சார்பில் கட்சி தலைவர் ஜி.கே. மணி ஆகியோரும் மாலை அணிவித்தனர்.
மாலைமலர்
Posted by Boston Bala at 6:18 PM 0 comments
ஒரிசாவில் காலரா - 48பேர் பலி
ஒரிசாவின் காலராவிற்கு 48பேர் பலியாகியுள்ளனர். ரயகடா மாவட்டத்தில் 50பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள செய்தித் தாள்கள் கடந்த சில வாரங்களில் 250பேர் இறந்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியிட்டுள்ளன.
ஆயிரக் கணக்கானோர் காலராவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10நிமடங்களுக்கு ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாகவும் சம்பட் எனும் செய்தித் தாள் தெரிவிக்கிறது. ஆனால் மருத்துவ அதிகாரி சீத்தாராம் இதை மறுத்துள்ளார். மாவட்டத்தின் 26 கிராமங்களில் 48 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் இதில் 16 கிராமங்களை அவர்கள் அணுக இயலவில்லை(inaccessible) என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மத்திய வெள்ளப் பெருக்கில் குடிநீர் ஆதாரங்கலில் காலரா கிருமிகள் பரவியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இறப்பு எண்ணிக்கையை பல்வேறு நாளிதழ்களும் பல்வேறு விதமாய் வெளியிட்டுவருகின்றன.
48 dead in Orissa cholera outbreak Hindustan Times, India
70 die as cholera breaks out in parts of Orissa Times of India, India
80 die of cholera in Orissa Hindu, India
Cholera outbreak kills 58 tribals in Orissa Reuters India, India
Posted by சிறில் அலெக்ஸ் at 5:10 PM 0 comments
அறிவியல் இன்று - 26/08/2007
விண்வெளியில் தங்கும் விடுதி 2012-இல் திறக்கும்
---------------------------------------------------------
அடுத்த முறை விடுமுறையை கழிக்க எங்கு செல்லலாம்???
ஊட்டி,கொடக்கானல்,ஏற்காடு???
பேசாமல் விண்வெளிக்கு சென்றால் என்ன??
"வெறும்" 4 மில்லியன் டாலர்கள்் செலவில் விண்வெளியில் விடுமுறையை கழிக்கலாம். வெறும் 80 நிமிடங்களில் பூமியை சுற்றி வரலாம் மற்றும் நாள் ஒன்றிற்கு 15 முறை சூரியன் உதிப்பதை பார்க்கலாம்,இது போன்று பல்வேறு விஷயங்களை நீங்கள் 2012-இல் இருந்து செய்ய முடியும்.
இது பற்றிய செய்திக்கட்டுரை இதோ
பேரண்டத்தில் ஓட்டை
---------------------------------
இதயத்தில் ஓட்டை,ஓசோன் மண்டலத்தில் ஓட்டை என்று எங்கு பார்த்தாலும் குறை கண்டுபிடித்துக்கொண்டு இருந்த மனிதனுக்கு அடித்தது ஜாக்பாட். அங்கே இங்கே பார்த்துவிட்டு கடைசியில் பேரண்டத்திலேயே (Universe) ஓட்டை இருப்பதாக கண்டுபிடித்து விட்டான்.
அதுவும் கொஞ்ச நஞ்சமில்லை ,இந்த ஓட்டையின் விட்டம் ஒரு பில்லியன் ஒளி வருடங்கள் இருக்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு ஒளி வருடம் என்பது ஒளி ஒரு வருடம் முழுதும் பயணம் செய்தால் அடையக்கூடிய தூரம். ஏரிடனஸ் (Eridanus) எனும் நட்சத்திரத்தொகுப்பில்(Constellation) காணக்கூடிய இந்த ஓட்டை ,இருக்கக்கூடிய பகுதியில் நட்சத்திரங்கள் ,அண்டங்கள் (Galaxies), Dark matter இப்படி எதுவுமில்லாமல் வெறுமையாக இருக்கிறதாம். இதுவரை மனிதனுக்கு தெரிந்த வரை மிகப்பெரிய வெற்றிடம் இதுதான்.ஏன் இவ்வளவு பெரிய ஓட்டை இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.இது பற்றிய மேலும் செய்திகள் இங்கே
சர்க்கரையால் ஆன பேட்டரி
-------------------------------------
பேட்டரி தீர்ந்துவிட்டட்தா?? சமயலறைக்கு சென்று சிறிது சர்க்கரை எடுத்து வந்து நிறப்பிவிட்டால் போதும்!!
"என்ன உளருகிறான் இவன்" என்கிறீர்களா??
ஜப்பான் நிறுவனமான சோனி (Sony) உருவாக்கியிருக்கும் பேட்டரி உங்களிடம் இருந்தால் இப்படி செய்யலாம். சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் மாசு விளைவிக்காத இந்த விதமான பேட்டரி பற்றிய செய்தி இதோ
நன்றி:
http://www.cnn.com/2007/TECH/08/14/space.hotel.reut/index.html
http://www.reuters.com/article/scienceNews/idUSN2329057520070824
http://www.reuters.com/article/scienceNews/idUSSP22885120070824
Posted by CVR at 7:03 AM 0 comments
ஐதராபாத்தில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு : 50 பேர் பரிதாப பலி
ஐதராபாத் : ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 குண்டுவெடிப்புகளில் ஒருபாவமும் அறியாத 50 அப்பாவிகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புக்கள் சேதமடைந்து படுகாயமடைந்தனர். முதல் குண்டுவெடிப்பு தலைமைச்செயலகம் அருகிலுள்ள லும்பின் பூங்காவில் இரவு 07.45 மணியளவில் நிகழ்ந்தது. இப்பூங்கா பகுதியில் குண்டு வெடிப்பு நடந்த சமயத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்தனர். மற்றொரு குண்டு அடுத்த 15 நிமிடம் கழித்து கோகுல் சாட் பந்தரில் இரவு 08.15 மணியளவில் வெடித்தது. பயங்கரவாதிகள் சமீபகாலங்களில் தென் மாநிலங்களைக் குறிவைக்க தொடங்கி உள்ளனர். குறிப்பாக கர்நாடாகாவில் பெங்களூரூவையும், ஆந்திராவில் ஐதராபாத்தையும் தீவிரவாதிகள் இலக்காகக் கொண்டு தாக்கி வருகின்றனர். இவ்விரு நகரங்களும் விஞ்ஞான, தொழில்நுட்ப துறைகளில் அபரிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. இவ்வளர்ச்சியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர்.சம்பவ இடத்தினை நாளை மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பார்வையிடுகிறார்.
இச்சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தனது கடும் கண்டன வார்த்தைகளைத் தெரிவித்துள்ளார்.
- - தினமலர்
Posted by சிவபாலன் at 12:25 AM 4 comments
b r e a k i n g n e w s...