.

Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Tuesday, September 4, 2007

ICL அமைப்பில் இணையும் பாக்கிஸ்தான் வீரர்களுக்கு ஆயுட்காலத் தடை?

இந்தியன் கிரிக்கெட் லீக்கில் இணைபவர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் போர்டு எச்சரித்துள்ளது. இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பில் பல வீரர்கள் சேர்ந்து வருகின்றனர். இந்தியாவிலும் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் சேர்ந்துள்ளனர். வெஸ்ட்இண்டீஸ் வீரர் லாராவும் இதில் உள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களான இன்சமாம் உல்ஹக், அப்துல் ரசாக், இம்ரான் பர்கத், முகமது யூசுப் ஆகியோர் இதில் இணைய உள்ளனர். அவ்வாறு இணைபவர்களுக்கு கிரிக்கெட் விளையாட ஆயுட்கால தடை விதிக்கப்படும் எனவும் விரைவில் தங்கள் முடிவை மாற்றி கொள்ள வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நசீம் அஷ்ரப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமலர்

Friday, August 31, 2007

25 ரன் அதிகம் பெற்றிருந்தால் வெற்றி - திராவிட்

மான்செஸ்டர், ஆக. 31:

மான் செஸ்டரில் நேற்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் படு தோல்வி அடைந்தது.

கண்ணுக்குத் தெரிந்த வெற்றி கை நழுவிப்போனது வருத்தம் அளிப்ப தாகவும், இந்திய அணி இன்னும் 25 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப் போம் என்றும் திராவிட் கருத்து தெரிவித்து உள்ளார். ஏழு போட்டிகள் கொண்ட இத் தொடரில் 31 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.


மேலும் செய்திக்கு "மாலைச் சுடர்" செல்லவும்.

Thursday, August 30, 2007

நான்காவது ஒருநாள்: டென்டுல்கர் அரை சதம் அடித்தார்


மான்செஸ்டர் நகரில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், பூவா/தலையா-வை வென்ற இந்தியா, பந்தை இங்கிலாந்திடம் ஒப்படைத்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் அங்கம் வகித்த முன்னாஃப் படேலுக்கு பதில் அஜித் அகர்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

துவக்க ஆட்டக்காரர் கங்குலி, அணித்தலைவர் டிராவிட், கார்த்திக் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மூன்று விக்கெட் இழப்புக்கு 32 ஓட்டங்களே எடுத்த நிலையில் டென்டுல்கரின் அரை சதம், இந்தியாவின் சரிவை தடுத்து நிறுத்தியது.

34 ஓவர் முடிவில் மூன்றரை ஓட்டம் வீதம் நான்கு பேரை இழந்து 123 ஓட்டங்களை இந்தியா எடுத்துள்ளது

நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் தற்போது நிலவும் வானிலையால் போட்டியில் மழை குறுக்கிடுமோ என்ற சந்தேகமும் உள்ளது.

BBC SPORT | Cricket Scorecard
4th ODI: England v India at Manchester, Aug 30, 2007 - Cricinfo

Wednesday, August 29, 2007

கிரிக்கெட்: 2007ன் சிறந்த வீரர் பரிந்துரைப் பட்டியல்

2007-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை ஐசிசி மும்பையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், சுழல்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் ஆகியோர் மட்டுமே இந்தியாவிலிருந்து அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கேப்டன் ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், செüரவ் கங்குலி ஆகியோருக்கு அதில் இடமில்லை.

ஜாகீரும், கும்ப்ளேவும் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும், யுவராஜ் சிங் சிறந்த ஒருதின கிரிக்கெட் வீரர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ருமேலி தார், ஜூலான் கோஸ்வாமி ஆகியோர் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கேப்டன் ஜயவர்தனே, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங் ஆகியோர் 4 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சுனில்காவஸ்கர் தலைமையிலான 5 பேர் ஐசிசி குழு இத் தகவலை வெளியிட்டுள்ளது.

தினமணி

"ICL அமைப்புடன் தொடர்பில்லை" - I C C

இந்தியாவில் பிசிசிஐ-தான் எங்களது அங்கீகாரம் பெற்ற ஒரே அமைப்பு. இந்தியாவில் அவர்கள்தான் யாரையாவது உறுப்பினராக சேர்க்கலாமா, கூடாதா என்பதை முடிவு செய்ய முடியும். நாங்கள் உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்தினாலும் பிசிசிஐ- ஐசிஎல் விவகாரத்தில் தலையிட எங்களுக்கு உரிமையில்லை.

தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று ஐசிஎல் அமைப்பிடமிருந்து இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை. இருந்தாலும் இம்மாதிரியான பிரச்னைகளை சமாளிக்க நாங்கள் ஏற்கெனவே 4 கட்ட விதிமுறைகளை அடிப்படையாக வைத்துள்ளோம். அதில், நான்காவது விதிமுறை: அந்நாட்டில் எங்களிடம் உறுப்பினர் அந்தஸ்தை பெற்றுள்ள அமைப்பு அங்கீகாரம் தந்துள்ளதா என்பது. அதற்கு இல்லை என பதில் வந்தால் நாங்கள் அங்கீகாரம் அளிக்க முடியாது.

இம் மாதிரி கடந்த ஆண்டு அமெரிக்கா ஒரு போட்டியை நடத்த அனுமதி கேட்டபோது, நாங்கள் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக இருந்ததால் அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டோம் என உதாரணம் காட்டினார் ஸ்பீடு.

தினமணி

கிரிக்கெட்: திராவிட்டுக்கு தரவரிசையில் 5-ம் இடம்.

ஐ.சி.சி. கிரிக்கெட் தரவரிசையில் டிராவிட் 5வது இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் டிராவிட் சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் 8வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறினார்.

தோனி 5வது இடத்தில் இருந்து 15வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்து தொடரில் இவர் சோபிக்காததே இதற்கு காரணமாகும்.

Tuesday, August 28, 2007

கபில்தேவை நீக்கியது சரி - ஸ்ரீகாந்த்

கும்பகோணம், ஆக. 25-

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்துக்கு எதிராக தொடங்கப்பட்ட போட்டி அமைப்பு இந்திய கிரிக்கெட் லீக்(ஐ.சி.எல்.) ஆகும். இதன் செயல் தலைவராக கபில்தேவ் நியமிக்கப்பட்டார்.

ஐ.சி.எல். அமைப்புடன் தொடர்பு வைத்ததற்காக பெங்களூரில் இயங்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்.சி.ஏ.) தலைவர் பதவியில் இருந்து கபில்தேவை பி.சி.சி.ஐ. நீக்கியது. கபில்தேவ் நீக்கத்துக்கு முன்னாள் வீரர்கள் பிரசன்னா, சபாகரீம் கண்டனம் தெரிவித் திருந்தனர்.

கபில்தேவ் மீதான நடவடிக்கை சரியானதுதான் என்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய அணி கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட்லீக் அமைப்பு முற்றிலும் விளம்பரத்திற்காகவும், வியாபார நோக்கத்திற்காகவும் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதனை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் கபில்தேவ் மீது நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது சரியானதுதான் இதில் எவ்வித தவறும் இல்லை.

மேலும் செய்திக்கு மாலை மலர்

Monday, August 27, 2007

மூன்றாவது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு இலக்கு 282 ரன்கள்

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது ஒரு தின கிரிக்கெட் போட்டி எக்பாஸ்டனில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான குக் மற்றும் பிரையர் ஆகியோர் முறையே 40 ரன்கள், 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பீட்டர்சன் 9 ரன்களிலும், காலிங்வுட் 44 ரன்களிலும், ஷா 19 ரன்களிலும், போப்ரா 10 ரன்களிலும், இயான் பெல் 79 ரன்களிலும், ப்ராட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ட்ரெம்லெட் 19 ரன்களுடனும், ஆன்டர்சன் 0 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பியூஸ் சாவ்லா, யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், முனாப் படேல், ரமேஷ் பொவார், ஆர்.பி.சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்திய அணி 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்க உள்ளது

Saturday, August 25, 2007

BCCI, ICL இடையே போட்டி ஆட்டங்கள் - லாலு யோசனை.

மத்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(BCCI), இந்திய கிரிக்கெட் குழுமம் (ICL) ஆகியவற்றுக்கிடையே ஆரோக்கியமான போட்டி ஆட்டங்கள் வைக்கலாம் என்று மத்திய இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் யோசனை தெரிவித்துள்ளார்.

ICL என்றில்லாமல் யார் கேட்டாலும், இரயில்வேயின் விளையாட்டு மைதானங்களை, அவர்கள் உரிய வாடகை தரும்பட்சத்தில் உபயோகித்துக் கொள்ளலாம் என்றார் அவர்.

மேலும் " BCCI, ICL என்றில்லாமல், சிறப்பாக ஆடும் வீரர்களே நாட்டின் கிரிக்கெட் வீரர்களாகத் தேர்வு செய்யப்பட வேண்டும்" என்றார் லாலு.

பி/டி/ஐ/ செய்திக்குறிப்பு

வெற்றியின் வாயிலில் இந்தியா

பிரிஸ்டலில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. சவுதாம்டனில் நடந்த முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா, அதிரடி ஆட்டத்தினால் 329 ஓட்டங்களைக் குவித்தது.

இந்திய தரப்பில் அதிகபட்சமாக துவக்க வீரர் டெண்டுல்கர் 99 ரன்களைக் குவித்தார். கேப்டன் டிராவிட் 92 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஃப்ளின்டாஃப் 56 ரன் கொடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இங்கிலாந்து தற்போது 5 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்களை எடுத்துள்ளது. வெற்றி பெற 78 பந்துகளில் 116 ரன்கள் தேவை.

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்ற ஜாகிர் கான் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை.

ஆட்ட விவரம்: Cricinfo

Friday, August 24, 2007

கபில்தேவை போல கவாஸ்கரும் தனி கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு போட்டியாக கபிலதேவ் இந்திய கிரிக்கெட் லீக் என்ற அமைப்பை ஏற்படுத்தி தனி அணிகளை உருவாக்குகிறார். இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற உள்ளனர்.

கபில்தேவுக்கு போட்டியாக முன்னாள் கேப்டன் கவாஸ்கரும் இதே போல தனி அமைப்பை ஏற்படுத்தி அணிகளை உருவாக்க உள்ளார். கவாஸ்கர் ஏற்படுத்தும் அணிக்கு இந்திய கிரிக்கெட் சங்கமே உதவியாக இருக்க முன் வந்துள்ளது. இந்த அமைப்புக்கு ப்ரொஃபஷனல் கிரிக்கெட் லீக் என்று பெயர் சூட்டி உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் உள்ளூரில் நடக்கும் போட்டிகளில் இவர்கள் ஆடினால் குறைவான சம்பளமே கிடைத்து வந்தது.

கபில்தேவ் தொடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் லீக் அணியில் சேரும் வீரர்களுக்கு ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.90 லட்சம் வரை சம்பளம் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் கபில் தேவ் அணியில் சேர்ந்து விட்டனர். அவர்களிடம் 3 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதை தடுக்க உள்ளூர் வீரர் களுக்கு இந்திய கிரிக்கெட் சங்கமும் சம்பளத்தை உயர்த்தி உள்ளது. உள்ளூர் போட்டிகளில் வெற்றி பெறும் மற்றும் 2-வது இடம் பெறும் அணிகளுக்கான பரிசு பணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு போட்டியில் ஆட வீரருக்கு ரூ.36 ஆயிரம் வழங்கப்படும். இதற்கு முன்பு ரூ.26 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதன்படி வருடத்துக்கு 45 ஆட்டங்களுக்கு மேல் விளையாடும் வீரர்களுக்கு வருடத்துக்கு ரூ.16 லட்சத்து 20 ஆயிரம் கிடைக்கும். வெற்றி பெறும் அணி வீரர்களுக்கு பரிசு பணமும் தனியாக கிடைக்கும்.

இந்த வகையில் மட்டும் இந்திய கிரிக்கெட் சங்கம் ரூ.26 கோடி வரை உள்ளூர் போட்டி வீரர்களுக்கு வழங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.650 கோடி வருமானம் கிடைத்து உள்ளது. முந்தைய ஆண்டு வருமானம் ரூ.430 கோடியாக இருந்தது.

வருமானத்தில் 26 சத வீதத்தை வீரர்களுக்கு வழங்கு வது. அதில் பாதியை உள்ளூர் வீரர்களுக்கு வழங்குவது என்று கிரிக்கெட் சங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



மாலைமலர் : கபில்தேவ் அணியில் சேராமல் தடுக்க உள்ளூர் வீரர்களுக்கு ரூ.26 கோடி பரிசு மழை: கிரிக்கெட் சங்கம் முடிவு


Cricinfo - Newspaper reports BCCI to start its own league
IndianExpress.com :: BCCI kitty swells, pay hike likely for domestic players

Thursday, August 23, 2007

இம்ரான் கானுக்கு மீண்டும் திருமணம்.

பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் இம்ரான்கான் ஜெமிமா என்ற வெள்ளைக்காரப் பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவர் மூலம் சுலைமான், காசிம் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

அவர்களுக்குள் கருத்து வேருபாடு ஏற்பட்டது. இதனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர்.

இதையடுத்து இம்ரான்கான் இப்போது மீண்டும் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார். இந்தத் தடவை பாக்கிஸ்தான் பெண்ணையே மணக்க அவர் விரும்புகிறார். இதற்காக பெண் தேடும் படலம் நடந்து வருகிறது. விரைவில் திருமணம் நடைபெறும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

மாலைமலர்

Wednesday, August 22, 2007

கிரிக்கெட்:இங்கிலாந்துடன் இந்தியா படுதோல்வி.

இங்கிலாந்து அணியுடனான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா படு மோசமாக ஆடி தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் ஏற்கனவே வென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. செளதாம்டனில் முதலாவது போட்டி நடந்தது. இதில் இந்திய அணி டாஸ் வென்றது. ஆனால் பேட்டிங்கைத் தேர்வு செய்யாத கேப்டன் டிராவிட், இங்கிலாந்து அணியை பேட் செய்ய வருமாறு பணித்தார். இங்கிலாந்து அணியின் தொடக்கமே அபாரமாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரரான அலிஸ்டைர் குக் படு சிறப்பாக ஆடினார். அவர் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நிலையில் மறு முனையில் பிரியர் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து இயான் பெல், குக்குடன் இணைந்தார். இருவரும் சேர்ந்து ஆடத் தொடங்கியபோது ஆட்டத்தில் பொறி பறந்தது. இருவரும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இவர்களைப் பிரிக்க இந்தியப் பந்து வீச்சாளர்கள் கடுமையாக திணறினர். அதிரடியாக ஆடிய குக் 102 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்.பி.சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆனாலும் இயான் பெல்லின் ஆட்டத்தில் சற்றும் தொய்வில்லை. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 126 ரன்களைச் சேர்த்தார். கெவின் பீட்டர்சன் ஆட்டமிழக்காமல் 33 ரன்களைக் குவித்தார். இறுதியில், 50 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 288 ரன்களை சேர்த்தது இங்கிலாந்து அணி. கடினமான வெற்றி இலக்குடன் ஆடத் தொடங்கிய இந்தியாவுக்கு எடுத்தவுடனேயே சோதனை காத்திருந்தது. இளம் வீரர்களான திணேஷ் கார்த்திக்கையும், கவுதம் காம்பீரையும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் வழக்கம் போல சச்சின் டெண்டுல்கரும், கங்குலியும் தொடக்க வீரர்களாக இறக்கப்பட்டனர். ஆனால் இருவரும் மோசமாக ஆடி துரிதமாக ஆட்டமிழந்தனர். கங்குலி 2 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

டெண்டுல்கர் 17 ரன்களையே சேர்த்தார். பின்னால் வந்த கம்பீர் 3 ரன்களே போதும் என நினைத்து வெளியேறினார். இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி தடுமாறத் தொடங்கியது. கேப்டன் டிராவிட் மட்டும் சற்று சமாளித்து ஆடினார். அவரும் கூட 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் திணேஷ் கார்த்திக் மட்டும் சிறப்பாக ஆடி 44 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா. இதன் மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து முதல் வெற்றியை சுவைத்தது. பிரமாதமாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்த இயான் பெல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Tuesday, August 21, 2007

NCA விலிருந்து கபில்தேவ் நீக்கம் - BCCI

தேசிய கிரிக்கெட் அகடமியின்(NCA) சேர்மன் பதவியிலிருந்து முன்னாள் இந்திய கிர்க்கெட் கேப்டன் கபில்தேவ் நீக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு(BCCI) போட்டி என கருதப்படும் இந்தியன் கிரிக்கெட் லீக் (ICL) என்ற அமைப்போடு கபில்தேவ் தன்னை இனைத்துக்கொண்டதால் இந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிகிறது.

மேலும் செய்திக்கு "CNN-IBN TV".

தேசிய கிரிக்கெட் அகாதமி தலைவர் பதவியிலிருந்து கபில் நீக்கம்

ஸீ - தொ.கா. குழுமத்தினரின் இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதால் தேசிய கிரிக்கெட் அகாதெமி தலைவர் பதவியிலிருந்து கபில்தேவ் நீக்கப்பட்டுள்ளார்.

இன்று மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக தன்னை நீக்குமாறு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு கபில்தேவ் சவால் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய கிரிக்கெட் அகாதெமியின் துணைத் தலைவராக இருந்த அஜய் ஷிர்கே தற்காலிகமாக பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவிக்கு செப்டம்பர் 28ல் நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் புதிய தலைவரின் பெயர் அறிவிக்கப்படும்.

இதற்கிடையே, இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பில் இந்தியாவின் 44 கிரிக்கெட் வீரர்களும், வெளிநாட்டவர்களான பிரையன் லாரா, இன்சமாம், அப்துல்ரஸாக், லான்ஸ் குளூஸ்னர் போன்றவர்களும் இணைந்துள்ளதாகத் தெரிகிறது, பாக்கிஸ்தான் வீரர் முகமது ஆசிஃப்புக்கு மூன்று வருட ஒப்பந்தத்திற்கு ரூ.10 கோடி வழங்க லீக் அமைப்பினர் முன் வந்துள்ளதாகவும் தெரிகிறது

Tuesday, August 14, 2007

தொடரை வென்றது இந்தியா - மூன்றாவது போட்டி சமன்

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து சமன் செய்தது. 1-0 வெற்றியுடன் இந்தியா தொடரை வென்றது.

England offer stubborn resistance - Rediff

Tuesday, August 7, 2007

ஸ்ரீசாந்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஆதர்டன்

டிரன்ட்பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனங்களில் ஈடுபட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் ஆதர்டன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீசாந்தின் நடவடிக்கைகள் கிரிக்கெட் போட்டியின் உன்னதத் தன்மையை பாதிக்கும் வகையில் உள்ளது என்றார்.

கேப்டன் வான் தோள் பட்டை மீது இடித்ததற்காக மட்டுமே நடுவர்கள் ஸ்ரீசாந்துக்கு அபராதம் வித்தித்துள்ளதாகவும், அவரது பந்துவீச்சு வெறுப்புடன் வீசப்பட்ட ஒன்று என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீசாந்தின் செயலை நடுவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும், இந்திய கேப்டன் டிராவிட் இதற்கு பொறுப்பேற்று ஓவலில் நடக்கும் 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஸ்ரீசாந்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆதர்டன் கேட்டுக் கொண்டுள்ளார்.

MSN Tamil

NDTV.com: Sreesanth must be banned: Atherton
Cricinfo - Sreesanth must be banned for beamer: Atherton

Tuesday, July 31, 2007

கிரிக்கெட்: இந்தியா இரண்டாவது டெஸ்டில் வெற்றி: 73/3

நாட்டிங்காமில் நடந்த இரண்டாம் டெஸ்ட் பந்தயத்தில் இந்தியா தனது இரண்டாவது ஆட்டத்தில் 73 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்கள் என்ற கணக்கில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆட்டத்தொடரில் 1-0 என்று முன்னணியில் உள்ளது. இன்று நடந்த ஆட்டத்தில் கார்த்திக் 22,ஜாபர் 22, சச்சின் 1 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் திராவிட் 11 மற்றும் கங்குலி 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியா: 481 & 73/3
இங்கிலாந்து: 198 & 355

Tuesday, July 24, 2007

கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்காக ஆடிய 'மழை'

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளின் முதலாவது ஐந்துநாள் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தின் நாலாவது நாளில் இங்கிலாந்து வெல்வதற்கு இந்தியாவின் ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்த நிலையில் மழை குறுக்கிட்டு இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பை கவிழ்த்தது.

சுருக்கமான ஓட்ட எண்ணிக்கை:

இங்கிலாந்து (முதல் பகுதியாட்டம்): 298
இந்தியா: 201
இங்கிலாந்து (இரண்டாவது பகுதியாட்டம்) 282
இந்தியா: 282/9

அடுத்த போட்டி 27ந்தேதி நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது

Thursday, July 19, 2007

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் கிரிக்கெட் போட்டி.

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்ய தீர்மானித்து விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்துள்ளது.

-o❢o-

b r e a k i n g   n e w s...