.

Showing posts with label அமீரகம். Show all posts
Showing posts with label அமீரகம். Show all posts

Monday, September 3, 2007

ஒலிம்பிக் மாரத்தானில் பங்கேற்க விரும்பும் அமீரக தமிழ் இளைஞர்


ஒலிம்பிக் மாரத்தானில் பங்கேற்க விரும்பும் அமீரக தமிழ் இளைஞர்
தமிழக அரசு உதவ முன்வருமா ?

ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயில் உள்ள ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் ஒரு அங்கமாக விளங்கி வரும் ஜீனத் லேண்ட் டிரான்ஸ்போர்ட்டில் பணி புரிந்துவருபவர் யு. அஹமது சுலைமான் ( வயது 31 ). தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தைச் சேர்ந்த இவர் தற்பொழுது திருச்சியில் வசித்து வருகிறார்.


பள்ளி, கல்லூரிகளில் பயிலும் போதே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றதன் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த ஜனவரி மாதம் ஸ்டாண்டர்ட் வங்கி ஆதரவில் துபாயில் நடைபெற்ற சர்வதேச மாரத்தான் போட்டியில் ( 42.195 கிமீ ) முதல் முறையாக பங்குபெற்ற இவர் 372 வது இடத்தைப் பிடித்தார். இப்போட்டியில் சுமார் 4 ஆயிரத்து 800 பேர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதல் ராசல் கைமாவில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்று 210 வது இடத்தைப் பிடித்தார். இதில் 6 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மேலும் அமீரக பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்று 15 வது இடத்தைப் பெற்றார்.

இதன் காரணமாக எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்குபெற்ற பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனும் ஆவலில் தற்பொழுது திருச்சி வருகை புரிந்துள்ள இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

இவரது முயற்சிக்கு இவர் பணிபுரிந்து வரும் நிறுவனமும், துபாய் இந்திய துணைத்தூதரக கன்சல் பி.எஸ். முபாரக், இந்திய முஸ்லிம் சங்கம், துபாய் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆர்வமும், ஊக்கமும் அளித்து வருகின்றன.

இவர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவரது தாயக தொடர்பு முகவரி :

138 பெரிய கடை வீதி
திருச்சி 620 008
தொலைபேசி : 0431-270196/98 424 77828
E mail : ad_sulaiman4000@yahoo.com

Saturday, September 1, 2007

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தினரின் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் எம்.ஜே.எம். அப்துல் கபூர் சாஹிப், பொருளாளர் கே.ஏ. கலீல் அஹமது. முதல்வர் டாக்டர் எம்.ஷேக் முஹம்மது, முன்னாள் மாணவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.எம். ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் எம். அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோரும், அமீரகத்தில் பணிபுரிந்து வரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களும் ஒருங்கிணைப்பாளர் ஹெச்.இ. ஜாபர் சித்திக்கை 050 5489609 எனும் அலைபேசியிலோ அல்லது hejaf@yahoo.com எனும் மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Friday, August 31, 2007

துபாயில் பிட்ஸ் பிலானி (BITS PILANI ) பட்டமளிப்பு விழா

துபாயில் பிட்ஸ் பிலானி (BITS PILANI ) பட்டமளிப்பு விழா

துபாயில் பிரபல இந்திய பொறியியல் கல்லூரியான பிட்ஸ் பிலானியின் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் அமீரக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலி பின் அப்துல்லாஹ் அல் காபி கலந்து கொண்டு நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கு பட்டங்களை வழங்கினார்.

டாக்டர் அப்துல்லாஹ் அல் கரம், அய்யூப் காசிம், இந்திய துணைத்தூதர் வேணு ராஜாமணி, ETA ஸ்டார் குரூப் இயக்குநர் ஈஸா அல்குரைர், மேலாண்மை இயக்குநர் சையத் எம் ஸலாஹ¤தீன், நிதிதுறை இயக்குநர் ஆரிப் ரஹ்மான், பிட்ஸ் பிலானி இயக்குநர் டாக்டர் எம்.எம். ராமச்சந்திரன், டாக்டர் எஸ். வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=data/theuae/2007/August/theuae_August850.xml§ion=theuae&col=
150 students get degrees at BITS-Pilani convocation

துபாய் லாட்டரியில் பங்களாதேஷைச் சேர்ந்த மெக்கானிக்கிற்கு பரிசு


துபாய் லாட்டரியில் பங்களாதேஷைச் சேர்ந்த மெக்கானிக்கிற்கு பரிசு


துபாயில் போஸ்ட்கார்ட் மில்லியனர் எனப்படும் வாராந்திர குலுக்கல் நடைபெற்றுவருகிறது. இதன் பரிசுத் தொகை திர்ஹம் ஒரு இலட்சம். கடந்த வாரம் நடைபெற்ற குலுக்கலில் பங்களாதேஷைச் சேர்ந்த முஹம்மது சலீமிற்கு பரிசு கிடைத்துள்ளது. இத்தகவல் கிடைத்ததும் சலீம் பெருமகிழ்ச்சியடைந்தார்.

இப்பரிசுத்தொகை சுமார் இரண்டு மில்லியன் பங்களாதேஷ் தாகாவாகும். இப்பணத்தைக் கொண்டு தனது சிறுநீரக கோளாறு சிகிச்சையை செய்திடவும், தனது மனைவிக்கு நகை வாங்கவும், தனது இரண்டு பெண்களது திருமணம் செய்திடவும் மேலும் தனது ஊரில் ஒரு பள்ளிக்கூடம் துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார் சலீம்.

http://www.gulfnews.com/nation/Society/10150429.html
Plans galore as luck favours auto mechanic

Thursday, August 30, 2007

ஷார்ஜாவில் இந்தியர் ஒருவர் தற்கொலை

ஷார்ஜாவில் இந்தியர் தற்கொலை

ஷார்ஜாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த முஹம்மது அப்துல் ரஷீத் முஹம்மது கெளஸ் ( வயது 41 ) செவ்வாய்கிழமை இரவு தான் தங்கியிருந்த மூன்றாவது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஐந்தாயிரம் திர்ஹம் மாதச் சம்பளம் கொடுப்பதாக வாக்களிப்பட்டு குறைவாக சம்பளம் கொடுக்கப்பட்ட காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் இதனை அவர் பணியாற்றின நிறுவனத்தினர் மறுத்துள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட முஹம்மது கெளஸிற்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இருபது வருடங்களாக சவுதி அரேபியாவில் பணிபுரிந்த அவர் கடந்த ஜுலை 29 ஆம் தேதி ஷார்ஜா வருகை புரிந்தார்.

சம்பளப் பிரச்சனை இருந்தால் அதனை தீர்த்துக் கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருந்த போதிலும் தற்கொலை செய்து கொண்டது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ( Consulate ) வெளியிட்டுள்ள புள்ளிவிபரப்படி 2002ல் 54 பேரும், 2003ல் 63 பேரும், 2004ல் 67 பேரும், 2005ல் 82 இந்தியர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று நிகழும் தற்கொலைகளைத் தடுக்க இந்திய துணைத்தூதரகம் மனதளவில் பாதிக்கப்படுவோருக்கு ஆலோசனை வழங்க கடந்த மே மாதம் 18ம் தேதி முதல் ஆலோசகர்களை நியமித்துள்ளது. இவர்களை 050 9433111 எனும் அலைபேசி எண்ணில் வாரந்தோறும் ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிகம் பேர் அமீரகத்திற்கு வருவதால் அந்தந்த மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளபட வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் வழியுறுத்துகின்றனர்.

http://www.godubai.com/gulftoday/article.asp?AID=31&Section=Home
Indian jumps to death in Sharjah

Tuesday, August 28, 2007

அமீரகத்தின் அப்துல் கலாமாக துணை அதிபர் ஷேக் முஹம்மது


அமீரகத்தின் அப்துல் கலாமாக துணை அதிபர் ஷேக் முஹம்மது

இந்தியத் திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமைப் போல் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் ( Vice President ), பிரதமர் மற்றும் துபாய் மன்னர் ஆகியவற்றை ஒருசேர வகிக்கும் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் பள்ளிக் குழந்தைகளைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.

புதிய கல்வி ஆண்டின் முதல் நாளான நேற்று ( 26 ஆகஸ்ட் 2007 ) ஷேக் முஹம்மது துபாயில் உள்ள சில பள்ளிகளுக்கும், அஜ்மானில் உள்ள சில பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களைச் சந்தித்து உற்சாக மூட்டினார்.

மேலும் அவர் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் உடனடியாக வழங்கிட கல்வி அமைச்சர் டாக்டர் ஹனீப் ஹஸனிற்கு உத்தரவிட்டார். சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு மற்றும் உடல்நலக்கல்வி ஆகியவை குறித்த விளக்கங்கள் மாணவர்களுக்கு கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

www.gulfnews.com
http://www.gulfnews.com/nation/Education/10149348.html

Monday, August 27, 2007

துபாய் வணிகரின் மகன் ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பலி

துபாய் வணிகரின் மகன் ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பலி


துபாயில் தொழில்புரிந்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முஹம்மது அலி என்பவரின் 16 வயது மகன் முஹம்மது யஹ்யா கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பலியான செய்தியறிந்து உடனடியாக தாயகம் திரும்பினார். இச்செய்தி அலியின் குடும்பத்தினரை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது.

முஹம்மது யஹ்யா ஹைதராபாத்தில் உள்ள சைதன்யா இளநிலை கல்லூரியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து யஹ்யாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் கிடைத்தையடுத்து அங்கு சென்ற பொழுது யஹ்யா பிணமாக கிடந்தது கண்டு மிகுந்த அதிர்ச்சியுற்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ஆந்திர மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


http://www.godubai.com/gulftoday/article.asp?AID=34&Section=Home

Dubai resident's son among the dead in India blasts

ராஸ் அல் கைமாவில் இந்தியா இன்டர்நேஷனல் கிளப் தொடக்கம்


ராஸ் அல் கைமாவில் இந்தியா இன்டர்நேஷனல் கிளப் தொடக்கம்


துபாய்: ராஸ் அல் கைமாவில் இந்தியா இன்டர்நேஷனல் கிளப் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது.

இதில் துபாய்க்கான இந்தியத் துணைத் தூதர் வேணு ராஜாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ரக்கீன் தலைமை செயல் அதிகாரி டாக்டர் இம்மாத் ஹப்பர், ஜெனரல் அல் நூபி முகம்மது உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூத்த இந்தியரான மங்கம்மாள் பஞ்சோலியா கெளரவிக்கப்பட்டார்.

பின்னர் பாலிவுட் கலைஞர்கள் கலந்து கொண்ட ஏக் ஷாம் இந்தியா கே நாம் என்ற பெயரிலான கண்கவர் கலை நிகழ்ச்சியும் நடந்தது.

விஜய் தாவ்தா, திலீப் மேத்தா ஆகிேயார் நிகிழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினர். இந்தியா இன்டர்நேஷனல் கிளப்பின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை நாராயணன் பாபிலானி விளக்கிப் பேசினார். கீதா பாபிலானி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

www.thatstamil.com

Saturday, August 25, 2007

அமீரகத்தில் பொதுமன்னிப்பு பெற்ற 45,000 இந்திய தொழிலாளர்கள்

அமீரகத்தில் பொதுமன்னிப்பு பெற்ற 45,000 இந்திய தொழிலாளர்கள்


ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் சட்ட விரோதமாக இருந்து வந்த 45,000 இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய தூதரக அலுவலகங்கள் அவசர சான்றிதழ் வழங்கியுள்ளதாக இந்திய வெளிநாடு வாழ் இந்திய நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தொலைபேசி மூலம் கல்ப் நியூஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இதுவரை 28,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தாயகம் திரும்பி விட்டனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க சிறப்பு விமான சேவை ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

பொதுமன்னிப்பு பெற்ற தொழிலாளர்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். அதனைத் தொடர்ந்து கேரளா,தமிழ்நாடு ஆகியவை.

http://www.gulfnews.com/nation/Immigration_and_Visas/10148918.html
Special flights to take home amnesty seekers

ஷார்ஜாவில் இந்திய தொழிலாளருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை

ஷார்ஜாவில் இந்திய தொழிலாளருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை


ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகர் என்றழைக்கப்படும் ஷார்ஜாவில் அமையப்பற்றுள்ள குவைத்தி மருத்துவமனையில் கையில் படுகாயமடைந்த இந்திய கட்டுமானத் தொழிலாளருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை மூன்று மணி நேரம் செய்யப்பட்டதாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சகர் அல் முல்லா தெரிவித்தார். தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் விரல் அசைவுகள் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பிசியோதெரபி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


Rare surgery at Sharjah hospital

http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=data/theuae/2007/August/theuae_August690.xml§ion=theuae&col=

Friday, August 24, 2007

அமீரகத்திலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பப்பட்டனர்

அமீரகத்திலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பப்பட்டனர்


ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகத்திற்கு ஜாக்கியாக இருந்து வந்த அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பி வைக்கப்பட்டனர். அமீரகம் மற்றும் யுனிசெப் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இவர்கள் தாய்நாடு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் ஒட்டகத்திற்கு ஜாக்கியாக செயல்பட பணத்திற்காக அரபகங்களுக்கு கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது.

இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க என்னதான் சட்டங்கள் போட்டாலும் சிறுவர்களைக் கடத்தும் போக்கு தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.




http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=data/theuae/2007/August/theuae_August685.xml§ion=theuae&col=
Over 600 child camel jockeys repatriated to Pakistan

Wednesday, August 22, 2007

அபுதாபிக்கு இந்திய போர்க் கப்பலின் நல்லெண்ணப் பயணம்

அபுதாபிக்கு இந்திய போர்க் கப்பலின் நல்லெண்ணப் பயணம்


இந்திய போர்க்கப்பல்களான ஐ.என்.எஸ். ராஜ்புத் மற்றும் ஐ.என்.எஸ். பெத்வா ஆகியவை எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் 30 ம் தேதிக்குள் ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபிக்கு நல்லெண்ணப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அபுதாபியில் உள்ள இந்திய தூதரக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்தியா மற்றும் அமீரகம் இடையேயான நட்புறவு அதிகரிக்க உதவிகரமாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Goodwill visit: Indian warships to arrive in Abu Dhabi

http://www.godubai.com/gulftoday/article.asp?AID=34&Section=Home

தாய்நாடு திரும்ப இயலாமல் தவித்த இந்தியர்களுக்கு இலவச விமான பயணச்சீட்டு

தாய்நாடு திரும்ப இயலாமல் தவித்த இந்தியர்களுக்கு இலவச விமான பயணச்சீட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா காலம் முடிந்தபின்னரும் சட்டவிரோதமாக தங்கியுள்ள பலரும் நாட்டை விட்டு வெளியேற பொதுமன்னிப்பு அளித்து எவ்வித அபராதமும் இன்றி தாய்நாடு செல்ல அமீரக அரசு சலுகை வழங்கியுள்ளது.

இதன் மூலம் சட்டவிரோதமாக தங்கியுள்ள பல்வேறு நாட்டவரும் அமீரக அரசிடம் விண்ணப்பித்து தாய்நாடு திரும்பி வருகின்றனர். எனினும் இந்தியாவைச் சேர்ந்த சிலர் தாய்நாடு திரும்ப விமான பயணச்சீட்டு வாங்க இயலாத நிலையில் உள்ளனர். இதனை அறிந்த வேலி ஆப் லவ் ( valley of love ) எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஷார்ஜா இந்திய சங்கத்தில் திங்கள்கிழமை மாலை முதல் கட்டமாக 36 இலவச விமான பயணச்சீட்டுகளை வழங்கியது.

இன்னும் பங்களாதேஷ், இலங்கை, எத்தியோப்பியா உள்ளிட்ட நாட்டவர்களும் இலவச விமான பயணச்சீட்டு கேட்டு தங்களை அணுகி இருப்பதாக வேலி ஆப் லவ் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Amnesty seekers relieved as they get free passage
http://www.gulfnews.com/nation/Immigration_and_Visas/10148320.html

ஈராக்கில் ஹெலிகாப்டர் வீழ்ச்சி:14 US இராணுவத்தினர் மரணம்

வடக்கு ஈராக்கில் ஹெலிகாப்டர் ஒன்று நொறுங்கி விழுந்ததில் 14 அமெரிக்க படைவீரர்கள் இறந்தனர். இது கடந்த இரண்டாண்டு காலத்தில் நடந்த மிக மோசமான விபத்தாகும்.அதேநேரம் பாஜி நகரில் காவல்நிலையத்தின் வாயிற்கதவில் எண்ணெய் இலாரியுடன் தற்கொலைப்படையினர் மோதியதில் 20 பேர் வரை மரணமடைந்துள்ளனர்.

மேலும்...World | Africa - Reuters.com

Tuesday, August 21, 2007

துபாயில் இந்திய வீட்டு விற்பனைக் கண்காட்சி

துபாயில் இந்திய வீட்டு விற்பனைக் கண்காட்சி

துபாயில் இந்திய வீட்டு விற்பனைக் கண்காட்சி தேரா பகுதியில் உள்ள ரெனைஸன்ஸ் ஹோட்டலில் ஆகஸ்ட் 23 ந் தேதி முதல் 25 ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

23 ந் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் , 24 மற்றும் 25 ந் தேதி வெள்ளி மற்றும் சனிக்கிழமையன்று காலை பத்து மணி முதல் நண்பகல் ஒரு மணி வரையும், பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இக்கண்காட்சி நடைபெறும்.

இக்கண்காட்சியில் சென்னையைச் சேர்ந்த முன்னணி ரியல் ஸ்டேட் நிறுவனங்கள் பங்கேற்று வீடுகளை விற்பனை செய்ய உள்ளது. வங்கி கடன் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



கண்காட்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு அஜய் 050 843 2131 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Sunday, August 19, 2007

மக்களுக்கு சேவை புரியவே அரசியல் - நடிகர் சரத்குமார் பேட்டி

மக்களுக்கு சேவை புரியவே அரசியல் - நடிகர் சரத்குமார் பேட்டி

துபாய் : மக்களுக்கு சேவை புரியவே அரசியலில் ஈடுபட்டு வருகிறேன் என்று நடிகர் சரத்குமார் ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமாவில் இருந்து வானொலி சேவையை வழங்கி வரும் சக்தி எப்.எம். க்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

தான் ஒரு இளநிலை கணிதப் பட்டாரி எனவும், இப்படிப்பின் மூலம் தான் பத்தாயிரமோ, இருபதாயிரமோ மாதந்தோறும் சம்பாதித்திருக்கலாம். ஆனால் தான் கோடிக்கணக்கில் சினிமாவின் மூலம் சம்பாதிப்பதற்கு தமிழ் ரசிகப் பெருமக்கள் தான் காரணம்.

அத்தகைய தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய திட்டமிட்டு திமுகவிலும் அதனைத்த் தொடர்ந்து அதிமுகவிலும் அங்கம் வகித்தேன். தனது சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டதையடுத்து அக்கட்சிகளில் இருந்து விளகினேன்.

எதிர்வரும் ஆகஸ்ட் 31 ந் தேதி புதுக்கட்சி துவங்க இருப்பதாகத் தெரிவித்தார்.

இளம் வயதில் தனது தந்தையிடமிருந்து பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனோபாவத்தை வளர்த்துக் கொண்டதே பொது சேவையில் ஆர்வம் கொள்ளக் காரணமாக அமைந்தது என்றார்.

நாளுக்கு நாள் புதுப்புது நடிகர்கள் வந்தாலும் தனக்கு தற்போது ஆறு படங்கள் கைவசம் இருப்பதாகக் குறிப்பிட்டார். அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரம் வரும்போது எதில் முழு நேரம் ஈடுபட வேண்டும் என்பதை தான் முடிவெடுப்பேன் எனத் தெரிவித்தார்.

Thursday, July 26, 2007

துபாய்: குர்ஆன் விருது விழா

துபாயில் நடைபெற உள்ள துபாய் சர்வதேச புனித குரான் விருது விழாவில் 40 நாடுகளும் அமைப்புகளும் பங்கேற்க முன் வந்துள்ளன. இந்த விருதுக்கான ஏற்பாட்டுக்குழு கூட்டம் அதன் தலைவர் இப்ராகிம் பு மெல்ஹா தலைமையில் அல் தல்வார் மையத்தில் நடைபெற்ற போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமலர்

Wednesday, July 25, 2007

அபுதாபியில் கட்டப்படும் மிகப்பெரிய மசூதி

40 ஆயிரம் முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தவல்ல மிகப் பெரிய மசூதி, ஐக்கிய அரபு குடியரசின் தலைநகரில் ரூ. 2 ஆயிரத்து 300 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய அரபு குடியரசு நாடுகளின் பிற மாகாணங்களிலிருந்து தலைநகர் அபுதாபி நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் மக்தா முஸ்தபா பாலத்திற்கு அருகே மிகப்பெரிய மசூதி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மசூதியை அமைக்க முன்னாள் அதிபர் மறைந்த ஷேக் சையது பின் சுல்தான் அல் நகியான் விருப்பப்பட்டார். இதுகுறித்து, அவர் தனது வாரிசுகளிடம் கூறியிருந்தார். அவரது கனவை நனவாக்கும் விதத்தில், தற்போது மசூதி அமைக்கப்பட்டு வருகிறது

முதல்கட்டப் பணிகள் வரும் செப்டம்பர் மாதம் முடிவடைந்து விடும். மீதமுள்ள பணிகளை விரைவில் முடித்து விடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மசூதியின் சுற்றளவு 41 ஆயிரத்து 222 சதுர மீட்டர். ஒரே நேரத்தில் 40 ஆயிரம் பேர் தொழுகை நடத்தவும் விசாலமான இடம் உள்ளது. மசூதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ள தொகை 217 கோடி திர்ஹம் (2,300 கோடி ரூபாய்). முன் ஹாலில் தொழுகைக்கான சிறப்பு அரங்கில் 5 ஆயிரத்து 627 சதுர மீட்டர் பரப்பில் போடப்பட உள்ள தரை விரிப்பு (கார்பெட்) விசேஷமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்த தரைவிரிப்பை கையினால் நெய்யும் பணியில் ஆயிரத்து 200 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான செலவு மட்டும் 32 கோடி ரூபாய்.

நன்றி: தினமலர்

Saturday, July 7, 2007

ஓணத்திற்காக அதிக விமானசேவைகள் வேண்டும்: கேரளா

எதிர்வரும் ஓணம் பண்டிக்கைக்கு தங்கள் மாநிலத்திலிருந்து வளைகுடாநாடுகளுக்கு அதிக விமானசேவைகளை இயக்க வேண்டும் என்றும் பயணக்கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் நடுவண் அரசை வற்புறுத்தியிருப்பதாக மாநில முதல்வர் அச்சுதானந்தன் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் கூறினார்.

The Hindu News Update Service

Thursday, June 28, 2007

ஈரானிலிருந்து எரிவாயு: இந்தியா, பாக் ஒப்பந்தம்

ஈரானிலிருந்து இந்தியாவிற்கு எரிவாயு கொண்டுவர நடந்த மூன்றுநாடுகள் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பாகிஸ்தானும் எரிவாயுவை பாக். வழியே கொண்டுவருவதற்கான விலையில் உடன்பாடு கண்டுள்ளன; ஈரான் கடைசிநிமிடத்தில் தன் விலைஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கேட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கொருமுறை உலக சந்தை விலைகளின்படி விலையை ஏற்றி/இறக்க ஒரு நிபந்தனையை சேர்க்க ஈரான் விரும்புகிறது. ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் 25 வருட ஒப்பந்த காலம் முழுமையும் ஒரு மில்லியன் BTUவிற்கு $4.93 ஆக விலையை மாற்றாமல் வைக்க விரும்புகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் நாளையும் தொடரும்.

மேல் விவரங்களுக்கு...The Hindu News Update Service

-o❢o-

b r e a k i n g   n e w s...