.

Saturday, May 19, 2007

ஹைதராபாத் மசூதியில் குண்டுவெடிப்பை கண்டித்து TNTJ தமிழகம்முழுவதும் கண்டன ஆற்பாட்டம்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 18 .05 2007 அன்று 400 ஆண்டு கால புகழ் பெற்ற மெக்கா மசூதியில் பயங்கர வெடி குண்டுகள் வெடித்துள்ளன அன்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டிருந்த முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதலில் பத்துக்கும் மேற்ப்பட்டோர் பலியானதுடன் போலிசார் துப்பாக்கி சூட்டிலும் பலர் பலியாகி உள்ளனர். இதற்க்கு முன்பு கூட டெல்லி ஜும்மா மசூதியில் இதுபோன்ற பயங்கர தாக்குதல் சம்பவம் நடைப்பெற்றது இப்படி தொடர்ச்சியாக இறை இல்லங்களில் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைக்குற்றவாளிகளை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,இனி வரும் காலங்களில் இதுப்போன்ற சம்பவங்கள் நடைப்பெறாமல் தடுக்கும் வகையிலும் உறக்கதில் இருக்கும் உளவுத்துறையை விழிப்படைய செய்யும் வகையிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடசென்னை சார்பில் இன்றுமாலை 4 மணியளவில் பார்க் டவுன் மெமொரியல் ஹால் அருகில் மாபெரும் கண்டன ஆற்பாட்டம் நடைப்பெற்றது ஆற்பாட்டத்திற்க்கு மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமைதாங்கினார் மாநிலதலைவர் பீ ஜைனுலாபிதீன் கண்டன உரைநிகழ்த்தினார்.இந்த ஆற்பாட்டதிற்க்கு ஏராளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்துக்கொண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

ச: உலகவங்கி தலைவர் பதவிவிலகல்

உலகவங்கியின் தலைவர் பால் வொல்ஃபோவிட்ஸ் இன்று தமது பதவியிலிருந்து விலகினார். முன்னதாக தமது பெண்நண்பருக்கு நல்ல வேலைக்கு மாற்றியதும் அவரது சம்பளத்தை உயர்த்தியதும் பல 'கிசுகிசுக்களை' ஏற்படுத்தியிருந்தன. மற்றுமொரு அமெரிக்க வெளியுறவு அதிகாரிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். காண்டெலிசா ரைஸ்சிற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும், அவர்மட்டும் வெளியுறவு மந்திரி (அமெரிக்காவில் செக்ரட்டரி) ஆக இல்லாமல் இருந்திருந்தால். தன் பதவிவிலகலை அறிவித்திருக்கும் பிரித்தானியப் பிரதமர் பெயர் கூட அடிபடுகிறது.

Bits of News - Paul Wolfowitz's Resignation

ச:தவறுள்ள அகராதியை விற்பனையிலிருந்து விலக்கியது ஆக்ஸ்போர்ட் யூனி.பிரஸ்

ஆக்ஸ்போர்ட் யுனிவரசிடி பிரஸ் வெளியிட்ட அருஞ்சொற் பொருளாகராதியில் பெங்களூரு பற்றி தவறான தகவல்கள் தந்திருப்பதாக எழுந்த எதிர்ப்புகளிடையே அந்நிறுவனம்் மன்னிப்பு கேட்டுக் கொண்டு குறிப்ப்பிட்ட அகராதி தொகுதியை விற்பனையிலிருந்து விலக்கி வைப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது..

இதுபற்றி மேலுமறிய..Zee News - Oxford University Press suspends sale of its dictionary

ச: கிரிக்கெட்: மழையினால் இரண்டாம்நாள் ஆட்டம் தாமதம்்

இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் இடையே நடந்து வரும் கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தொடரின் முதல் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் அதிகாலையிலிருந்தே பெய்துவரும் மழையினால் ஆடுகளம் ஈரமானநிலையில் தேநீர் இடைவேளை வரையில் ஆரம்பிக்கவில்லை. தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆடுவது சாத்தியமா என நடுவர்கள் பரிசோதனையின் பின்னர் முடிவு செய்யப் படும். ஆட்டவீரர்கள் ஓட்டல் அறையை விட்டு வெளிவரவேயில்லை.


IOL: Rain delays India vs Bangladesh

ஹைதராபாத் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு : பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்நதுள்ளது. இதில், போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆனது. சார்மினார் அருகேயுள்ள மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 9 பேர் பலியாயினர். சிறுவர்கள் உட்பட 40 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, மக்கள் அலறியடித்து வெளியேறினர்.இதைத் தொடர்ந்து, ஹைதராபாத் நகரில் கலவரம் ஏற்பட்டபோது, நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். அதில், நேற்று மாலை 3 பேர் உயிரிழந்தனர். பின்னர், இந்த எண்ணிக்கையும் 5 ஆக உயர்ந்தது. இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தேறிய அடுத்த சில நிமிடங்களில், போலீசாரால் வெவ்வேறு இடங்களில் இருந்து 2 வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்குத் தலா ரூ.20 ஆயிரமும் வழங்கவதாக முதல்வர் ராஜசேகர ரெட்டி அறிவித்துள்ளார்.குண்டுவெடிப்புக்குக் காரணம் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஹார்கட்-உல்-ஜிஹாதல் இஸ்லாமி என்ற அமைப்பே காரணம் என போலீசார் சந்தேகித்துள்ள நிலையில், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஃப்ளிக்கர்.காம் பின்னூட்டங்களை யாஹு தணிக்கை செய்தது

புகைப்படங்களுக்கான ஃப்ளிக்கர்.காம் வலையகத்தில் யாஹூ தணிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தன்னுடைய அனுமதியில்லாமல், இணைய கண்காட்சியொன்றில் ஏழு நிழற்படங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை ரெபெக்கா (Rebekka Gudleifsdóttir) கடந்த மாதம் கவனித்தார். இதைப் பிறரின் கவனத்துக்கு கொண்டு செல்ல ஃப்ளிக்கரில் பதிவிட்டார். புகைப்படமும் அதன் தொடர்பான எதிர்வினைகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

புகைப்பட விற்பனையில் சம்பந்தப்படாத யாஹு, இதற்காக மன்னிப்புக் கோரியுள்ளது.

'பிறரை புண்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதால்' 450 சொச்ச பின்னூட்டங்களையும் ஃப்ளிக்கர் கழற்றி விட்டதோடு நில்லாமல், ரெபக்காவின் பதிவை முடக்குவோம் என்று மிரட்டவும் செய்ததாக பாதிக்கப்பட்டவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

BBC NEWS | Technology | Yahoo 'censored' Flickr comments: "Yahoo has been accused of censorship on its popular photo website Flickr, in a row that has highlighted the issue of copyright in the online age."

பிகார்: ரயில்வே அதிகாரியால் ரயிலிலிருந்து தூக்கி வீசப்பட்ட பயணி

பாட்னா, மே 19: பிகார் மாநிலம் சோனேபூரில் ரயில்வேப் பாதுகாப்புப் படை அதிகாரியால் ஓடும் ரயிலிலிருந்து தலித் பயணி ஒருவர் வியாழக்கிழமை தூக்கி வீசப்பட்டார்.

அமர்பலி எக்ஸ்பிரஸில் டிக்கட் பரிசோதனையின்போது ரயில்வேப் பாதுகாப்புப் படை அதிகாரிக்கும், பயணிகளுக்கும் இடையே பிரச்சினை நடந்துள்ளது. இதில் ராகேஷ் குமார் பாஸ்வான் என்ற தலித் பயணியை ஓடும் ரயிலிலிருந்து சோனேபூர் ரயில்வே பாலம் அருகே பாதுகாப்புப் படை அதிகாரி தூக்கி வீசியதாக மத்திய கிழக்கு ரயில்வே துணை பொது மேலாளர் கே. சந்திரா தெரிவித்தார்.

பாஸ்வான் சாபூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சோனேபூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளார் பாஸ்வான்.

Dinamani

ராகிங் தேவையா- சர்வே முடிவுகள்



முந்தைய சர்வே: திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்?

'சிவாஜி' ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு

'சிவாஜி' படம் உலகம் முழுவதும் ஏப்.14-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் மே 31-ம் தேதி வெளியாகும் என ஏவி.எம். நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது 'சிவாஜி' படம் ஜூன் 15-ம் தேதிதான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'சிவாஜி' படத்தை புதன்கிழமை சென்சார் போர்டு அதிகாரிகள் பார்த்தனர். அப்படத்துக்கு அனைத்து வயதினரும் காணத்தக்க வகையிலான 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

'சிவாஜி'யில் ஆட்சேபகரமான காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறவில்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கலாம் என படத்தைப் பார்த்த அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.


சிவாஜி'க்கு புதிய சிக்கல்: 'சிவாஜி' படத்தைத் திரையரங்குகளில் வெளியிட வேண்டுமானால் படத்தின் வசூலில் 40 சதவீதத்தைத் தரவேண்டும் என புதிய படங்களைத் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் புதிய நிபந்தனை விதித்துள்ளனர்.

சாய்மீரா, ரிலையன்ஸ் ஆட்லேப், சன்நெட்வொர்க் போன்ற பெரிய நிறுவனங்கள் படத்தை வாங்கி வெளியிட முன்வந்தன. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை இப்படத்தை ஏவி.எம். நிறுவனமே அனைத்து ஏரியாக்களிலும் நேரடியாக வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

தமிழ்த் திரைப்படத் துறையில் தற்போதுள்ள எம்.ஜி. (மினிமம் கியாரண்டி) மற்றும் எஃப்.எச் (ஃபிக்சட் ஹயர் எனப்படும் நிரந்தர வாடகை) முறைகளால் திரையரங்குகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இனி வரும் காலங்களில் சதவீத அடிப்படையில் வசூலில் பங்கு வேண்டும் என ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசாணை 1240-ன்படி திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் அந்த அரசாணை நிறைவேற்றப்படவில்லை. எனவே அரசாணையில் அறிவித்துள்ளபடி அதிகபட்ச கட்டணம் ரூ.50, குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 என விண்ணப்பம் செய்யும் திரையரங்குகளுக்கு மாவட்ட ஆணையர்களே அனுமதி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'சிவாஜி' படத்தைக் குறி வைத்துதான் இந்த திடீர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சங்கத்தின் தலைவர் மு.அண்ணாமலை கூறியதாவது:

எம்.ஜி., எஃப்.எச் முறையில் திரையரங்குகள் நஷ்டத்தை சந்தித்து வருவதால்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். சதவீத அடிப்படையில் என்றால் பெரிய படங்களைப் பொருத்தவரை, முதல் மூன்று வாரங்களுக்கு விநியோகஸ்தர்களுக்கு 60 சதவீதமும், திரையரங்குகளுக்கு 40 சதவீதமும் பங்கிடப்படும். அடுத்த வாரத்திலிருந்து இரு தரப்பும் தலா 50 சதவீதம் பிரித்துக்கொள்ள வேண்டும்.

இதற்கு முன்பு திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டம் அடைந்தபோது ஜீ.வி., ரஜினிகாந்த், மணிரத்னம் போன்ற சிலர் மட்டுமே பணத்தைத் திருப்பித் தந்தனர். இதை எல்லாரிடமும் எதிர்பார்க்கமுடியாது என்றார்.

(தினமணி)

'குரு', 'வெயில்' உள்பட கேன்ஸ் திரைப்பட விழாவில் 7 இந்திய திரைப்படங்கள்

பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் திரையிட மணிரத்னம் இயக்கிய 'குரு', வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' உள்பட 7 இந்திய திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மலையாள படமான 'சைரா' மே 19-ம் தேதி திரையிடப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவராக இருந்து பின் திரையுலகுக்கு வந்த பிஜு குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக பாவனா தல்வாரின் 'தரம்' படமும், மிரிதுல் துளசிதாஸ் மற்றும் வினய் சுப்பிரமணியன் இணைந்து இயக்கிய 'மிஸ்டு கால்' திரைப்படமும் திரையிடப்படுகிறது.

ஹிந்தியில் ராஜ் குமார் ஹிரானியின் 'லகே ரகோ முன்னாபாய்' மற்றும் மணி ரத்னம் இயக்கிய 'குரு' திரைப்படமும் திரையிடப்பட உள்ளன.

கோல்கத்தா இயக்குநர் ரிதுபர்னா கோஸின் 'தோஸார்' படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி: சற்றுமுன்...: வெய்யில்: கேரளாவில் விருது, கான் திரைப்படவிழாவிற்கு தேர்வு

Dinamani

NDTV: 'Director Wong Kar-wai's My Blueberry Nights starring Norah Jones and Jude Law, was the first screening in an 11-day fete of cinema, parties and deal making. Movies on Cannes' lineup range from Ocean's Thirteen to Michael Moore's Sicko, to films from Russia to Mexico to South Korea.

For a feature-length homage to the movies, it commissioned 35 shorts from directors including Wong, Roman Polanski (The Pianist), Alejandro Gonzalez Inarritu (Babel), the Coens (Fargo) and Wim Wenders (Wings of Desire.)

Oscar-winning director Martin Scorsese has been enlisted to give a master class on moviemaking.

DiCaprio brings his environmental documentary The 11th Hour.'

உள்நாட்டு விமானங்களில் மது பரிமாற அனுமதி?

உள்நாட்டு விமானங்களில் மது அருந்துவதும் மதுவகைகள் பரிமாறப்படுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. வெளிநாட்டு விமானங்களிலும் இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியாவின் சர்வதேச விமானங்களிலும் மட்டும்தான் மதுவகைகள் பரிமாறப்பட்டு வந்தன.

தனியார் விமானப் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டபோது, அப்போதிருந்த மோடி லுஃப்த் விமான நிறுவனம், தனது உள்நாட்டு விமானங்களில் மதுவகைகளை இலவசமாக வழங்க முற்பட்டது. நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் கிளம்பிய எதிர்ப்புகள், அரசைத் தலையிட வைத்து, விமானங்களில் 'பார்' நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைத்தன.

கடந்த பத்து ஆண்டுகளாக ஓரங்கட்டப்பட்டு வைத்திருந்த விஷயத்துக்கு இப்போது புத்துயிர் அளித்திருக்கிறார் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் படேல். சமீபத்தில் பிரிட்டனின் மிகப்பெரிய மதுபான நிறுவனமான ஒயிட் அண்ட் மேக்கே மதுபான ஆலையை, ரூ. 4,819 கோடிக்கு வாங்கியிருக்கும் யுனைடெட் ப்ருவரீஸ் நிறுவனத்தின் நிர்பந்தத்திற்கு உட்பட்டு, இந்த விதி சில நிறுவனங்களின் சேவைக்கு தளர்த்தப்படலாம் என்றார்.

- தினமணி

1. Booze on your DEL-MUM flight?
2. Kingfisher Airlines: Soaring ambition

-o❢o-

b r e a k i n g   n e w s...