.

Friday, May 11, 2007

ச:புகைப்பழக்கத்தை நிறுத்த புகை பிடியுங்க

ஹாங்காங் கம்பெனி ஒன்று உருவாக்கியுள்ள இ-சிகரெட் புகைப்பழக்கத்தை கைவிட உதவுகிறது. புகையிலை இல்லாத இந்த சிகரட் பேட்டரிகொண்டு செயல்படுகிறது.

இதன் விலை தோராயமாக $208.

E-smoke, to kick the habit Reuters Video

ச:ஈரன், வட கொரியா முக்கிய சந்திப்பு

உலக அளவில் சர்ச்சைக்குரிய நாடுகளாகக் கருதப்படும் ஈரானும் வட கொரியாவும் முக்கிய சந்திப்பில் இருநாட்டு உறவுகளையும் வளர்க்க ஒப்பாந்தம் செய்துள்ளனர்.

இரு நாடுகளும் அமெரிக்க அதிபரால் 'தீமையின் மையப்புள்ளிகள்' என வர்ணிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல், பொருளாதார, கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும் வடகொரியா ஈரானிடம் பெற்றுள்ள கடன் இரு நாடுகளுக்கிடையேயான உறவுக்குத் தடையாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Iran, North Korea seek to boost cooperationReuters Canada, Canada
North Korea's debt to Iran obstacle for cooperation: Mottaki NewKerala.com

ச: காட்டலீனா தீவில்(Catalina Island) காட்டுத் தீ !

அமெரிக்காவில், கலிபோர்னியா(தெற்கு) மானிலத்தில் இருக்கும் காட்டலீனா தீவில் காட்டுத் தீ பரவியதால் சுமார் 4000 ஏக்கர் நிலம் சேதம். கிட்டதட்ட 3300 மக்கள் வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றபட்டார்கள்.

மேலும் படிக்க

http://abclocal.go.com/kabc/story?section=local&id=5295110

ச:சிடி விவகாரம் - பாஜக கண்டனம்

உ.பி தேர்தல் பிரச்சாரத்தின்போது பஜக சார்பில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய சிடி வெளியீட்டை பாஜக கண்டித்துள்ளது. தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதற்குஇணங்க இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிடி பாஜகவின் அதிகாரபூர்வ பிரச்சார சாதனமாக வெளியிடப்படவில்லை என்றும் கட்சியின் அடிமட்டத் தலைவர்களே இதை வெளியிட்டுள்ளனர் என்றும் பாஜக தெரிவித்தது.

BJP condemns 'communal' CDCNN-IBN, India
BJP studying EC's order Sahara Samay
EC asks BJP to condemn poll CD

ச:பஸ் கங்கையில் கவிழ்ந்தது - 22பேர் மரணம்

பாட்னா சென்றுகொண்டிருந்த பேருந்து பிகாரின் வைஷலியில் இருக்கும் மகாத்மாகாந்தி பாலத்திலிருந்து கங்கையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22பேர் பலியாயினர்.


22 killed as bus falls off bridge over GangaHindu
15 killed after bus falls off bridge Hindustan Times
22 die as bus plunges into Ganga India eNews.com

ச:முதல்வர் பொன்விழா 27 கைதிகள் விடுதலை

முதல்வர் கலைஞரின் சட்டசபை பொன்விஆவை முன்னிட்டு தமிழகமெங்குமுள்ள சிறைகளிலிருந்து ஒரு பெண் உட்பட்ட 27 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 27 பேரும் மே 11ல் 14 வருடம் சிறைத்தண்டனை முடித்தவர்கள். விதிகளின்படி ஆளுநரின் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டனர்.

தினமலர்

ஊழலை ஒழிப்பேன்: மாயாவதி

பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உபியில் தனியாட்சி காணும் மாயாவதி தனது அதிரடி வெற்றி தன்னுடைய கட்சியின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாக கருதுவதாக பத்திரிகையாளர் கூட்டமொன்றில் கூறினார். தனக்கு பெருமளவில் வாக்களித்த 'மேல்சாதி'யினருக்கும் முஸ்லிம்களுக்கும் நன்றி தெரிவித்தார். தனது வழிகாட்டியான கான்சிராமையும் அண்ணல் அம்பேத்கரையும் நினைவு கூர்ந்த அவர், தனது ஆட்சி ஊழல், குற்றம் இவற்றை ஒழித்து வளர்ச்சிக்கு அடிகோலும் எனத் தெரிவித்தார்.


Mayawati promises to root out corruption in UP - Daily News & Analysis

அமர்சிங்கின் நண்பர்கள் வருமானவரி ரைய்டில்

உபி தேர்தல்முடிவுகள் வெளியாவதற்கு முன்பே சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர் அமர்சிங்கின் நண்பர்களாகக் கருதப்படும் அசோக் சதுர்வேதியின் Flex நிறுவனம், வினய் மாலூ வின் HFCL நிறுவனங்களின் மீது வருமானத்துறை தேடுதல்கள் நடத்தப் பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும்...The Times of India

ஒரிஸா சாலைவிபத்து: 10 பேர் மரணம்

ஒரிசாவின் மயூர்கஞ்ச் மாவட்டத்தில் இன்று ஒரு ஜீப் வண்டியும் எண்ணெய் லாரியும் மோதிக் கொண்டதில் பத்து பேர்வரை மரணமடைதுள்ளனர், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

Road accident kills 10 in Orissa- Hindustan Times

கலைஞரின் பொன்விழா கொண்டாட்டம்

நன்றி தினமலர் நாளிதழிற்குசரித்திரங்கள் கண்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை இன்று தன்னகத்தே கொண்டிருக்கும் மாநிலசட்டசபையின் வரலாற்றில் புதிய சாதனைபடைத்து சரித்திரம் எழுதப்படுவதை கண்டது. தமிழக முதல்வரும் திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஐம்பது ஆண்டுகாலம் சட்டசபையில் பணியாற்றியமையை பாராட்டும் விதமாக நடந்த பொன்விழாவில் ஆளுநர் திரு பர்னாலா அவரின் அவைப் பணி மற்றவர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்வதை புகழ்ந்துரைத்தார்.

எதிர்கட்சிகளான அதிமுகவும் மதிமுகவும் புறக்கணித்த இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், முன்னாள் அவை உறுப்பினர்களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பட்டிருந்தனர்.
ஆளுநரை தவிர பாட்டாளி மக்கள் கட்சியின் ஜிகே மணி, சிபிஎம்மின் கோவிந்தசாமி,சிபிஐயின் சிவபுண்ணியம், மற்றும் டிபிஐ யின் கே செல்வம் ஆகியோரும் சிறப்புரை ஆற்றினர்.

மேலும்..The Hindu News Update Service

படம் நன்றி; தினமலர் நாளிதழ் இணையப் பதிப்பு

உ.பி தேர்தல்: நாங்கள் தோற்றதிற்கு தேர்தல் ஆணையமே காரணம்: முலாயம்

உத்திரப்பிரதேச முதல்வர் முலாயம்சிங் யாதவ் தங்களின் தோல்விக்கு தேர்தல் ஆணையத்தின் ஆட்சித் தலையீடே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் ஒரு இணை அரசை நடத்தியதற்கு காங்கிரஸ், பிஜேபியும் உடன் போனதாகவும் கூறியுள்ளார். ஆளுநரிடம் தனது பதவிவிலகல் கடிதத்தை கொடுத்தபின் நிருபர்களிடம் பேசும்போது இது தவறான ஜனநாயகப் போக்கு என்றும் தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்து அனைத்துக் கட்சி கூட்டமொன்றை கூட்டப் போவதாகவும் தெரிவித்தார்.


DNA - India - Mulayam holds EC responsible for Samajwadi Party defeat in UP polls - Daily News & Analysis

உ.பி தேர்தல் முடிவுகள் - சற்றுமுன்

உத்தரப் பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் எல்லா கணிப்புகளையும் தாண்டி பிஎஸ்பி கட்சி தனியாகவே ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்கியிருக்கிறது. சமீபத்திய நிலவரங்களின்படி
அந்தக் கட்சி தனித்தே ஆட்சி அமைக்க முடியுமெனத் தோன்றுகிறது. 202 இடங்களில் அந்தக் கட்சி முன்னணியில் இருக்கிறது. அடுத்த இடத்தில் இருக்கும் சமாஜ்வாதி கட்சி 89 இடங்களிலும், பிஜேபி 58 இடங்களிலும் ம்ட்டுமே முன்னணி வகிக்க காங்கிரஸ் 25 இடங்களோடு திருப்திப்பட வேண்டியிருக்கும். மாயாவதியின் வீட்டின் முன்னால ஓரிருவரைத் தவிர பெரிய ஆர்ப்பாட்டங்க்ள் ஏதுமில்லை. முழுமையான முடிவுகள் தெரிந்த பின்னரே வேட்பாளர்கள் வெளியில் வந்து கொண்டாட்டங்களில் ஈடுப்டவேண்டும் என்று கட்சித்தலைவர் மாயாவதியிடமிருந்து கடுமையான உத்தரவு வந்ததே காரணமாம்.

கொசுறு தகவல்கள்:

** முலாயம் சிங் தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்று விட்டார்
இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து தனது பத்விவிலகல் கடிதத்தை வழங்குவார்

** நாளை பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

** தேவைப்பட்டால் வெளியில் இருந்த் ஆதரவு தர காங்கிரஸ் முடிவு

** மாயாவதிக்கு யாருடைய ஆதர்வும் தேவையில்லை - சுஷ்மா ஸ்வராஜ் (பிஜேபி)

ச: உ.பி., தேர்தல் முடிவு : முன்னணி நிலவரம

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்தன. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 7 மணி முதல் தொடங்கியது.

தற்போதைய முன்னணி நிலவரம்: பகுஜன் சமாஜ் 183 ; சமாஜ்வாடி 93 ; பா.ஜ.க., 64 ; காங்கிரஸ் 31 ; இதர கட்சிகள் 29 .

இன்று மாலைக்குள் முழு விபரமும் வெளியாகிவிடும்.

புழல் சிறை அருகே 65 வீடுகள் சாம்பல்

புழல் சிறைச்சாலை பின்புறம் உள்ள திருமலை நகர் குடியிருப்பு பகுதியில் 65 வீடுகள் நேற்று பிற்பகல் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில் ஒரு பெண் மயங்கிச் சாய்ந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார். இங்கு 100க்கும் மேற்பட்ட குடிசைகள், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீடுகள் உள்ளன.

தகவல் அறிந்து மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, திருவள்ளூர் கலெக்டர் ரன்வீர் பிரசாத், புழல் பேரூராட்சி தலைவர் மகாதேவி அன்பழகன், மற்றும் அதிகாரிகள் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்கினர். அதே பகுதியில் உள்ள தனியார் இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கருணாநிதி பொன்விழா

சென்னை, மே 11: முதல்வர் கருணாநிதியின் சட்டப் பேரவை பொன் விழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி உட்பட பல தலைவர்கள் பங்கேற்று கருணாநிதியை பாராட்டுகிறார்கள்.

தமிழக முதல்வர் கருணாநிதி, சட்டப் பேரவை உறுப்பினராக கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதை பாராட்டி, "சட்டப் பேரவையில் கருணாநிதி பொன் விழா" சென்னையில் 2 நாட்கள் நடத்தப்படுகிறது. விழாவை முன்னிட்டு சென்னை நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.

முதல் நிகழ்ச்சியாக, சட்டப் பேரவையில் இன்று காலை 10 மணிக்கு விழா தொடங்குகிறது. கருணாநிதியை ஆளுநர் பர்னாலா மற்றும் சட்டமன்றக் கட்சி தலைவர்கள் பாராட்டி பேசுகிறார்கள். மாலை 6 மணிக்கு தீவுத்திடலில் பொன் விழா கூட்டம் நடக்கிறது.

இதற்காக மாநகரில் 13 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என போலீஸ் கமிஷனர் லத்திகா தெரிவித்துள்ளார். மேலும், நகரின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். விழாவுக்கு 10 ஆயிரம் மாநகர போலீசாரும், 3 ஆயிரம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

முக்கிய விருந்தினர்களின் வாகன அணிவகுப்பு செல்லும் நேரத்தில், ஒரு சில சாலைகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்படும்.

அமைச்சர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், மத்திய அமைச்சர்கள் லாலு பிரசாத் யாதவ், சரத்பவார், ராம்விலாஸ் பாஸ்வான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் மற்றும் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்திப் பேசுகிறார்கள். முதல்வர் கருணாநிதி ஏற்புரையாற்றுகிறார். பொன்விழா மலர், விழாவில் வெளியிடப்படுகிறது.

விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியாக, நாளை காலை 11 மணிக்கு பேரவையில், மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கலந்து கொண்டு, முதல்வரை வாழ்த்தி பேசுகிறார்.

Dinakaran

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்: பாலகுமாரன், இயக்குநர் பாலா, சிம்பு, த்ரிஷா உள்பட 60 பேருக்கு விருது அறிவிப்பு

கோவைத் தம்பி-திரைப்படத் தயாரிப்பாளர்

சீமான்-திரைப்பட இயக்குநர்

சிம்பு-திரைப்பட நடிகர்

"ஜெயம்' ரவி-திரைப்பட நடிகர்

ஜீவா-திரைப்பட நடிகர்

விஷால்-திரைப்பட நடிகர்

த்ரிஷா-திரைப்பட நடிகை

நவ்யா நாயர்-திரைப்பட நடிகை

கஞ்சா கருப்பு-நகைச்சுவை நடிகர்

ஆர்த்தி-நகைச்சுவை நடிகை

வினித்-குணசித்திர நடிகர்

பாலகுமாரன்-இயற்றமிழ் கலைஞர்

வண்ணதாசன்-இயற்றமிழ் கலைஞர்

கவிஞர் கலாப்பிரியா-இயற்றமிழ் கலைஞர்

சுப.வீரபாண்டியன்-இலக்கியப் பேச்சாளர்

மரபின் மைந்தன் முத்தையா-இலக்கியப் பேச்சாளர்

கீதா ராஜசேகர்-இசை ஆசிரியர்

சஞ்சய் சுப்ரமணியம்-குரலிசைக் கலைஞர்

ஸ்ரீவத்சவா-மிருதங்கக் கலைஞர்

சரஸ்வதி ராஜகோபாலன்-வீணைக் கலைஞர்

டாக்டர் இரா.செல்வகணபதி-சமயச் சொற்பொழிவாளர்

இறையன்பன் குத்தூஸ்-இறையருட்பாடகர்

இஞ்சிக்குடி சுப்ரமணியன்-நாதஸ்வர கலைஞர்

மலைக்கோட்டை எஸ்.சுப்ரமணியன்-தவில் கலைஞர்

கிரிஜா பக்கிரிசாமி-பரதநாட்டிய ஆசிரியர்

திவ்யா கஸ்தூரி-பரதநாட்டிய கலைஞர்

சிந்தூரி-பரதநாட்டிய கலைஞர்

திருநங்கை நர்த்தகி நடராஜ்-நாட்டிய நாடகக் கலைஞர்

ஆர்.முத்தரசி-நாட்டிய நாடகக் கலைஞர்

கவிஞர் இன்குலாப்-நாடக ஆசிரியர்

பேராசிரியர் இரா.ராஜு-நவீன நாடக இயக்குநர்

தங்கராஜ் என்ற எம்எல்ஏ தங்கராஜ்-நாடக நடிகர்

வி.மூர்த்தி-நாடக நடிகர்

தேவிப்பிரியா என்ற ரமணதேவி-நாடக நடிகை

வி.ஆர்.திலகம்-பழம்பெரும் நாடக நடிகை

சி.ஐ.டி.சகுந்தலா-பழம்பெரும் திரைப்பட நடிகை

பா.விஜய்-திரைப்பட பாடலாசிரியர்

நா.முத்துக்குமார்-திரைப்பட பாடலாசிரியர்

கபிலன்-திரைப்பட பாடலாசிரியர்

இயக்குநர் பாலா-திரைப்பட கதாசிரியர்

வித்யாசாகர்-திரைப்பட இசையமைப்பாளர்

மது பாலகிருஷ்ணன்-திரைப்பட பின்னணி பாடகர்

திப்பு-திரைப்பட பின்னணி பாடகர்

பாம்பே ஜெயஸ்ரீ-திரைப்பட பின்னணி பாடகி

எம்.வி.பன்னீர்செல்வம்-திரைப்பட ஒளிப்பதிவாளர்

விட்டல்-திரைப்பட எடிட்டர்

நேஷனல் செல்லையா-திரைப்பட புகைப்படக் கலைஞர்

அதிவீர பாண்டியன்-திரைப்பட பத்திரிகை ஆசிரியர்

கே.அம்மச்சி விராமதி-நாட்டுப்புற இசைக் கலைஞர்

ஆக்காட்டி ஆறுமுகம்-நாட்டுப்புற இசைக் கலைஞர்

டாக்டர் கே.ஏ.குணசேகரன்-நாட்டுப்புற இசை ஆய்வாளர்

டிராட்ஸ்கி மருது-ஓவியக் கலைஞர்

சி.ஜெ.பாஸ்கர்-சின்னத்திரை இயக்குநர்

விடுதலை-சின்னத்திரை கதை வசனகர்த்தா

வேணு அரவிந்த்-சின்னத்திரை நடிகர்

போஸ் வெங்கட்-சின்னத்திரை நடிகர்

மௌனிகா-சின்னத்திரை நடிகை

தீபா வெங்கட்-சின்னத்திரை குணச்சித்திர நடிகை

டி.ஜி.தியாகராஜன்-சின்னத்திரை தயாரிப்பாளர்

அலெக்ஸ்-தந்திரக்காட்சி கலைஞர்

ச:தூக்கிலிடப்பட்டவரின் வித்தியாசமான கடைசி ஆசை

அமெரிக்காவில் நாஷ்வில், டென்னிசியில் தூக்கிலிடப்பட்ட பிலிப் ஒர்க்மேன் கடைசி ஆசையாக தனக்கு வழங்கப்பட்ட உணவுத் தேர்வுக்குப் பதில் வெளியே ஏழை யாருக்கேனும் ஒரு வெஜிட்டேரியன் பீசாவை வழங்குமாறு சிறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரின் ஆசையை அதிகாரிகள் நிறைவேற்ற மறுத்துவிட்டனர்.

ஒர்க்மேனின் விருப்பத்தை அறிந்த பொதுமக்கள் அங்குள்ள யூனியன் ரெஸ்க்யூ மிஷன் என்னும் சேவை அமைப்புக்கு சுமார் 170 பிசாக்களை நன்கொடையாக அனுப்பினர்.

Executed man gets last meal wish after he dies

நேப்பாளத்துக்கு எண்ணெய் வழங்குவதை இந்தியன் ஆயில் நிறுத்தியது

இந்திய எண்ணெய் நிறுவனம் கடன் அடைக்கத் தவறிய நேப்பாளத்துக்கு பெற்றோலிய எண்ணெய் வழங்குவதை நிறுத்தியதைத் தொடர்ந்து அங்கே பெற்றோல் தட்டுப்பாடு பரவலாகியுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் பட்ட 90 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையிலான கடனை அடைக்க முடியாத நிலையில் தமது நிறுவனம் உள்ளதாக நேப்பாள அரச எண்ணெய் நிறுவனத்தின் சார்பில் பேசிய நிர்வாகி தெரிவித்தார். நேப்பாள பெற்றோல் நிலையங்களுக்கான சப்ளை 60 வீதத்தினால் குறைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். பல நிலையங்களில் பெற்றோல் தீர்ந்து விட்டது.

இமயமலைத் தேசமான நேப்பாளத்துக்கு பெற்றோலிய எண்ணெய்களை வழங்கி வருகின்ற ஒரு ஒரே நாடு இந்தியா மட்டுமே.

BBC NEWS | South Asia | Nepal hit hard by India oil cuts

ஜனநாயகத்தை மீண்டும் நிலை நிறுத்த முயற்சிக்காத வரை உதவி கிடையாது: ஐரோப்பிய கமிஷன்

ஜனநாயகத்தை மீண்டும் நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்காத வரை பிஜிக்கு நிதியுதவி கிடையாது என பசிபிக் நாடுகளுக்கான ஐரோப்பிய கமிஷன் பிரதிநிதி ராபர்டோ ரிடால்பி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், பிஜிக்கு நிதியுதவி அளிப்பதென்பது அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட அந் நாட்டு இடைக்கால ராணுவ அரசு எடுக்கும் நடவடிக்கையையும், அங்கு மனித உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதையும் பொறுத்தே அமையும் என்றார்.

Dinamani

அஸ்லன்ஷா ஹாக்கி: இந்தியா ஆர்ஜென்டீனாவைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

இபோ (மலேசியா), மே 10: 16-வது அஸ்லன்ஷா கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றது. மலேசியாவில் உள்ள இபோ நகரில் புதன்கிழமை மாலை நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது.

இவ் வெற்றி மூலம் மொத்தம் 6 புள்ளிகளைச் சேர்த்திருந்தது இந்தியா. ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகளும் "ஏ' பிரிவில் தலா 6 புள்ளிகளைச் சேர்த்திருந்தன. இதையடுத்து, கோல் வித்தியாசத்தில் ஆர்ஜென்டீனா அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ஆஸ்திரேலியா முதலிடத்தையும், இந்தியா இரண்டாம் இடத்தையும் பெற்று, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவுடன் மோதல்: வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் மலேசியாவுடன் இந்தியா விளையாடுகிறது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கொரியாவை எதிர்த்து ஆஸ்திரேலியா விளையாடுகிறது.

கொரியா வெற்றி: செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டு, புதன்கிழமை தொடர்ந்த ஆட்டத்தில் கொரியா 4-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானின் சவாலை முறியடித்தது.

Dinamani

காமன்வெல்த் போட்டிக்கு ரூ. 3,566 கோடி தேவை அமைச்சர் தகவல்

புதுதில்லி, மே 10: 2010-ம் ஆண்டு இந்தியா நடத்த உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு ரூ. 3,566 கோடி தேவை என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். இதில், ஸ்டேடியம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுக்காக இந்திய விளையாட்டு ஆணையம் மதிப்பிட்டுள்ள ரூ. 1000 கோடியும் அடங்கும் என மக்களவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அப் போட்டிக்கு வீரர்களைத் தயார்படுத்துவதற்காக மட்டும் நடப்பு ஆண்டில் ரூ. 300 கோடி தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளார். இந்த 300 கோடி வீரர்களுக்கான பயிற்சிக்கு மட்டுமே தவிர, கட்டமைப்பு வசதிகள் எதற்கும் பயன்படுத்தப்படமாட்டாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Dinamani

-o❢o-

b r e a k i n g   n e w s...