.

Showing posts with label தொலைபேசி. Show all posts
Showing posts with label தொலைபேசி. Show all posts

Saturday, September 1, 2007

GSLV-F04 விண்ணேற்றத்திற்கு தயார்நிலை ஆரம்பம்

பூமிக்கு நிலையான வட்டப்பாதையில் துணைக்கோள்களை செலுத்தவல்ல ஜிஎஸ் எல்வி ஏவுகணையை நாளை விண்ணில் இந்திய நேரம் 4:21 மணிக்கு அனுப்ப இன்று மதியம் 2 மணியிலிருந்து எண்ணிக்கை குறைப்பு ஆரம்பமானது. இந்த ஏவுகணை இந்திய தொலைதொடர்பிற்கான துணைக்கோள் இன்சாட்-4CR ஐ ஏற்றிச் செல்லும். இந்த துணைக்கோளில் வீட்டிற்கு நேரடி தொலைக்காட்சி (DTH), வழங்க ஏதுவாக 12 அதிக சக்தி Ku பட்டையில் இயங்கும் ஒளிபரப்பு சாதனங்கள் அமைந்துள்ளன. சென்றமுறை இன்சாட் -4C உடன் செலுத்திய இவ்வித ஏவுகணை பாதியிலேயே தனது சக்தியை இழந்து வீழ்ந்ததின் பின்ன்ணியில் நாளைய விண்ணேற்றம் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப் படுகிறது.
The Hindu News Update Service
Zee News - INSAT-4CR launch put off by a day to Sept 2

Saturday, August 25, 2007

இந்தியா: 16 வயதுக்குக் கீழ் கை பேசி வேண்டாம் - அறிவுறுத்தல்

அலை பேசிகளிலிருந்து வெளியாகும் மின் காந்த கதிர்வீச்சு, காதில் உள்ள மென்மையான திசுக்களை வெப்பமடைய செய்யும். இது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், 16 வயதுக்கு உட்பட்டவர்களை அலைபேசி பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்த இந்திய தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.

அலைபேசிகளிலிருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இதை தடுக்க எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தொ.தொ. துறையின் தொலை தொடர்பு பொறியியல் வல்லுனர் மையம் சில வழிகாட்டு குறிப்புகளை தயார் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

மொபைல் போனில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு, மனிதர்களின் காதில் உள்ள திசுக்களை வெப்பமடைய செய்து விடும். இது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். 16 வயதுக்கு உட்பட்டவர்களின் திசுக்கள் மிகவும் மென்மையானவை. அவர்கள் மொபைல் போனை பயன்படுத்தினால் பிரச்னை ஏற்படும். எனவே, 16 வயதுக்கு உட்பட்டவர்கள் மொபைல் போனை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தொலை தொடர்பு நிறுவனங்கள் வலியுறுத்த வேண்டும்.இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், ஏராளமான டவர்களை அமைத்து, அவற்றில் ஆன்டனாக்களை அதிக அளவில் பொருத்தி வருகின்றனர். இதனாலும் மின்காந்த கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்படும். எனவே, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அருகே இதுபோன்ற டவர்களை ஏற்படுத்த கூடாது என்று வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது
.இவ்வாறு டெலிகாம் துறை கூறியுள்ளது.டெலிகாம் துறையின் இந்த நடவடிக்கை குறித்து தொலை தொடர்பு நிறுவனங்கள் கூறியதாவது:
அறிவியல் ஆதாரம் இல்லாமல் இது போன்ற அறிவுரைகளை வெளிப்படுத்துவதால் இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு பெரிதும் பாதிக்கப்படும். ரேடியோ கதிர்வீச்சு அலைகள் மற்றும் மொபைல் தொடர்பு ரேடியோ கதிர்வீச்சு அலைகள் குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ள அளவுக்கும் குறைவான கதிர்வீச்சு அலைகளால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் வராது என்றே அந்த ஆய்வு முடிவுகள் தெரியப்படுத்தியுள்ளன.

இவ்வாறு தொலை தொடர்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.

இது குறித்து இந்திய தொ.தொடர்புத் துறையிடம் கேட்ட போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த முன்னெச்சரிக்கை அறிவுரை ஏற்று பல வகையிலும் நடைமுறைப்படுத்தியுள்ளன. எனவே, இந்தியாவிலும் இதை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமலர்

Wednesday, August 15, 2007

சவூதி: இன்று இந்தியாவுக்கு 50% தொலைபேசி கட்டணச்சலுகை.

இந்தியாவின் இனிய சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சவூதிஅரேபிய தொலைதொடர்புத்துறை
இன்று 24 மணி நேரத்துக்கு இந்தியாவுக்கான தொலை அழைப்புகளுக்கு 50% கட்டணக்குறைப்பு செய்து தன்னுடைய சுதந்திரதின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.

இதே போன்ற சலுகை ஆகஸ்ட் 14ல் பாக்கிஸ்தானுக்கும், ஆகஸ்ட் 17ல் இந்தோனேசியாவுக்கும் வழங்கப்படுகிறது.

Saturday, July 14, 2007

குற்றச்சாட்டுக்கள் உறுதிசெய்யப்பட்டால் பதவி விலகத் தயார்: இராஜா

தகவல் தொழிற்நுட்ப அமைச்சர் திரு ஏ.இராஜா பிஎஸ் என் எல் தொழிற் சங்கங்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுக்கள் உறுதியானால் தாம் பதவி விலகத் தயார் எனக் கூறியுள்ளார். தன்னுடைய உறுதிமொழியையும் மீறி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதில் அதிருப்தி தெரிவித்த அமைச்சர் தான் பி எஸ் என் எல் ஒப்பந்தபுள்ளியில் சில ஐயங்களையே எழுப்பியதாகவும் ஆனால் இடதுசாரி கட்சிகளுக்கு விசுவாசமான தொழிற்சங்கங்கள் தன்னை புரிந்துகொள்ளாமல் இந்த பிரச்சினையை கிளப்பியுள்ளதாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறியவைக்கு...The Hindu News Update Service

Saturday, June 16, 2007

ச:ஹட்ச் செல்பேசியில் சிவாஜி பாடல்கள்

முன்னணி செல்பேசி நிறுவனமான ஹட்ச் ஹங்காமா.கொம் உடன் இணைந்து தமிழ் திரைப்படமான சிவாஜியின் பாடல்களையும் படங்களையும் செல்பேசியில் தனிப்பட்ட முரையில் வழங்கவிருக்கிறது. இதன்மூலம்ம் ஹட்ச் வாடிக்கையாளர்கள் பாடல்களை அழைப்புமணியாகவும், அழைத்தவர் மணியாகவும் தவிர பின்னணிபடங்கள், படச் செய்திகள், திரைப்பட அறிவிப்புகள், சிறு துணுக்குகள் என சிவாஜி படத்தின் பல விதயங்களைப் பெறமுடியும். தவிர போட்டிகளும் நடத்தப் படுகின்றன. விவரங்களுக்கு.... 'Sivaji-The Boss' @ NewKerala.Com News Channel

Tuesday, June 12, 2007

ச:தொலைபேசி சேவை உரிமம்: வழங்குமுறைகள் மீளாய்வு

தொலைதொடர்புத் துறையில் பெருமளவு இணைதல்களும் தொழிற்நுட்ப வளர்ச்சிகளும் பல்கிவரும் வேளையில் தொலைதொடர்பு கட்டுப்பாடு ஆணையம் இப்போதிருகின்ற உரிமம் வழங்கின்ற விதிகளை மாற்றியமைக்க அவற்றை மீளாய்வு செய்ய எண்ணியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் ஒரே உரிமத்தில் ் GSM மற்றும் CDMA வகை செல்பேசி சேவைகளை வழங்க விண்ணப்பித்திருப்பது இந்த மீளாய்விற்கு வழிவகுத்துள்ளது. அந்நிறுவனம் தற்சமயம் தனித்தனி உரிமங்களை வைத்து ரிலையன்ஸ் டெலிகோம் GSM சேவையையும் ரிலையன்ஸ் இன்ஃபோகோம் சிடிஎம் ஏ சேவையையும் வழங்குகிறது.

The Hindu News Update Service

சவூதி: பிலிப்பைனியருக்கு STC விலைச்சலுகை!

ஜூன் 12 ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் சுதந்திர தினம் என்பதை முன்னிட்டு சவூதி அரேபிய தொலை தொடர்புத்துறை வாழ்த்துக்களுடன் விசேட விலைச்சலுகையினை அறிவித்துள்ளது.
அதன்படி ஃபிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இன்று நள்ளிரவு வரையிலான 24 மணி நேரத்துக்கு தொலைபேசி கட்டணங்களில் 50 சதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

தொலைதொடர்புத்துறை உயரதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார்.

Monday, June 11, 2007

இந்தியா: ISD தொலைபேசி கட்டணங்கள் குறைப்பு!

வெளிநாட்டு அழைப்புகளுக்கான கட்டணப்போட்டியில் பி.எஸ்.என்.எல் இன்று மேலும் அதிரடியாக தன் கட்டணத்தை குறைத்து கொண்டுள்ளது. புதிய கட்டணமாக, அமெரிக்கா, கனடாவுக்கான ஒரு நிமிட கட்டண விகிதங்கள் ரூ 1.75 ஆகவும், வளைகுடா நாடுகளுக்கு ரூ 6.75 ஆகவும் இருக்கும். இது தனியார் சேவைகளை விட சற்றே குறைவாகும்.

தனியார் நிறுவனங்கள் குறிப்பாக, ஏர்டெல் இவற்றை ரூ.1.99, ரூ 6.99 என்று நிர்ணயித்திருந்தது குறிக்கத்தக்கது.

மேலும் படிக்க....

-o❢o-

b r e a k i n g   n e w s...