.

Monday, July 23, 2007

கமல்நாத்துக்கு 'எப்டிஐ' விருது

மத்திய வர்த்தகம மற்றும் தொழிற்துறை அமைச்சர் கமல்நாத்துக்கு அந்நிய நேரடி முதலீட்டை கொண்டு வந்ததற்க்கான விருது வழங்கப்பட்டுள்ளது. பிரபலமான நிதித்துறை டைம்ஸ் குழும பப்ளிகேஷன் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

'எப்டிஐ' பெர்சனால்டி என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருதை இதற்கு முன்னதாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூ லா டிசில்வாவும் (uis Inacio Lula da Silva), மெக்சிகோ அதிபர் வின்சென்ட் பாக்ஸ் (Vincente Fox) ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

கமல்நாத்தின் முயற்சியால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ. 5 லட்சத்து 63 ஆயிரத்து 800 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2003-04ம் ஆண்டு ஏற்றுமதியான ரூ. 2 லட்சத்து 93 ஆயிரத்து 367 கோடியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

MSN Tamil

The Hindu News :: FT publication names Nath as FDI personality of the year
Kamal Nath, the global FDI person

லண்டன் தமிழருக்கு அடி-சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் அடாவடி: 7 பேர் கைது

லண்டனைச் சேர்ந்த தமிழரின் கைக் குழந்தை பந்தைத் திருடி விட்டதாக கூறி, அவரது கையில் இருந்த பந்தைப் பறித்ததோடு நில்லாமல், அந்த தொழிலதிபரையும் சரமாரியாக அடித்து உதைத்த சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 6 பேர் மற்றும் கண்காணிப்பாளரை போலீஸார் கைது செய்தனர்.

லண்டனில் வசிக்கும் இளஞ்செழியன் தனது மனைவி குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தார். சரவணா ஸ்டோர்ஸுக்கு் குடும்பத்துடன் போய் பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது அவரது கைக் குழந்தையிடம் பந்தைப் பார்த்த கடை ஊழியர்கள், அதை அவர் திருடி விட்டதாக கூறி பறித்துள்ளனர். ஆனால் அந்தப் பந்துக்குப் பணம் கொடுத்து விட்டதாக கூறிய இளஞ்செழியன், அதற்கான பில்லையும் காட்டியுள்ளார்.

ஆனால் அதைக் கண்டுகொள்ளாத கடை ஊழியர்கள் இளஞ்செழியனை சரமாரியாக அடித்துள்ளனர். காசு கொடுத்து பொருளை வாங்கி, தேவையில்லாமல் அடியையும், அவமரியாதையையும் வாங்கிய அதிர்ச்சியில் இளஞ்செழியன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் 6 ஊழியர்களைக் கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆகி விட்டனர்.

இந்த நிலையில் நேற்று கடை கண்காணிப்பாளர் லிங்கராஜன் கைது செய்யப்பட்டார். அவரை இன்று நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.

மதுரையில் பெண் இயக்குநர்களின் திரைப்பட விழா

ஆகஸ்ட் 4, 5 தேதிகளில் மதுரையில் இந்திய மருத்துவக் கழக அரங்கத்தில் சர்வதேச பெண் இயக்குநர்களின் திரைப்பட விழா நடைபெறவுள்ளது.

மேலும் விபரங்களுக்கு.

தொடர்புகொள்ள
Salai Selvam
Coordinator Koodu
6, Allied Home
Airport road
Perungudi
Madurai - 625 022

Contact persons: Salai Selvam-9443881701, Varthini - 9443856061,Geeta - 9443918808

E-mail: koodumdu@yahoo.co.in

நன்றி: லிவிங்்விங் ஸ்மைல் வித்யா.

உலகளாவியா இயற்பியல் ஒலிம்பிக்ஸ்:இந்திய மாணவர்கள் சாதனை

உலகளாவிய இயற்பியல் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய மாணவர்கள் நால்வர் வெற்றிப்பதக்கங்களைப் பெற்று சாதனை செய்துள்ளனர்.

ஜெய்ப்பூரைச் சார்ந்த ராம் ஷர்மா தெராதுன்னைச் சார்ந்த ரோஹித் சிங் இருவரும் தலா ஒரு தங்கப் பதக்கத்தையும் மேலும் இருவர் வெள்ளி பதக்கங்களையும் வென்றனர்.

70 நாடுகளைச் சார்ந்த 326 மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டிகளில் இந்தியா 6வது இடத்தை பிடித்தது.

Indian students excel at Physics Olympiad - The Hindu

பா ஜ க: ஐந்து குஜராத் எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம்

குடியரசுத்தலைவர் தேர்தலில் பிரதீபாவுக்கு வாக்களித்ததாகக் கருதப்படும் குஜராத் மாநில பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஐவரை கட்சி இடை நீக்கம் செய்துள்ளது.

மேலும் விபரமறிய: TOI

ஆறு கிலோ எடையுடன் பிறந்த குழந்தை.

ஆறு குழந்தைகளை ஏற்கனவே பெற்ற பெண்ணுக்கு ஏழாவது குழந்தை ஆறு கிலோ எடையில் பிறந்துள்ளது.

குஜராத்தின் ச்சிப்பா பொதுநல மருத்துவமனையின் பிரசவ விடுதியில் பிறந்து இருநாட்களே ஆன குழந்தை ஹபீப் அலி தன் தாயுடன் நலமாக இருப்பதாக மருத்துவர் ஜபீன் தெரிவித்துள்ளார்.

வழமையை விடவும் மூன்று கிலோ அதிக எடையுள்ளதாக ப் பிறந்த இக்குழந்தை மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாம்.

பி.டி.ஐ செய்தி

சின்சினாட்டி டென்னிஸ்: இரட்டையரில் சானியா வாகை.

சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸ்ஸில் ஒற்றையர் ஆட்டத்தில் அரையிறுதியில் தோற்றாலும் இரட்டையர் ஆட்டத்தில் சானியா இணை வென்றுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மேசன் நகரில் பெண்களுக்கான சின்சினாட்டி ஓப்பன் டென் னிஸ் போட்டி நடந்தது.

இதில் பங்கேற்ற சானியா மிர்சா ஒற்றையர் ஆட்டத்தில் அரை இறுதி வந்து தோற்றார்.

இரட்டையர் ஆட்டத்தில் அவர் அமெரிக்காவை சேர்ந்த பெதாமி மேட்டக்குடன் இணைந்து ஆடினார். இந்திய நேரப்படி இன்று காலை நடந்த இறுதிப்போட்டியில் சானியா-மேட்டக் ஜோடி அலைனா ஜிக்கோவா (ரஷியா), டாடினா பவுச் செக் (பெலாரஸ்) ஜோடியை எதிர் கொண்டது.

இதில் சானியா-மேட்டக் ஜோடி 7-6, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.

இந்தியாவில் 'போலி' ஹேரி பாட்டர்

ஹேரி பாட்டர் புத்தகத் தொடரில் ஏழாவதும் கடைசியுமான ஹேரி பாட்டர் அண்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் புத்தகத்தின் திருட்டு பதிப்புக்களை பெங்களூர் போலிஸ் ரெய்ட் செய்து கைப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஒருவர் கைதாகியுள்ளார்.

இந்த் போலி புத்தகங்களின் மொத்த மதிப்பு ரூ. 4கோடி ஆகும்.

Police bust Potter piracy scam CNN.com

ஒரிசா: துண்டு துண்டாய் பச்சிளம் சிசுக்களின் உடல்கள்

ஒரிசா மாநிலம் நயகர் மாவட்டத்தில் ஒரு மலை அடி வாரத்தில் கடந்த 14-ந்தேதி 7 பச்சிளம் குழந்தைகளின் பிணங்கள் வீசப்பட்டு இருந்தன. அவை பெண் குழந்தைகள் என்றும், பிறந்த உடன் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

இதைத் தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் பிணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஒரிசா மாநில அரசு உத்தரவிட்டது. போலீசார் நயகர் மாவட்டம் முழுவதும் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது நபகன் பூர் கிராமத்தில் உள்ள 36 தனியார் ஆஸ்பத்திரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அந்த மருத்துவமனையில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். பிறகு ஆஸ்பத்திரி அருகே மலை போல குவிக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரி கழிவு குப்பை பகுதியில் சோதனை நடத்தினார்கள். அந்த குப்பை கிடங்கில் ஏராளமான பாலிதீன் பைகள் இறுக கட்டப்பட்டு புதைக்கப்பட்டிருந்தன.

அந்த பாலிதீன் பைகளை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பாலிதீன் பைகளில் பச்சிளம் குழந்தைகளின் உடல் பாகங்கள் இருந்தன. தலை, வயிறு, கை, கால்கள் என துண்டு, துண்டாக வெட்டப்பட்டிருந்தன. எல்லா உடல்களும் அழுகிய நிலையில் காணப்பட்டன.

மொத்தம் 132 பாலிதீன் பைகளை போலீசார் கைப்பற்றினார்கள். இதில் சுமார் 30 பைகளில் பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் இருந்தன. அவை அனைத்தும் பெண் குழந்தைகளின் உடல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதை உறுதிப்படுத்த 30 பாலிதீன் பைகளில் கண்டெ டுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை களின் உடல்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக நபகான்பூர் தனியார் மருத்துவமனை மானேஜர் சியாமாசாகுவை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

மாலைமலர்

ஒரிசா: கலப்புத்திருமணத்துக்கு ரூ. 50,000 பரிசு.

ஒரிசா மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவர் முன்னேற்றத்துக்காகவும், ஜாதி வேறுபாடுகளை ஒழிக்கவும் கலப்பு திருமண உதவி திட்டம் 1980-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன்படி உயர்ந்த ஜாதியினர் தாழ்த்தப் பட்டோரை திருமணம் செய்து கொண்டால் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் அந்த தொகை ரூ.3 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இது 10 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது என்றாலும் எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்கவில்லை. எனவே திருமண பரிசு தொகையை உயர்த்த ஒரிசா அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி உயர்ந்த ஜாதியினர் தாழ்த்தப்பட்டோர், மலை ஜாதி இனத்தவரை திருமணம் செய்து கொண்டால் ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசு வழங்குவது என்று ஒரிசா அரசு முடிவு செய்துள்ளது,

இந்த தகவலை அந்த மாநில எஸ்.சி., எஸ்.டி பிரிவு வளர்ச்சித்துறை மந்திரி மஜ்பி தெரிவித்தார்.

கலப்பு திருமணத்தை ஊக்குவிப்பதற்காகவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தீண்டாமையை ஒழிக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

ஒரிசா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 101 தம்பதியர் மட்டுமே இது போன்ற கலப்புதிருமணம் செய்து கொண்டு பரிசுத் தொகை பெற்றுள்ளனர். கூடுதல் தொகை வழங்குவதன் மூலம் அதிக எண்ணிக்கையில் கலப்பு திருமணம் நடைபெறும் என்று அந்த மாநில அரசு நம்புகிறது.

எனவே உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பரிசுத் தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பாடு உள்ளது.

ஷில்பா ஷெட்டி மீது இலண்டன் வாழ் இந்தியப்பெண் புகார்.

லண்டனில் வசிக்கும் இந்தியர் ராஜ்குந்த்ரா, சினிமா பட தயாரிப்பாளர். இவரது மனைவி கவிதா. ஷில்பா ஷெட்டி மீது கவிதா ஆங்கில பத்திரிகை ஒன்றில் புகார் கூறியதாவது:-

எங்களது திருமண வாழ்க்கை நிம்மதியாக போய் கொண்டு இருந்தது. சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. சினிமா பட சம்பந்தமாக ஷில்பா ஷெட்டியுடன் எனது கணவர் ராஜ்குந்த்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அன்றில் இருந்து அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் தொடர்பு இருக்கிறது. அவர் விவாகரத்து கேட்கிறார். எனது கணவரை என்னிடம் இருந்து பிரிக்க ஷில்பா ஷெட்டி துடிக்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷில்பாஷெட்டியின் செய்தி தொடர்பாளர் டாலே பக்வாகர் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, ஷில்பா வும், ராஜ×வும் நல்ல நண்பர் கள்தான். இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாக வதந்தி பரப்பபட்டு வருகிறது. இதில் எந்த ஆதாரமும் இல்லை. சினிமா பட சம்பந்த மாக இருவரும் பொது இடங்களில் சந்தித்து இருக்கலாம் என்றார்.

ராஜ்குந்த்ரா கூறும்போது, நாங்கள் நல்ல நண்பர்கள். வியாபாரம் சம்பந்தமாக அவருடன் தொடர்பு உள்ளது. எனது திருமண வாழ்க்கை முடிந்து 1 ஆண்டு ஆகிறது. இதற்கு ஷில்பா எந்த காரணமும் இல்லை.

மாலைமலர்

மும்பையில் கேலித்தொல்லை: பெண் மருத்துவமனையில்

சென்னையில் அணமைக்காலத்தில் நடந்த நிகழ்வொன்றை பிரதிபலிப்பதாய் பத்துவயது சிறுமியொருத்தி இளைஞர்கள் நிரம்பிய கார் ஒன்றினால் இழுத்துச் செல்லப்பட்டு பலத்தக் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளாள்.நான்கு எலும்புமுறிவுகளுடனும் காலில் தீக்காயங்களுடனும் செம்பூர் மருத்துமனையொன்றில் சிகிட்சை பெற்று வருகிறாள். அவளது உடல்நிலை தேறிவருவதாகக் தெரிகிறது.

ஜூலை 14 அன்று தனது அக்கா மற்றும் அவளது தோழியுடன் டியுஷன் முடிந்து வந்துகொண்டிருந்தபோது 20வயது வாலிபர்கள் சிலர் காரில் பிந்தொடர்ந்து பெரிய பெண்களை கேலி பேசியவாறும் ஆபாச சைகைகள் காட்டியும் வந்துள்ளனர். அவர்களுக்கு பயந்து பெரியவர்கள் இருவரும் சாலையைக் கடந்துவிட பத்துவயது சிறுமியின் பாவாடை காரின் பின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டு அவளை இழுத்துக் கொண்டு சென்றது. காரை நிறுத்திவிட்டு அந்த வாலிபர்கள் ஓடிவிட்டனர்.

NDTV.com:இல் இன்று வந்த செய்தியின் மேல் விவரத்திற்கு..

டெல்லி, உத்திராஞ்சலில் இன்று மிதமான நிலநடுக்கம்

இன்று காலை 4.32 மணியளவில் டெல்லி, உத்தரகாசி, உத்தராஞ்சல் மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 5 புள்ளிகள் என்ற அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தை டெல்லி, உத்தராஞ்சல் ஆகிய பகுதிகளில் உணர முடிந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை

காஞ்சி சங்கராச்சாரியார் மீது குற்றம் பதியப்பட்டது

சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் காஞ்சி மடாதிபதி மற்றும் 11 பேர் மீதான ஆடிட்டர் இராதாகிருஷ்ணன் அடிதடி வழக்கில் குற்றங்கள் பதியப்பட்டன(Framing of charges). செப்டம்பர் 2002இல் மடத்தின் கணக்காய்வாளராக பணியாற்றிய ஜி இராதாகிருஷ்ணன், அவரதுமனைவி மற்றும் ஊழியரை அவர்கள் வீட்டில் ஆள்வைத்து அடிக்க திட்டம் வகுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஜெயெந்திரரைத் தவிர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன்,மீனாட்சிசுந்தரம், ஆனந்த்,லக்ஷ்மணன், பூமிநாதன், கண்ணன், குமார்,ரவி சுப்பிரமணியம் ஆகியோர் மீதும்குற்றங்கள் பதியப்பட்டன. இந்திய குற்றவியல் பிரிவுகள் 120-B, 307/109 கீழ் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.

இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை 2005இல் பதியப்பட்டது.

IBNLive.com > Kanchi seer, 11 others charged in assault case : Sankararaman murder, Kanchi Seer

டாக்டர் ஹமீத் அன்சாரி: சவூதி வாழ் இந்தியர்கள் பெருமிதம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சிறுபான்மையோர் ஆணையத்தின் தலைவரும், சவூதி அரேபியாவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதருமான டாக்டர் ஹமீத் அன்சாரி பற்றி சவூதி வாழ் இந்தியர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.

முன்னாள் குடியரசுத்தலைவர் மறைந்த ஜாகீர் ஹுசைனைப்போலவே சிறந்த கல்வியாளரான டாக்டர் முஹம்மத் ஹமீத் அன்சாரி, அன்னாரைப்போலவே துணைவேந்தராகவும் பணியாற்றியவர்.
இந்தியா-சவூதிஅரேபியா இடையே அரசியல் மற்றும் பொருளாதார தொடர்புகளை அன்சாரி தனது காலத்தில் மேம்படுத்தியிருந்தார்.

"ஒவ்வொரு இந்தியரும் டாக்டர் அன்சாரியின் புதிய பதவி குறித்து பெருமிப்படைவர். சவூதியில் தூதரக உயர் அதிகாரியாகவும், பின்னர் தூதராகவும் அவர் செயலாற்றிய காலங்களிலிருந்தே அவரை நன்கு அறிந்துள்ளேன். சவூதி அரேபிய நகரங்களில் இந்தியத்தூதரகப் பள்ளிக்கூடங்களை நிறுவியதில் டாக்டர் அன்சாரியும் அவர் துணைவியார் சல்மா அவர்களும் கொண்டிருந்த பங்கு அளப்பரியது" என்றார் இந்தியா ஃபாரம் அமைப்பின் பொதுச்செயலாளர் S.A. ஜெயசீலன்.

"நேர்மைக்கும், அர்ப்பணிப்புணர்வுக்கும் அவரோர் உதாரணம்" என்ற சாம் மாத்யூ, இராக்-குவைத் போர்க்காலத்தில், ஒரு தூதராகவும், சக இந்தியராகவும், டாக்டர் அன்சாரியின் உத்வேகமான செயலாற்றலைப் புகழ்ந்தார். "இந்திய நிதி அமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங்கை ரியாத்துக்கு வரவழைத்தவரும் டாக்டர் அன்சாரி" என்றார்.

சவூதி அரேபியாவின் பெரும்பாலான இந்தியர் அமைப்புகள் தமது பெருமிதத்தையும், டாக்டர் ஹமீத் அன்சாரிக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்காக ஐ.மு.கூட்டணிக்கு நன்றியையும் வெளியிட்டுள்ளன.

சவூதி அரேபியா தவிர ஆஸ்திரேலியா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் தூதராகப் பணியாற்றியுள்ளார்.

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: பிரதான வேட்பாளர்கள் மனுதாக்கல்

புதிய குடியரசு துணைத்தலைவரைத் தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரி களின் வேட்பாளராக முகமது ஹமீத் அன்சாரி அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. கூட்டணி சார்பில் நஜ்மா ஹெப்துல்லா போட்டியிடுகிறார். மூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி சார்பில் ரஷீத் மசூத் நிறுத்தப்பட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தலை நடத்தும் பொறுப்பு அதிகாரியாக மேல்சபை செயலாளர் யோகேந்திர நரேன் அறிவிக்கப்பட்டுள் ளார். அவரிடம் கடந்த 20-ந் தேதி 3-வது அணி வேட்பாளர் ரஷீத் மசூத் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஆளும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் முகமது ஹமீத் அன்சாரி இன்று 2 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இடதுசாரி கட்சித்தலைவர் கள் சீத்தாராம் எச்சூரி, டி. ராஜா மற்றும் மத்திய மந்திரிகள் சரத்பவார், லல்லு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான், டி.ஆர். பாலு உடன் இருந்தனர். ஹமீத் அன்சாரியின் வேட்பு மனுவில் காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லா இன்று மதியம் 12 மணி அளவில் வேட்பு மனுதாக்கல் செய்தார். வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர்.

வேட்பு மனுதாக்கல் இன்று டன் முடிகிறது. வேட்பு மனுக் கள் மீதான பரிசீலனை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற 26-ந்தேதி கடைசி நாள்.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி ஓட்டுப்பதிவு நடை பெறும். பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போடுவார்கள். அன்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

பாராளுமன்ற இரு அவை களிலும் மொத்தம் 781 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்களில் 401 பேர் காங்கிரஸ் கூட்டணி மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்களாகும்.

நன்றி: மாலைமலர்

டாக்டர் ஹனீஃப் விவகாரம்: இட்டுக்கட்டியதா காவல்துறை?

இதுபற்றி தினமலர் செய்தி பின்வருமாறு:

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய டாக்டர் முகமது அனீப் விவகாரத்தில் மேலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. முகமது அனீப்பின் டைரியில் பயங்கரவாதிகள் சிலர் பற்றிய தகவல்களை ஆஸ்திரேலிய போலீசாரே எழுதியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் உள்ள பயங்கரவாத அமைப்பை சேர்ந்த கபில் அகமதுவுக்கு மொபைல் போன் சிம் கார்டு கொடுத்ததாக முகமது அனீப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையம் மீது ஜீப்பை மோதி பெரிய அளவில் விபத்தை ஏற்படுத்த முயற்சித்தவர் கபில் அகமது. அந்த ஜீப்பில் இருந்து தான் சிம் கார்டு கிடைத்ததாக முதலில் தகவல் வெளியானது. பின்னர், கபில் அகமது வீட்டில் இருந்து சிம் கார்டை கைப்பற்றியதாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்தனர். இது ஆஸ்திரேலிய போலீசாருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இத்துடன் புதிய தகவல் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. பிரிஸ்பேன் விமான நிலையத்தில் கடந்த 2ம் தேதி முகமது அனீப் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவரிடம் குயின்ஸ்லாண்டு புலனாய்வு சார்ஜென்ட் ஆதம் சிம்ஸ் மற்றும் பெடரல் போலீஸ் அதிகாரி நீல் தாம்சன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது முகமது அனீப்பின் டைரியில் பயங்கரவாதிகள் சிலரது பெயர்கள், முகவரி உள்ளிட்ட தகவல்களை போலீசாரே எழுதியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முகமது அனீப்பிடம் நடத்திய விசாரணை தொடர்பாக 142 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை உள்ளூர் பத்திரிகைகளிடம் கிடைத்துள்ளன. அதில் இருந்தே போலீசார் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விஷயம் ஆஸ்திரேலிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அரசுக்கு ஆதரவு அளித்து வரும் தொழிலாளர் கட்சி எம்.பி.,க்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் டவ்னரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். முகமது அனீப் விவகாரத்தில் சர்வதேச அளவில் நகைப்பு செயலை செய்து விட்டதாக போலீசாருக்கு ஆஸ்திரேலிய பசுமை கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்துடன் முகமது அனீப்புக்கு தற்காலிக விசா வழங்க வேண்டும் என ஆஸ்திரேலிய சட்ட கவுன்சில், குடியேற்ற அமைச்சர் கெவின் ஆன்ட்ரூசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


தினமலர்

சிங்கைசிறையில் வாடும் தமிழர்களுக்காக தலையீடு: பாலு கோரிக்கை

சிங்கையில் விசாக்காலம் முடிந்தும் தங்கியதால் சிறையில் வாடும் தமிழர்களுக்காக மத்திய அமைச்சர் டி ஆர் பாலு வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜியிடம் அவர்களை் விடுதலையிட சிங்கை அரசிடம் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளியுறவு அமைச்சின் வெவ்வேறு நிலைகளில் இது பற்றி பேசி ஒரு முடிவு காணவேண்டும் என விரும்பினார். சிறைக்கைதிகளின் உறவினர்கள் பலமுறை முறையிட்டும் சிங்கப்பூரில் உள்ள இந்தியதூதரகத்திடமிருந்து திருப்திகரமான செயல்பாட்டை காணமுடியவில்லை என அவர் அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர குற்றமிழைத்து தண்டனைக் காலத்தைக் கடந்தவர்களும் விடுவிக்கப் படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இது விதயமாக வெளியுறவு அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளதாக அவரது அறிக்கை கூறுகிறது.
The Hindu News Update Service

பிரதீபாவுக்கு கருணாநிதி வாழ்த்துக்கவிதை.

குடியரசுத்தலைவர் தேர்தலில் வென்றுள்ள பிரதீபா பாட்டீலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி எழுதிய வாழ்த்துக்கவிதை:

வெற்றி நமதே என வீராங்கனை சோனியா பற்று மிகக் கொண்டு,
ஜனநாயக நெறியில் வாழ்த்திய
அன்பும் பண்பும் இணைந்து நிறைந்த
அருமைச் சகோதரி பிரதிபா வென்றுவிட்டார்.

நாட்டுத் தலைமையேற்றிட நானே தகுதி என்று;
நரிக் குணத்தினரை வீழ்த்தி இதோ வந்து விட்டார்!

அக்கினிக் கணைகள் என்ன;
அவதூறு அம்புகள்தான் என்ன, என்ன!
வக்கனைப் பேச்சுகள் என்ன;
வஞ்சகச் சதிகள் என்ன; என்ன!

கூசாமல் கூறிய குற்றச் சாற்றுகள்,
கோபுர உயரமெனில் - வாய்
பேசாமல் வீசிய அணுகுண்டு
கார்ட்டூன் ஆயிரம், ஆயிரமாம்!

தேர்வு செய்து வேட்பாளர் பெயர் தெரிவித்தவுடன்
திகு திகுவென வயிறு எரிய ஆடித் தீர்த்தனர்!

என்னென்ன அஸ்திரங்கள்!
என்னென்ன மாயங்கள்! மந்திரங்கள்!
இன்னமும் இந்த நாட்டை விட்டகலா,
மதவாத போதனைகள்!

யாகம் வளர்த்துப் பார்த்தார்!
யோகம் கணித்துப் பார்த்தார்!

பொலிந்து நின்ற பூசுரர்கள்
பொட்டென்று போய்விட்டார் தோற்று!

மூன்று லட்சம் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும்
மூன்றாம் அணி மூக்குடைந்து மூலையில் கிடந்தாலும்

முறைப்பு மட்டும் அங்கே போகவில்லை;
பார்த்தீர்களா?
முறைப்பிருந்த பாத்திரத்தில் உறைப்பு
இருப்பது இயற்கை தானே?

உண்மையைச் சொல்லுகிறேன் - இந்த
உறைப்பு என்பதும் ஒரு நடிப்புத்தானே அவர்களுக்கு!

பல்டிகள், கரணங்கள் பல போட்டாலும்
பகுத்தறிந்து திருந்தாத மூடர்களாய்

பக்கத்திலே பலே சகாக்கள் இருக்கும் வரை
பணத்தைத் தீண்டாத பத்தினி நான் என்று
பச்சைப் பொய் சொன்னாலும் -
இச்சையுடன் அவர் பாதம் பணிவார்.

சூதர்கள், சூழ்ச்சிக்காரர், சூனியக்காரர்
சோடித்த மாய வலையில் வீழாது-
மத வாதம் நாடாது -

மகத்தான வெற்றியினைப் பெற்றார்
மாதரசு பிரதிபா என மகிழ்வோம்!

வெற்றித் திரு மஙகையே! நீவிர்
சுற்றித் திரிந்த இந்தியா; இன்றும்மைப்
பற்றி நிற்பதை அறிந்திடுக!

இங்கு நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும்
வற்றிய வயிறுகள் பல கோடி; அவற்றை
வாழவைக்க வரிந்து கட்டுவோம்;
நாமெல்லாம ஒன்று கூடி!

அ.தி.மு.க. அணியில் பிரதீபாவுக்கு ஓட்டு போட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் யார்?

ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட் பாளர் அமோக வெற்றி பெற்றார். பிரதீபா பட்டீலுக்கு 6,38,116 ஓட்டுகளும் எதிர்த்து நின்ற செகாவத்துக்கு 3,31,306 ஓட்டுகளும் கிடைத்தன.

இந்த தேர்தலில் நாடு முழுவதும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 30 எம்.பி.க்கள், 47 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி பிரதீபா பட்டீலுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு கட்சி மாறி விழுந்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களில் 231 பேர் ஓட்டு போட்டு இருந்தனர். இதில் ஒரு ஓட்டு செல்லாதது ஆகி விட்டது.

அ.தி.மு.க.வில் 60 எம்.எல்.ஏ.க்களும், ம.தி.மு.க.வில் 6 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து அந்த அணியில் மொத்தம் 66 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

இவர்களில்

  • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா,
  • ம.தி.மு.க.வைச் சேர்ந்த மு.கண்ணப்பன்,
  • கம்பம் ராம கிருஷ்ணன்

ஆகியோர் ஓட்டுப் போடவில்லை.

இதனால் அ.தி.மு.க. அணி யில் இருந்து செகாவத்துக்கு 63 வாக்குகள் பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 59 ஓட்டுகளே செகாவத்துக்கு பதிவாகி இருப்பதால் 4 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி பிரதீபா பட்டீலுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டுள்ளனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் அ.திமு.க. எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டுப் போட்டார்களாப அல்லது ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டுப் போட்டார்களாப என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை முதலில் புறக்கணிக்கப் போவ தாக அறிவித்த அ.தி.மு.க. கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்டது. அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர் தலில் பங்கெடுத்து செகாவத்துக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.

கட்சி மாறி ஓட்டுப் போட்ட எம்.எல்.ஏ.க்கள் யார் என்பதை கண்டு பிடித்து விடலாம். இதுகுறித்து தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-

'கட்சி மாறி ஓட்டுப் போட்டது யார்? செல்லாத ஓட்டு போட் டது யார்? என்பதை தேர்தல் கமிஷனால் மட்டுமே கண்டு பிடிக்க முடியும். வாக்கு சீட்டில் சீரியல் நம்பர் இருக்கும். அது மட்டுமல்லாமல் ஓட்டு சீட்டின் பின் பகுதியில் உள்ள ரகசிய நம்பர் கறுப்பு பேப்பரால் மறைத்து வைக்கப் பட்டிருக்கும்.

தேர்தலில் வன்முறை நடந்தாலோ, அல்லது கோர்ட் டில் வழக்கு நடந்து யார் ஓட்டு போட்டது என்ற பிரச்சினை வந்தாலோ தான் அந்த ஓட்டுகளை யார் போட்டது என்று பார்த்து சொல்ல முடியும். மற்றபடி தேர்தல் கமிஷனில் இருந்து எதுவும் சொல்ல மாட்டார்கள். மற்ற படி கட்சி ரீதியாக அவர்கள் விசாரித்தால் கூட உண்மை வெளிவராது.'

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

மாலைமலர்

-o❢o-

b r e a k i n g   n e w s...