.

Showing posts with label காமன்வெல்த். Show all posts
Showing posts with label காமன்வெல்த். Show all posts

Monday, August 6, 2007

காமன்வெல்த் வாலிபால் இந்தியாவுக்கு 2-ம் இடம்

காமன்வெல்த் வாலிபால் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 25-18, 25-16, 24-26, 20-25, 15-11 என்ற கணக்கில் இந்தியாவை வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை 25-10, 23-25, 25-21, 25-21 என்ற கணக்கில் வென்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

ஆஸ்திரேலியா பரிசுத் தொகையாக ரூ. 4 லட்சத்தைப் பெற்றது. இந்தியாவுக்குப் பரிசுத் தொகையாக ரூ. 2 லட்சம் கிடைத்தது. இந்திய அணிக்கு மேற்கு வங்க விளையாட்டு ஆணையம் ரூ. 5 லட்சம் வழங்கியது.

தினமணி

The Hindu News :: Australia overcomes fighting India to clinch volleyball title
India go down fighting in final - Other Sports - Sections - Indiatimes Sports

Friday, August 3, 2007

இந்தியருக்கு காமன்வெல்த் புகைப்பட விருது

2007-ம் ஆண்டுக்கு தெற்காசியாவுக்கான காமன்வெல்த் புகைப்பட விருது இந்தியாவைச் சேர்ந்த சுரேஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இயற்கை மற்றும் வனவிலங்குகளை மிகச்சிறப்பான முறையில் புகைப்படங்களில் கொண்டுவந்ததற்காக சுரேஷ் நாராயணனுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 'இயற்கையின் வெற்றி' என்ற பெயரில் பல்வேறு இடங்களில் இவரது புகைப்படக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன.

மெச்சத் தகுந்த புகைப்படங்கள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த தபஸ் முகோபாத்யாயா, ஸ்ரீநிவாச ரெட்டி, பிராணபந்து சமாஜ்பதி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதே பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த அரிந்தாம் தத்தா, தீரஜ் பால், சுகந்த சின்கா, டி.என்.பராஸ்கர் ஆகியோர் இரண்டாமிடத்தை பெற்றனர்.

தினமணி

The Hindu News :: Suresh Narayanan wins Commonwealth Photographic Award for S. Asia

காமன்வெல்த் வாலிபால்: ஆஸி.க்கு இந்தியா அதிர்ச்சி

கோல்கத்தாவில் வியாழக்கிழமை நடந்த 2-வது காமன்வெல்த் சீனியர் வாலிபால் போட்டியில் இந்திய அணியினர் 19-25, 25-21, 25-23, 27-25 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர்களின் சவாலை அடக்கி, 'ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.

அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்தியா விளையாட உள்ளது.

அதே சமயம் "பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ள பாகிஸ்தானுடன் ஆஸ்திரேலியா மற்றொரு அரையிறுதியில் விளையாடுகிறது.

தினமணி

Zee News - India, Australia reach Commonwealth Volleyball semis
The Hindu : Sport : India finally in semifinals

Saturday, June 30, 2007

பிரித்தானிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்மணி

பிரதமர் ப்ரௌனின் முதல் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீதி வடேரா வெளியுறவு வளர்ச்சிக்கான உதவி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். UBS வார்புர்க் வங்கியில் 14 வருடங்கள் பணியாற்றியுள்ள வடேராயின் பணிகளில் எவ்வாறு வளரும் நாடுகளின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பது என்று அந்த அரசுகளுக்கு அறிவுரை வழங்குவதும் அடங்கும். பிரித்தானிய அரசில் பங்கேற்கும் மூன்றாவது இந்திய பண்பாட்டைச் சேர்ந்தவராவார்.
மேலும்..The Hindu News Update Service

Sunday, June 17, 2007

'சர்' ஆனார் சல்மான் ருஷ்டி

பிரபல இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு சனிக்கிழமை நைட்ஹுட் பட்டம் வழங்கி கௌரவித்தார் பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத். பல்வேறு துறைகளில் அரும்பங்கு ஆற்றியதற்காக பிரிட்டனில் குடியேறியுள்ள மேலும் 19 இந்தியர்களுக்கும் அவர் விருது வழங்கி கௌரவித்தார்.

ராணியின் பிறந்த நாளையொட்டி பல துறைகளில் சிறந்து விளங்குவோரை கௌரவிக்க பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் இந்த 20 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

ருஷ்டியின் 60வது பிறந்தாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது. புக்கர் பரிசையும் வென்றுள்ள ருஷ்டி தற்போது அமெரிக்காவில் தான் அதிகம் வசிக்கிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த

  1. ஷமி சக்கரவர்த்தி, இயக்குநர், லிபர்ட்டி மனித உரிமைகள் அமைப்பு,
  2. சஞ்சய் ஆனந்த் (ஹோட்டல் தொழிலதிபர்),
  3. மயூர் கேசவ்ஜி லகானி (டாக்டர்),
  4. ரஷ்மி சுக்லா (பொதுச் சுகாதாரத்துறை பிராந்திய இயக்குநர்).
  5. ராஜ்குமார் அகர்வால் (மருந்து உற்பத்தி துறை),
  6. ரமேஷ் கோவிந்த்லால் காந்தி,
  7. அசோக் கோஸ்,
  8. ஜஸ்மிந்தர் கிரேவல்,
  9. டேனியல் யாமின் பிரகாஷ் கான்,
  10. பேராசிரியர் சீனிவாசன் ரகுநாதன் (விண்வெளி ஆய்வு பொறியியல் ஆராய்ச்சி),
  11. சந்தோஷ் தாஸ்,
  12. மிருதுளா தேசாய்,
  13. விநோத் தேசாய்,
  14. ரவீந்திர பிராக்ஜி கோவிந்திதா,
  15. சுதர்ஷன் குமாரி மொகிந்திரா,
  16. சத்தியநாராயண் சர்க்கார்,
  17. தேவி தயாள் சர்மா,
  18. ஜஸ்வந்த் சீரா
உள்ளிட்டோரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கௌரவ பட்டம்

Tuesday, June 5, 2007

காமன்வெல்த் பொதுச்செயலாளர்: இந்திய வேட்பாளர் யார்?

வரும் நவம்பர் மாதம் கம்பாலாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் பொதுச்செயலாளர் தேர்தலில் இந்தியாவின் சார்பாக முன்னாள் வெளியுறவுத்துறை உயரதிகாரி திரு.கமலேஷ்சர்மா நிறுத்தப்படவுள்ளார். இப்போது அவர் ஐக்கிய இராச்சியத்திற்கான இந்திய உயர்ஆணையராக (High Commissioner) பொறுப்பு வகிக்கிறார்.

பழுத்த இராஜதந்திரியான திரு.ஷர்மா, அய்.நா-வில் இந்தியாவின் நிரந்தரப்பிரதிநிதி உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளவர்.

வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா இச்செய்தியை வெளியிட்டார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...