.

Showing posts with label பொழுதுபோக்கு. Show all posts
Showing posts with label பொழுதுபோக்கு. Show all posts

Monday, August 27, 2007

ராஸ் அல் கைமாவில் இந்தியா இன்டர்நேஷனல் கிளப் தொடக்கம்


ராஸ் அல் கைமாவில் இந்தியா இன்டர்நேஷனல் கிளப் தொடக்கம்


துபாய்: ராஸ் அல் கைமாவில் இந்தியா இன்டர்நேஷனல் கிளப் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது.

இதில் துபாய்க்கான இந்தியத் துணைத் தூதர் வேணு ராஜாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ரக்கீன் தலைமை செயல் அதிகாரி டாக்டர் இம்மாத் ஹப்பர், ஜெனரல் அல் நூபி முகம்மது உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூத்த இந்தியரான மங்கம்மாள் பஞ்சோலியா கெளரவிக்கப்பட்டார்.

பின்னர் பாலிவுட் கலைஞர்கள் கலந்து கொண்ட ஏக் ஷாம் இந்தியா கே நாம் என்ற பெயரிலான கண்கவர் கலை நிகழ்ச்சியும் நடந்தது.

விஜய் தாவ்தா, திலீப் மேத்தா ஆகிேயார் நிகிழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினர். இந்தியா இன்டர்நேஷனல் கிளப்பின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை நாராயணன் பாபிலானி விளக்கிப் பேசினார். கீதா பாபிலானி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

www.thatstamil.com

Saturday, July 14, 2007

சரத்குமார்: அடுத்தகட்டமாக புதுக்கட்சி

"மக்களுக்காக தொடர்ந்து உழைத்திட அடுத்த மாதம் புதுக்கட்சி தொடங்குவேன்,'' என்று நடிகர் சரத்குமார் சென்னையில் அறிவித்துள்ளார்.
"அக்டோபர் மாதம் தொடக்க விழா நடக்கும். புதுக்கட்சிக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. கட்சி பெயரும் முடிவு செய்து விட்டோம். சமத்துவம், சமதர்மம் கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்கும்." என்று சரத்குமார் கூறியுள்ளார்.

தினமலரிலிருந்து..

Monday, May 21, 2007

ச:கலைஞர் டி.வி உதயமாகிறது?

முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய டிவி சேனலை, ராஜ் டிவி மூலமாக தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. இதன் ஒளிபரப்பு ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து ராஜ் டிவி தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், திமுகவும், ராஜ் டிவியும் இணைந்து வெகு விரைவில் ஒரு புதிய சேனலை ஆரம்பிக்கவுள்ளன. கலைஞர் டிவி என பெயரிடப்பட்டுள்ள இந்த டிவி ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கும். கலைஞரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலக மக்களை கவரும் முன்னணி சேனலாக இருக்கும் என்றார்.

தாட்ஸ்தமிழ்

Wednesday, May 16, 2007

ச:திரை அரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி: புதிய படங்களுக்கு சிக்கல்

இனிமேல் புதிய படங்களை சதவீத அடிப்படையில் தான் திரையிடுவோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி துõக்கியுள்ளது. இதனால் ரஜினியின் சிவாஜி, அஜீத்தின் கிரீடம், கமலின் தசாவதாரம் உள்ளிட்ட புதிய படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமலர்

Wednesday, May 9, 2007

ச:ஹாரி பாட்டர் புத்தகம் முன்பதிவில் சாதனை

அடுத்து, ஏழாவதாக வெளிவரப்போகும் ஹாரி பாட்டர் புத்தகத்திற்கு அமேசான்.காம் இதுவரை 1 மில்லியன் முன் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் 6,20,000 முன் பதிவுகளும் இங்கிலாந்தில் 2,50,000 முன்பட்திவுகளும் செய்யப்பட்டுள்ளன. இதேபோல பார்ன்ஸ் & நோபிள் புத்தகக் கடையிலும் வேறெந்த புத்தகத்துக்கும் இல்லாதவாறு முதன் முறையாக 5,00,000 முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

'Harry Potter and the deathly hallows' புத்தகம் ஜூலை 21ல் வெளியிடப்படவுள்ளது.

Over one million Harry Potter advance orders on Amazon

Monday, April 23, 2007

விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி .

சென்னை மெரீனா கடற்கரையில் விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை 5லிருந்து 6 மணி வரை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் விமானபடையின் வீரர்கள் பல்வேறு சாகச நிகழ்சிகளை நிகழ்த்தினர் இதையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர் இதையொட்டி வாகனப் போக்குவரத்தும் மாற்றியமைக்கப்பட்டதின் எதிரொளியாக சாகசநிகழ்சிக்குப்பின் பொதுமக்கள் வீடு திரும்பபெரும்பாடு பட்டனர்.

Tuesday, March 27, 2007

சற்றுமுன்:ஐ.சி.சி Vs. யூ-ட்யூப்

கிரிக்கெட் குறும்படங்களை யூ-ட்யூபிலிருந்து எடுத்துவிடும்படி ஐ.சி.சி கூகுள் நிறுவனத்தை கேட்டுள்ளது. யூ-ட்யூபில் கிரிக்கெட் வீடியோ காட்சிகளை காண்பிப்பது ஒளிபரப்பு உரிமை மீறல் என ஐ.சி.சி கூறியுள்ளது.

இதை அடுத்து உலகக் கோப்பை குறும்படங்களை யூ-ட்யூப் அகர்ர ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.


YouTube removes WC cricket videos CIOL
ICC targets YouTube World Cup clips
ICC tells YouTube to remove World Cup video Expressindia.com

Friday, March 9, 2007

"ஊட்டி"அழகோ அழகு - தாய்லாந்து இளவரசி


HRH Princess Maha Chakri Sirindhorn

தாய்லாந்து இளவரசி மகாசக்ரி சிரிண்டரன் நேற்று ஊட்டி வந்தார்.

ஊட்டியில் பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்த தாய் லாந்து இளவரசி தோடர் பழங்குடி மக்களுடன் சேர் ந்து நடனமாடி மகிழ்ந்தார்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ருத்ராட்சை மரக்கன்றை நட்டு வைத்தார்.

தாய்லாந்து இளவரசி நிருபர்களிடம் கூறியதாவது:
ஊட்டி மிக அழகாக உள்ளது. இயற்கைத்தாய் அளித்த கொடையாக ஊட்டி உள்ளது. இந்திய மக்கள் மிகவும் நல்லவர்கள். நட்புடன் பழகுகின்றனர். இந்தியா- தாய்லாந்து இருதரப்பு உறவுகள் சிறப்பாக உள்ளது.

Thursday, March 8, 2007

நவோமி - மேடையில் இருந்து தரைக்கு

நாகரிக ஆடைகளை முன்னிறுத்தும் 'ஃபேஷன் ஷோ'க்களின் மேடைகளில் தவறாமல் இடம் பிடிக்கும் நவோமி காம்பெல் (Naomi Campbell) நியு யார்க் நகர கிடங்குகளை சுத்தம் செய்யுமாறு தீர்ப்பாகி இருக்கிறது.

தனது அறையை சுத்தம் செய்யும் சிப்பந்தியின் மேல் செல்பேசியை வீசி அடித்த வழக்கின் விசாரணை முடிவில், ஐந்து நாள் சமூக சேவைப்பணியை நீதிபதி தீர்ப்பாக சொன்னார். கோபத்தை அடக்கி ஆளும் பய்ற்சிக்கும் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

நான்காம் முறையாக நவோமி பணிப்பெண்களைத் தாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து வழக்குத் தொடரப்பட்டது.

BBC NEWS | Americas | Supermodel Naomi 'to mop floors'

Sunday, March 4, 2007

அருண் நயார் எலிசபெத் ஹர்லி திருமணம்


பிரிட்டிஷ் மாடலும் நடிகையுமான எலிசபெத் ஹர்லியும் இந்திய தொழிலதிபரான அருண் நயாரும் இங்கிலாந்தின் க்லௌசெஸ்டஷைரில் உள்ள சுடெலி கோட்டையில் திருமண உறுதி எடுத்துக் கொண்டனர். இவர்களது இந்தியவகைத் திருமணம் ஜோத்பூரின் உமைத் பவனில் கோலாகலமாகக் கொண்டாடப் பட உள்ளது.


D A I J I W O R L D

Tuesday, February 27, 2007

கோவையில் Maharaja World Theme Park

கோவை நீலம்பூரில் மஹாராஜா வேர்ல்டு தீம் பார்க் நேற்று திறந்துவைக்கப்பட்டது.




நடிகர் சூர்யா திறந்து வைத்தார். அருகில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, தீம் பார்க் சேர்மன் பரமசிவம், நிர்வாக இயக்குநர் சத்தியமூர்த்தி, பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவாராயர் உட்பட பலர் உள்ளனர்.

The Hindu , The Hindu - Business Line ,

-o❢o-

b r e a k i n g   n e w s...