சென்னை:" இந்தியாவில் தமிழ்நாடு இருக்க வேண்டும் என்றால் சட்டம்ஒழுங்கை காக்க தவறிய தி.மு.க., அரசை கலைத்து விட்டு உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும்' என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: திண்டிவனம் அருகே செண்டூர் கிராமத்தில் நடந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டதற்கு அத்தாட்சி. இதன் பிறகும் டி.ஜி.பி.,யை விட்டு பேட்டி கொடுக்கச் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. பொதுவாக போலீஸ் துறைக்கு பொறுப்பேற்று இருக்கும் முதல்வரே இது குறித்து பதில் அளிக்க வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் நான் தான் பதில் சொல்வேன். பல பிரச்னைகளுக்கு தலைமை செயலரை விட்டு அறிக்கை கொடுக்க வைக்கிறார். பதில் சொல்ல முடியாத அளவிற்கு தலைகுனிவு சம்பவங்கள் நடக்கின்றன.திண்டிவனம் அருகே குண்டு வெடித்த சம்பவத்தை "பயங்கரவாத சம்பவம் இல்லை. ஏதோ கல் உடைப்பதற்கு வெடி பொருட்கள் எடுத்துச் சென்றதாக' டி.ஜி.பி., சொல்கிறார். இவர் சொல்வதை யாரும் நம்பத் தயாராக இல்லை. வெடித்தவை சாதாரண கல் உடைக்கிற வெடி பொருட்களாக இருக்க முடியாது.
இது ஆர்.டி.எக்ஸ்., தான். போலீஸ் துறை சீரழிந்து போய்விட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலை ரோந்து பணி என்ற திட்டத்தை ஏற்படுத்தியிருந்தேன். ரோந்து பணிகளை மேற்கொள்வதற்காக 160 வாகனங்களை வழங்கியிருந்தேன். அந்த வாகனங்கள் எங்கே போனது? ரோந்து பணி ஒழுங்காக நடந்திருந்தால் அப்பாவி மக்களின் உயிர் பலியானதை தவிர்த்திருக்கலாம்.
கருணாநிதி பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கிறார். புகலிடம் மட்டுமல்ல சுதந்திரமாக அவர்களது நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குகிறார். இந்தியாவில் தமிழ்நாடு இருக்க வேண்டும் என்றால் சட்டம்ஒழுங்கை காக்கவும், நிலைநாட்டவும் தவறிய தி.மு.க., மைனாரிட்டி அரசை உடனடியாக கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
செய்தி : தினமலர் (03.தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி ஜெயலலிதா கோரிக்கை)
தலைப்பு : கோவி.கண்ணன்
Sunday, April 8, 2007
ஜெயலலிதாவின் புத்தாண்டு விருப்பம் !
Posted by கோவி.கண்ணன் [GK] at 8:13 PM 7 comments
பங்களாதேசம் 67 ஓட்டங்களில் தென்னாப்பிரிக்காவை வென்றது
சூப்பர் எட்டு ஆட்டங்களில் பெரும் அதிர்ச்சியாக பங்களாதேசம் தென்னாப்பிரிக்காவை 67 ஓட்டங்களில் வென்று சாதனை படைத்தது. 83 ஓட்டங்கள் எடுத்த மொஹம்மெத் அஷ்ராஃபுலின் மகத்தான ஆட்டம் இந்த வெற்றிக்கு வழிகோலியது. இதனால் நான்காம் அரையிறுதிப் போட்டி இடத்திற்கு முன்னேற இங்கிலாந்து, மேற்கிந்திய தீவு அணிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்றைய ஆசி- இங்கிலாந்து ஆட்டம் முக்கியம் பெறுகிறது.
Bangladesh stun South Africa by 67 runs
Posted by மணியன் at 5:48 PM 0 comments
மலேசியா கார்பந்தயத்தில் மெக்லாரென் முதன்மை
இன்றைய மலேசிய F1 பந்தயத்தில் பெர்ராரியின் இத்தாலிய மாசாவும் கிமி ரைகொனெனும் என்ன முயன்றும் மெக்லாரெனின் ஆதிக்கத்தை தகர்க்க முடியவில்லை. இருமுறை உலகசாம்பியன் பட்டத்தை வென்ற அலொன்சோவும் பிரிட்டனின் புதிய நட்சத்திரமான லெவிஸ் ஹாமில்டனும் தங்கள் மெக்லொரெனில் கடுமையான கோடை வெப்பத்தையும் மீறி முதலிரண்டு இடங்களை வென்றனர்.
FOX Sports - F1 - McLaren duo take glory in Sepang
: : : CARtoday.com/Motorsport : : :
Posted by மணியன் at 5:38 PM 0 comments
திண்டிவனம் விபத்து:பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1 லட்சம் நிதி.
திண்டிவனம் ஜீப் வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இன்று தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்பட்டது. திண்டிவனம் அருகேயுள்ள செண்டூரில் வெடிப்பொருட்கள் ஏற்றி வந்த ஜீப் நேற்று வெடித்து சிதறியது. இதில் 16 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.அதன்படி இன்று காலை அமைச்சர் பொன்முடி செண்டூர் கிராமத்துக்க்கு வந்தார். வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்.
Posted by Adirai Media at 12:49 PM 0 comments
பள்ளிக்கூட கதவுகளில் கோந்து தடவி குறும்பு!
கார்ஸ்லீட்: பள்ளிக்கூட கதவுகளில் கோந்தை ஊற்றி மாணவர்கள் விஷமம் செய்துள்ளனர். இதனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கார்ல்ஸ்பாட் உயர்நிலைப் பள்ளியில் பாடமே நடக்கவில்லை.
காலையில் பள்ளிக்கூடத்துக்கு முதலில் சென்ற ஆசிரியர், எந்தக் கதவையும் திறக்க முடியாதபடிக்கு, பூட்டுகளில் ""ஏதோ'' தடவப்பட்டிருப்பதைப் பார்த்து வியப்படைந்தார். பிறகு பள்ளிக்கூட முதல்வருக்குத் தெரியப்படுத்தினார். பள்ளிக்கூடத்துக்கு பொறுப்பான அலுவலர்கள் திரண்டுவந்து, கோந்து ஊற்றப்பட்ட பூட்டுகளைத் திறக்க முற்பட்டனர். மொத்தம் உள்ள 100 கதவுகளில் 27 கதவுகளை மட்டுமே மதியம்வரை திறக்க முடிந்தது.
பள்ளிக்கூடத்தின் 3 ஆயிரம் மாணவர்களில் பெரும்பாலானவர்களால் வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை. எனவே உடல்பயிற்சி அறைக்கும் பிற இடங்களுக்கும் சென்று பொழுதைக் கழிக்குமாறு மாணவர்கள் பணிக்கப்பட்டனர்.
School Children Glue School Doors Shut: "Students at a San Diego high school decided to glue the doors to the entire school shut for and end of spring break prank. They plugged all the locks on 100 doors with super strength glue."
Posted by Boston Bala at 11:23 AM 0 comments
விளையாட்டுதிடல் சேதம்: அதிமுக கவுன்சிலர் உள்பட ஐவர் கைது
புதுக்கோட்டை, ஏப். 8: புதுக்கோட்டையில் விளையாட்டுத் திடல் தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டது தொடர்பாக அதிமுக கவுன்சிலர் உள்பட ஐவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை உசிலங்குளம் பகுதியில் விளையாட்டுத் திடல் ஒன்று உள்ளது. இதைச் சுற்றி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தடுப்புச் சுவர் 25 மீ. நீளத்துக்கு இடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் மெகபூபா கணேஷ்நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 31வது வட்ட அதிமுக கவுன்சிலர் குமார், அதிமுக வட்டச் செயலர் செல்வராஜ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மாஸ்கோ, திருப்பதி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Posted by Boston Bala at 11:07 AM 2 comments
ஜார்க்கண்டில் 300 நக்சல்கள் திடீர் தாக்குதல்: 2 ஜவான்கள் உள்பட 6 பேர் சாவு; பாலம் தகர்ப்பு
ராஞ்சி, ஏப். 8: ஜார்க்கண்ட் மாநிலம், பொக்காரோ மாவட்டத்தில் சுமார் 300 நக்சல் தீவிரவாதிகள் போலீஸ் நிலையம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 ஜவான்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்; 6 பேர் காயமடைந்தனர்.
பொக்காரோ மாவட்டத்தில் உள்ள காஸ்மஹால் நிலக்கரி சுரங்கப் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு பெண்கள் உள்ளிட்ட 300 நக்சல் தீவிரவாதிகள் திடீரென நுழைந்து தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 2 ஜவான்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
பின்னர் குர்பானியா பஜாரில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் 4 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்.
பின்னர் போலீசார் உள்ளே வராமல் தடுக்க பில்பிலோ-குர்பானியா பாலத்தை கண்ணிவெடி வைத்து தகர்த்தனர். அதன் பின்னர் காந்தி நகர் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். போலீசாரும் திருப்பித் தாக்கினர். சனிக்கிழமை அதிகாலை வரை இந்த சண்டை நீடித்தது. இதில் 4 போலீசார் காயமடைந்தனர். தீவிரவாதிகள் தரப்பில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களைத் தூக்கிக்கொண்டு தீவிரவாதிகள் தப்பினர்.
தீவிரவாதிகள் ஜவான்களிடமிருந்து 4 தானியங்கி துப்பாக்கிகளை பறித்துச் சென்றனர்.
தினமணி
Posted by Boston Bala at 10:48 AM 0 comments
b r e a k i n g n e w s...