.

Wednesday, June 20, 2007

வெற்றி உறுதியென்றால் போட்டியிடத் தயார் - கலாம்

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வெற்றி (ஆதரவு) உறுதியாயிருக்கும் எனத் தெரிந்தால் தான் மீண்டும் போட்டியிடத் தயார் என அப்துல் கலாம் கூறியுள்ளார்.

Kalam willing if victory is certain, Sonia firm on Pratibha-The Hindu

மதுரை மேற்கு இடைத்தேர்தல் தள்ளிவைப்பு்வைப்பு

மதுரை மேற்கு இடைத்தேர்தல் அங்கு நடந்த வன்முறை காரணமாக தள்ளிவைக்கப்படுகின்றது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் விபரங்கள் விரைவில்...

மதுரை மேற்குத் தொகுதியில் வெற்றி யாருக்கு? (குமுதம் கருத்துக்கணிப்பு முடிவுகள்)

இந்தத் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் பெருமாளை சுமார் மூவாயிரத்து ஐந்நூறு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார், அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகம். அவர் இறந்ததையடுத்து இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது.

மதுரையை இரண்டாகப் பிரித்துச் செல்லும் வைகை ஆற்றின் வடபுறமும் தென்புறமும் வியாபித்துள்ள தொகுதி இது. மதுரையின் அடித்தட்டு மக்கள் முதல் உட்சபட்ச பணக்காரர்கள் வரை இந்தத் தொகுதியில் வசிக்கிறார்கள். மதுரை மாநகராட்சியின் இருபது வார்டுகள் கொண்ட இந்தத் தொகுதியின்
வாக்காளர் எண்ணிக்கை 156,180.
இதில் ஆண் வாக்காளர்கள் 77,531
பெண் வாக்காளர்கள் 78,649

"பெரியாறு அணையில் தண்ணி இல்லே. அடுத்த மாசம் மதுரையில் குடிக்கவே தண்ணீர் இருக்காது. தமிழகத்துக்குத் தண்ணீர் தரக்கூடாது என்பதில் கேரளத்திலுள்ள எல்லாக் கட்சிக்காரங்களும் ஒண்ணா இருக்காங்க. இங்கே அரசியல்வாதிகள் அதைப்பற்றியே கவலைப்படாமல் தெருச்சண்டை போட்டுக் கொண்டு இருக்காங்க. காவிரி பற்றி வாயே திறக்காத ரஜினியின் 'சிவாஜி' படத்தைப் பார்க்க மதுரையில் பாதி ஜனம் தியேட்டர் முன்னாடி நிக்குது. நீங்க பெட்டியைத் தூக்கிட்டு 'எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடப் போறீங்க?'ன்னு கேட்டு வந்துட்டீங்களாக்கும்..." என சட்டையைப் பிடித்திழுக்காத குறையாக கோபப்பட்டவர்களும் உண்டு.

வாக்காளர்களிடம் பெற்ற 1990 ஓட்டுகளில் 'தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்' என காரசாரமாக எழுதிப்போட்டிருந்த நான்கு சீட்டுகளை நீக்கிவிட்டு, மீதமிருந்த 1986 ஓட்டுகளையும் பரிசீலித்தோம்.


கருத்துக் கணிப்பின் போது கணிசமான வாக்காளர்கள் விடாப்பிடியாக 'ஓட்டுப்போட ஓர் ஐந்து ரூபாயாவது தாங்க...' என நம்மிடம் கேட்டது வேதனையான விஷயம். அதனால் இந்தத் தேர்தல் முடிவை நிர்ணயிப்பதில் பணத்துக்குப் பெரும் பங்கு இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அதனால் தொகுதிக்குள் வாக்காளர்களுக்கு முன்னணி அரசியல்கட்சிகள் ரகசியமாக பணப்பட்டுவாடா செய்து கொண்டுதான் இருக்கின்றன.

- ப. திருமலை / குமுதம் ரிப்போர்ட்டர்

கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் காட்சி-`சிவாஜி' படத்துக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு

"சிவாஜி''யில் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது போல் இடம் பெற்றுள்ள காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கறுப்பு பணத்தை முஸ்லிம்களிடம் கொடுத்து வெளிநாட்டில் அமெரிக்க டாலர்களாக மாற்றுகின்றனர். பிறகு அது வெள்ளைப் பணமாக தமிழ் நாட்டில் இருக்கும் சிவாஜி பவுண்டேஷனுக்கு அனுப்புகின்றனர். இந்த காட்சியில் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தரும் புரோக்கர்களாக இஸ்லாமியர் களை காட்டியுள்ளனர்.

இந்த காட்சியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் எதிர்த்துள்ளது. அதன் மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரபீக் கூறி இருப்பதாவது:- ரஜினி படங்களை லட்சக் கணக்கானோர் பார்க்கின்றனர். அவர் படத்தில் முஸ்லிம் கள் பற்றி அவதூறான காட்சி இடம் பெற்றதை தவிர்த்திருக்கலாம்.

தமிழ் சினிமாவில் தீவிர வாதி என்ற பாத்திரத்துக்கு முஸ்லிம் போல் உடை அணிந்த வரை காட்டும் பழக்கம் இருந்து வருகிறது. ஒன்றிரண்டு இடங்களில் முஸ்லிம் தவறு செய்து இருக்கலாம். அதற்காக எல்லோரையும் அது போல் சித்தரிப்பதை ஏற்க முடியாது.

கறுப்பு பணத்தை மாற்றுபவ ராக "சிவாஜி''யில் முஸ் லிம்களை காட்டியுள்ளனர். படத்தை பார்ப்பவர்கள்அந்த சமுதாயத்தை பற்றி தவறாக நினைக்கத் தோன்றும்குறிப்பிட்ட காட்சிகள் இடம் பெறுவதற்கு டைரக்டர் ஷங்கர்தான் முதல் காரணம். ஆரம்பத்திலிருந்தே அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்களைத்தான் சொல்லி வருகிறார். சிவாஜிக்கு எங்கள் எதிர்ப்பை காட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்

ச:தமிழ்நாட்டில் பதின்ம வயது சிறுவன் நிகழ்த்திய அறுவை சிகிட்சை சர்ச்சையில்

கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்று பத்தாம் வகுப்பு மகனை குழந்தைப்பேறு அறுவை நடத்த உதவிய மருத்துவ பெற்றோர்கள் இன்று சர்ச்சையில் மாட்டிக் கொண்டுள்ளனர். மூன்றுமாதங்களுக்கு முன் திலீபன் ராஜ் என்ற பதினைந்து வயது சிறுவன் தன் மருத்துவ தாய்,தந்தையர், மரு. முருகேசன் மற்றும் மரு.காந்திமதி முன்னணியில் மணப்பாறை மதி அறுவை மற்றும் குழந்தைபேறு மருத்துவமனையில் குழந்தைப்பேறு அறுவை சிகிச்சையொன்றை நிகழ்த்த தந்தை அதனை நிகழ்படமாக குறுந்தட்டில் பதிவு செய்தார். இன்று சாதனையாளர் என்று பாராட்டு கிடைக்கும் என்று ்இந்திய இந்திய மருத்துவக் கழகத்தின் சந்திப்பு ஒன்றில் வெளியிட மற்ற மருத்துவர்கள் வியப்பும் வேதனையும் அடைந்தனர். இதற்கு இந்திய மருத்துவக் கழகமும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

NDTV.com: Teenage surgeon triggers outrage in TN

இந்திய லெஸ்பியன் ஜோடி- பிரஸ் மீட் போட்டோ


பஞ்சாபைச் சேர்ந்த இவர்கள் கடந்த வாரம் கல்யாணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியர். சுடிதார் போட்டிருக்கும் ராஜ்வீந்தர் கவுர் (20), அவரது தோளில் கைபோட்டவாறு பேன்ட், சட்டையில் இருக்கும் பல்ஜித் கவுர் (21) இருவருமே பெண்கள். தங்கள் கல்யாணத்தை ஊருக்கு தெரிவிக்க அமிர்தசரஸில் நேற்று பிரஸ் மீட் வைத்தது இந்த லெஸ்பியன் ஜோடி. அப்போது கணவி-மனைவியாய் போஸ் கொடுக்கின்றனர்

- நன்றி: மாலைச் சுடர்

கலாமிற்கு ஆதரவு இல்லை : சிவ சேனா !

குடியரசுத் தலைவர் தேர்தலில் 3-ம் அணியும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை மீண்டும் போட்டியிடுவதற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில், அக்கூட்டணியில் உள்ள சிவ சேனா கலாமிற்கு ஆதரவளிக்க மறுத்துள்ளது!சிவ சேனா கட்சியின் 41-ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவனரான பால் தாக்கரே, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை 2வது முறையாக குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதை சிவ சேனா விரும்பவில்லை என்று கூறினார். நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மொஹம்மது அஃப்சல் குருவின் கருணை மனு மீது எவ்வித பதிலும் தராமல் கடந்த அக்டோபர் முதல் கிடப்பில் வைத்துள்ள அப்துல் கலாம், மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்வதற்கு ஆதரவளிக்க முடியாது என்று பால் தாக்கரே கூறியுள்ளார். மொஹம்மது அப்சல் குருவின் கருணை மனு, உள்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் பட்டீலிடம் உள்ளது என்றால், அவ்வளவு காலத்திற்கு அங்கு இருக்க வேண்டிய காரணம் என்ன என்றும் பால் தாக்கரே வினவினார்.இப்படிப்பட்ட தாமதங்கள் இருக்குமானால், குடியரசுத் தலைவர் என்கின்ற பதவி எதற்கு என்று கேள்வி எழுப்பினார் பால் தாக்கரே. (யு.என்.ஐ.)

ச: புவியை நோக்கி விரைகிறது விண்வெளிக் கலம் அட்லாண்டிஸ்

நேற்று பன்னாட்டு விண் நிலையத்திலிருந்து விடுவித்துக் கொண்டு புவியை நோக்கி விரையும் வேளையில் அட்லாண்டிஸ் விண்கலத்தின் தனது இயந்திரக் கைகளில் சேர்த்திருக்கும் காமெரா ஒன்று மூலம் அதன் வெப்பக் காப்பு பாதிப்பை ஆராய்ந்து படங்களை நிலக் கட்டுப்பாட்டிற்கு அனுப்பி வருகிறது. புவியை ஊடுருவும்போது ஏற்படும் வெப்பத்தை தாங்கக் கூடுமா என விஞ்ஞானிகள் முடிவெடுத்தப் பிறகே அவர்களது புவியிறக்கம் அனுமதிக்கப் படும்.
மேலும்.... Space shuttle continues journey to Earth | Chron.com - Houston Chronicle

பட்டுக்கோட்டையில் சிக்குன் குனியா நோய் விழிப்புணர்வு பேரணி.

பட்டுக்கோட்டை நகரில் சிக்குன் குனியா நோய் பரவாமல் தடுக்க பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், தொண்டு நிறுவனங்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி நகராட்சி காந்தி பூங்காவில் இருந்து புறப்பட்டது.நகரசபை தலைவர் பிரியா இளங்கோ தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ. ரெங்கராஜன் பேரணியை தொடங்கி வைத்தார். நகரசபை ஆணையர் ராமசாமி, துணை தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சக்திவேல், மாவட்ட என்.எஸ்.எஸ். அலுவலர் ராம் மனோகர், திட்ட அலுவலர் மாரிமுத்து, பழனிவேல், கண்டியன்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தா, நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி முக்கிய வீதிகள் வழியாக சிக்குன் குனியா நோய் பற்றியும் அதை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது பற்றியும் துண்டு பிரசுரங்களை வினியோகித்து பிரசாரம் செய்வது முடிவில் நகராட்சி அலுவலகம் வந்தடைந்தது.இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் செய்து இருந்தனர்.

ச:வெற்றி நிச்சயம் என்றால் கலாம் இரண்டாம் முறை போட்டியிட சம்மதம்: நாயுடு

இன்று மதியம் குடியரசுத் தலைவர் மேதகு கலாம் அவர்களை சந்தித்த தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு 'வெற்றி நிச்சயம்' என்றால் இரண்டாம் முறை பதவிவகிக்க அவர் சம்மதம் தெரிவித்ததாகக் கூறினார்.

மேலும்..Kalam set for Round 2 if there's certainty: Naidu-India-The Times of India

Hackerகளை நியமிக்க விரும்புகிறோம்- இலங்கை அரசாங்கம்

இலங்கையில் தமிழ்.நெட் தளம் தடுக்கப்பட்டிருப்பது தெரிந்ததே. இப்போது தளத்தை இணைய ஹேக்கர்களை வைத்து முற்றிலும் செயல்படாமல் செய்ய விரும்புகிறோம்' என்று இலங்கை அரசாங்கம் சொல்லி இருக்கிறது.

புலிகளுக்கு ஆதரவான தளமாக அறியப்படும் தமிழ்நெட் தளத்தை சில நாட்களாக அரசாங்கத்தின் அறிவுரைப்படி தடுத்து வைத்திருப்பதாக இலங்கையின் முக்கிய இணையச் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில் பாதுகாப்புத் துறை மந்திரியின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் Keheliya Rambukwella 'முடியுமானால், hackerகளைக் கொண்டு தமிழ்நெட் தளத்தை மொத்தமாக செயல்படாமல் செய்வேன்' என்று சொன்னார்.

'இலங்கை அரசாங்கத்தின் இந்தச் செய்கை ஊடக சுதந்திரத்தை மொத்தமாக அழிக்கும் முயற்சி' என்று Free Media Movement (FMM) என்னும் தன்னார்வ அமைப்பு விமர்சித்துள்ளது.

50% அரசுடைமை நிறுவனமான ஸ்ரீலங்கா டெலிகாம் மட்டும் தான் இந்த தளத்தை நிறுத்தியுள்ளது. வெளிநாட்டிலிருந்து இயங்கும் வேறு பல இணைய வழங்கிச் சேவைகள் மூலம் தமிழ்.நெட் தளத்தை இலங்கையிலும் பார்க்க முடியும்.

Sri Lanka seeks hackers to down pro-Tiger website - DNA India

ச: தனது தில்லி பயணத்தை ஜெயலலிதா இரத்து செய்தார்

ஜூன் 18 அன்றைய மூன்றாம் கூட்டணியின் தீர்மானத்தின்படி இன்று தில்லி சென்று மேதகு கலாம் அவர்களை சந்தித்து குடியரசுத் தேர்தலில் போட்டியிடுமாறு கோருவதற்காக காலை 1010க்குப் புறப்படும் இந்தியன் விமானத்தில் ஐந்து இடங்கள் அவருக்கு பதிவு செய்யப் பட்டிருந்தன. அவரது 'Z' பிரிவு பாதுகாப்பிற்கேற்ப காவலர் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் 9 மணியளவில் அவர் தில்லி செல்லவில்லை என காவல் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து தகவல் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளன. அதிமுக தலைமயகத்தை தொடர்பு கொண்டபோது அவர்களும் தங்களுக்கு ஏதும் தகவல் இல்லை யென ஆச்சர்யமடைந்தனர்.

DNA - India - Jaya cancels visit to Delhi to meet Kalam - Daily News & Analysis

வேணுபிரசாத் போலீஸில் பரபரப்பு வாக்குமூலம்.

கிரகலட்சுமியுடன் ஏற்பட்ட காதல் பின்னர் நடந்த ரகசிய பதிவுத் திருமணம் குறித்து அவரது முதல் கணவரான நாராயணன் வேணுபிரசாத் போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகர் பிரஷாந்த், கிரகலட்சுமி விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிரகலட்சுமியின் முதல் கல்யாணம் குறித்த பரபரப்புத் தகவலை பிரஷாந்த் வெளியிட்டபோது அத்தனை
பேரும் ஆடிப் போயினர். கிரகலட்சுமியின் முதல் திருமணம் குறித்த பதிவுத் திருமண சான்றிதழுடன் போலீஸில் புகார் கொடுத்தார் பிரஷாந்த். இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். அந்த விசாரணையில், பிரஷாந்த் கூறிய புகார்கள் உண்மைதான் என்று தெரிய வந்தது.

சினிமாவில் வசனம் பேசுபவர்கள் அரசியலுக்கு வர முடியாது : திமுக, அதிமுக மீதும் ராமதாஸ் பாய்ச்சல்

திரைப்படங்களில் அரிதாரம் பூசிக்கொண்டு அரசியல் வசனங்களை பேசிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள் என்று பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

கடந்த 45 வருடங்களாக தமிழகத்தை திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி ஆட்சி செய்ததால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. எனவே இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீலகிரி மாவட்ட பாமக சார்பில் உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் மேலும் பேசியதாவது:

தமிழகத்தின் தற்போதைய நிலை மோசமாகவே உள்ளது. குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்பவர்களே குடி மூலம் குடியை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மறந்துவிட்டு இளைஞர்கள் தற்போது திரையரங்குகளிலும், மதுக்கூடங்களிலும்தான் கூடுகின்றனர்.

அரிதாரத்தைக்கூட கலைக்காமல் இளைஞர்களிடம் வசனம் பேசுபவர்களுக்கெல்லாம் எதுவும் தெரியாது. யாரோ எழுதிக் கொடுக்கும் அரசியல் வசனங்களைப் பேசி பகல் கனவு காண்கின்றனர்.

தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வரானதும், அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்வரானதும் விபத்துக்களே ஆகும். அதைப் போலவே திரைத்துறையோடு தொடர்புள்ள யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள். இவர்களெல்லாம் ஸ்டுடியோக்களிலிருந்து நேரடியாக வருகிறார்களே தவிர அரசியல் தெரியாதவர்கள்.

கல்வியும் வியாபாரமாகிவிட்டது. எல்கேஜி நடத்துபவர்கள் சிறு வணிகர்கள் என்றால், மருத்துவக் கல்லூரி நடத்துபவர்கள் பெரும் வணிகர்களாவர். இந்த நிலையை மாற்ற பாமகவைத் தவிர வேறு யாரும் குரல் கூட கொடுக்கவில்லை. பாமக வித்தியாசமான கட்சி. 2020-ல் தமிழகம் எப்படி இருக்க வேண்டுமென இப்போதே திட்டம் தயாரித்துள்ளோம்.

இதை உதகையில் புதன்கிழமை வெளியிடுகிறோம். மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவதில் முன்னணியில் இருப்பது பாமகதான். தமிழக அரசியல் களத்தில் முன்னிலையில் இருப்பதும் பாமகதான். இதை சவாலாகவே சொல்கிறேன்.

உதகை நகரம் அழகாக இருந்தாலும் வளர்ச்சித் திட்டங்கள் ஏதுமில்லை. நல்ல சாலை வசதி கூட இல்லை. இங்குள்ள மக்களுக்கு சமூக, பொருளாதார வளர்ச்சியுமில்லை. இதற்காக ஒதுக்கப்படும் நிதியும் 80 சதவீதம் வரை சுரண்டப்படுகிறது.

எனவே உதகை நகருக்காக ஒரு மாஸ்டர் பிளான் திட்டத்தை உருவாக்கி இந்நகரை அழகுபடுத்த வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியமில்லை என்றார்.

தினமணி

தமிழில் எஸ்.எம்.எஸ்.: இணையப் பல்கலைக்கழகம் திட்டம்

மொபைல் போன்களில் தமிழில் எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அனுப்பும் புதிய வசதிக்கான முயற்சியில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக மொபைல்போன் சாதனங்களில் தற்போதுள்ள ஆங்கில எழுத்துக்களுடன் தமிழ் எழுத்துக்களைப் பதிவு செய்வதற்கான சாஃப்ட்வேரை வடிவமைக்க உள்ளது.

இதற்கான தமிழ் விசைப் பலகையை அமைப்பது தொடர்பாகத் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பணியில் ஈடுபட்டுள்ள அக்குழு சுமார் மூன்று மாதங்களில் தனது ஆய்வறிக்கையை அரசுக்கு அளிக்க இருக்கிறது.

இதன்படி 1 என்ற எண்ணுள்ள விசையில் குறைந்தது 3 ஆங்கில எழுத்துகளுக்கு இடமிருக்கும். அதே விசையைப் பயன்படுத்தி மூன்று தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.

உதாரணத்துக்கு "2' என்ற எண்ணுள்ள விசையில் "ஞ, ட, ண' என்ற எழுத்துகளைப் பதிவு செய்யலாம். "4' என்ற எண்ணுள்ள விசையில் "ம, ய, ர' என்ற எழுத்துகளைப் பதிவு செய்யலாம். "5' என்ற எண்ணுள்ள விசையில் "ல, வ, ழ' என்ற எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.

இவ்வாறு முழுமையான தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யும் முறை அமலுக்கு வந்த பின், மொபைல் சேவைகளில் ஈடுபட்டுள்ள பி.எஸ்.என்.எல்., "ஏர்டெல்' போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

கோட்டூர்புரத்தில் புதிய கட்டடம்: தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துக்கு கோட்டூர்புரத்தில் இரண்டு ஏக்கர் நிலப் பரப்பில் புதிய கட்டடம் கட்டப்பட இருக்கிறது. மொத்தம் ரூ. 2 கோடியில் அமைக்கப்படும் இந்த வளாகத்தில் 10 ஆயிரம் சதுர அடிப் பரப்பில் மூன்று மாடிக் கட்டடம் கட்டப்படும்.

அதில், மாநாட்டு அரங்கம், இணையவழிக் கல்விக்கான ஸ்டுடியோ, "அப்லிங்க்' செய்வதற்கான வசதி அமைக்கப்படும். இங்கிருந்து விடியோ கான்பரன்சிங் முறையில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

வகுப்புகளைப் பொருத்த வரையில் விரிவுரையாளர் நடத்தும் வகுப்பை உலகின் எந்த மூலையிலிருந்தும் உடனுக்குடன் கேட்டு அறிந்து கொள்ளலாம். அல்லது, அதை கம்ப்யூட்டரிலோ "லேப் டாப்பிலோ' பதிவு செய்து, தேவைப்படும்போது போட்டு, பாடத்தை அறிந்து கொள்ளலாம். சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் வசதி உண்டு. அல்லது இணையதளத்தில் "சாட்டிங்' முறையிலும் சந்தேகத்தை உடனுக்குடன் கேட்டு, தெளிவு பெறலாம்.

இதற்காக "ஸ்ட்ரீமிங் வெப் சர்வர்' என்ற "சர்வர்' வடிவமைக்கப்பட்டு வருகிறது.

சி.டி.யில் திருக்குறள்: திருக்குறளின் ஐந்து உரைகளுடன் இரு ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன் குறுந்தகடுகளை இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. உலக அளவில் திருக்குறளைப் பரப்பும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இணையப் பல்கலைக்கழகம் தற்போது, 137 நாடுகளில் உள்ளவர்களுக்காக தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது. அவர்களுக்கு முழு அளவில் பயன்படும் வகையில் மேலும் பாடத் திட்டத்தையும், வகுப்புகளை நடத்தும் முறையையும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி

ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 12 பதக்கம்

பாங்காக்கில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆசிய கிராண்ட்பிரீ தடகளப் போட்டியில் 3 தங்கம் உள்பட 12 பதக்கங்களை இந்தியக் குழு கைப்பற்றியது.

மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் சினிமோல் பவுலோஸும், ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சுனில்குமாரும் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தனர்.

3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சுரேந்திர சிங் வெள்ளி வென்றார்.

வட்டு எறிதலில் விகாஸ் கௌட வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். சௌரப் விஜ் (குண்டு எறிதல்), சாதோலி ஹம்சா (1500 மீட்டர்) ஆகியோரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

கே.எம்.பினு (ஆடவர் 400மீ), பூவம்மா (மகளிர் 400மீ), சஜீஸ் ஜோசப் (ஆடவர் 1500மீ), ஹரி சங்கர் ராய் (ஆடவர் உயரம் தாண்டுதல்), சுஷ்மா (மகளிர் 1500மீ) ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

தினமணி

The Statesman :: India win three gold at Asian GP

ராகுல்காந்தியின் 37 வது பிறந்தநாள்

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல்காந்தியின் 37 வது பிறந்தநாள் விழாவை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை கொண்டாடினர் அக் கட்சியினர். காங்கிரஸ் கட்சித் தலைவரும் ராகுல்காந்தியின் தாயாருமான சோனியாகாந்தியின் வீட்டின் முன் கட்சியினர் ஏராளமானோர் ஒன்று கூடி அமேதி தொகுதி எம்பி ராகுலின் பிறந்த நாளை கொண்டாடினர்.

ஆனால் ராகுல் தில்லியில் இல்லை. கடந்த ஆண்டு தனது பிறந்தநாள் அன்று தில்லியில் இருந்தபோதிலும் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியினரை சந்திக்கவில்லை. ராகுலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய இளைஞர்கள் காங்கிரஸ் கட்சி நடத்திய விழாவில் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் உள்பட மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி

குடியரசுத் தலைவர் பதவிக்கு 4 பேர் மனு தாக்கல்

குடியரசுத் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் 4 பேர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 7 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்த நான்கு பேரில் நரேந்திர நாத் துபே (வாராணாசி), ராம் குமார் சுக்லா (லக்னௌ), விஜய் நாராயண் (கான்பூர்) ஆகியோர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

நான்காவது நபரான ஹரி பிரசாத் (தில்லி) வாக்காளர் என்பதற்கான முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்யாததால் அவரது மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கடந்த 16-ம் தேதி தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் ஜூன் 30-ம் தேதி முடிவடைகிறது. வேட்பு மனுக்களைத் திரும்ப பெற்றுக் கொள்ள ஜூலை 4-ம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 19-ம் தேதி தேர்தலும், 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடை பெறுகிறது.

தினமணி

-o❢o-

b r e a k i n g   n e w s...