வெனிசுவேலாவில் எண்ணெய்க் கிணறுகளை தேசியமயமாக்க அந்த நாட்டின் அதிபர் ஹூகோ சாவஸ் முடிவெடுத்தார். இதன் தொடர்ச்சியாக தன்னுடைய பணித்திட்டங்களைத் தொடர்வதா, மூடுவதா என்னும் குழப்பத்தில் எக்ஸான்-மொபில் ஆழ்ந்துள்ளது.
BBC NEWS | Business | Exxon mulls future in Venezuela
Thursday, March 15, 2007
வெனிசுவேலா - ஹூகோ சாவஸ் - எக்சான்
Posted by Boston Bala at 11:14 PM 0 comments
ஏஞ்சலினா ஜோலி வியட்னாம் ஆண் மகவை தத்தெடுப்பு
ஏஞ்சலினா ஜோலி மூன்றாவது குழந்தையை தத்தெடுத்திருக்கிறார். கம்போடியா, எத்தியோப்பியாவைத் தொடர்ந்து வியட்நாமில் இருந்து இந்த சிறுவனை ஹாலிவுட் ஜோடி சுவிகரித்திருக்கிறார்கள்.
BBC NEWS | Entertainment | Angelina Jolie adopts Vietnam boy
Posted by Boston Bala at 10:59 PM 0 comments
தலை வெட்டப்பட்டாலும் நினைவிருக்குமா?
ஒரு மனிதனின் தலை வெட்டப்பட்டாலும் 13 வினாடிகள் அவனுடைய தலைக்கு உயிரிருக்கும் என மருத்துவ உலகில் பொதுவாக நம்பப்படுகிறது..
மேல் விபரங்களுக்கு இங்கே செல்லுங்க..Ask - Yahoo
Posted by சிவபாலன் at 9:49 PM 2 comments
Office workers 'risk blood clots'
கணினியில் அதிகமாக நேரம் செலவிடுபவர்களுக்கு கால்களில் இரத்தம் கட்டிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக நெஞ்சுவலி, மூச்சிறைப்பு ஏற்பட்டு மாரடைப்பும் ஏற்படும்.
BBC NEWS | Health | Office workers 'risk blood clots': The researchers found a third of patients admitted to hospital with deep vein thrombosis (DVT) were office workers who spent hours at a computer. Professor Beasley said the problem was most common in the information technology industry and in call-centres.
Posted by Boston Bala at 9:30 PM 0 comments
தூது போக புறா தயார் - சீனா
புறாவின் தலையில் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ எலக்ட்ரோடு கொண்டு கம்ப்யூட்டர் மூலம் உத்தரவு பிறப்பித்து புறாவை நம் இஷ்டப்படி பறக்க வைக்கலாம். சீனாவின் ஷான்டாங் பல்கலைக்கழகத்தின் ரோபோ இன்ஜினியரிங் தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
The Hindu.
Posted by சிவபாலன் at 8:37 PM 0 comments
சட்டிஸ்கரில் 49 காவலர்கள் நக்ஸலைட்டுக்கள் தாக்குதலில் மரணம்
சட்டிஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் காவலர் புறநிலையமொன்றின் மீது நக்ஸலைட்டுக்கள் கைகுண்டுகள் மற்றும் சரமாரி துப்பாக்கி தாக்கியதில் 49 காவலர்கள் மரணமடைந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.
IBNLive.com : CNN-IBN
Posted by மணியன் at 8:14 PM 0 comments
தெரு நாய்களை கொல்லக் கூடாது - நடிகை அமலா
இந்திய விலங்குகள் நலவாரிய தலைவர் ஆர்.கே.ஹெர்ப் தலைமையில், சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. வாரிய துணைத்தலைவர் வி.என்.அபாஜிராவ், உறுப்பினர்கள் நடிகை அமலா, எஸ்.கே.மிட்டல், டாக்டர் முகமது அஸ்லாம், சோனி, புளுகிராஸ் அமைப்பைச் சேர்ந்த சின்னிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விலங்குகள் நல ஆர்வலரும் நடிகையுமான அமலா பேசுகையில், ‘‘நாய்கள் மூலம் ரேபிஸ் நோய் பரவுவதை தடுக்க, அரசுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்த வேண்டும். மனிதத் தன்மை அற்ற முறையில், தெரு நாய்களை கொல்லக்கூடாது’’ என்றார்.
வாரிய தலைவர் ஆர்.கே.ஹெர்ப் கூறுகையில், ‘ரேபிஸ் அற்ற இந்தியாவை உருவாக்க, ஒரு முன்னோடி திட்டத்தை டெல்லி, கோரெகான், பெங்களூர் ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளோம். நாய்களுக்கு தடுப்பு மருந்து கொடுக்கிறோம். நாய்களின் இனப்பெருக்கத்தை குறைக்க, திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம் என்றார்.
Posted by சிவபாலன் at 8:04 PM 15 comments
நந்திகிராம் துப்பாக்கிசூடு சரியே - புத்தா
மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி நந்திகிராமத்தில் நடந்த துப்பாக்கிசூடு காவலர் தற்காப்பிற்காக நடந்தது என சரிப்படுத்தினார். அங்கு நில கொள்முதல் நடக்காது என்று உறுதியளித்த அதே நேரத்தில் நந்திகிராம் விவசாயிகள் பொறுமையுடனும் விவேகத்துடனும் நடந்து கொண்டிருந்தால் இந்த வருந்தத் தக்க நிகழ்வு தவிர்க்கப் பட்டிருக்கும் எனக் கூறினார்.
Zee News செய்தி
TIMES NOW.tv
Posted by மணியன் at 8:02 PM 0 comments
மாணவியைக் கொன்ற ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை
தன்னிடம் பாடம் படிக்க வந்த 20 வயது பிரியங்கா என்ற மாணவியை, அவர் திருமணம் இன்னொருவருடன் நிச்சயம் ஆனது தெரிந்ததும், குத்திக் கொலை செய்த உத்தம்குமார் என்ற 41 வயது ஆசிரியருக்கு தில்லி செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தண்டனை வழங்கியது.
The Hindu வின் இது பற்றிய செய்தி
Posted by மணியன் at 7:44 PM 0 comments
நந்திக்ராம் கலவரம் - செய்தித் தொகுப்பு
மேற்கு வங்கத்தில், நந்திக்ரரம் பகுதியில் தொழிற்பூங்கா அமைக்க விவசாய நிலங்களை விற்பது குறித்த சர்ச்சையில் எழுந்த போராட்டங்களை அடக்க நேற்று போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 14கிராம மக்கள் உயிரிழந்தனர்.
வியாழன் காலையில் நந்திக்ராமிலலுள்ள BDO அலுவலகத்தை கும்பலாய் பொதுமக்கல் தாக்கியதாகவும், தீ வைத்ததாகவும் அதன்பின் தொடர்ந்த நிகழ்வுகளில் கலவரம் துவங்கியதாகவும் தெரிகிறது. இறந்த 14பேரில் 10பேர் போலிஸ் துப்பாக்கிச்சூட்டிலும் 4பேர் கல்லடி பட்டு அல்லது குண்டு வெடித்ததில் இறந்திருப்பதாகவும் தெரிகிறது.
பெரிதும் அரசியலாக்கப்பட்ட விதயமாக நந்திக்ராம் நிலப் பிரச்சனை வளர்ந்துவிட்டது. துப்பாக்கிச் சூடு நிகழ்வுக்குப் பின்னரும் எதிர்க் கட்சிகள் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆளும் கட்சி மக்களைத் தூண்டிவிட்டதாக எதிர்க்கட்சிகள் மீதும் குற்றம் சுமத்தியபடியுள்ளன.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட காந்திக்ராம் வெறிச்சோடிக் கிடக்கிறது என செய்திகள் சொல்கின்றன. போலீசைத் தவிர அங்கு குறைந்த பட்ச ஆட்களே இருக்கின்றனர். உறவினர்களைத் தேடிக்கொண்டும், ஆங்காங்கே மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டும் மக்கள் அவதிப் படுகின்றனர்.
5000ம் கிராம மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இயலாமலேயே துப்பாக்கிச் சூடு நடத்தவேண்டிய கட்டாயம் வந்தாதாக போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் புத்ததெவ் பட்டச்சர்ஜீ இன்று (15/03/2007) பிரதமரிடம் கலவரம் பற்றி விளக்கியுள்ளார் மேலும் மாநில அரசின் ரிப்பொர்ட்டையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் அவர் "(தொழிற்சாலை அமைக்கு வேலைகளிலிருந்து) பின்வாங்குவது எனும் கேள்விக்கே இடமில்லை" என்றிருக்கிறார். (The Hindu)
இதற்கிடையே கல்கத்தா உயர்நீதி மன்றத்தின் ஆணையின்படி சி.பி.ஐ மூவரடங்கிய குழு ஒன்றை நந்திக்ராம் பகுதிக்கு அனுப்பியுள்ளது.
கலவரப் பகுதிக்குச் சென்ற பத்திர்கையாளை திரினாமுள் காங்கிரஸ் மற்றும் CPI(M) கட்சிக்காரர்கள் பல இடங்களில் தடுத்து நிறுத்தி தவறானத் தகவல்களைத் தருகிறீர்கள் என எச்சரித்ததாகவும் தெரிகிறது.
Posted by சிறில் அலெக்ஸ் at 7:13 PM 0 comments
சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் 50 போலீசார் பலி:
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் ராணிபோட்லி எனும் காட்டுப்பகுதியில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்தில் நக்சலைட்டுக்களின் திடீர் அதிரடி தாக்குதலில் சத்தீஸ்கர் மாநிலஆயுதப்படை போலீசார் 50 பேர் உயிர் இழந்தனர்.
மேலும்...
Posted by ✪சிந்தாநதி at 5:50 PM 0 comments
சென்னையில் 'பெண்ணுறை' அறிமுகம்
பெண்களுக்கான 'காண்டம்' வகை சென்னையில் புதிதாய் அறிமுகப் படுத்தப்பட்டது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் ஹிந்துஸ்தான் லேட்டக்ஸ் நிறுவனமும் இணைந்து செய்துள்ளன.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தக் காண்டம் வினியோகிக்கப்படவுள்ளது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் லத்திகா சரண் அறிமுகப்படுத்தினார்.
'இந்திய அளவில் 52 லட்சம்பேரும் தமிழகத்தில் மூன்று லட்சம்பேரும் எய்ட்ஸால் பாதிக்கப்ப்பட்டுள்ளார்கள்' எனும் தகவலை சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
நன்றி தினமலர்
Posted by சிறில் அலெக்ஸ் at 2:49 AM 2 comments
ஹிட்லரின் ஜெர்மானியக் குடியுரிமையை விலக்க கோரிக்கை
ஹிட்லரின் ஜெர்மன் citizenshipஐ விலக்கிட அந்நாட்டின் அரசியல் கட்சி ஒன்று கோரிக்கை முன்வைத்துள்ளது.
ஹிட்லர் ஆஸ்த்ரிய நாட்டைச் சார்ந்தவர். 1925ல் ஆச்த்ரியக் குடியுரிமையை விட்டுவிட்டு ஜெர்மெனியின் ப்ரன்ஸ்விக்கில் அரசு ஊழியராகப் பணிபுரிந்தார். இதன்மூலம் அவருக்கு ஜெர்மானிய குடியுரிமை கிடைத்தது.
German party seeks to strip Hitler's citizenship
Posted by சிறில் அலெக்ஸ் at 1:22 AM 0 comments
பாக்கிஸ்தானில் முஷ்ரஃப்புக்கு எதிராக போராட்டங்கள்
பாக்கிஸ்தான் அதிபர் முஷ்ரஃப்புக்கு எதிராக பாக்கிஸ்தானில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தன்னை எதிர்ப்பவர்களை அவர் அடக்குமுறை கொண்டு சமாளிப்பதற்கெதிராக இந்த போராட்டங்கள் நடைபேறுகின்றன, குறிப்பாக அண்மையில் பாக்கிஸ்தானின் உச்சநீதிமன்ற தலமை நீதிபதி பதவி விலக்கப்பட்டது பெரிய எதிர்ப்பிற்குள்ளாகியிருக்கிறது.
Protests in Pakistan against Musharraf
"The summary manner in which the Chief Justice of Pakistan has been suspended and made non-functional is an outrageous onslaught on judicial independence. It should be a matter of deep concern in every country which prizes an independent judiciary,"
Ire grows in Pakistan over judge's removal
Opposition swells to Pakistani judge's sacking
Opposition parties announce agitation against sacking of CJ
Posted by சிறில் அலெக்ஸ் at 1:10 AM 0 comments
நந்திக்ராம் துப்பாக்கி சூடு 14பேர் பலி: Update
தொழில் பூங்ககவிற்கு விவசாய நிலங்களை ஒதுக்குவதற்கு எதிரான போராட்டங்களின்போது போலீஸ் துப்பாக்கிச் சூடில் 14பேர் பலியாயினர்.
'Black Day' in Bengal as police gun down 14 in Nandigram
‘This is a political battle’
Google news list of articles
Posted by சிறில் அலெக்ஸ் at 1:04 AM 0 comments
b r e a k i n g n e w s...