சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கும் ஆங்கிலேய கடைசி பொது ஆளுநரான (கவர்னர் ஜெனரல்) மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுக்குமிடையே மலர்ந்த 'நெருக்கம்' பற்றி மனம் திறக்கிறார் மவுண்ட்பேட்டனின் மகளான பமீலா மவுண்ட்பேட்டன்.
India Remembered: A Personal Account of the Mountbattens During the Transfer of Power என்கிற ஆவணமொன்றில் பழைய நாட்குறிப்புகளை வைத்து இவ்வாறு எழுதியுள்ளார்.
Nehru_Edwina_were_in_love_says_Edwinas_daughter - மேலும் படிக்க..TOI
Sunday, July 15, 2007
நேருவின் காதல்: மனம் திறக்கும் மவுண்ட்பேட்டன் மகள்
Posted by வாசகன் at 11:40 PM 0 comments
சண்டிகர்: இனி புகைத்தல் பகைக்கும்.
சண்டிகர் நகரம் இந்தியாவின் முதல் புகைத்தல் தடை நகரமாக இன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுஇடங்களில் புகைப்பது தடை செய்யப்படுகிறது
மேலும் படிக்க:
ஒருமாதத்திற்கு முன்பே 'சற்றுமுன்' இது பற்றி செய்தி அளித்திருந்தது நினைவிருக்கலாம்
Posted by வாசகன் at 11:35 PM 0 comments
லால் மசூதி தாக்குதல்: முஷாரஃப் கருத்து.
அரசின் அமைதி முயற்சிக்கு பயங்கரவாதிகள் ஒத்துழைப்பு கொடுக்காததால்தான் தாக்குதல் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவானது என்று லால் மசூதி தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கூறியுள்ளார். இதுபற்றி மேலும் அவர் கூறுகையில்,
பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு. இஸ்லாமின் உண்மையான கருத்துக்களை பின்பற்றி நாம் வாழ்ந்து வருகிறோம். இஸ்லாமியர் என்ற பெயரில் சில தீய சக்திகள், சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புவதோடு மட்டுமல்லாமல், உண்மையான இஸ்லாமியர்களையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். இது ஒரு தவறான வழிகாட்டுதல். பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் வெற்றி தோல்வி முக்கியமல்ல. தீயவை அழிக்கப்படுவது தான் அவசியம். இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
தினமலர்
Posted by வாசகன் at 11:28 PM 0 comments
"அந்துமணி" ரமேஷ் பாலியல் புகார் - சன் செய்திகள் வீடியோ
தினமலர் நாளிதழின் நிர்வாகி "அந்துமணி" ரமேஷ் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் அந்த நாளிதழின் முன்னாள் பெண் நிருபர் உமா, போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
அதன் சமபந்தமான சன் செய்திகள் "வீடியோவைக் காண இங்கே செல்லவும்."
Posted by சிவபாலன் at 9:09 PM 12 comments
ஸ்பெயின்: குழந்தை பெற்றால் பரிசு.
ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டில் மனித பிறப்பு விகிதம் குறைந்து வருவது பற்றி அந்நாட்டு அரசு கவலை கொண்டுள்ளது. பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் விதமாக ஸ்பெயினில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ. ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஸ்பெயின் பிரதமர் ஜோஸ் லூயில் ரோட்ரிக் ஜபாட்டிரோ இதற்கான அறிவிப்பை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில்,"நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் தொகை மிகவும் முக்கியம். இதனால் பிறப்பு சதவீதத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த பரிசு திட்டம்அறிவிக்கப் பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர்
Posted by வாசகன் at 12:59 PM 0 comments
இந்தியா: திரும்பி வந்த பிரதமரின் காசோலை.
பிரதமர் நிவாரண நிதியாக கொடுத்த காசோலை திரும்பிய விவகாரத்தில் மாவட்ட துணை ஆட்சியரும், ஒரு முதுநிலை அலுவலரும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அப்போதைய மாவட்ட ஆட்சியரும் விளக்கம் தரும்படி பணிக்கப்பட்டுள்ளார்.
வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட மகாராஷ்டிர விவசாயிகளின் குடும்பத்தினருக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம், யவட்மால் மாவட்டத்தைச் சேர்ந்த வந்தனா ஷிண்டே என்ற விதவை பெண் ணுக்கு, அப்போதைய கலெக்டர் ஹர்ஷதீப் காம்ப்ளே, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஒரு காசோலையை வழங்கினார். வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்று கூறி யவட்மால் மாவட்டமத்திய கூட்டுறவு வங்கியோ, கடந்த மாதம் திருப்பி அனுப்பிவிட்டது.
இந்த விவகாரத்தை, விதர்பா ஜன அந்தோலன் சமிதி என்ற தனியார் தொண்டு நிறுவனம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அதனால், மகாராஷ்டிரா அரசு உடனடியாக, தலைமை நிதி செயலர் வித்யாதர் காண்டேவை இது குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது.
இதற்கிடையே, பிரதமர் அலுவலக மீடியா ஆலோசகர் சஞ்சய் பாரு, கடந்த 7ம் தேதி டில்லியில் வெளியிட்ட அறிக்கையில், "நாங்கள் ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு ரூ.50 இலட்சம் பணத்தை அனுப்பி விட்டோம். இருப்பினும், காசோலை திரும்பி வந்ததற்கு, மாநிலத்தில் ஏற்பட்ட பிரச்னையே காரணம்' என்று தெரிவித்து இருந்தார்.
அதற்கு மகாராஷ்டிர அரசு அளித்த விளக்க கடிதத்தில், "மாவட்ட ஆட்சியர் இரண்டு கணக்குகளை நிர்வகித்து வருகிறார். அதில் ஒரு கணக்கில், பணம் இல்லாமல் போய் விட்டது. அந்த கணக்கின் பேரில், காசோலை வழங்கப் பட்டதால், அது பணமில்லாமல் திரும்பி வந்து விட்டது' என்று தெரிவித்தது.
இது தொடர்பாக, காசோலை வழங்கிய அப்போதைய மா.ஆட்சியர் காம்ப்ளேவுக்கு விளக்கம் கேட்டுகுறிப்பாணை (NOTICE) அனுப்பப்பட்டுள்ளது. துணை ஆட்சியர் எஸ்.என்.மிஸ்ரா மற்றும் முதுநிலை அலுவலர் டி.கே.காதனே இருவரும் இடைநிறுத்தம்' செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினமலர்
Posted by வாசகன் at 12:26 PM 1 comments
தினமலர் நிர்வாகி "அந்துமணி" ரமேஷ் மீது பாலியல் புகார்
சென்னை, ஜுலை 15: தினமலர் நாளிதழின் நிர்வாகி "அந்துமணி" ரமேஷ் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் அந்த நாளிதழின் முன்னாள் பெண் நிருபர் உமா, போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திக்கு "தினகரன்"
Posted by சிவபாலன் at 1:45 AM 9 comments
b r e a k i n g n e w s...