.

Friday, August 10, 2007

பட்டப்பகலில் வங்கியில் கொள்ளை - அதிர்ச்சியூட்டும் வீடியோ

குவாலியரில் பட்டப்பகலில் வங்கியில் சுமார் 2 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த கொள்ளை சம்பவம் அங்கே உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் வீடியோ கிழே.

ஓவலில் கும்ப்ளே சதம் - இந்தியா 664

இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்து 664 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அனில் கும்ப்ளே ஆட்டமிழக்காமல் 110 ஓட்டங்கள் எடுத்தார் இதில் பதினாறு 4 ஓட்டங்களும் 1 ஆறு ஓட்டங்களும் அடித்தார்.

தோனி 81 பந்துகளில் 92 ஓட்டங்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 91 ஓட்டங்கள் எடுத்தார்.

India 664-10 (170) Runs Balls 4s 6s SR
D Karthik c Prior b Sidebottom 91 151 10 1 60.26
W Jaffer c Pietersen b Anderson 35 47 6 1 74.47
*R Dravid b Anderson 55 101 8 0 54.46
S Tendulkar c Strauss b Anderson 82 192 11 0 42.71
S Ganguly lbw b Collingwood 37 77 4 1 48.05
VVS Laxman c Prior b Tremlett 51 79 10 0 64.56
MS Dhoni c Cook b Pietersen 92 81 9 4 113.58
A Kumble not out 110 193 16 1 56.99
Zaheer Khan c Anderson b Panesar 11 52 1 0 21.15
RP Singh c and b Anderson 11 21 2 0 52.38
S Sreesanth c Vaughan b Panesar 35 32 6 1 109.38


நன்றி: rediff.com

பத்துக்கு எட்டு இந்தியர்கள் ரூ.20க்கு கீழே ஊதியம் வாங்குகின்றனர்

இன்று வெளியான அரசு அங்கீகரித்த ஆய்வறிக்கை 86% தொழிலாளர்கள் ஒருநாளிற்கு ரூ.20 அல்லது அரை அமெரிக்க டாலருக்கும் கீழே ஊதியம் வாங்குவதாக கூறுகிறது.பணிபுரியும் 457 மிலியன் தொழிலாளர்களில் 395 மிலியன் தொழிலாளர்கள் விவசாயம், கட்டிடவேலை, ் மீனவ மற்றும் நெசவு போன்ற அமைப்பற்ற பணிகளில் வேலை செய்கின்றனர்.

மேல் விவரங்களுக்கு.....The Economic Times

சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன் உடனே மீட்கப் பட்டான்

வேளச்சேரியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தக்காரர் சாதிக்கின் ஆறு வயது மகன் ரிஷாத் நேற்று மாலை பள்ளியிலிருந்து வந்தபிறகு தனிப்பயிற்சி வகுப்பிற்கு சென்றவன் திரும்பவில்லை. இரவு 8:30 மணிக்கு ரூ4 இலக்கம் பணம் ஈடு கேட்டு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து காவலரை நாடினார் சாதிக். சென்னைக் காவல்துறைகூடுதல் கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் ஒருங்கிணைந்து இச்சிறுவனை 8 மணி நேரத்தில் மீட்டனர்.

இதுபற்றி தட்ஸ்தமிழ் செய்தி

'முதல்வர் சொல்வதில் உண்மையில்லை' - இராமதாஸ்

விழுப்புரம், ஆக. 10: டாடா டைட்டானியம் டை ஆக்ûஸடு ஆலை அமைவதால் பாதிப்பு ஏற்படாது என்று முதல்வர் கருணாநிதி கூறுவதில் எள்முனை அளவும் உண்மையில்லை, இதனால் பாதிப்பு ஏற்படுமென ஏற்கெனவே அரசு அதிகாரிகள் அறிக்கை சமர்பித்துள்ளனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் தெரிவித்தார்.

தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

அரசின் பொதுத்துறை நிறுவனம் மூலமாக கேபிள் டி.வி நடத்தலாம் என்று முதல்வர் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடந்ததாக செய்தி வந்துள்ளது. இதனை வரவேற்கிறேன். இந்த ஆலோசனையை முதலில் கூறியவன் என்ற முறையில் முதல்வரின் முடிவை பாராட்டுகிறேன்.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்குச் சென்று மக்களின் கருத்தை நேரில் அறிந்து வந்தேன். நான் அங்கு செல்வதற்கு முன் பாமகவைச் சேர்ந்த மூவர் குழுவை அங்கு அனுப்பி ஓர் அறிக்கை கேட்டேன். இந்த அறிக்கையையும் மக்களிடம் இருந்து பெற்ற கருத்தையும் கொண்டு நான் ஒரு அறிக்கை தயாரித்துள்ளேன். இந்த அறிக்கை தமிழக முதல்வரிடம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) கொடுக்கப்படும்.

டைட்டானியம் தொழிற்சாலை தொடர்பாக கருணாநிதி தொடர்ந்து பல அறிக்கைகளை வெளியிடுகிறார். இன்றும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே அங்குள்ள நிலம் பலருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிறார். டாடாவை ஒப்பிடும்போது இந்த நிறுவனங்கள் மிகச் சிறியவை. இவற்றினால் ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த நிறுவனங்களின் முறைகேடு தடுக்கப்பட வேண்டுமே தவிர அவற்றை முன்னுதாரணமாக காட்டக்கூடாது.

கனிம வளங்களைப் பிரித்தெடுத்தால் அங்குள்ள நிலம் பாலைவனம் ஆகிவிடும் என்பதில் எள்முனை அளவும் உண்மையில்லை என்கிறார் கருணாநிதி. அவர் கூறுவதில் உண்மையில்லை என்று நான் சொல்கிறேன்.

கனிம வளங்களைப் பிரித்தெடுத்தால் இப் பகுதி பாலைவனம் ஆகிவிடும் என்று திருச்செந்தூர் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பழனியாண்டிக்கு 26-9-2006-ல் அறிக்கை அனுப்பியுள்ளனர்.

இந்த அறிக்கையை அரசு செயலருக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் அப் பகுதி மக்களின் அச்சத்தையும், உண்மை நிலையையும் உணர்த்தும் விதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுரங்கப் பணிகளை 8 மீட்டர் ஆழத்துக்கு மேற்கொண்டால் வேளாண்மை முற்றிலும் அழிந்து இப் பகுதி பாலைவனமாகி பஞ்ச நிலை ஏற்படும், இப் பகுதி மக்கள் பிழைக்க அகதிகளாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமை இவ்வாறு இருக்க மக்களின் கருத்தறிய தமிழக அரசு மூன்று அமைச்சர்களை அங்கு அனுப்பியுள்ளது. இந்த அமைச்சர்கள் டாடா தொழிற்சாலைக்கு ஆதரவாகப் பிரசாரம் நடத்துவதோடு, போட்டி போட்டுக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கின்றனர்.

ஏற்கெனவே திருச்செந்தூர் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் சாத்தான் குளத்தில் சுரங்கம் அமைப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். ஆகவே கருத்தறியும் ஆய்வுக் குழு தேவையில்லை.

ஏற்கெனவே இந்த நிலங்கள் எதற்கும் பயன்படாது என்றனர். ஆனால் அங்குள்ள பட்டா நிலங்களில் பெரும்பாலானவை விவசாய நிலங்கள். அதில் புளி, மா, முந்திரி, பனை, தென்னை என எல்லா வகை மரங்களும் உள்ளன.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு கழக உறுப்பினர் -செயலர் சேகர், மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் 6 மீட்டர் ஆழத்துக்கு நிலங்களைத் தோண்டும்போது மரங்கள், தாவரங்கள் மற்றும் இயற்கையானவை அழிந்து போகும் என்று எச்சரித்துள்ளார்.

இந்த நிலங்களைப் பாதுகாக்க காற்று அரிப்பு கட்டுப்பாட்டு திட்டம் 1978-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. "டேனிடா' உதவியோடு ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் ரூ.6.25கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மரம் வளர்ப்புத் திட்டம் ரூ.41.72 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலையில்லாத காலத்தில் பனை ஏறும் தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் வேலை செய்துள்ளனர். ஆகவே மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்ûஸடு தொழிற்சாலை இங்கு அமைவது ஏற்றதல்ல.

ஏற்கெனவே ரிலையன்ஸ் நிறுவனம் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வால்மார்ட் என்னும் பன்னாட்டு நிறுவனம், பார்த்தி நிறுவனத்திடம் இணைந்து சில்லரை மற்றும் மொத்த வணிகத்தில் ஈடுபட உள்ளது. மாநில அரசுக்கு இதைத் தடுக்க அதிகாரம் இல்லை என்று கூறுவதை ஏற்க இயலாது. இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றார் ராமதாஸ்.

தினமணியிலிருந்து நேரடி பதிப்பு செய்யப்பட்டுள்ளது

குஜராத்தில் காவலர் தடியடி: குழப்பம்

குஜராத்தில் காங்கிரஸ் கூட்டமொன்றில் முக்கியதலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்த சமயம் காவல்துறையினர் தடியடி நடத்தி கண்ணீர்குண்டுகளை வீசியதில் குழப்பம் விளைந்தது. காங்கிரஸ் தலைவர்கள் குஜராத் முதல்வர் மோடியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குலைந்திருப்பதையும் இலஞ்சம் பரவியுள்ளதையும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தக் கூட்டத்தில் விமரிசித்திருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.மூத்த தலைவர்கள் அர்ஜுன் மோத்வாடியா, பாரத் சோலங்கி போன்றோர் கண்ணீர்குண்டுகள் மேடையில் விழுந்ததும் பதறி ஓடினர். காவலர்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் பல பஸ்களை அடித்து நொறுக்கியும் முதல்வர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த பொதுக் கூட்டத்திற்கு பிறகு பேரணியாகச் சென்று மாநில செயலகத்தை முடக்குவதாக திட்டமிட்டிருந்தனர்.
கூட்டத்தினரின் கல்லடியில் இராஜ்கோட்டின் காவல் கண்காணிப்பாளர் பிரம்மபட் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

Chaos after baton-charge in Gujarat-Ahmedabad-Cities-The Times of India

கோவையில் கைகுண்டு வெடித்து எட்டு பேர் காயம்

கோவையின் அருகே குருதம்பாளயத்தில் மத்திய ரிசர்வ் காவல்படையினரின் பயிற்சியின் போது கைகுண்டு (Grenade) வெடித்து எட்டு மத்திய ரிசர்வ் காவல்படையினர் காயமடைந்தனர். புதிய காவலர்கள் பயிற்சி எடுக்கும்போது காலை 10 மணிக்கு தற்செயலாக இவ்விபத்து நடந்ததாக காவல்துறை கூறுகிறது. காயமடைந்தவர்களில் இருவர் பலத்தக் காயங்களுக்குக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Eight CRPF men injured in grenade explosion-India-The Times of India

கமல் ஹாசன் நீதிமன்றத்தில் ....

நடிகர் கமல ஹாசன் தனது தசாவதாரம் படம் பற்றிய வழக்கொன்றிற்க்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். துணை இயக்குனர் செந்தில்குமார் என்பவர் தசாவதாரம் கதை தன்னுடையது , இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குனர்கள் தன்னை ஏமாற்றி விட்டனர் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றத்தில் கமலஹாசன் இக்கதை எதையும் தழுவியதில்லை எனவும் தன்னுடைய கதையே எனவும் விவரமாக எடுத்துரைத்தார். ஆங்கிலத்தில் படத்தின்் திரைக்கதையை தரவும் ஒப்புக் கொண்டனர். பல ஆண்டுகளாக பலபரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற தனக்கு யாருடைய கதையையும் திருடவேண்டிய அவசியமில்லை எனவும் கூறினார்.

ஏராளமான கமல் இரசிகர்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.

IndiaGlitz - Kamal Haasan in court - Tamil Movie News

உலகளாவிய இந்திய கள்ளநோட்டு கும்பல் கைது

கள்ளத்தனமாக இந்திய ரூபாயை அச்சடித்து நேபால், பங்ளாதேஷ் வழியாக கடத்திவந்த கும்பல் காட்மண்டுவில் கைது செய்யப்பட்டுள்ளது. பங்ளாதேஷ், பாக்கிஸ்தான், நேபாளம், மலேஷியா, தாய்லாந்து உட்பட்ட நாடுகாளில் இந்தக் கள்ள நோட்டு கும்பல் செயல்பட்டு வந்ததாகத் தெரிகிறது. கோடிக்கணக்கு மதிப்புள்ள கள்ள நோட்டுக்கல் இவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது.

Multi-national counterfeit Indian currency racket busted - The hindu

ஹமீத் அன்சாரி - துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடது சாரிகளின் வேட்பாளரான ஹமீத் அன்சாரி 455 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாளை பதவி ஏற்கிறார்.


நன்றி: தினமலர்.

இராமாயணம் கணினி விளையாட்டாகிறது

இராமாயணத்தை கணினி விளையாட்டு (Computer Game) வடிவில் உருவாக்கும் பெரும் முயற்சியை இந்தியாவின் விர்ஜின் காமிக்ஸ் மற்றும் உலக முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனம் சோனியும் இணைந்து செயல்படுத்தவுள்ளன. தேர்ந்த திரைப்பட இயக்குநர் ஷேகர் கபூர் இதில் முன்னணி பங்கு வகிக்கிறார்.

Ready for an online game on Ramayana? - The Hindu

தில்லி காவல்நிலையத்தில் சிபிஐ தேடல்: ஊழல் அதிகாரிகள் கைது

மேற்கு தில்லியில் காவல்நிலையமொன்றில் சிபிஐ சோதனைநடத்தி ரூ25,000 இலஞ்சம் பெற்ற துணை ஆய்வாளரை கைது செய்தது. விபின்குமார் என்ற பச்சிம்விஹார் காவல்நிலைய துணை ஆய்வாளர் கைதான அதே சமயத்தில் நிலைய காவல் அதிகாரியும் (SHO) துணை கமிஷனரும்(ACP) தப்பி ஓடிவிட்டனர். சிபிஐ ஆறு கணக்கில் இல்லாத துப்பாக்கிகள், செல்பேசிகள், 200கி மரியுவானா மற்றும் ரூ60,000 பணம் ஆகியவற்றையும் கைப்பற்றினர்.

மேலும்..CBI raids at Delhi Police station, corrupt official arrested- Hindustan Times

ஓட்டுப்போடுவது எப்படி?- எம்.பி.க்களுக்கு பாடம் நடத்திய சோனியா

கடந்த முறை ஜனாதிபதி தேர்தலின் போது எம்.பி.க்கள் பலர் செல்லாத ஓட்டுக்கள் போட்டு விட்டனர். காங்கிரஸ் கூட்டணியில் 6 ஓட்டுகளும், பாரதீய ஜனதா கூட்டணியில் 2 ஓட்டுகளும் செல்லாத ஓட்டுகளாகி விட்டன. எம்.பி.க்களுக்கு ஓட்டுப்போடுவது பற்றி முறையான பயிற்சி அளிக்கப்படாததால் காங்கிரஸ்கட்சி 6 ஓட்டுகளை இழக்க நேரிட்டது.

இதனால் இந்த முறை துணை ஜனாதிபதி தேர்தலில் செல்லாத ஓட்டுகளை தடுக்க காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியே தனது கட்சி எம்.பி.க்களுக்கு பாடம் நடத்தினார்.

இதற்காக அவர் ஒருநாள் முழுவதும் செலவழித்தார். மாநில வாரியாக எம்.பி.க்களை வரவழைத்து ஓட்டுப்போடு வது பற்றி சொல்லி கொடுத்தார். துணை ஜனாதிபதி தேர்தலுக்கு அச்சடிக்கப்பட்டுள்ள ஓட்டுச் சீட்டு போல மாதிரி ஓட்டு சீட்டுகளை சோனியா காந்தி கையில் வைத்திருந்தார்.

அதில் காங்கிரஸ் வேட்பாளர் ஹமீத்அன்சாரியின் பெயர் எங்கு இடம்பெற்றுள்ளது. எம்.பி.க்கள் எந்தமுறை யில் எப்படி முத்திரையிட வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி சொல்லித் தந்தார். அனைத்து எம்.பி.க்களுக்கும் இது போல் பாடம் நடத்தினார்.

மேலும் வரைபடம் மூலமும் எம்.பி.க்களுக்கு விளக்கினார்.

ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்களுக்கும் பாடம் நடத்த அவர் 5 நிமி டங்கள் முதல் 6 நிமிடங்கள் வரை எடுத்துக்கொண்டார்.

இதுபற்றி மேற்கு வங்கா ளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர்சவுத்திரி கூறு கையில், சோனியாகாந்தி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி ஓட்டுப் போடுவது பற்றி சொல்லிக் கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

இதுபோல் பாரதீய ஜனதா எம்.பி.க்களுக்கு சுஷ்மா சுவராஜ் பாடம் நடத்தினார் மாணவர்களுக்கு ஆசிரியை பாடம் சொல்லிக் கொடுப்பதுபோல் எம்.பி.க்களுக்கு ஓட்டுப்போடுவது பற்றி சொல்லிக் கொடுத்தார்.

இதுபற்றி சுஷ்மாசுவராஜ் கூறுகையில், நாங்கள் ஒரு ஓட்டை கூட இழக்கவிரும்பவில்லை. இதனால் செல்லாத ஓட்டு விழாத வகையில் ஓட்டுப்போடுவது பற்றி எம்.பி.க்களுக்கு சொல்லி கொடுத்தோம் என்றார்.

மாலைமலர்


V-P polls: Sonia says vote carefully - India - The Times of India

துணை ஜனாதிபதி தேர்தல்: பாராளுமன்றத்தில் இன்று ஓட்டுப்பதிவு

துணை ஜனாதிபதி பைரோன் சிங் செகாவாத்தின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த வாரம் முடிகிறது.

ஜனாதிபதி தேர்தலில் பிரதீபா பட்டீலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவியதால் துணை ஜனாதிபதி பதவியை செகாவத் ராஜி னாமா செய்து விட்டார். இதனால் தற்போது துணை ஜனாதிபதி பதவி காலியாக இருக்கிறது. புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய ஆகஸ்டு 10-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதற் கான அனைத்து ஏற்பாடு களும் செய்து முடிக்கப்பட்டு விட்டன.

துணை ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் முகம்மது ஹமீத் அன்சாரி போட்டியிடுகிறார். தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தலைவராக இருக் கும் ஹமீத் அன்சாரிக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உள்பட சில மாநில கட்சிகளின் ஆதரவும் கிடைத் துள்ளது.

பாரதீய ஜனதா தலைமை யிலான கூட்டணி சார்பில் மேல்சபை முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா நிறுத்தப்பட்டுள்ளார். 3-வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் ரசீத் மசூத் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் மூவரும் முஸ்லிம்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

துணை ஜனாதிபதியை பாராளுமன்றத்தின் இரு சபை எம்.பி.க்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுப்பார்கள். மக்களவையில் 545 எம்.பி.க்கள், மாநிலங்கள் அவையில் 245 எம்.பி.க்கள் ஆக மொத்தம் 790 எம்.பி.க்கள் உள்ளனர்.

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை (வெள்ளி) பாராளு மனறத்தில் உள்ள தனி அறையில் நடைபெறும். காலை 10 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கும். ஓட்டுப் பதிவுக்கான ஓட்டுச்சீட்டுகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அதன் பிறகு உடனடியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 790 ஓட்டுக்கள் தான் என்ப தால் ஓரிரு மணி நேரத்துக் குள் துணை ஜனாதிபதியாக தேர்வாகப் போவது யார் என்பது தெரிந்து விடும்.

மும்முனைப் போட்டியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் முகம்மது ஹமீத் அன்சாரி மிக, மிக எளிதான வெற்றியை பெறுவார் என்பது ஏற்கனவே முடிவாகி விட்டது. மொத்தம் உள்ள 790 பேரில் 450 எம்.பி.க்களின் ஓட்டுக்கள் அன்சாரிக்கு கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

நஜ்மா ஹெப்துல்லாவும், ரஷீத் மசூத்தும் சொற்ப ஓட்டுக்களே பெறுவார்கள். அவர்களது உறுதிப்படுத்தப் பட்ட தோல்வியால் துணை ஜனாதிபதி தேர்தலில் பெரும் பரபரப்பு எதுவும் ஏற்பட வில்லை. ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்டது போல துணை ஜனாதிபதி தேர்தலிலும் சில கட்சி எம்.பி.க்கள் அணி மாறி வாக்களிக்க வாய்ப்பு உள்ள தாக கூறப்படுகிறது.

புதிய துணை ஜனாதிபதி யாக ஹமீத் அன்சாரி தேர்வு செய்யப்படுவது மாலை அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும். இதையடுத்து பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் உள்துறை அமைச் சகம் விரைந்து செய்யும். துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும். ஜனாதிபதி பிரதீபா பட்டீல் புதிய துணை ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைப் பார். இதைத்தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதி மேல்சபை தலைவர் பொறுப்பை ஏற்று, அந்த பணியை செய்யத் தொடங்குவார்.

மாலைமலர்

Vice presidential election on August 10- Hindustan Times
Zee News - BSP to vote for Hamid Ansari in vice presidential poll
Hamid Ansari way ahead in Vice Presidential sweepstakes - India - The Times of India

-o❢o-

b r e a k i n g   n e w s...