கோவை குண்டுவெடிப்பின் தீர்ப்புகளை தனிநீதிமன்றத்தில் நீதிபதி பார்த்தசாரதி அவர்கள் சற்றுமுன் வாசித்தார் அதில் கைதி எண் 150 விஜயவாடாவை சேர்ந்த அப்துல் ரஹ்மான் (இவர் சிறிது காலத்திற்க்குமுன் இருதய அருவைசிகிச்சை செதுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது) மற்றும் சதீஸ் 143 ஆகியோர் நிபந்தனைஜாமினில் விடுதலை செய்யப்பட்டதாக கோவைநன்பர் தொலைப்பேசிவாயிலாக தெரிவிதார் இன்னும் ஒருசில மணித்துளிகளில் முழு விபரமும் தெரியவரும்.
Monday, August 6, 2007
குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்பு அறிவிப்பு!
Posted by
Adirai Media
at
5:55 PM
0
comments
Sunday, August 5, 2007
ச: சென்னை வலைப்பதிவர் பட்டறை நிகழ்வுகள்.
தற்போது நடைபெற்று வரும் சென்னை வலைப்பதிவர் பட்டறையில் வருகைப்பதிவு பட்டியல் படி 274 பேர் அதிகாரப்பூர்வமாகவும் இன்னும் அதிகமானவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.
காலை நிகழ்வில் தமிழிணைய அறிமுகம் குறித்து பத்ரி, தமிழிணைய மைல்கற்கள் பற்றி (தமிழா-எகலப்பை) முகுந்த், தமிழ் வலைப்பதிவுகள் இன்றைய நிலை குறித்து (தமிழ்மணம் நிறுவனர்) காசி, வலை நன்னடத்தை குறித்து மாலன், வலைப் பாதுகாப்பு பற்றி லக்கிலுக் உள்ளிட்டவர்களின் உரைகளும், பயிற்சிப் பிரிவில் கோபி, தமிழி நடத்திய தமிழ் தட்டச்சு, வலைப்பதிவு பயிற்சிகளும் நிகழ்ந்தன.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கலந்துரையாடல் பகுதியில் கிருபா சங்கர் வலைப்பதிவுகள் மூலம் சம்பாதித்தல் பற்றியும் பயிற்சிப் பிரிவில் செந்தழல் ரவி html அடிப்படைகள் பற்றியும் உரையாற்றினர்.
தொடர்வது வலைப்பதிவு/வலைப்பதிவர்களின் சமூக பங்களிப்பு பற்றி ரஜினி ராம்கி, ஒலி, ஒளிப் பதிவுகள் பற்றி செல்லா.( ....அரங்கிலிருந்து பொன்ஸ், மா. சிவகுமார்.)
Posted by
✪சிந்தாநதி
at
3:21 PM
6
comments
ச: சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை ஆரம்பமானது.
சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆதரவுடன் நடைபெறும் தமிழ்வலைப்பதிவர் பட்டறையில். ஆர்வமுடன் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களும் வலைப்பதிவாளர்களுமாக பட்டறை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. கீழ் அரங்கில் கலந்துரையாடல்களும் மேல்மாடியில் பட்டறை பயிற்சிகளும் நடைபெறுகின்றன.
பட்டறை நிகழ்வு புகைப்படங்கள்(அரங்கிலிருந்து பாலபாரதி...)
Posted by
✪சிந்தாநதி
at
11:58 AM
3
comments
Wednesday, August 1, 2007
நீதிமன்றத்தினுள் கைதிகள் தர்ணா..
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 103 வது எதிரியாக கடந்த எட்டு வருடங்களாக சிறையில் உள்ள ஷெரிஃப் (வயது 26) என்பவருக்கு கோவை கலவரத்தில் முழங்காலில் குண்டுத்துகள்கள் பாய்ந்ததால் கடந்த எட்டு வருடங்களாக சிறையில் சரியான சிகிச்சை அளிக்கப்படாததால் நிலைமை மோசமானதை அடுத்து, கோவை கங்கா மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில் உடனடியாக காலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும், தவறினால் கால் அழுகி காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்ததால் கடந்த 31-05-2006 அன்று உடனடி சிகிச்சை மேற்கொள்ள விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அரசு தரப்பு இவருக்கு சிகிச்சை அளிக்க கூடாது என்று தடை உத்தரவு பெற்றது.
ஏற்கனவே முந்தைய அரசின் உதாசீனத்தாலும் சரியான சிகிச்சை அளிக்காததாலும் ஏற்கனவே கைதி ஒருவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் கைதிகளின் மருத்துவ சிகிச்சைக்கு எதிராக அரசு தரப்பு மனிதாபிமான அடிப்படையில்கூட செயல்படாமல் தடை உத்தரவுகளை பெற்றுள்ளதால் பல கைதிகள் உடல் உறுப்புக்களையும் உயிரையும் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து இன்று விசாரணைக்காக நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதிகள் சுமார் ஐம்பது பேர், அல் உம்மா சிறைவாசி கோவை முகம்மது அன்சாரி என்பவரின் தலைமையில் நீதி மன்றத்தை விட்டு சிறை திரும்ப மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோவையெங்கும் பரபரப்பாக காணப்பட்டது, காவல் துறையின் உயர் அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் தொடர்நது கைதிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் கடந்த அரசின் அதே மெத்தனப்போக்கும், காழ்ப்புணர்ச்சியும் இப்போதும் தொடர்வதாகவும் இந்நிலை மாறவேன்டும் என்றும் மற்றும் கடந்த எட்டு வருடங்களாக தகுந்த சிகிச்சையில்லாமல் வாடிவரும் கைதிகளுக்கு உடனடி சிகிச்சையும் மனிதாபிமான அடிப்படையில் மருந்துகளும் வழங்க வேன்டும் என்றும் ஷெரிஃப் என்பவருக்கு உடனடியா விசாரனை நீதிபதியின் பரிந்துறையின்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வெளியேற மறுத்தனர்.
இரவு பத்தரை மணி வரை தொடர்ந்த பேச்சுவார்த்தையின் முடிவாக தாசில்தாரும் காவல்துறை அதிகாரிகளும் இரண்டு நாட்களில் இதுகுறித்து சரியான தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் கைதிகள் சிறைக்கு திரும்பினர். காலையில் இருந்து இரவு பத்தரை மணி வரை கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாலும், கைதிகளின் உறவினர்களும் பொதுமக்களும் அதிக அளவில் கூடியதாலும் நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது.
Posted by
Adirai Media
at
4:52 PM
0
comments
ச: மதானி விடுதலை-பாஷா உள்பட 7 பேர் குற்றவாளிகள்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி விடுதலை செய்யப்பட்டார்.
அல்-உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்...
Posted by
✪சிந்தாநதி
at
11:44 AM
4
comments
Friday, July 27, 2007
கலாமின் எழுத்துக்கள் காணாமல் போயின
www.presidentofindia.nic.in தளத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேச்சுக்களும் குறிப்புக்களும் அவர் பதவி இறங்கிய சிலமணித்துளிகளிலேயே காணாமல் போய்விட்டது. "கட்டுமானத்தில் உள்ளது" என்ற அறிவிப்பே வரவேற்கிறது. அவரைப் பற்றிய குறிப்புகளையெல்லாம் 'முன்னாள்' என்ற அடைமொழி சேர்க்க வலைத்தளம் மூடப்பட்டுள்ளதாக குடியரசுதலைவர் மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். இந்த தளத்தில் அவரது பேச்சுக்கள், புத்தகங்கள், கவிதைகள் மற்றும் மின்னஞ்சல் உரையாடல்கள் போன்றவை இருந்தன. சிறுவர்களுக்கான பகுதியும் பார்வை குறையுற்றவர்களுக்கு ஒலி ஊடக தளமும் இருந்தது. நாளும் 250,000 பேர் வருகைதந்த இந்த தளம் மிகவும் படிக்கப் பட்டு வந்தது.
இனி அவருக்கான தனி தளமாக abdulkalam.com இருக்கும். இது அவர் கு்.தலைவராக பதவியேற்கும் முன் அவரது 69வது பிறந்தநாளன்று இன்ஃபோசிஸ் நிறுவனரால் துவக்கி வைக்கப் பட்டது. இதனை Aeronautical Development Agency யின் துணை திட்ட இயக்குனராக பணிபுரியும் பொன்ராஜ் நிர்வகித்து வருகிறார்.
India eNews - Kalam's writings disappear from presidential website
Posted by
மணியன்
at
2:02 PM
2
comments
Sunday, July 22, 2007
ச: தே.ஜ. கூட்டணி துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் - நஜ்மா ஹெப்துல்லா!
நாட்டின் முதலாவது பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நஜ்மா ஹெப்துல்லா தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
காங் கூட்டணி சார்பில் ஹமீத் அன்சாரியும் 3வது அணி சார்பில் ரஷீத் மசூத்தும் போட்டியிடுகின்றனர்.
Posted by
✪சிந்தாநதி
at
6:17 PM
1 comments
Saturday, July 21, 2007
சற்றுமுன்:இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாடீல் வெற்றி
இந்திய குடியரசின் தலமைப் பொறுபேற்க நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஆளும் கூட்டணியின்பிரதீபா பாட்டீல் அதிகாரபூர்வமாக வெற்றியடந்ததாக அறிவிக்கப் பட்டார். இந்தியக் குடியரசின் முதல் பெண் தலைவராக ஜூலை 25 அன்று பொறுப்பேற்கவிருக்கிறார்.
ஆரம்பத்திலிருந்தே முன்னணியில் இருந்த பிரதீபா இறுதியில் 3,06,810 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றார்.
பிரதீபா:6,38,116
ஷேகாவத்: 3,31,306
IBNLive.com > Pratibha Patil elected first woman President : race for rashtrapati bhavan, presidential poll, nda, upa, bhairon singh shekhawat, pratibha patil
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவருக்கு 'சற்றுமுன்' வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.
Posted by
மணியன்
at
5:34 PM
3
comments
Sunday, July 8, 2007
புதிய உலக அதிசயங்கள் அறிவிப்பு
பல கோடி மனிதர்களின் பங்களிப்பில் இணையத்தில் கருத்துக் கணிப்பு நிகழ்த்திய ஆய்வில் புதிய ஏழு உலக அதிசயங்களாக அறிவிக்கப்பட்டவை:
1.தாஜ் மஹால், இந்தியா
2.சீன நெடுஞ்சுவர், சீனா
3.பெட்ரா, ஜோர்டன்
4.கிறிஸ்துவின் சிலை, பிராசில்
5.சிசென் இட்சாவிலுள்ள மாயன் அழிவுகள்,மெக்சிகோ
6.மாச்சு பிச்சு, இங்கா பேரரசின் மலைவாழ் குடியிருப்பு, பெரு
7. கொலொசியம்,ரோம்,இத்தாலி
இதற்கான பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும்...World | Africa - Reuters.com
Posted by
மணியன்
at
10:12 PM
0
comments
Saturday, June 23, 2007
அட்லாண்டிஸ் விண்கலம் பூமிக்கு திரும்பியது .
அட்லாண்டிஸ் விண்கலம் வீராங்கனை சுனிதா உள்பட 7 நிபுணர்களுடன் பத்திரமாக தரை இறங் கியது.விண்வெளியில் அமைக்கப் பட்டு வரும் சர்வதேச மிதக் கும் ஆய்வுக்கூடத்துக்கு அமெரிக்காவின் நாசா நிறுவனம்கடந்த 8-ந்தேதி அட்லாண்டிஸ் விண்கலத்தை அனுப்பியது. விண்வெளி ஆய்வுக்கூடத்தில் 6 மாதங் களுக்கு மேல் தங்கி ஆய்வு நடத்திய இந்திய வீராங்கனை சுனிதாவை அழைத்து வரவும் அங்கு தளவாடங்களை பொருத்தவும் இந்த விண்கலம் அனுப்பபட்டது. சுனிதா மற்றும் 6 விண் வெளிநிபுணர்களுடன் அட்லாண்டிஸ் ராக்கெட் கடந்த 19-ந்தேதி மீண்டும் பூமிக்கு புறப்பட்டது.ஏற்கனவே அட்லாண்டிஸ் விண்கலம் பூமியில் இருந்து புறப்பட்ட போது அதன் வெப்ப தடுப்பு தகடு சேதம் அடைந்தது.ஆய்வுக் கூடத்தில் கம்ப்ïட் டர்களும் பழுதடைந்தன. இதனால் சுனிதா பூமிக்கு திரும்புவதில் சிக்கல் எழுந்தது. இந்த கோளாறுகள் சரி செய் யப்பட்டு அட்லாண்டிஸ் விண்கலம் பூமிக்கு புறப்பட் டதும் புளோரிடா மாநிலம் கேப்கனவரால் கென்னடி தளத்தில் தரை இறங்க திட்ட மிடப்பட்டு இருந்தது.ஆனால் புளோரிடா மாநிலத்தில் மோசமான வானிலை காணப்பட்டது. பலத்த காற்று வீசியது. இதனால் விண்கலம் தரை இறங்குவது மேலும் தாமதமானது.இதைதொடர்ந்து கலி போர்னியா மாநிலத்தில் மொஜாவ் பாலைவனப்பகு தியில் உள்ள கென்னடி விமானபடை தளத்தில் விண் கலத்தை தரைஇறக்க முடிவு செய்யப்பட்டது.
விண்கலம் வானவெளி மண்டலத்தில் இருந்து புவி மண்டலத்துக்குள் நுழையும் போது விண்கலத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பரபரப்பு 3நிமிடங்களுக்கு ஏற்பட்டது. விண்கலம் பூமியில் தரை இறங்குவது மேலும் தாமதப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. இதில் உள்ள எரிபொருள் ஞாயிற்றுக்கிழமை வரைதான் போதுமானாகதான் இருந் தது.ஆனால் மிகுந்த பர பரப்புக்கு இடையே நேற்று நள்ளிரவு 1.19 மணிக்கு அட்லாண்டிஸ் விண்கலம் கலிபோர்னியாவில் எட்வர்ட் கென்னடி விமானப்படை தளத்தில் பத்திரமாக தரை இறங்கியது.அப்போது `நாசா' நிறு வனத்தில் கட்டுப்பாட்டு நிலைய விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.விண்வெளியில் 195 நாட் களுக்கு மேல் தங்கி இருந்த பெண் என்று சாதனை படைத்த சுனிதா பூமிக்கு எந்த ஆபத்தும் இன்றி திரும்பியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அட்லாண்டிஸ் விண்கலத் தில் இருந்து இறங்கிய சுனிதாவுக்கும் மற்ற 6 வீரர்களும் பல்வேறு மருத் துவசோதனைகள் நடத் தப்பட்டன. விண்வெளியில் 6 மாதங் களுக்கு மேல் தங்கி இருந்த சுனிதாவுக்கு இந்த பூமி இப் போது ஒரு புதிய உலகம் போல் தோன்றுகிறது. அவர் சகஜ நிலமைக்கு திரும்ப இன்னும் 45 நாட்கள் ஆகும்.
சுனிதாவுக்குப்பதில் இப்போது மிதக்கும் விண் வெளி ஆய்வுக்கூடத்தில் ஆன்டர்சன் என்ற வீரர்தங்கி இருக்கிறார்.அட்லாண்டிஸ் விண்கலம் தரை இறங்கும் இடம் எட்வர்ட் கென்னடி விமானப்படை தளத்துக்கு மாற்றப்பட்டதால் நாசா நிறுவனத்துக்கு கூடுதலாக 17 லட்சம் டாலர் செலவு பிடித்துள்ளது.
Posted by
Adirai Media
at
10:57 AM
0
comments
Wednesday, June 13, 2007
ஜெ மீது நடவடிக்கை : நீதி மன்றம் உத்தரவு
2001ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு இடத்தில் போட்டியிட்டதற்காக அ.இ.அ.தி.மு.கவின் பொதுச்செயலாளார் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 'சற்றுமுன்' உத்தரவிட்டிருக்கிறது.
Posted by
பொன்ஸ்~~Poorna
at
1:54 PM
7
comments
Monday, June 4, 2007
சர்வதேச தொழிலாளர் மாநாடு - சற்றுமுன் நேரடிச் செய்தி!
சிலி நாட்டு அரச அதிபர் மாண்புமிகு. Ms. Michelle Bachelet அவர்கள் சில நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்து உரையாற்றினார்.
ஜெனிவா நகரில் ஐக்கிய நாட்டு சபை வளாகத்தில் நடந்து வருகிற சர்வதேச தொழிலாளர் மாநாடு பொது அமர்வில் இன்று இந்திய நேரம் மதியம் 02.00 மணிக்கு சிலி நாட்டு தலைவர் வருகை தந்தார். அவரது உரையில் "சம உரிமையுடன் கூடிய வளர்ச்சி, சமூகநீதியுடன் கூடிய முன்னேற்றம்" நமக்கு தேவை என குறிப்பிட்டார்.
மேலும் விவரங்கள் இன்னும் சில நிமிடங்களில்.
இன்னும் சில நிமிடங்களில் கானா நாட்டு அதிபர் வருகை தருகிறார்.
=திரு=
Posted by
thiru
at
2:49 PM
1 comments
Tuesday, May 1, 2007
ச:சென்னையில் ரிலையன்ஸ் எதிர்ப்பு முற்றுகைப் போராட்டம்
இன்று காலை சென்னை, சின்மயா நகர், ரிலையன்ஸ் பிரஷ் பல்பொருள் அங்காடிக்கு அருகே மக்கள் கலை இலக்கிய கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இவர்களின் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. சில்லறை வியாபாரிகள், கோயெம்பேடு தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டம் குறித்து ஏற்கனவே தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள், சுவரெழுத்துக்கள் மூலம் இந்த அமைப்புகள் விரிவாக பிரச்சாரம் செய்து அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சில்லறை வணிகத்தில் பன்னாட்டு, தரகு கம்பேனிகள் நுழைந்து உள்நாட்டு அண்ணாச்சிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தோராயமாக இரண்டாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டு கைதானதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்தான செய்திகள் சன், ஜெயா, மக்கள் தொலைக்காட்சிகளில் மகஇக வின் தலைவர் மருதையனின் பேட்டியுடன் ஒலி/ஒளி பரப்பப்பட்டது.
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:53 PM
0
comments
Monday, April 2, 2007
சற்றுமுன்: சென்னையில் தீவிபத்து
சென்னை ஏப்ரல் 2, 2007
சென்னை அண்ணாசாலையில் இருக்கும் ஆனந்த் தியேட்டர் வளாகத்தில் மராமத்துப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. திடீரென மின்கசிவு ஏற்பட்டு அருகில் இருந்த ட்ரான்ஸ்பார்மர் மூலம் தீப்பற்றிக் கொண்டது. தியேட்டர் வளாகத்திலிருந்த உமா ஆப்செட் ப்ரின்டர்ஸின் குடோனில் தீப்பிடித்து லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்து, தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தார் வந்து தீயை அணைத்தனர். உயிர்ச்சேதம் ஏதுவுமில்லை.
-- சற்றுமுன்னுக்காக லக்கிலுக்
Posted by
சற்றுமுன்...
at
5:08 PM
0
comments
b r e a k i n g n e w s...
