என் ஆசான் ஆர்.எம்.டி.
ஆகஸ்ட் 18, 2007
-ஏ.கே.கான்
சில நாட்களுக்கு முன் மறைந்து போனார் என் ஆசானும், தினமணியின் முன்னாள் ஆசிரியருமான இராம.திரு.சம்பந்தம்.
திருஞான சம்பந்தம் என்ற தனது பெயரை அவர் சுருக்கியதற்கு அவரது பெரியார் பற்றும் ஒரு காரணம். மிகத் தீவிரமான தமிழ்ப் பற்றாளர்.
ஆர்.எம்.டி என்று சுருக்கமாய் அழைக்கப்பட்ட அந்த மனிதர், தினமணியில் பல அற்புத மாற்றங்களைக் கொண்டு வந்தவர். கோபத்துக்கு பேர் போனவர். அதே நேரத்தில் மிகச் சிறந்த மனிதாபிமானி. குழந்தைகள் இல்லாத நிலையில், எத்தனையோ பேரை தத்தெடுத்து படிக்க வைத்திருக்கிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் நிருபராக தனது இதழியல் வாழ்வைத் தொடங்கியவர். படிப்படியாய் உயர்ந்து தினமணியின் ஆசிரியரானாவர்.
எடிட்டர் என்ற பெயரில் ஏ.சி. அறையில் கதவைப் பூட்டிக் கொண்டு தங்கக் கோபுர ஜர்னலிஸம் செய்யாமல் நிருபர்களோடும், புகைப்பட கலைஞர்களோடும், உதவி ஆசிரியர்களோடும் கலந்து உறவாடும் ஆசிரியர் அவர்.
பிற பத்திரிக்கைகளை வரி விடாமல் படித்து அதில் தினமணி செய்தியாளர்கள் தவற விட்ட செய்திகளோடு தான் அலுவலகத்துக்கே வருவார். வந்த கையோடு தவறு செய்தவர்களை பிடி பிடித்துவிட்டுத் தான் அடுத்த வேலைக்கே போவார்.
அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இளம் பத்திரிக்கையாளர்கள் கூட தவிப்பதுண்டு. வயதை மீறிய வேகம் காட்டியவர்.
நிருபர்கள் என்றால் ஜுப்பாவும் கசங்கிய உடைகளுமாய் இருந்தாக வேண்டும் என்று (யார் கொண்டு வந்த ரூலோ, இன்னும் அதை சினிமாவில் தான் பிடித்துக் கொண்டு அழுகிறார்கள்) நியதியை தூக்கி எறிந்து மிடுக்காக இருக்க வேண்டும் என்று சட்டமே கொண்டு வந்தவர்.
தினமணியில் நான் சேர்ந்த புதிதில் செருப்புடன் அவர் அறைக்குள் நுழைய, என்னப்பா டாய்லெட்ல இருந்து நேரா இங்க வந்துட்டியா என்று கேட்டு அதிர்ச்சி தந்தார்.
அவரது தாயார் மறைந்த நேரத்தில் நான் பெங்களூர் தினமணி பதிப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அவரிடம் தொலைபேசியில் தாயார் மறைவு குறித்து விசாரித்தபோது, ஆமாம்பா.. இன்னிக்கு அங்க என்ன முக்கியமான நியூஸ், என்ன நியூஸ் பைல் பண்ண போறே என்றார் பதிலுக்கு.
வேலையில் அவ்வளவு தீவிரம் அந்த மனிதருக்கு. ஓய்வு பெறும் வரையில் வேலை.. வேலை என்றே வாழ்ந்தவர். வார விடுமுறை என்றெல்லாம் அவர் ஏதும் எடுத்ததில்லை. ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம்போல் பணியில் இருப்பார்.
பெங்களூரில் இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட ஒரு விடுதியுடன் கூடிய பள்ளிக்கு அரசின் உதவி நின்றுவிட அங்கு படித்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பசி, பட்டினியால் தவிப்பது குறித்து அவரிடம் தெரிவித்தபோது உடனே அதை மிகப் பெரிய அளவில் செய்தியாக்கச் சொன்னார்.
அவர் சொன்ன கோணத்தில் நாங்கள் வெளியிட்ட அந்த செய்திக்கு மிகப் பெரிய பலன் கிடைத்தது. கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரை நன்கொடை வந்து குவிந்தது. அதை தமிழக அரசிடம் தந்து அந்தப் பள்ளிக் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.
கடவுள், மத நம்பிக்கை இல்லாதவர் ஆர்.எம்.டி. ஆனாலும் அந்த அகதிக் குழந்தைகளுக்கு உணவளித்து உதவ பங்காரு அடிகளார் முன் வந்தபோது, அடிகளாரின் மனிதாபிமானத்தைப் பாராட்டி, நன்றி சொல்லி கடிதம் எழுதிய பண்பாளர்.
நான் வெளியூர் பதிப்பில் பணியாற்றிய நிலையில் அவரை சந்திக்கச் சென்றபோது காலை 10.45 மணிக்கு வந்தார். ஸாரிப்பா வழக்கமா 10.30க்கு வந்துருவேன். இன்னிக்கு லேட் ஆயிருச்சு என்றார்.
இதே நேரம் தவறாமையையும் ஒழுக்கத்தையும் வேலையில் அதி தீவிரத்தையும் அனைவரிடமும் எதிர்பார்த்த ஆர்.எம்.டிக்கு அபிமானிகளை விட எதிர்ப்பாளர்களே அதிகம்.
யார் என்ன நினைச்சாலும் சரி, எனக்கு வேலை தான் முக்கியம் என்பார். கோபத்தில் வார்த்தைகளை கொட்டுவார். தேள் கடித்தது போல் இருந்தாலும், யோசித்துப் பார்த்தால் நம் பக்கமே தவறு இருப்பது புரியும். அவருக்கு யார் மீதாவது கோபம் வந்தால் நீண்ட நாளைக்கு விலகாது.
நான் தினமணியை விட்டு விலகியபோது அவருக்கு வந்தது அதே போன்ற கோபம்.
என்னிடம் பேசவே மறுத்தார். அவரிடம் பேச எனக்கும் பயம்.
ஆனாலும் என்னை உருவாக்கிய ஆசானிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை.. அவரை ஒரு முறை மீண்டும் சந்தித்துவிட வேண்டும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.
ஆனால், அவரது கோபம் என்னை தடுத்தது. அவர் மறையும் வரை.
ஏ.கே.கான்
ஆசிரியர்,
தட்ஸ்தமிழ்
http://thatstamil.oneindia.in/news/2007/08/18/rmt.html
Saturday, August 18, 2007
என் ஆசான் ஆர்.எம்.டி. - ஏ.கே.கான்
Posted by முதுவை ஹிதாயத் at 9:02 PM 0 comments
தஸ்லிமாவின் விசா நீட்டிக்கப்பட்டது
தாக்குதல், கொலை மிரட்டல்களுக்கு மத்தியில் தாஸ்லிமா நஸ் ரீனின் இந்திய விசா பிப்ரவரி 2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தஸ்லிமா இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தபோதும் அரசு தற்போது விசாவை நீட்டிப்பதையே அனுமதித்துள்ளது.
Taslima's visa extended till February 2008 The Hindu
Posted by சிறில் அலெக்ஸ் at 6:08 PM 0 comments
பெண்கள் குழந்தைகளை பாதுகாக்க சட்டம்
பாலியல் கொடுமைகளிலிருந்து பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க புதிய சட்டங்களை நிறைவேற்றும் பணி துவங்கியுள்ளது. மகளிர், குழநதைகள் மேம்பாட்டு மந்திரி ரேணுகா சவுத்ரி இதுகுறித்து பேசுகையில் குழந்தைக்கள் பாலியல் கொடுமைக்கு ஆளான வழக்குகளை கையாள்வதில் தற்போது குழப்பங்கள் உள்ளது இந்த சட்டம் அவற்றை நீக்கும் என்றார்.
இவரது அமைச்சகம் அண்மையில் 12,500 சிறுவர் சிறுமியரிடம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி 53.22% ஏதேனும் ஒரு வகையில் பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருப்பதாகக் கூறியுள்ளனர். இதில் 49.92% பேர் பள்ளிகளில் பாலியல் கொடுமை நிகழ்ந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
Finally a firm move by Indian Govt. on Child Abuse - Newstrack India
Posted by சிறில் அலெக்ஸ் at 5:57 PM 0 comments
துருக்கியில் விமானக் கடத்தல்
துருக்கியில் பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இஸ்தான்புல் நோக்கி சென்றுகொண்டிருந்தா விமானத்தை இரு நபர்கள் கத்திமுனையில் கடத்தினர். விமானம் அவசரமாய் தரையிறக்கப்பட்டது. பின்னர் கடத்தல்காரர்கள் நான்குபேரைத் தவிர்த்து மற்ற பயணிகளை விடுவித்தனர்.
இறுதியில் கடத்தல்காரர்கள் சரணடைந்ததால் பெருத்த சேதமின்றி சம்பவம் முடிவுக்கு வந்தது.
Turkish plane hijackers surrender NEWS.com.au
Turkish jet hijack ends peacefully
Hijackers of Turkish plane are Iranians: report
Posted by சிறில் அலெக்ஸ் at 5:45 PM 0 comments
திருமணம் வாழ்த்து !!!
தமிழூற்று மாஹிர் திருமணம்இன்று மாலை 4 மணியளவில் அவரது சொந்த ஊரான அதிராம்பட்டினத்தில் நடைபெறுகிறது.
Posted by Adirai Media at 10:05 AM 3 comments
இணையத்தில் இன்று
கூகிள் நிறுவனம் தன் பேயரை விளம்பரத் தேடு சொல்லாக (Adwords) விற்றதற்காக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கூகிள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
American Airlines sues Google over search words - Reuters
சி.ஐ.ஏ(CIA), எஃப். பி. ஐ(FBI) கணினிகளிலிருந்து விக்கிப்பீடியா பக்கங்கள் பதிப்பிக்கப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஈராக் போர், குவாண்டானமோ குறித்த பக்கங்கள் அடக்கம்.
CIA, FBI computers used for Wikipedia edits-Reuters
ஸ்கைப் தொலைபேசி சேவை மென்பொருள் கோளாறால் நிறுத்திவைக்கப்பட்டது.
Internet phone service Skype temporarily offline Los Angeles Times, CA
பயனர் நிறைவடைதலில் யாகூ கூகிளை முந்தியது
Yahoo scores in search battle
Posted by சிறில் அலெக்ஸ் at 3:29 AM 2 comments
சில்லறைக்குப் பற்றாக்குறை
இந்தியாவில் சில இடங்களில் சில்லறைக் காசுகளுக்கு பற்றாக்குறை வந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. உலோக விலை அதிகமானதால் காசுகள் உருக்கப் படுவதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது எனவும் அறியப்பட்டுள்ளது.
விரைவில் இந்த தட்டுப்பாட்டை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுகின்றன.
Govt. admits to shortage of coins The Hindu
Posted by சிறில் அலெக்ஸ் at 12:28 AM 2 comments
'நான் இறக்க வேண்டி யாகம் செய்தனர்' - மன்மோகன் சிங்
இந்தியா டுடே பத்திரிகைக்கு பேட்டியளிக்கையில் பிரதமர் மன்மோகன்சிங், சில எதிர்கட்சி தலைவர்கள் தான் ஒரு குறிப்பிட்ட நாளில் இறந்து போக வேண்டும் என்பதற்காக யாகம் நடத்தியதாகக் கூறியிருக்கிறார். இதற்கு விளக்கமளித்து மன்னிப்புக் கோரவேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது.
மூத்த பா.ஜ.க தலைவர் விஜய குமார் மல்ஹோத்ரா கூறுகையில்,"இந்த நூற்றாண்டில் பிரதமர் இப்படி ஒரு கூற்றைச் சொல்வார் என எங்களால் இன்னும் நம்ப இயலவில்லை." என்றார்.
BJP seeks apology from PM over "havan" remarks The Hindu
Posted by சிறில் அலெக்ஸ் at 12:17 AM 0 comments
b r e a k i n g n e w s...