.

Showing posts with label சட்டம் - நீதி. Show all posts
Showing posts with label சட்டம் - நீதி. Show all posts

Sunday, September 2, 2007

ஊனமுற்றோர் இட ஒதுக்கீட்டில் சாதி உள் ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றம் மறுப்பு

மத்திய பிரதேசத்தில் பள்ளிக்கூட ஆசிரியர் பணியில் மூவர் சேர்த்துக் கொள்ளப்பட்டதை அந்த மாநில அரசு விலக்கம் செய்திருந்தது. உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென உள் ஒதுக்கீடு செய்து இவர்கள் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அரசு அறிவித்தது. இதை எதிர்த்து 3 ஆசிரியர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை உச்சநீதிமன்ற அமர்வொன்றின் நீதிபதிகள் எஸ்.பி. சின்கா, எச்.எஸ்.பெடி ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினார்கள்.

அவர்கள் தங்கள் தீர்ப்பில்

"உடல் ஊனமுற்றோருக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் சாதி அடிப்படையில் தனியாக உள் ஒதுக்கீடு அளிக்க முடியாது. பெண்களுக்கான கோட்டாவிலும் தனியாக சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க முடியாது. 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. உடல் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் இப்போது ஏற்படவில்லை
என்று கூறியுள்ளனர்.

மாலைமலர்

Saturday, September 1, 2007

குப்பையை வாரிய அதிமுக கட்சியினர் கைது

மாநகராட்சியின் குப்பை களையும் பணி முடங்கியிருப்பதால் குமியும் குப்பைகளை எடுக்க முயன்ற அதிமுக எம் எல் ஏ உட்பட அக்கட்சியினரை காவலர்கள் கைது செய்தனர். தி.நகர் எம் எல் ஏ கலைராஜன் திருவல்லிக்கேணியில் குப்பை வாரும்போது ஆவருடன் 29 கட்சியினரையும் காவலர்கள் கைது செய்தனர். இதேபோல நகரின் பலவேறு பகுதிகளில் , பெண்கள் உட்பட, 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் நலனுக்காக குப்பை வாரும் பணியை கையிலெடுத்தக் கட்சியினரை கைது செய்ததை அதிமுக தலைவர் ஜெ ஜெயலலிதா கண்டித்துள்ளார். குப்பையை களையும் பணியைக் கூட கையாள முடியாத அரசு எவ்வாறு மக்களின் குறைகளை களையப் போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

இது பற்றிய The Hindu News Update Service

மதக் கலவரம்: அலகாபாத்தில் ஊரடங்கு

நேற்று வெள்ளி இரவு கரேலி காவல்நிலைய பகுதியில் ஒரு மத வழிபாட்டுதலத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நூலொன்று இழிவுபடுத்தப்படிருந்ததை ஒட்டி துவங்கிய பிரச்சினை காவலர்களின் உறுதிமொழியை அடுத்து அடங்கியது. ஆனால் இன்று காலை காவல்நிலையத்தின் மீது ஆத்திரமடைந்த கும்பல் கல்லெறிந்து கலாட்டா செய்ததில் பன்னிருவருக்கும் அதிகமான காவலர்கள் காயமடைந்தனர். தடியடியிலும் கண்ணீர்புகையும் கூட்டத்தைக் கட்டுபடுத்தமுடியாத நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெருத்த காவலர்படையும் துணை இராணுவப்படையினரும் அமைதியை மீட்க அமர்த்தப் பட்டுள்ளனர். தவிர சாகஞ்ச், கோத்வாலி,குல்டாபாத், அதார்சுயா தூமன்க்ஞ்ச் காவல் சில பகுதிகள் என இங்கெல்லாம் ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.
மேல் விவரங்களுக்கு: Curfew imposed in Allahabad, many injured

Friday, August 31, 2007

ஜெய்ப்பூரில் பிராமணர் பந்த்

தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி பிராமணர்கள் சில நாள்களுக்கு முன்னால் ஜெய்ப்பூரில் ஊர்வலம் சென்றனர். அப்போது தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக பிராமணர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதில் பலர் காயம் அடைந்தனர்.

அதைக் கண்டிக்கவும், தங்களுக்குள்ள ஆதரவை அரசுக்குக் காட்டவும் பிராமணர்கள் புதன்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களுக்கு ஸ்ரீராஜ்புத் கர்ணி சேனா என்ற அமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது.

ஜெய்ப்பூரில் பல தொழில், வர்த்தக நிறுவனங்களும் இந்த அழைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் தங்கள் நிறுவனங்களை மூடின. ஏராளமான தனியார் பள்ளிக்கூடங்கள் விடுமுறை அறிவித்திருந்தன.

ஜெய்ப்பூர் பழைய நகரப்பகுதியில் கடைகளை மூடுமாறு பந்த் ஆதரவாளர்கள் கடைக்காரர்களை கேட்டுக்கொண்டபடியே வீதிவீதியாகச் சென்றனர்.

நகரில் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வீதிகளில் ரோந்து சுற்றிக்கொண்டிருந்தனர்.

வரலாற்றில் இருந்திராத வகையில் தங்கள் சங்கம் பந்த் நடத்தியிருப்பதாக சர்வ பிராமண சபா தலைவர் சுரேஷ் மிஸ்ரா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

முழு அடைப்புக்கு மக்கள் தாங்களாகவே முன்வந்து ஆதரவு அளித்தனர் என்று ஸ்ரீராஜ்புத் கர்ணி சேனாவின் மாநில அமைப்பாளர் லோகேந்திர கால்வி குறிப்பிட்டார்.

தினமணி

Spotlight | Jaipur strike nearly total, business affected | Indiainteracts.com
The Hindu News :: Brahmins' body calls for Jaipur bandh today
Brahmins call bandh for reservation

Thursday, August 30, 2007

நரேந்திர மோடி காரின் குறுக்கே பாய்ந்ததால் கால்சென்டர் ஊழியரை நடுரோட்டில் உதைத்த போலீசார்

அகமதாபாத் நகரில் நரேந்திரமோடி ஒரு விழாவில் கலந்து கொண்டு ஆஸ்ரம் ரோடு வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் திடீரென்று ரோட்டை கடந்தார். இதனால் நரேந்திரமோடியின் பாதுகாப்புக்கு சென்ற காரும் மற்ற கார்களும் வரிசையாக திடீர் என்று நின்றன.

உடனே போலீசார் இறங்கி அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் தனது பெயர் உசேன், தாகிர் மார்க்கெட் வாலா என்றும் கால்சென்டரில் வேலை பார்ப்பதாகவும் சொன்னார். அவர் அகமதாபாத்தில் பொற்றோருடன் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

நரேந்திரமோடி கார் சென்ற பின்பு பின்னால் வந்த காரில் இருந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து நடுரோட்டில் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, முதல்-மந்திரி காரின் குறுக்கே பாய்பவர்களை எச்சரிக்கவே இது போன்ற விசாரணையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

போலீசாரால் தாக்கப்பட்ட வாலிபர் உசேன் கூறுகையில் "ஆஸ்ரம் ரோட்டில் முதல்-மந்திரி கார் வருவது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. போக்குவரத்து மூடப்படவில்லை. இதனால் சாலையை கடந்தேன்'' என்றார். அவரது பெற்றோர் கூறுகையில் "நாங்கள் நரேந்திரமோடியை நேசிப்பவர்கள் அவரது அபிமாணிகள்'' என்றனர்.

மாலைமலர்

கட்சிகளின் போராட்டத்தால் ஆம்புலன்ஸில் இறந்த குழந்தை

சிம்லா நகரில் காங்கிரஸ் கட்சியினரும் பிஜேபி கட்சியினரும் நடத்திய பேரணிகளால் போக்குவரத்து தடைபட்டு நான்கு வயது சிறுவன் டிங்கூ சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லமுடியாமல் வழியிலேயே இறந்தான். விதான்சபை( மக்களவை) எதிரில் இருகட்சிகளுமே பேரணி நடத்த முயன்ற கூட்டத்தில் அதிக சுரத்தினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனை கொண்டுசென்ற ஆம்புலன்ஸ் மாட்டிக்கொண்டது. காவலர்கள் இலேசான தடியடி செய்தே மக்களவை அங்கத்தினர்களை கலைக்க முடிந்தது.

இது பற்றி:While Cong, BJP fight, boy dies in ambulance

Wednesday, August 29, 2007

ஆக்ராவில் வன்முறை: ஊரடங்கு சட்டம் அமல்


ஆக்ராநகரில் ஷப்-இ- பாராத் ஊர்வலம் சென்று கொண்டிருந்த ஒரு கும்பலின் மீது லாரி ஒன்று மோதி நான்குபேர் பலியானதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கூட்டம் நடத்திய வன்முறையில் இருபது லாரிகள் வரை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவை நாய்கி மண்டி மற்றும் மன்டோலா பகுதிகளில் அமல்படுத்தியுள்ளது. நகர பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.


Voilence in Agra, curfew imposed

Tuesday, August 28, 2007

நாரீகாவை நாடுகடத்த நீதிபதி ஒப்புதல்

பனாமாவின் முன்னாள் தலைவர் மானுவல் நாரீகா (Manuel Noriega)வை ஃபிரான்சுக்கு நாடுகடத்த அமெரிக்க நீதிமன்றம் சம்மதித்திருக்கிறது. அடுத்த மாதத்துடன் தன்னுடைய ஃப்ளோரிடா சிறைவாசத்தை 73 வயதாகும் நாரீகா நிறைவு செய்கிறார்.

பணமாற்றுதலில் (money-laundering) மோசடி செய்ததற்காக பத்தாண்டு வரை ஃபிரான்சில் தண்டனை கிடைக்கலாம். போதைப்பொருள் கடத்தியதற்காக 1992 முதல் அமெரிக்காவின் மியாமி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

BBC NEWS | Americas | Judge agrees Noriega extradition
America's tyrant | Special reports | Guardian Unlimited: "Manuel Noriega ruled Panama as a favourite of Washington until his dictatorial excesses and green light for cocaine trafficking became too much"

மனித உரிமைகள்: எங்கே செல்கிறோம்?

பிஹாரின் பகால்பூர் மாவட்டத்தில் நாத்நகரில் கோவில் அருகே சாமி கும்பிட வந்த சாந்திதேவி என்பவரிடமிருந்து தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட முயன்ற முகமது ஔரங்கசீப் என்ற திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்ததும் இல்லாமல் காவல் துணை ஆய்வாளரே தனது மோட்டார்சைக்கிளில் கட்டி தரையில் இழுத்துச் சென்ற நிகழ்ச்சி நடந்தேறியிருக்கிறது. இந்த சம்பவத்தை தொலைக்காட்சி ஊடகங்கள் வெளிக்கொணர்ந்தபோது பகால்பூரின் டிஐஜி சர்மா காவலர்கள் பொதுமக்களிடமிருந்து திருடனைக் காப்பாற்றியிருப்பதை ஊடகங்கள் எதிர்மறையாகவே காட்டுகின்றன என்றார். மோட்டார் சைக்கிளில் தப்பியோடாமல் இருப்பதற்காக கட்டப்பட்டிருந்த ஔரங்கசீப் சாலை மேடுபள்ளத்தினால் தடுமாறி கீழே விழுந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறான் என்றார்.

DNA - India - Man brutally thrashed by crowd for petty theft - Daily News & Analysis

Monday, August 27, 2007

தா.கிருட்டிணன் கொலைவழக்கு ஆந்திராவிற்கு மாற்றப்பட்டது

முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கை, மதுரையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு மாற்றி உச்சநீதமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன், மதுரையில் வாக்கிங் போன நேரத்தில் திமுகவைச் சேர்ந்தவர்களால் கொடூரமாக வெட்டிக் ெகால்லப்பட்டார். திமுகவில் ஏற்பட்ட கோஷ்டிப் பூசல் காரணமாகவே இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது.

இந்தக் கொலை வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ஆனால் இந்த வழக்கில் கைதான அனைவரும் தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.

இந் நிலையில் கொலை வழக்கில் முக்கிய சாட்சியும், முதல் சாட்சியுமான முத்துராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மு.க.அழகிரி அரசியல் பலம் கொண்டவர்.

எனவே இந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் நியாயம் கிடைக்காது, சாட்சிகளின் உயிருக்கும் உத்தரவாதம் கிடைக்காது. எனவே இந்த வழக்கை மதுரையிலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் அசோக் பான் மற்றும் சிர்புர்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், வழக்கை மதுரையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்: Ta.Krittinan murder case transfered to Andra

பத்துஆண்டுகளாக நடந்த பணமோசடி வழக்கிலிருந்து ஹேமமாலினி விடுதலை.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற இடத்தில் 1997-ம் ஆண்டு ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு ஆடுவதற்கு நடிகை ஹேமமாலினி ஒப்புக்கொண்டார். இதற்காக நிகழ்ச்சி அமைப்பாளர் சுரேஷ் குல்ஜாரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கி இருந்தார்.

ஆனால் அவர் ஒப்புக் கொண்டபடி அந்த நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை. அட்வான்ஸ் தொகையையும் திருப்பித் தரவில்லை.

இதையடுத்து சுரேஷ் குல்ஜார் ஹேமமாலினி மீது கோட்டா கோர்ட்டில் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, பாதுகாப்பு காரணங் களுக்காகத்தான் அந்த நாட்டிய நிகழ்ச்சியில் ஹேமமாலினி கலந்து கொள்ளவில்லை. அந்த நிகழ்ச்சியை மாவட்ட அதிகாரிகள் ரத்து செய்து விட்டனர்.

இதனால் ஹேமமாலினி மீதான வழக்கை தள்ளுபடி செய்கிறேன்'' என்று கூறினார். இதையடுத்து பண மோசடி வழக்கில் இருந்த ஹேமமாலினி விடுவிக்கப்பட்டார்.

இது பற்றி ஹேமமாலினி கூறும்போது:-

"மோசடி வழக்கில் இருந்து நான் விடுவிக்கப்பட்டதை அறிந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. இது பற்றி நான் வேறுஎதுவும் சொல்ல விரும்பவில்லை'' என்றார்.

மாலைமலர்

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம்

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம்
ரயில்வேயை அலற வைத்த 'பொது ஜனம்'


சாத்தான்குளம்: லஞ்சம் தராததால் தன்னை பாதி வழியில் இறக்கிவிட்ட டிக்கெட் பரிசோதகரையும் அவர் மீது நடவடிக்கை எடுக்காத தென்னக ரயில்வேயையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அலற வைத்துள்ளார் ஒரு திருவாளர் பொதுஜனம்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஹென்ஸ் குமார் கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி திருச்சூர் செல்ல குருவாயூர் எக்ஸ்பிரஸில் ரயிலில் முன் பதிவு செய்தார். அவருக்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கிடைத்தது.

பயண தினத்தன்று ரயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட்டைக் காட்டி விபரம் கேட்டார். அதற்கு அவர் நாகர்கோவிலில் உங்களுக்கு பெர்த் கிடைக்கும் என்று கூறியதால் ஹென்ஸ் குமார் ரயிலில் ஏறினார்.

நாகர்கோவில் வந்ததும் டிக்கெட் பரிசோதகர், உங்களுக்கு பெர்த் உறுதியாகிவிட்டது. ஆனால், ரூ. 100 (லஞ்சம்) தந்தால்தான் பெர்த் தரப்படும் என்றார்.

என்னிடம் பணம் இல்லை என்று ஹென்ஸ் குமார் கூறியதையடுத்து அவரை டிக்கெட் பரிசோதகர் வலுக்கட்டாயமாக அடுத்த ஸ்டேசனில் இறக்கிவிட்டார்.

இது குறித்து ஹென்ஸ்குமார் சென்னையில் உள்ள தென்னக ரெயில்வே மேலாளருக்கு புகார் அனுப்பியும் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

இதையடுத்து தனது புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டம் (Right to information act) மூலம் அறிந்து கொள்ள விரும்புவதாகக் தென்னக ரெயில்வேக்கு கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து சிக்கலில் மாட்டிய தென்னக ரயில்வே அதிகாரிகள் உடனடியாக டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் ஹென்ஸ் குமாரை நேரில் சந்தித்த அந்த டிக்கெட் பரிசோதகர், மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு புகாரை வாபஸ் பெறுமாறும் கெஞ்சியுள்ளார்.

அந்த டிக்கெட் பரிசோதகரின் வேலை காலியாகும் நிலை ஏற்பட்டதால் ஹென்ஸ் குமாரும் மனமிறங்கி தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது மிகப் பெரிய ஆயுதம். அதை நாம் சரியாக பயன்படுத்தினால் தவறு செய்யும் அரசுத்துறையினரை அலற வைக்க முடியும்.

www.thatstamil.com

ஜெர்மானிய பெண்ணுக்கு 53 லட்சம் நஷ்டஈடு

11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் கையை இழந்த ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணுக்கு ரூ.53 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டை சேர்ந்த குந்தா நீயுபர் (Gunda Neubauer) ,53 என்ற பெண் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். பஸ்ஸில் அவர், உதய்பூரில் இருந்து மவுண்ட் அபுவிற்கு சென்ற போது பஸ் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் நீயுபர் தனது வலது கையை இழந்தார்.

இதனால் அவர் ஜெர்மனியில் பார்த்து வந்த வேலையை இழக்க நேரிட்டது. இதனையடுத்து ரூ.11.67 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டுமென கோரி தில்லியில் உள்ள ஜெர்மன் துதரகத்தின் மூலம் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்தார்.

இதற்கான நஷ்டஈடு தொகையை வழங்குவதற்கு பஸ்சை விபத்துக்குள்ளாக்கிய டிரைவரும், கண்டக்டரும் தான் பொறுப்பு. எனினும் அவர்களுக்கு பதிலாக பஸ் காப்பீடு செய்யப்பட்டுள்ள நிறுவனம் அந்த பெண்ணுக்கு ஒரு மாதத்திற்குள் ரூ. 53 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

தினமணி

The Hindu News :: German national gets Rs 53 lakhs for loss of limb in accident

Saturday, August 25, 2007

சல்மான்கான் கைது: ஜோத்பூர் விமானநிலையத்தில்

1998இல் நடந்த சிங்காரா மான் வேட்டை வழக்கில் தனது பிணைமனு நிராகரிக்கப்பட்ட பின்னர் காவலர்களிடம் சரண் அடைவதற்காக ஜோத்பூர் வந்த இந்தி நடிகர் சல்மான்கானை விமானநிலையத்திலேயே கைது செய்தனர்.

முன்னதாக தனது குடும்பத்தினருடனும் வழக்கறிஞருடனும் காலை 1130 மணி ஜோத்பூர் விமானத்தில் புறப்படவிருந்த சல்மான் நிருபர்களிடம் பேசும்போது தன்மீது பிணையில் எடுக்கமுடியாத கைது ஆணை பிறப்பிக்கபட்டிருப்பதால் தனது சட்ட ஆலோசகர்கள் சரண் அடையுமாறு அறிவுறுத்திருக்கிறார்கள் எனக் கூறினார். ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகனாக நானே அங்கு சென்று சரண் அடைவேன் என்றும் மேலும் கூறினார்.


Salman Khan arrested at Jodhpur airport-Politics/Nation-News-The Economic Times

Thursday, August 23, 2007

தலையில் விழுந்த சூட்கேஸ்-ரூ.1 லட்சம் நஷ்டஈடு தர ஏர்-இந்தியாவுக்கு உத்தரவு

விமானம் தரையிறங்கும் போது லக்கேஜ் பகுதியில் இருந்து பெட்டி ஒன்று பயணியின் தலையில் விழுந்ததற்காக அவருக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு கொடுக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம், 7 வருடங்களுக்கு பின்பு தற்போது உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் தலையில் பெட்டி விழுந்ததற்கு இதுவரை ரூ.45,000 செலவழித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

விமானத்திற்குள் பயணிகள் எடுத்து செல்லும் ஹேண்ட் லக்கேஜ் 5 கிலோவுக்குள் இருக்குமாறு விமான நிறுவனங்கள் பார்த்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இது மாதிரியான அசம்பாவிதங்கள் நிகழ்வதை தவிர்க்கமுடியும் என்று அறிவுரை கூறி தீர்ப்பளித்தனர்.

தட்ஸ்தமிழ்: Passenger to get 'damage' money from Air-India

சஞ்சய்தத் ஜாமீனில் விடுதலை ஆனார்.

சஞ்சய் தத் இன்று காலை ஜாமீனில் விடுதலை ஆனார். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாக சஞ்சய்தத்தை ஜாமீனில் விடுதலை செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சஞ்சய் தத்திற்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீன் நகலை தயார் செய்ய தாமதமானதால் நேற்று விடுதலை ஆக வேண்டிய அவர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் அவரை சிறை வாசலில் வந்து அழைத்து சென்றனர். இன்னும் ஒருமாத காலத்திற்கு அவர் வெளியே இருப்பார் என தெரிகிறது.

Wednesday, August 22, 2007

சிபு சோரென் விடுதலை:சிபிஐ தலைகுனிவு

கொத்ரோக்கியை கோட்டைவிட்ட சிபிஐயிற்கு மற்றுமொரு ஏமாற்றமாக தில்லி உயர்நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சொரெனை அவரதி தனிச்செயலர் சசிநாத் ஜாவை கொலைசெய்த குற்றத்திலிருந்து போதிய சாட்சிகள் இல்லாததால் விடுவித்தது. கீழ்நீதிமன்றம் வித்திதிருந்த ஆயுள்தண்டனையை இரத்துசெய்த நீதியரசர்கள் ஆரெஸ் சோதி மற்றும் எஹ் ஆர் மல்ஹோத்ரா அடங்கிய பென்ச் சிபிஐயின்சாட்சிகளை காட்டமுடியாத 'இயலாமை'யை மிகவும் மோசமாக எடுத்துரைத்தது. அவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற நால்வரையும்-- நந்தகிஷோர் மேத்தா, சைலேந்திர
பட்டாசார்யா,பசுபதிநாத் மேத்தா, அஜய்குமார் மேத்தா-- அதே காரணங்களால் விடுதலை செய்தது.

The Hindu News Update Service

மும்பையில் பதின்மவயது சிறுவன் கொலை


பதினாறு வயது அத்னன் பத்ரவாலாவின் கொலை மும்பைநகரையே கலக்கிக் கொண்டிருக்கிறது. சனிக்கிழமையன்று காணாமல்போன சிறுவனின் பெற்றோருக்கு ரூ.இரண்டு கோடி கேட்டு வந்த தொலைபேசி அழைப்பின் பின்னரே அது ஒரு கடத்தல் முயற்சி எனத் தெரியவந்தது. அவன் 'ஆர்குட்' தளம் மூலம் அறிமுகமான நண்பர்களால் கடத்தப் பட்டதும் பின் செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து பீதியடைந்த பதின்மவயது குற்றவாளிகள் அவனைக் கழுத்தை நெறித்து கொலை செய்ததும் நேற்றும் இன்றும் ஊடகங்களில் பேரிடத்தை எடுத்துக் கொண்டுள்ளன. சமூக கூட்டமைப்பு தளங்களான ஆர்கூட், மைஸ்பேஸ், ஃபேஸ்புக் முதலியவற்றின் தாக்கம் குறித்து பல விவாதங்கள் நடத்தப் படுகின்றன.

கைது செய்யப்பட்டுள்ள மூவரில் 28 வயதான சுஜித் நாயர்தான் இச்சதியின் இயக்குவிசையென காவலர்கள் கருதுகின்றனர். முன்னாள் BPO ஊழியரான இவர் கடந்த ஒரு வருடமாக வேலை ஏதும் இன்றி இருந்திருக்கிறார். பிணைப்பணத்துடன் துபாய்க்கு தப்பியோட திட்டமிட்டிருந்தார்.ஆனால் பதின்ம வயது கூட்டாளிகள் பயந்து அத்னனுக்கு தூக்கமாத்திரைகளைக் கலந்து மது கொடுத்து பின்னர் கழுத்து நெரித்து கொன்றுள்ளனர்.

ஆனால் இரு சிறுவர்களின் பெற்றோர்கள் தங்கள் மக்கள் தவறிழைக்க வாய்ப்பேயில்லை என ஊடகங்களில் கூறிவருகிறார்கள். சிலமாதங்கள் முன் பதின்ம வயது சிறுவன் கையில் ஸ்கோடா காரைக் கொடுத்து நடைபாதை மக்களை வதம்செய்த மும்பையில் பொறுப்பற்ற பெற்றொர்களின் மற்றுமொரு அத்தியாயமே இது.
NDTV.com: New angle emerges in Adnan murder case

DNA - Mumbai - Adnan murder: 3 sent to cop custody - Daily News & Analysis

மருத்துவர் ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியா செல்கிறார்

லண்டன் மற்றும் கிளாஸ்கோ விமான நிலைய கார் குண்டு சம்பவங்களைத் தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் ஹனீப் கைது செய்யப்பட்டார்.அவரது ஆஸ்திரேலிய நுழைமதியும் தடை செய்யப்பட்டது. ஒரு மாத கால சிறைவாசத்துக்கு பிறகு ஹனீப் குற்றமற்றவர் என்று கூறி அவரை ஆஸ்திரேலிய நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதைத்தொடர்ந்து இந்தியா வந்த ஹனீப், தான் மீண்டும் ஆஸ்திரேலியா சென்று பணியாற்ற விரும்புவதாகவும், தடை செய்யப்பட்ட தனது நுழைமதியை மீண்டும் தர வேண்டும் என்றும் கோரினார். இதுதொடர்பாக ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் ஹனீப் தொடர்ந்த வழக்கில் ஹனீப்புக்கு மீண்டும் நுழைமதி வழங்குமாறு உத்தரவானது. இதையடுத்து அவர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை குயின்ஸ்லாந்து சுகாதார அமைச்சர் ஸ்டீபன் ராபர்ட்சன் உறுதிபடுத்தியுள்ளார்.

Tuesday, August 21, 2007

தமிழகம்: நுழைவு வரியை எதிர்த்து வழக்கு.

வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் வெண்சுருட்டு (சிகரெட்),
பளிங்குகல் (கிரானைட்)) போன்ற பொருட்களுக்கு தமிழக அரசு நுழைவு வரி விதித்தது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எனவே 32 வகை பொருட்களுக்கு நுழைவு வரி விதித்தது செல்லாது என்று தீர்ப்பு வந்தது ஆனாலும் வழக்கில் சம்பந்தப்படாத நிறுவனங்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டு வந்தது.

இதை எதிர்த்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பாணை அனுப்ப நீதிபதி மணிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...