.

Monday, March 26, 2007

அதிர்ச்சித்தோல்விகள் தொடர்கின்றன

சோனி எரிக்சன் ஓப்பன் 3.45 மில்லியன் டாலர் மொத்தப் பரிசுத்தொகைக்கான டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் மயாமி நகரில் நடந்து வருகிறது.

இதன் மூன்றாம் சுற்று ஆட்டங்கள் இன்று நடந்து வருகின்றன.


நான்காம் நிலை வீரர் ரஷ்யாவின் நிக்கோலாய் டாவிடென்கோ , அமெரிக்க நாட்டின் அறிமுக நிலை வீரரான அமெர் டெலிக்கிடம் 6-7,3-6 என்ற செட் கணக்கில் தோற்றுப்போனார்.

முன்னதாக நேற்று நடந்த ஆட்டங்களில் ஐந்தாம் நிலை ஆட்டக்காரர் சிலி நாட்டின் ஃபெர்ணாந்தோ கன்ஸாலஸ், பிரான்சு நாட்டின் வீரரான பால் ஹென்ரி மாத்யூவிடம்
6-3,7-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்றுப்போனார்.

உலகின்முதல் நிலை ஆட்டக்காரர் சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரர் இன்று ஸ்பெயின் நாட்டின் நிக்கோலஸ் அல்மாக்ரோவிடம் மோத உள்ளார்.


சோனி எரிக்சன் , ஏடிபி டென்னிஸ்

சற்றுமுன்: விஜயகாந்த் திருமண மண்டபம் இடிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி

விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடிப்பதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பிரேமலதா மேல் முறையீடு செய்தார்
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் எச்.கே.சீமா, எல்.எஸ்.பாண்டா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், மண்டபத்தை இடிப்பதற்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

மேலும், கோயம்பேடு சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலம் கட்ட வழி விடும்படி அறிவுரை கூறியது.

இதையடுத்து, "மண்டபத்தை ஒப்படைக்க ஒரு வாரம் கால அவகாசம் தர வேண்டும்' என பிரேமலதா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விசுவநாத அய்யர் கேட்டார். அதை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை.

- தினமலர்

சற்றுமுன்: கனடா பட்ஜெட் - அறிவியலுக்கு கிடைத்த வரம்.

கனடா அரசாங்கம் அறிவியலுக்கு சுமார் $9.2 billion ($7.82 billion U.S.) பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளது. இது அறிவியலுக்கு கிடைத்த வரம். இதன் மூலம் அறிவியல் வளர்ச்சி பெறும் என நம்பப்படுகிறது.

"செய்தி: SCIENCEMAG.ORG"

சற்றுமுன்: அபாயகரமான பெண் நரிகள் குளோன் செய்யப்பட்டது.


அபாயகரமான பெண் நரிகள் குளோன் செய்யப்பட்டுள்ளதாக தென் கொரிய ஆராயச்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005 அக்டோபர் மாதம் இவை குளோன் செய்யப்பட்டதாகவும் தற்பொழுது ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

"Discovery News"

சற்றுமுன்: குடும்ப டி.வி. வருமான கணக்கை தர தயாரா? கருணாநிதிக்கு ஜெ சவால்

கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள "சன்' குழும டி.வி.க்களின் வருமான கணக்கை அளிக்கத் தயாரா என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சவால் விடுத்துள்ளார்.

"மாலைச் சுடர் முழு செய்திக்கு இங்கே செலுங்க.."

சற்றுமுன்: சச்சின் மாதிரி உள்ளவரா விடாதே பிடி, அடி

சச்சின், ஷேவாக், டோனி போன்ற கிரிக்கெட் வீரர்கள் போன்று முகத்தோற்றம் உடையவர்கள் ஓடி ஒளிய வேண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கிரிக்கெட் வீரர்களை போன்ற உருவம் உடையவர்கள் அவ்வப்போது தொலைக்காட்சிகள் மற்றும் உள்ளூர் விழாக்களில் தோன்றி ரசிகர்களின் கரகோஷத்தை பெற்று வந்தனர்.

ஆனால் இன்று அவர்களின் நிலைமை கவலைக் கிடமாக உள்ள தாகவும், பொதுமக்களுக்கு பயந்து ஓடி ஒளிய வேண்டி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. குஜராத்தை சேர்ந்தவர் யோகேந்திர ஷா, இவர் இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக்கை போன்ற முகத்தோற்றம் உடையவர். இதனால் "ஜி' டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுள்ளார். இந்திய அணி இலங் கையிடம் தோல்வி யுற்றதால் இவரது தெருவில் வசிப்பவர்கள் இவரை ஷேவாக் என்று நினைத்து அடிக்க வருவதாக கூறுகிறார்.

அதேபோன்று ஐதராபாத்தில் வசிக்கும் சுரேஷ் ரத்தோர் பார்ப்பதற்கு சச்சின் டெண்டுல்கர் போல தோற்றமளிப்பார். முகேஷ் பட்டேல் என்பவர் விக்கெட் கீப்பர் டோனியை போன்று பார்ப்பதற்கு இருப்பார்.

இவர்கள் இருவரையும் பகுதிவாழ் மக்கள் தற்போது வெறுப்புடன் பார்ப்பதாகவும், வசைபாடுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஏச்சுக்கு பயந்து இவர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு வேறு பகுதிகளுக்கு செல்ல முடிவெடுத் துள்ளனர். இந்திய அணியின் தோல்வி யார் யாரை எல்லாம் எப்படி எப்படியெல்லாம் பாதிக்கிறது.

- மாலைச் சுடர்

சற்றுமுன்: அமிதாப், ஜானி டெப் மீரா நாயரின் படத்தில்

மீரா நாயர் 'தெ நேம்சேக்' (The Namesake) படத்துக்கு அடுத்ததாக ஷந்தரம் எனும் படத்தை இயக்கவிருக்கிறார். கிரகரி டேவிட் ராபர்ட் என்பவரின் நாவல் இது.

இந்தப்படத்தில் டானாக(Don) அமிதாப்பும், மும்பை சேரிகளில் திடீரெனத் தன்னை உணரும் போதைக்கு அடிமையான வெளிநாட்டவராய் ஜானி டெப்'ம்(Johny Depp) நடிக்கவுள்ளனர்.

மற்ற மீரா நாயர் படங்களைப்போலால்லாமல் பெரிய பட்ஜட் படமாக இது அமையும் என மீரா நாயர் தெரிவித்திருக்கிறார்.

Mira Nair ropes in Bachchan, Depp for next movie

தமிழகத்தில் மக்களவை, சட்டப் பேரவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு முன்வரைவு பட்டியலை திரும்ப பெறக் கோரி ஏப். 22 முதல் போராட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி

மதுரை, மார்ச் 26: தமிழக நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு முன்வரைவுப் பட்டியலை திரும்பப் பெறுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி ஏப்ரல் 22 முதல் போராட்டம் நடைபெறும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்:

"30 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட தொகுதி சீரமைப்பில் தமிழகத்தில் இதுவரையிலும் 30 மாவட்டங்களிலும் பரவலாக 7 மக்களவை தனித் தொகுதிகள் இருந்தன. தற்போதைய வரைவுப் பட்டியலில் வட தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் மட்டும் தனித் தொகுதிகள் உள்ளடங்குமாறு செய்யப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள தேவேந்திர குல வேளாளர்கள், மேற்கு மாவட்டங்களில் உள்ள அருந்ததியர் இன மக்கள் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளைப் பெறமுடியாத வகையில் நாடாளுமன்றத் தனித் தொகுதிகள் பட்டியலிலிருந்து பறிக்கப்பட்டுள்ளன.

தற்போது

  • காஞ்சிபுரம்,
  • நாகப்பட்டினம்,
  • சிதம்பரம்,
  • விழுப்புரம்,
  • கள்ளக்குறிச்சி,
  • கடலூர்,
  • திருவள்ளூர்
ஆகிய தொகுதிகள் வரைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இது இரு மாவட்டங்களில் தலா இரு தொகுதிகள் இடம்பெற்றிருப்பதைக் காட்டுகிறது. எனவே, வெளியிடவுள்ள மறு சீரமைப்பு முன் வரைவுப் பட்டியலைத் திரும்பப் பெற வேண்டும். மாவட்ட, ஒன்றிய அளவில் தாழ்த்தப்பட்ட மக்களில் உள்ள உள்பிரிவு சாதிகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதன்பின் மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளவேண்டும்.

ஏற்கெனவே உள்ள
  • தென்காசி,
  • பொள்ளாச்சி,
  • ராசிபுரம்,
  • பெரம்பலூர்
போன்ற தொகுதிகள் தனித் தொகுதிகளாக நீடிக்க வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டப் போராட்டம் நடத்த தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர் அமைப்பு உள்ளிட்ட கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது."

Dinamani

சற்றுமுன்: நந்திகிராம்: சிபிஐ விசாரணை நிறுத்தி வைத்தது உயர்நீதிமன்றம்

மார்ச் 14இல் நடந்த நந்திகிராம் துப்பாக்கிச்சூடு பற்றிய சிபிஐ விசாரணையை தொடர மறுத்து கொல்கொத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. புலானாய்வு துறை இதுவரை கண்ட ஆதாரங்களை சீலிட்ட உறைகளில் வைத்திருக்குமாறும் உத்தரவிட்டது. முன்னதாக கொல்கொத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஊடக செய்திகளின் அடிப்படையிலும் ஆளுநரின் அறிக்கையை கொண்டும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மேல் விவரங்களுக்கு The Hindu News

மஞ்சுநாத் வழக்கில் பிகே மிட்டலுக்கு தூக்கு

இன்று மஞ்சுநாத் கொலைவழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப் பட்டது. முதல் குற்றவாளியான பெட்ரோல் பங்கு உரிமையாளர் பவன் குமார் மிட்டலுக்கு தூக்கு தண்டனை வழங்கப் பட்டுள்ளது.மற்ற ஏழு குர்றவாளிகளுக்கும் மாவட்ட நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


மேலும். Zee News -

ஸ்ரீலங்காவில் புலிகள் தாக்குதல் குறித்து இந்திய அரசு கவலை

இன்று கொழும்பு விமானநிலயத்தின் மீது நடந்த வான்புலிகளின் தாக்குதல் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக ஒரு போராட்டக் குழு இத்தைகைய வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. முல்லைத்தீவு படைத்தளத்திலிருந்து கொழும்புவரை சென்று தாக்குதலை நடத்தி பத்திரமாக மீளவும் முடிந்திருக்கிறது என்றால் தமிழகத்தின் பல பகுதிகளை புலிகள் எளிதாக தாக்க முடியும். இருப்பினும் அவர்களால் தமிழகத்திற்கோ இந்தியாவிற்கோ உடனடி அபாயம் எதுவும் இல்லை என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


மேலும்..DNA - India

சற்றுமுன்: சினிமா: நடிகை இரம்பா போஜ்பூரி படங்களின் புது ஸ்டார்


தமிழ்படங்களில் நடித்த நடிகை ரம்பா தற்போது பாட்னாவில் போஜ்பூரி படங்களில் வெற்றிநடை போடுகிறார்.


இது பற்றிய செய்தி..

சற்றுமுன் : வீரர்களின் வீடுகளை தாக்க வேண்டாம்: கபில்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்ததற்காக இந்திய வீரர்களின் வீடுகளை தாக்க வேண்டாம் என்று கபில்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கோல்கட்டாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விளையாட்டில் இதுபோன்ற தோல்விகள் உண்டாவது இயல்பானது. இதற்காக ரசிகர்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது என்றார். தோல்விகாக கிரிக்கெட் வீரர்களின் வீடுகளை ரசிகர்கள் தாக்கக்கூடாது என்ற கபில், இது தவறான செயல். வீரர்கள் தேடித்தந்துள்ள வெற்றியை ரசிகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

சற்றுமுன்: கட்டுனாயக்க இராணுவ விமானத்தளத்தில் வான்புலிகள் தாக்குதல்

மார்ச் 26, 2007 - இன்று அதிகாலை, தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகள் பிரிவு, கொழும்புக்கு அருகில் அமைந்த கட்டுனாயக்க இராணுவ விமாளத்தளத்தின் மீது வான் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியது. இது வான்புலிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள முதல் அதிகாரப்பூர்வத் தாக்குதலாகும். இதனால், வான்புலிகள் அமைப்பு இருப்பது உறுதிப்படுகிறது. இதில் இருவர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை நடத்த இரண்டு இலகு ரக விமானங்களை வான்புலிகள் பயன்படுத்தி உள்ளனர். இலங்கை விமானப் படையின் தாக்குதல் திறத்தை குறைப்பதற்காக இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.

மேலும் அறிய -

TimesNow.tv

சற்றுமுன்:பங்ளாதேஷில் பறவைக்காய்ச்சல்

பங்ளாதேஷில் பறவைக் காய்ச்சல்(Bird Flu) பரவியுள்ளதாகத் தெரிகிறது. அங்குள்ள பண்ணைகளிலிருந்து சுமார் 5,600 கோழிகள் கொன்றழிக்கப்பட்டன.

Bird flu detected in Bangladesh, 5600 chickens killedPeople's Daily Online - 23 Mar 2007
Bird flu enters Bangladesh Financial Express.bd
Bangladesh says detects bird flu in poultry Reuters India

நாய் வாலை நிமிர்த்த முடியும்




சேலம: தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் பல்துறை விளக்க கண்காட்சி கடந்த எட்டு நாட்களாக சேலம் போஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று மாலை இதில் நாய் கண்காட்சி நடந்தது. சேலம் மேயர் நகரை சேர்ந்த சத்யா என்பவர் தனது நாயை காட்சிக்கு கொண்டு வந்திருந்தார். இந்த நாயின் வால் நிமிர்ந்திருந்தது கண்டு பலரும் ஆச்சரியமடைந்தனர்.

இது குறித்து சத்யா, எனது நண்பர் நாய் வாலை நிமிர்த்த முடியுமா என சவால் விட்டார். சாவலில் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்தேன். அதற்காக நாய்க்கு தினமும் பயிற்சி அளித்தேன். முதலில் நாய் வாலை நிமிர்த்த ‘ஸ்டேக்‘ (சிறு நாடா) கட்டி வைத்தேன். தினமும் 10 நிமிஷம் வாலை நீவி விட்டேன். 7 மாத கால பயிற்சிக்கு பின் நாய் வால் நிமிர்ந்து விட்டது.

-o❢o-

b r e a k i n g   n e w s...