.

Sunday, June 10, 2007

சென்னையில் 25-ந்தேதி சந்திரமுகி படம் 800-வது நாள் விழா: கருணாநிதி, ரஜினிகாந்த் பங்கேற்பு

விரைவில் சந்திரமுகி படம் 800-வது நாளை தொட்டு புதிய சாதனை படைக்க இருக்கிறது. தியாகராஜ பாகவதர் நடித்த "அரிதாஸ்'' படம் 784 நாட்கள் (112 வாரங்கள்) நாட்கள் ஓடியதே தென் இந்திய படங்களில் சாதனையாக இருந்தது.

சந்திரமுகியின் படத் தின் 800-வது நாள் விழா வருகிற 25-ந்தேதி கொண்டாடப் படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள முதல் அமைச்சர் கருணாநிதி ஒப்புதல் அளித்து உள்ளார். தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒருங்கிணைந்து சந்திரமுகியின் 800-வது நாள் விழா கொண் டாடப்படுகிறது.

மாலை மலர்

82 வயதாகும் கம்யூனிஸ்ட் தலைவர் பரதன் அரசியலுக்கு ஓய்வு

தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளராக இருப்பவர் ஏ.பி. பரதன் 82 வயதாகும் இவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஐதராபாத்தில் அகில இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அவர் பதவி விலகலை அறிவிக்கிறார். அவருக்கு பதில் மூத்ததலைவர்களான

  • எஸ்.சுதாகர்ரெட்டி,
  • சி.கே.சந்திரப்பன்,
  • குருதாஸ் குப்தா,
  • நந்த கோபால் பட்டாச்சார்யா
ஆகியோரில் ஒருவர் பொது செயலாளராக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

1996-ல் பொது செயலா ளராக இருந்த இந்திரஜித்குப்தா ஐக்கிய முன்னணி அரசில் உள்துறை மந்திரியாக பொறுப்பேற்றதால் அவருக்கு பதில் ஏ.பி.பரதன் பொதுசெயலாளர் ஆனார். தற்போது 82 வயதானதால் முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளார்.

மாலைமலர்

சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகை ராணி முகர்ஜி- நடிகர் ஹிருத்திக்ரோஷன்

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சேர்ந்து `சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி' என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய திரைப்பட விழா நடத்தி விருது வழங்குகிறார்கள். இதன் 8-வது திரைப்பட விழா இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷயர் நகரில் நடந்தது.

இதில் சிறந்த படம், டைரக்டர், நடிகர், நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சிறந்த படமாக ரங்தே பசந்தி தேர்வு செய்யப்பட்டது. லகேரகோ முன்னாபாய் படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹீரானி சிறந்த டைரக்டராக தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த நடிகராக `கிரிஸ்' படத்தில் நடித்ததற்காக ஹிருத்திக்ரோஷன் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகையாக `கபி அல்விதா நா கேனா' படத்தில் நடித்த ராணி முகர்ஜி தேர்வு செய்யப்பட்டார். ஷோகா அலிகானுக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்தது

1. மாலைமலர்
2. BBC NEWS | Entertainment | Thousands cheer Bollywood stars: "Actors Aishwarya Rai and Abhishek Bachchan have been cheered by thousands of fans at Indian cinema's leading awards ceremony."
3. BBC NEWS | South Asia | Bollywood brightens up Yorkshire: "So Bollywood has arrived in Yorkshire, northern England - and with it lavish amounts of glamour, excitement, embarrassment and security."

சேலம் சிறையில் அதிமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம்

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் மாரடைப்பால் சனிக்கிழமை அதிகாலையில் இறந்தார். இதையொட்டி சிறை முன்பு ஏராளமான அதிமுகவினர் கூடினர். சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரையும் விடுதலை செய்ய வேண்டும் என சிறை வளாகத்துக்குள் இருந்த கட்சியினர் வலியுறுத்தினர். இதனால் சுகுமாரன் சடலத்தை, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது தாமதமானது.

சேலம் மாநகர எம்ஜிஆர் மன்ற இணைச்செயலர் எம். சுகுமாரனுக்கு (52) சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் சுகுமாரன் திடீரென்று இறந்தார்.

சுகுமாரின் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்; உடனடியாக அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கவில்லை, சிறையில் உள்ள தங்கள் அனைவரையும் விடுதலை செய்து அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி அங்கு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு கூடியிருந்த அதிமுகவினரை முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி அமைதிப்படுத்தினார். பின்னர் அரசு உத்தரவுப்படி, சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அதிமுக புகார்: சேலம் சிறையில் இருந்த சுகுமாரனுக்கு நெஞ்சு வலி என அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும், உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லை. அதனால் அவர் மரணமடைய நேர்ந்தது. இதற்குச் சிறை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று மாநகர அதிமுக செயலாளர் வெங்கடாசலம் புகார் கூறியுள்ளார்.

தினமணி

கோ.சி. மணிக்கு மீண்டும் கூட்டுறவுத் துறை

புள்ளி விவரம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை அமைச்சர் கோ.சி. மணி கூட்டுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் வகித்து வரும் துறைகளுடன் கூட்டுறவுத் துறையையும் சேர்த்து அவர் கவனிப்பார். ஏற்கெனவே அவர் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார். இடையில் அந்த துறை அமைச்சர் எ.வ. வேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மீண்டும் கூட்டுறவுத் துறை கோ.சி. மணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் கூட்டுறவுத் துறையை இதுவரை அமைச்சர் எ.வ. வேலு கவனித்து வந்தார். இனி உணவுத்துறை மட்டும் அவரது பொறுப்பில் இருக்கும்.

தினமணி

அதிமுக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தல்

மதுரை மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கலான வேட்புமனுக்களின் பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. அதிமுக வேட்பாளர் செல்லூர் கே.ராஜுவின் வேட்புமனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டபோது, திமுக வழக்கறிஞர் பி.மனோகரன், " அதிமுக வேட்பாளர் ராஜு தாக்கல் செய்துள்ள சொத்து விவரப் பட்டியலில் தாம் வைத்துள்ள வாகனத்துக்கான மதிப்பையும், தனது மனைவியிடம் உள்ள நகைக்கான மதிப்பையும் குறிப்பிடவில்லை. அசையும் மற்றும் அசையா சொத்துகளின் தொகுப்பு இணைப்பையும் அளிக்கவில்லை. எனவே, அவரது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

ஆனால், இதுபோன்ற காரணத்துக்காக வேட்புமனுவைத் தள்ளுபடி செய்ய இயலாது. அதே நேரத்தில் வழக்கறிஞர் மனோகரனின் புகார் பதிவு செய்யப்படும் என தேர்தல் பணி அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி

ச : கோப்பையை கைபற்றினார் நடால் !!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ர்ஃபேல் நடால் தனது மூன்றாவது ஃபெரென்ச் ஓபென் கோப்பையை அட்டாகாசமாக விளையாடி வென்றார். அவர் ஸ்வீடென் நாட்டை சேர்ந்த ராஜர் ஃபெடெரெரை 6-3, 4-6, 6-3 , 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். முன்னாள் சாம்பியன் குஸ்டெர்வொ கேர்டென் வீரர்களுக்கு கோப்பையை வழங்கி பாராட்டியது குறிப்பிடத் தகுந்தது.

மேலும் படிக்க

http://www.msnbc.msn.com/id/19153003/

காங்கிரசால் உயிருக்கு ஆபத்து: கிறிஸ்தவ மதபோதகர் குற்றச்சாட்டால் ஆந்திரத்தில் பெரும் பதற்றம்

்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ மதபோதகர் கே.ஏ. பால். இவர், 1989-ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இவர், கிறிஸ்தவ மத போதகராகவும், சர்வதேச அமைதிக்காகவும் தன்னார்வ அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இதனால், ஆந்திரத்தில் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பணிகளை முன்னின்று செய்துள்ளார்.

நன்கொடை கேட்டு மிரட்டல்: கடந்த 2003-ல் ஆந்திர காங்கிரஸ் வளர்ச்சி நிதிக்காக ரூ. 20 கோடி நன்கொடை அளிக்க வேண்டும் என முதல்வர் ராஜசேகர ரெட்டி தரப்பில் கேட்டதாகவும், அதை தர மறுத்ததால் தமக்கு மிரட்டல் வந்ததாகவும் பால் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

மதபோதகரின் இப் பேச்சால் ஆந்திரத்தில் காங்கிரஸார் கொந்தளித்துள்ளனர். 2003-ல் மிரட்டியதாக கூறப்படுவது நம்பத்தகுந்ததல்ல. அவர் தேவையில்லாமல் சர்ச்சையை கிளப்பி விடுவதாகவும் ஆந்திர காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சனிக்கிழமை விசாகப்பட்டினம் வந்த பாலை முற்றுகையிட்ட காங்கிரஸார், மன்னிப்பு கேட்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பால், உடனடியாக மன்னிப்புக் கேட்கத் தவறினால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தினமணி

இரத்தம் உறிஞ்சும் சிகிச்சை - மருத்துவ விநோதம்.

இரத்தம் உறிஞ்சும் அட்டைகளைக் கொண்டு, நோயாளிகளின் அசுத்த இரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிடுவதன் மூலம் வியாதிகளை குணப்படுத்த முடியும் என்று ஸ்ரீநகரார் ஒருவர் நிரூபித்துள்ளார்.

காஷ்மீரில் ஹஸ்ரத் பால் தர்காவின் அருகில் வசிக்கும் அப்துல்காதிர், தொடக்கப்பள்ளியில் கூட படித்தவரில்லை என்றும் ஆனால் 'இரத்தம் எடுத்தல்' சிகிச்சையின் மூலம், பல்வலியிலிருந்து மூட்டுவலி வரை பல நோய்களை குணப்படுத்திவிடுவதாகவும் கூறுகிறார்.


அசுத்தமடைந்த இரத்தக்கட்டிகளே வியாதிகளின் வேராக விளங்குவதாகவும், அட்டைப்பூச்சிகளை அவ்விடத்தில் இரத்தம் உறிஞ்ச வைப்பதன் மூலம் இரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு வியாதி குணமடைவதாகவும் அவர் கூறினார். இரத்தம் உறிஞ்சி எடுக்கும் முறை பற்றி இஸ்லாமிய ஹதீஸ் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் கூறுவதை ஆமோதிக்கும் நோயாளிகள், இச்சிகிச்சைக்குப்பின்னர் நோய் நிவாரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

இந்தியாவின் முதல் இராணுவ விண்கலம்.

முதன்முதலாக முழுதும் இராணுவ நோக்கங்களின் அடிப்படையில் இந்தியாவின் விண்கலம் ஒன்று ஆகஸ்டில் விண்ணேவபடவுள்ளது.

CARTOSAT 2A என்று பெயரிடப்பட்டுள்ள இவ்விண்கலம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்கம்பக்கம் ஏவுகணை நடமாட்டத்தை கண்காணிக்கவும், 'ஏரியா'வில் இந்திய கண்காணிப்பை பலப்படுத்தவும் இது உதவும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க..

கேரளாவை உலுக்கும் சிக்குன்குனியா

களம் இறங்கும் ராணுவம், கடற்படை


கேரளாவில் சிக்குன்குனியா படு வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் அவதிப்பட்டுள்ளனர். சிக்குன்குனியாவைக் கட்டு்ப்படுத்த கேரள அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

சிக்குன்குனியா தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கையில் ராணுவம் மறறும் கடற்படையின் உதவியை கேரள அரசு நாடியுளளது. இதையடுத்து ராணுவம் மற்று் கடற்படையிலிருந்து டாக்டர்கள் குழு கேரள அரசுக்கு உதவியாக களம் இறங்கியுள்ளது.

பங்கோடு ராணுவ முகாமிலிருந்து 2 குழுக்கள் பத்தனம்திட்டா, அம்பூரி ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 25 பேர் உள்ளனர். இதேபோல கோட்டயம்,இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டு கடற்படை குழுக்கள் சென்றுள்ளன.

இதுதவிர மும்பையிலிருந்து மருந்துப் பொருட்களுடன் விமானப்படை விமானம் ஒன்றும் கேரளாவுக்கு விரைகிறது.

இதேபோல,சென்னையிலிருந்து ராணுவ டாக்டர் குழு ஒன்றும் கேரளாவுக்கு செல்கிறது.

சென்னை: ஒரே நாளில் 500 ரவுடிகள் கைது.

சென்னை நகரில் சமீப காலமாக கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன.இதையடுத்து சென்னை நகரில் ரவுடிகள் நடமாட்டத்தை ஒழிக்கவும், பழைய குற்றவாளிகளைப் பிடிக்கவும் காவல்துறை ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டார்.

இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகளைப் பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த வேட்டையில், 386 ரவுடிகள், 67 பழைய குற்றவாளிகள்,12 நீண்ட கால கிரிமினல்கள் சிக்கினர்.

கைது வாரண்ட் நிலுவையில் உள்ள 38 பேரும் இந்த வேட்டையின்போது சிக்கினர். ரவுடிகள் வேட்டை தொடரும் என காவல்துறை அறிவித்துள்ளது.

திமுக வில் மீண்டும் க.சுப்பு

கருணாநிதியின் பொன்விழாவையொட்டி அவரைப் பாராட்டி பேட்டி அளித்ததால், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ க.சுப்பு மீண்டும் திமுகவில் இணைந்து விட்டார்.

பல கட்சிகளில் இருந்த நீண்ட, நெடிய அனுபவம் கொண்டவர் பிரபல தொழிற்சங்கவாதியான க.சுப்பு. ஆரம்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். அக்கட்சியின் சார்பில் 1971ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். 80களில் சட்டசபையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு எதிராக சட்டசபையில் க.சுப்பு தீவிரமாக செயல்பட்டார். துரைமுருகன், ரகுமான்கான், க.சுப்பு அப்போதைய சட்டசபையின் நாயகர்களாக விளங்கினர்.

பின்னர் திமுகவிலிருந்து விலகினார் சுப்பு. அதிரடியாக அதிமுகவுக்குத் தாவினார். ஆனால் அங்கும் நீண்ட காலம் அவர் நீடிக்கவில்லை. அதிமுகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். அதன் பிறகு மீண்டும் திமுகவுக்குத் திரும்பினார். அது சில காலம் மட்டுமே நீடித்தது. திமுகவிலிருந்து விலகி அதிமுகவுக்குத் தாவினார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி தரும் வகையிலான பொறுப்பை ஜெயலலிதா கொடுத்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழாவையொட்டி அவரைப் பாராட்டிப் பேட்டி கொடுத்திருந்தார் சுப்பு.

இதனால் கடுப்பான ஜெயலலிதா சுப்புவைக் கட்சியிலிருந்து தூக்கி விட்டார். இந்தச் சூழ்நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து மீண்டும் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் சுப்பு.

கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி திமுகவில் இணைந்தார் சுப்பு. இந்த நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சர் ராசா, திமுக ஒருங்கிணைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

-o❢o-

b r e a k i n g   n e w s...